Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கழிவு நீரை திறந்தவெளியில் கொட்டக் கூடாது: ஆட்சியர்
- நிலம் கையக மசோதா:கருணாநிதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்
- எல்.ஐ.சி முகவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்
- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்
- இலவச குடிநீர் வழங்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
- தரகம்பட்டியில் இன்று முத்திரைக் கட்டண வசூல் முகாம்
- 141 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயன்ற 4 பேர் கைது
- மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தைஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர்
- சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம்
- பாளையங்கோட்டையில் பெண் வெட்டிக் கொலை: கணவர் சரண்
- முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு மையமானது மதுரை மத்திய சிறை
- டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மகளிர் கூட்டமைப்பினர் பேரணி
- பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
- சிற்றுந்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
- ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி:தர ஆய்வில் மீண்டும் தகுதி
- தீருமா மீனவர் துயரம்?
- மாநகரங்களின் சுற்றுச்சூழல்!
- தேவைதானா தடை?
- எல்ஐசி தாற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- ஆம் ஆத்மியில் இருந்து விலகலா? பிரசாந்த் பூஷண் விளக்கம்
- பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
- வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள்
- 3,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு
- கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரச் சம்பவம்: சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைக்க மம்தா முடிவு
- ஸ்மிருதி இரானி குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ்
- நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழக விவசாயிகள் தில்லியில் ஆர்ப்பாட்டம்
- விரைவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம்
- பத்ம விருதுகளை ஏற்க சல்மான் தந்தை உள்பட 5 பேர் மறுப்பு
- கர்நாடகப் பேரவையில் 2-ஆவது நாளாக அமளி
- முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: பள்ளி மாணவர் கைது
- தமிழகத்தில் 1.93 கோடி இளைஞர்கள்: சர்பானந்த் சோனோவால்
- ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் ராஜிநாமா
- இடித்துரைப்பாளர் சட்டத் திருத்த மசோதா விரைவில் தாக்கல்
- உ.பி. அரசின் புதிய நிலம் கையக முறை: மாநில அமைச்சரவை ஒப்புதல்
- நாடாளுமன்றக் கூட்டத் தொடர்: மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு?
- 700 இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம்
- காஷ்மீர் பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ தேர்வு
- ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் 62,000 புகார்கள்
- இளைஞரை கழுதை மீது ஏற்றி ஊர்வலம்: 17 பேர் கைது
- தானியங்கி விதை வழங்கும் சேவை மையம் திறப்பு
- "பெல்' நிறுவன பங்கு விற்பனை: ரூ.3,200 கோடி திரட்ட அரசு திட்டம்
- அறந்தாங்கியில் அஞ்சல் ஊழியர்கள் வாயிற்கூட்டம்
- மைலாப்பூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
- கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு மனு
- நிலக்கரி, சுரங்க மசோதாக்களை மாற்றமின்றி நிறைவேற்ற மாநிலங்களவை குழுக்கள் பரிந்துரை: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
- மினி வேன் மோதி முதியவர் சாவு
- விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- ஓய்வூதியர்களை அலையவிடாமல் உதவ வேண்டும்
- மணல் கடத்தலை தடுக்கச் சென்ற அலுவலர் மீது கொலை முயற்சி
- பாபநாசம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மறியல்
- பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
- திருநகரி வாய்க்காலில் கரைகள் சீரமைப்பு பணிக்கு பூமி பூஜை
- கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நூதனப் போராட்டம்
- நாகை, திருவாரூரில் பாதுகாப்பு ஒத்திகை
- பேருந்து மோதி விவசாயி சாவு
- ரூ. 3.91 கோடியில் புதிய வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
- வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் 103 நிலைய அதிகாரிகள் பணியிட மாற்றம்
- முன்னாள் படைவீரர்கள் ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
- உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
- மொபட் மீது மோட்டர் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் சாவு
- விவசாயி கொலை வழக்கில் இளைஞர் சரண்
- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- துனீஸிய அருங்காட்சியகத்தில் பயங்கரவாதத் தாக்குல்: 8 பேர் சாவு
- இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- பாகிஸ்தானில் மேலும் 9 பேருக்கு தூக்கு
- அமெரிக்க அதிபர் மாளிகைக்கு சயனைடு கடிதம்
- இஸ்ரேல்: மீண்டும் பிரதமராகிறார் நெதன்யாகு?
