Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மஞ்சுநாத் கொலை வழக்கு: ஆயுள் தண்டனை உறுதி: சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி: எண்ணெய் கலப்பட ஊழலை அம்பலப்படுத்திய மஞ்சுநாத் கொலை வழக்கில், குற்றவாளிகள் ஆறு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட், நேற்று, உறுதி செய்து உத்தரவிட்டது.உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் 'பங்க்' ஒன்றில் நடைபெற்ற எண்ணெய் கலப்பட ஊழலை அம்பலப்படுத்தியவர் மஞ்சுநாத். இவர் கடந்த 2005ம் ஆண்டு, நவம்பர் 19ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பவன் குமார் உள்ளிட்ட ஆறு பேருக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, குற்ற வாளிகள் ...

ஆப்ரிக்க இளைஞர்கள் மீது தாக்குதல்: பெங்களூருவில் போலீஸ் பாதுகாப்பு

Posted:

பெங்களூரு: பெங்களூருவில், ஆப்ரிக்காவை சேர்ந்த சிலர் மீது, உள்ளூர் இளைஞர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூரு ஹெண் ணூர் ரோடு அருகில், பைரதி பகுதியில் ஏராளமான ஆப்ரிக்க நாட்டினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கல்லூரிகளில், ஏராளமானோர் படித்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் கார், பைக்குகளில் வேகமாக செல்வதாகவும், குடித்து விட்டு, நள்ளிரவில் கலாட்டா செய்வதாக, பலமுறை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, நிறவெறியினால், தங்களை அப்பகுதியில் சிலர் தாக்குவதாகவும், ஆப்ரிக்கர்களும், போலீசில் புகார் கொடுத்தனர். சம்பவ தினமான, ...

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, இரு நாடுகளுக்கும் இடையே தடைப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும், இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்கும் இடையே கப்பல் போக்கு வரத்தை மீண்டும் துவக்குவதற்கான பேச்சு, 13 - 14ம் தேதி, இலங்கையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான முயற்சிகளில், 'இர்கான் இந்தியா' என்ற, மத்திய அரசின், ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங் கைதாவாரா? குற்றவாளியாக ஆஜராக சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் சம்மன்

Posted:

புதுடில்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை 83, 'குற்றம்சாட்டப்பட்டவர்' என தெரிவித்துள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பி ஏப்ரல் 8ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுஉள்ளது.சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் அடுத்த மாதம் ஆஜராகும் போது அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.கடந்த 2005ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிலக்கரி துறைக்கும் அமைச்சராக இருந்தார். அப்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தை 'ஹிண்டால்கோ' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு ...

வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்: மன்மோகன் சிங்

Posted:

புதுடில்லி: நீதிமனற விசாரணைக்கு நான் தயாராகவே உள்ளேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.கடந்த 2005ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிலக்கரி துறைக்கும் அமைச்சராக இருந்தார். அப்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஹிண்டால்கோ என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கண்டறியப்பட்டது. இது குறித்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 6 பேரும் ஏப்ரல் 8ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆறு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சம்மன் அனுப்பப்பட்டது ...

ஜெ., மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்தது: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted:

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்றுடன் முடிந்தது; நீதிபதி குமாரசாமி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 41வது நாளாக நேற்று நடந்தது.

சுப்பிரமணியசாமி வாதம்:
நீதிமன்ற உத்தரவுப்படி, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியசாமி, 14 பக்க எழுத்துப் பூர்வமான வாதத்தை, நீதிபதியிடம் ...

அதிக நிதியை எதிர்பார்க்கும் ரயில்வே துறைக்கு வெற்றி: ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்கிறது எல்.ஐ.சி.,

Posted:

புதுடில்லி: கட்டமைப்பு துறையை மேம்படுத்துவதற்கான நிதியை திரட்டும் ரயில்வே துறையின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ரயில்வே துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, எல்.ஐ.சி., முதலீடு செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், ஏராளமான கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. இதை தவிர்ப்பதற்காகவே, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, புதிய ...

