Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட்டா? மறுக்கிறது மத்திய அரசு

Posted:

புதுடில்லி:''ஏழைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் பட்ஜெட் உள்ளதாக கூறுவது, அடிப்படை ஆதாரமற்ற, முற்றிலும் தவறான தகவல்,'' என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:நிறுவன வரியை, நான்கு ஆண்டுகளில், 30லிருந்து, 25 சதவீதமாக குறைக்கப்படும் என்பதை, நிறுவனங்களுக்கு சாதகமானது என, கூறுகிறார்கள். உண்மையில் அது, வருவாயை சரிசமமாக்கும் முயற்சி தான். இதனால், நிறுவனங்கள் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும். தற்போது நிறுவனங்கள், 30 சதவீத வரி செலுத்துவதில்லை; குறிப்பிட்ட ...

தங்கம் டிபாசிட் திட்டத்தில் கிடைக்க உள்ள தொகை ரூ.1 லட்சம் கோடி: முடங்கியுள்ள 20 ஆயிரம் டன் தங்கம் வெளியே வரும்

Posted:

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, தங்கத்தை பணமாக மாற்றிக் கொள்ளும் திட்டத்தின் படி, டிபாசிட் செய்யப்படும் தங்கம் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் முடங்கியுள்ள, 20 ஆயிரம் டன் தங்கமும் வெளியே வரும் என, மத்திய அரசு நம்புகிறது.இந்திய குடும்பங்களில் தேங்கிக் கிடக்கும் தங்கத்தை ரொக்கமாக்கி, மக்களின் வருவாயை உயர்த்தவும், அதே சமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முயற்சி எடுத்துள்ளார். அதற்கு, மத்திய ...

கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு கடைசி வாய்ப்பு: தாமாகவே முன் வந்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Posted:

புதுடில்லி:''வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், விரைவில் தாமாகவே முன் வந்து அதுகுறித்த விவரங்களை அரசிடம் வழங்க வேண்டும்; கடுமையான தண்டனைகளிலிருந்து தப்ப, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறியதாவது:வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, பணப் பதுக்கலில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு முதல், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான ...

ஜம்மு - காஷ்மீரில் முதல் முறையாக பா.ஜ., கூட்டணி அரசு:பல முரண்பாடுகளுடன் துவங்கும் ஆட்சி நிலைக்குமா?

Posted:

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் அரசியல் வரலாற்றில், முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்து, பா.ஜ., சாதனை படைத்துள்ளது. 'பல முரண்பாடுகளுடன் துவங்கியுள்ள இந்த கூட்டணி ஆட்சி நிலைக்குமா' என, அரசியல் பார்வையாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக, 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற, மக்கள் ஜனநாயக கட்சியான - பி.டி.பி.,யும், 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.,வும் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து, இரு மாதங்களாக பேச்சு நடத்தின.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ...

'காஸ் நேரடி மானியத்தால் அரசுக்கு சேமிப்பு': * பிரதமர் மோடி பெருமிதம்

Posted:

புதுடில்லி: ''சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தால், 10 சதவீத முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் பேசினார். டில்லியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'நாஸ்காம்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சமையல் காஸ் சிலிண்டர்கள் ஏற்கனவே, சந்தை விலையை விட குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

10 சதவீதம்:
இதில், ஏராளமான குளறுபடிகளும், முறைகேடுகள் ...

ராகுலை கண்டுபிடித்தால் சன்மானம்: உ.பி., 'மாஜி' தலைவர் அறிவிப்பு

Posted:

அலகாபாத்: 'பார்லிமென்ட் நடவடிக்கையில் இருந்து தலைமறைவாகியுள்ள, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும்' என, காங்கிரசில் இருந்து விலகி, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்த, அமர் வைஸ்யா என்பவர், போஸ்டர் ஒட்டியுள்ளார்.ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட்டிற்காக, பார்லிமென்ட் கூடியுள்ள நேரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை, டில்லியிலும், பார்லிமென்ட் வளாகத்திலும் காணவில்லை.அவரை எங்கே என, காங்கிரஸ் மேலிடத்தில் கேட்ட போது, 'அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என, பதில் கிடைத்தது. இந்நிலையில், ...