- சுவிட்சர்லாந்தில் ரயில்கள் மோதல்: ஒருவர் பலி
- ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் சாவு
- அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: சிரியா
- எல்.ஐ.சி. முகவர்கள் உண்ணாவிரதம், பேரணி
- குடிநீர், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்
- மின் தடையால் மாணவர்கள் அவதி
- ஓய்வு பெற்ற பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு
- பாஜக ஆலோசனைக் கூட்டம்
- 3 ஆண்டுகளில் 3.29 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் மின்சாதனப் பொருள்கள் விநியோகம்
- கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்
- உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தடுப்பு முறை
- விளைச்சலை அதிகரிக்க பயிர் பாதுகாப்பு முறை
- மரங்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- பேரிடர் அபாய மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்
- தனியார் பேருந்து மீது கல்வீச்சு: 2 பேர் கைது
- பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- ஆமணக்கு விதையைத் தின்ற 10 பேருக்கு உடல் நலம் பாதிப்பு
- நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- கேரளத்திற்கு மாடுகளைக் கடத்திய நால்வர் கைது; லாரி பறிமுதல்
- இயந்திரவியல் துறை தேசியக் கருத்தரங்கம்
- சாலை மறியல் முயற்சி: 3 பேர் கைது
- மீன்வளர்ப்பு மேலாண்மை பயிற்சி முகாம்
- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
- பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு: மாவட்டத்தில் 26,794 பேர் எழுதுகின்றனர்
- ஏரலில் பாலம் கட்ட வனத்துறை அனுமதி
- ஆறுமுகனேரியில் இலவச பல் மருத்துவ முகாம்
- சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
- " தூத்துக்குடியில் தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவிய போலீஸார் '
- கோவில்பட்டியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 பேர் மீட்பு
- செல்லிடப்பேசியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்: மேயர்
| கழிவு நீரை திறந்தவெளியில் கொட்டக் கூடாது: ஆட்சியர் Posted: 18 Mar 2015 01:19 PM PDT நச்சுத் தொட்டிக் கழிவு நீரை திறந்த வெளியிலோ, நீர் நிலைகளிலோ கொட்டக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி எச்சரித்துள்ளார். |
| நிலம் கையக மசோதா:கருணாநிதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் Posted: 18 Mar 2015 01:19 PM PDT நிலம் கையக மசோதாவை கண்டித்து சென்னையில் வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்க உள்ளார். |
| எல்.ஐ.சி முகவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் Posted: 18 Mar 2015 01:18 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து 3ஆவது நாளாக புதன்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டக் கிளை அலுவலகங்களின் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு முகவர்கள் சங் |
| பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ் Posted: 18 Mar 2015 01:18 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, |
| இலவச குடிநீர் வழங்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு Posted: 18 Mar 2015 01:18 PM PDT தூய குடிநீர் வழங்கும் இயந்திரம் இலவசமாக பெற அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என மெஜஸ்டிக் அரிமா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |
| தரகம்பட்டியில் இன்று முத்திரைக் கட்டண வசூல் முகாம் Posted: 18 Mar 2015 01:18 PM PDT :தரகம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 19) முத்திரைக் கட்டண வசூல் முகாம் நடைபெற உள்ளது. |
| 141 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயன்ற 4 பேர் கைது Posted: 18 Mar 2015 01:18 PM PDT ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 141 கிலோ கஞ்சா பார்சல்களை கியூ பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனர். |
| மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தைஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர் Posted: 18 Mar 2015 01:18 PM PDT மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் Posted: 18 Mar 2015 01:17 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில், வியாழக்கிழமை (மார்ச் 19) முதல் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பாளையங்கோட்டையில் பெண் வெட்டிக் கொலை: கணவர் சரண் Posted: 18 Mar 2015 01:17 PM PDT பாளையங்கோட்டையில் புதன்கிழமை, பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் போலீஸில் சரணடைந்தார். |
| முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு மையமானது மதுரை மத்திய சிறை Posted: 18 Mar 2015 01:17 PM PDT பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் 99 சிறைவாசிகளுக்காக மதுரை மத்திய சிறை வளாகத்தில் முதல்முறையாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. |
| டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மகளிர் கூட்டமைப்பினர் பேரணி Posted: 18 Mar 2015 01:16 PM PDT உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் மகளிர் கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி Posted: 18 Mar 2015 01:16 PM PDT அரியலூர் அருகே உள்ள தேளூரில் அம்மா பண்ணை மகளிர் குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது. |
| சிற்றுந்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு Posted: 18 Mar 2015 01:16 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிற்றுந்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். |
| ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி:தர ஆய்வில் மீண்டும் தகுதி Posted: 18 Mar 2015 01:16 PM PDT புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற மூன்றாம் தர ஆய்வில் மீண்டும் யு தகுதியை நாக் குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. |
| Posted: 18 Mar 2015 01:10 PM PDT இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்' என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார். |
| Posted: 18 Mar 2015 01:10 PM PDT சுதந்திரமடைந்த பிறகு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமும், மிகப்பெரிய கல்வி வளர்ச்சியும் எல்லா நாடுகளாலும் பாராட்டப்பட்டன. |
| Posted: 18 Mar 2015 01:09 PM PDT மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே குஜராத்தில் நடைமுறையில் இருக்கும் சட்டம்தான் இது. |
| எல்ஐசி தாற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Posted: 18 Mar 2015 01:04 PM PDT இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) 1985, மே 20 முதல் 2001, ஜூன் 18-ஆம் தேதி வரை பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட முழு நேரத் தாற்காலிக ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஆம் ஆத்மியில் இருந்து விலகலா? பிரசாந்த் பூஷண் விளக்கம் Posted: 18 Mar 2015 01:03 PM PDT ஆம் ஆத்மி கட்சியில் உள்கட்சிப் பூசல்களை சரி செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், "தேவைப்பட்டால் கட்சியின் தேசிய செயற் குழுவில் இருந்து விலகத் தயார்' என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் தெரிவித்ததாக புதன்கிழமை வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு Posted: 18 Mar 2015 01:02 PM PDT அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2 புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. |
| வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள் Posted: 18 Mar 2015 01:01 PM PDT முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில் உள்ளதாக புது தில்லி மாநகராட்சி தெரிவித்தது. |
| 3,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு Posted: 18 Mar 2015 01:00 PM PDT தமிழகத்தில் 528 கோயில்களுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 98 ஏக்கர் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையங்கள் துறை தெரிவித்துள்ளது. |
| கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரச் சம்பவம்: சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைக்க மம்தா முடிவு Posted: 18 Mar 2015 01:00 PM PDT மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
| ஸ்மிருதி இரானி குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ் Posted: 18 Mar 2015 12:58 PM PDT மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்து தெரிவித்த கருத்துக்காக மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் புதன்கிழமை வருத்தம் தெரிவித்தார். |
| நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழக விவசாயிகள் தில்லியில் ஆர்ப்பாட்டம் Posted: 18 Mar 2015 12:54 PM PDT நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக விவசாயிகள் தில்லி நாடாளுமன்றச் சாலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| விரைவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் Posted: 18 Mar 2015 12:42 PM PDT மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடன் அவர்களது புகைப்படத்தையும் இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. |