25 லட்சம் 'காஸ்' சிலிண்டர்; 12 ஆயிரம் ஊழியர்; ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வசூல்! வீடுதோறும் சப்ளையில் நடக்கும் கொள்ளையோ கொள்ளை

Posted:

காஸ் ஏஜன்சிகளில் பணிபுரியும், 12 ஆயிரம் ஊழியர்கள், ஒரு நாளைக்கு, 25 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்வதன் மூலம், மக்களிடம் இருந்து, 7.50 கோடி ரூபாய் கட்டாய வசூல் செய்கின்றனர்.தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, வீடு, 1.53 கோடி; வணிகம், 25 லட்சம் என, மொத்தம், 1.78 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1,200 காஸ் ஏஜன்சிகள் உள்ளன. ஒரு ஏஜன்சிக்கு, 8,000 - 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்; 10 ஊழியர் பணிபுரிகின்றனர். தினமும் சராசரியாக, 25 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் ...

இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை ஏற்க தமிழக அரசு நிபந்தனை

Posted:

சென்னை: தமிழகத்தில் உள்ள, இரண்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை, சில நிபந்தனைகளுடன், தமிழக அரசு ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்து, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: இ.எஸ்.ஐ., நிறுவனம், மருத்துவக் கல்லூரியை கைவிட, முடிவு செய்துள்ளது. சென்னை, கே.கே., நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 2013 - 14ல், 100 இளநிலை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நடப்பாண்டில் இருந்து, 38 முதுகலை மாணவர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். கோவையில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி கட்டு மானப் பணி முடிந்து, இந்திய மருத்துவக் கழகம் ...

எங்கள் வழக்குகளில் மட்டும் வேகம்: பட்டியலிடுகிறார் விஜயகாந்த்

Posted:

சென்னை: 'தே.மு.தி.க., சம்பந்தப்பட்ட வழக்குகளில் காட்டும் வேகத்தை, அனைத்து வழக்குகளிலும் காட்டினால், தமிழக போலீசாரை, பொதுமக்கள் பாராட்டுவர்' என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சட்டசபையில், போலீசை தாக்கியதாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சேகர், தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வழக்கிலும் காட்டாத வேகத்தை காட்டி, இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது என்பதும், ...

மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு

Posted:

சென்னை: 'என்னையும், அன்பழகன், ஸ்டாலினையும் சந்திக்க வரும் போது, 100, 200 ரூபாய் என, தேர்தல் நிதியை கொண்டு வரவேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.அவரது அறிக்கை: எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம், ஆளுங்கட்சியிடம் அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் கூட்டணி இல்லை என்ற தைரியமும், அக்கட்சியிடம் இருக்கிறது. எந்தெந்த வகையில் பணத்தை குவிக்க முடியுமோ, அந்த வழிகளில், ஆயிரக்கணக்கான கோடி நிதியை, ஆளுங்கட்சி குவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது போல, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவோடு ...

கெஜ்ரிவால் குதிரை பேரம் நடத்தினார்: முன்னாள் எம்.எல்.ஏ., திடுக்

Posted:

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின், முன்னாள் எம்.எல்.ஏ.,வான ராஜேஸ் கார்க் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 'கடந்தாண்டு, தனக்கு பெரும்பான்மை இல்லாத போது, காங்., - எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து வாங்குவதற்காக, அவரிடம் கெஜ்ரிவால் குதிரை பேரம் நடத்தினார்' என்றார். இந்த குற்றச்சாட்டை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த பெண் தலைவரான தமானியா, கட்சியை விட்டு விலகுவதாக, நேற்று அறிவித்தார். ''ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்காக, குதிரை பேரம் நடத்தும் கட்சியில், இனியும் என்னால் இருக்க முடியாது,'' என, அவர் கூறினார்.

பா.ஜ., தாக்கு:
முன்னாள் எம்.எல்.ஏ., ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™