மாற்றத்தை விரும்பும் மக்கள்: பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் பேச்சு

Posted:

பிறந்த நாளை ஒட்டி, தொண்டர்கள் மத்தியில், ஸ்டாலின் பேசியதாவது:மார்ச் 1ம் தேதியை, பாகுபாடு ஒழிக்கக் கூடிய நாளாக, ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது; பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, நாம் சபதம் ஏற்க வேண்டும். பாகுபாடு ஒழிப்புக் கொள்கையை, நம் உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு, நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும்; நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம் தான். நம்மை உயிரோடு வைத்திருக்கக்கூடிய ரத்தம், மற்றவரை உயிரோடு இருக்க வைக்கிறது; பணக்காரர் தரக்கூடிய ரத்தம், ஏழையை வாழ வைக்கிறது; இதை மாற்றிச் சொல்லவும் முடியும். இம்மாத இறுதிக்குள், 1 லட்சம் யூனிட் ரத்தம், தி.மு.க., ...

சகல சவுகரியங்களுடன் சிறையில் தனிக்காட்டு ராஜா போல் லக்வி

Posted:

இஸ்லாமாபாத்: மும்பையில் தாக்குதல் நடத்தி, 166 பேர் உயிரை பலி வாங்கிய, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவனான லக்வி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், சகல வசதிகளுடன், தனிக்காட்டு ராஜா போல வாழ்கிறான்.பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள, அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள லக்வியின் அறையில், 'டிவி', இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவனை பார்க்க, தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்த வண்ணமாக உள்ளனர். அவர்களை தினமும் சந்தித்து, ...

சூழ்நிலைக்கு ஏற்ப கற்பழிப்பு குற்றவாளிக்கும் தண்டனையை குறைக்கலாம்

Posted:

புதுடில்லி:'சூழ்நிலைக்கு ஏற்ப, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை விதிக்கலாம்' என, உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தது.

20 ஆண்டுக்கு முன்...:
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரவீந்திரா என்பவர், கடந்த 1994ல், பெண் ஒருவரை கற்பழித்து விட்டார். அந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது; சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில், கற்பழித்த ரவீந்திராவும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணும், சமாதானமாகினர். இருவரும், தனித்தனியே, வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டனர்; வழக்கை ...

விமர்சனத்தால் ஏலம் போன 'கோட்': மோடியை சீண்டினார் தாக்கரே

Posted:

மும்பை: பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைக்கு ஆளானதாலேயே மோடியின் விலை உயர்ந்த, 'கோட்' ஏலம் விடப்பட்டதாக, எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே கருத்து தெரிவித்து உள்ளார்.மும்பை புறநகரில் நடந்த கட்சிக் கூட்டத்தில்,மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது, தன் பெயர் இடம் பெற்ற பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட விலை உயர்ந்த, 'கோட்'டை பிரதமர் மோடி அணிந்திருந்தார். மோடியின் இந்த செயல், பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளானது. அதன் பிறகே அந்த கோட், ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் கிடைத்த தொகையை, கங்கையை சுத்தம் ...

நேரில் வர சொல்லி ஓய்வூதியர்களை படுத்தாதீங்க: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted:

புதுடில்லி: 'ஓய்வூதியர்கள், தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க, நேரில் வருமாறு வங்கிகள் கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆயுள் சான்றிதழ்: அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெற, ஆண்டுதோறும் ஓய்வூதியர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை, சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். வயது முதிர்வின் காரணமாக, ஓய்வூதியர்களில் சிலரால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஆயுள் சான்றிதழை வழங்க முடிவதில்லை. எனினும், ...

நாய், கோழி, பூனை வளர்ப்பது போல வீட்டில் புலி வளர்க்க மந்திரி யோசனை

Posted:

போபால்: 'நாய், கோழி, பூனை போன்றவற்றை வீடுகளில் வளர்ப்பது போல, புலிகளையும் வளர்க்க, மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும்; அப்போது தான், நாட்டில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர், வினோத யோசனை கூறியுள்ளார்.

சரணாலயம்:மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு உள்ளது. இங்குள்ள, பன்னா என்ற பகுதியை சேர்ந்தவர், குசும் மெடலி என்ற பெண் அமைச்சர். இவரின் சொந்த தொகுதியில், புலிகள் சரணாலயம் உள்ளது; அதிக புலிகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™