| பத்ம விருதுகளை ஏற்க சல்மான் தந்தை உள்பட 5 பேர் மறுப்பு Posted: 18 Mar 2015 12:42 PM PDT ஹிந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைப்படக் கதாசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட 5 பேர், 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| கர்நாடகப் பேரவையில் 2-ஆவது நாளாக அமளி Posted: 18 Mar 2015 12:41 PM PDT பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கர்நாடக சட்டப்பேரவை, மேலவையில் பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. |
| முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: பள்ளி மாணவர் கைது Posted: 18 Mar 2015 12:40 PM PDT உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம் கான் பற்றி ஆட்சேபிக்கத்தக்க கருத்தை இணையதளப் பக்கத்தில் வெளியிட்டதாக பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| தமிழகத்தில் 1.93 கோடி இளைஞர்கள்: சர்பானந்த் சோனோவால் Posted: 18 Mar 2015 12:36 PM PDT தமிழகத்தில் 15 முதல் 19 வயது வரையிலான இளைஞர்கள் 1.93 கோடிப் பேர் உள்ளதாக மக்களவையில் மத்திய இளைஞர் விவகாரம் விளையாட்டுத் துறை இணையமைச்சர் சர்பானந்த் சோனோவால் தெரிவித்தார். |
| ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் ராஜிநாமா Posted: 18 Mar 2015 12:35 PM PDT மும்பை ஐஐடி நிர்வாகிகள் குழுத் தலைவர் பதவியை மூத்த அணுசக்தி விஞ்ஞானி அனில் ககோட்கர் புதன்கிழமை ராஜிநாமா செய்தார். |
| இடித்துரைப்பாளர் சட்டத் திருத்த மசோதா விரைவில் தாக்கல் Posted: 18 Mar 2015 12:34 PM PDT இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்தில், திருத்தம் செய்வதற்காக, வரைவு மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது. |
| உ.பி. அரசின் புதிய நிலம் கையக முறை: மாநில அமைச்சரவை ஒப்புதல் Posted: 18 Mar 2015 12:34 PM PDT உத்தரப் பிரதேச அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதலுக்கான புதிய முறைக்கு அந்த மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| நாடாளுமன்றக் கூட்டத் தொடர்: மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு? Posted: 18 Mar 2015 12:33 PM PDT நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வை மேலும் இரு நாள்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. |
| 700 இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம் Posted: 18 Mar 2015 12:33 PM PDT கடந்த 2014-ஆம் ஆண்டு, இந்தியக் குடியுரிமை பெற்ற, அல்லது இந்தியாவில் பிறந்த 700 பேருக்கு அரசியல் புகலிடம் அளித்ததாக அமெரிக்க குடியுரிமை, குடியமர்வுத் துறை (யூ.எஸ்.சி.ஐ.எஸ்.) தெரிவித்துள்ளது. |
| காஷ்மீர் பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ தேர்வு Posted: 18 Mar 2015 12:33 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 12-வது சட்டப்பேரவையின் தலைவராக பாஜக எம்எல்ஏ கவீந்தர் குப்தா ஒருமனதாக புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் 62,000 புகார்கள் Posted: 18 Mar 2015 12:32 PM PDT கடந்த ஆண்டில் மட்டும் அரசுத் துறைகள் தொடர்பாக 62,362 ஊழல் புகார்கள், ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| இளைஞரை கழுதை மீது ஏற்றி ஊர்வலம்: 17 பேர் கைது Posted: 18 Mar 2015 12:32 PM PDT மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒருவரை ஆடைகளைச் களையச் செய்து கழுதை மீது ஊர்வலமாக கிராம மக்கள் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தானியங்கி விதை வழங்கும் சேவை மையம் திறப்பு Posted: 18 Mar 2015 12:31 PM PDT புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி விதை வழங்கும் சேவை மையத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "பெல்' நிறுவன பங்கு விற்பனை: ரூ.3,200 கோடி திரட்ட அரசு திட்டம் Posted: 18 Mar 2015 12:31 PM PDT பொதுத் துறை நிறுவனமான "பெல்' நிறுவனத்தின் பங்குகளை அடுத்த மாதம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.3,200 கோடி வருவாய் கிடைக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| அறந்தாங்கியில் அஞ்சல் ஊழியர்கள் வாயிற்கூட்டம் Posted: 18 Mar 2015 12:31 PM PDT அறந்தாங்கி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டத் தலைவர் அ. அடைக்கலம் தலைமை |
| மைலாப்பூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் Posted: 18 Mar 2015 12:31 PM PDT பொன்னமராவதி வட்டம், மைலாப்பூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 1.22 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. |
| கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு மனு Posted: 18 Mar 2015 12:31 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 10-க்கும் மேற்பட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். |
| Posted: 18 Mar 2015 12:30 PM PDT மத்திய அரசின் நிலக்கரிச் சுரங்கங்கள் மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மசோதாவை எந்தவித மாற்றமுமின்றி நிறைவேற்றலாம் என்று மாநிலங்களவை தேர்வுக் குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. |
| Posted: 18 Mar 2015 12:30 PM PDT தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகர் பகுதி பாட்ஷா காலனியை சேர்ந்தவர் பி. ரெங்கராஜ் (70). இவர் செவ்வாய்க்கிழமை பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மினி வேன் மோதி காயமடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி |
| விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 18 Mar 2015 12:30 PM PDT நிலம் கையகப்படுத்தும் சட்ட முன் வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஓய்வூதியர்களை அலையவிடாமல் உதவ வேண்டும் Posted: 18 Mar 2015 12:30 PM PDT ஓய்வூதியர்களை அரசு அலுவலர்கள் அலையவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| மணல் கடத்தலை தடுக்கச் சென்ற அலுவலர் மீது கொலை முயற்சி Posted: 18 Mar 2015 12:29 PM PDT தஞ்சாவூர் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற அலுவலர் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| பாபநாசம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மறியல் Posted: 18 Mar 2015 12:29 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர். |
| பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 18 Mar 2015 12:29 PM PDT தஞ்சாவூரில் புதன்கிழமை பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருநகரி வாய்க்காலில் கரைகள் சீரமைப்பு பணிக்கு பூமி பூஜை Posted: 18 Mar 2015 12:28 PM PDT சீர்காழியை அடுத்த தென்னலக்குடியில் உள்ள திருநகரி வாய்க்காலில் பழுதடைந்த கீழ்குமிழி மற்றும் இடது கரைகள் ரூ. 1.96 கோடியில் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. |
| கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நூதனப் போராட்டம் Posted: 18 Mar 2015 12:28 PM PDT கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை 9-வது நாளாக மன்னார்குடி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்புற அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றும் |
| நாகை, திருவாரூரில் பாதுகாப்பு ஒத்திகை Posted: 18 Mar 2015 12:28 PM PDT கடலோரரக் கிராமங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்படும் "ஆம்லா ஒத்திகை' நாகை, திருவாரூரில் புதன்கிழமை தொடங்கியது. |
| Posted: 18 Mar 2015 12:27 PM PDT திருவாரூர் மாவட்டம், குடவாசலில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதி விவசாயி உயிரிழந்தார். திருவாரூர் அருகேயுள்ள சோழாச்சேரியை சேர்ந்தவர் ஜீவா (48). விவசாயி. இவர் செவ்வாய்க்கிழமை இரு |
| ரூ. 3.91 கோடியில் புதிய வீடுகள் கட்டும் பணி தொடக்கம் Posted: 18 Mar 2015 12:27 PM PDT நாகை மாவட்டம், மகாலெட்சுமி நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் 60 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.பணிகளைத் தொடங்கி வைத்து அவர் பேசியது: |
| வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 18 Mar 2015 12:27 PM PDT வீட்டுமனை பட்டா கேட்டு வாழவந்தான்கோட்டை பொதுமக்கள் திருச்சி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் 103 நிலைய அதிகாரிகள் பணியிட மாற்றம் Posted: 18 Mar 2015 12:27 PM PDT திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் 103 நிலைய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| முன்னாள் படைவீரர்கள் ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் Posted: 18 Mar 2015 12:27 PM PDT திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது ஆதார் அடையாள அட்டை நகலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் Posted: 18 Mar 2015 12:27 PM PDT திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : |
| மொபட் மீது மோட்டர் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் சாவு Posted: 18 Mar 2015 12:27 PM PDT திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே புதன்கிழமை மாலை சென்ற மொபட் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். |
| விவசாயி கொலை வழக்கில் இளைஞர் சரண் Posted: 18 Mar 2015 12:27 PM PDT திருவண்ணாமலை விவசாயி கொலை வழக்கில் வேலூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் 5-இல் இளைஞர் ஒருவர் புதன்கிழமை சரணடைந்தார். |
| Posted: 18 Mar 2015 12:27 PM PDT ஆழ்துளைக் கிணறு அமைக்க அரசின் மானியத்துடன் கூடிய கடன் வழங்கக் கோரி வெள்ளக்குட்டையில் சிறு, குறு விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| துனீஸிய அருங்காட்சியகத்தில் பயங்கரவாதத் தாக்குல்: 8 பேர் சாவு Posted: 18 Mar 2015 12:24 PM PDT வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனீஸியா நாட்டின் தலைநகர் துனீஸிலுள்ள அருங்காட்சியகத்தில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 வெளிநாட்டினர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். |
| இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 18 Mar 2015 12:23 PM PDT இந்தோனேசியாவின் மலுக்கா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது. |
| பாகிஸ்தானில் மேலும் 9 பேருக்கு தூக்கு Posted: 18 Mar 2015 12:22 PM PDT பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 9 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனர். |
| அமெரிக்க அதிபர் மாளிகைக்கு சயனைடு கடிதம் Posted: 18 Mar 2015 12:22 PM PDT அமெரிக்க அதிபர் மாளிகைக்கு மர்ம நபர் ஒருவர் சயனைடு நிரப்பிய கடிதத்தை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| இஸ்ரேல்: மீண்டும் பிரதமராகிறார் நெதன்யாகு? Posted: 18 Mar 2015 12:21 PM PDT இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்கு கணிப்பு முடிவுகள், ஆளும் லிகுட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிப்பதால், அந்த நாட்டின் பிரதமர் நெதன்யாகு மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| சுவிட்சர்லாந்தில் ரயில்கள் மோதல்: ஒருவர் பலி Posted: 18 Mar 2015 12:20 PM PDT சுவிடசர்லாந்து நாட்டில் இரண்டு பராமரிப்பு ரயில்கள் புதன்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் (படம்) ஒருவர் உயிரிழந்தார். |
| ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் சாவு Posted: 18 Mar 2015 12:18 PM PDT ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளைக் குறிவைத்து புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். |
| அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: சிரியா Posted: 18 Mar 2015 12:17 PM PDT சிரியாவில், அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது. |
| எல்.ஐ.சி. முகவர்கள் உண்ணாவிரதம், பேரணி Posted: 18 Mar 2015 12:16 PM PDT பாலிஸி மீதான வருமான வரியை நீக்கக் கோருதல் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) குடியாத்தம் முகவர்கள் சங்கத்தினர் புதன்கிழமை பேரணி நடத்தினர். |
| குடிநீர், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 18 Mar 2015 12:16 PM PDT தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் குடியாத்தம் ஒன்றியம் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 18 Mar 2015 12:16 PM PDT வாலாஜாபேட்டையை அடுத்த குடிமல்லூரில் செவ்வாய்க்கிழமை இரவு மணல் லாரி மோதியதில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சேதம் அடைந்தது. இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் மாணவர்களும், பொது மக்களும் அவதிப்பட்டனர். |
| ஓய்வு பெற்ற பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு Posted: 18 Mar 2015 12:16 PM PDT ஏடிஎம் அட்டையைப் புதுப்பிப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற பேராசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் திருடப்பட்டது குறித்து வாணியம்பாடி போலீஸில் புகார் செய்யப்பட்டது. |
| Posted: 18 Mar 2015 12:16 PM PDT புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட காஞ்சி கிராமத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| 3 ஆண்டுகளில் 3.29 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் மின்சாதனப் பொருள்கள் விநியோகம் Posted: 18 Mar 2015 12:16 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 3.29 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.163 கோடி மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் Posted: 18 Mar 2015 12:16 PM PDT கோடையில் எள் சாகுபடி செய்வதற்கு மார்ச் மாதம் ஏற்ற பருவமாகும். |
| உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தடுப்பு முறை Posted: 18 Mar 2015 12:14 PM PDT உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்க்கு தடுப்பு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால், மிக விரைவாக அனைத்துச் செடிகளிலும் பரவி மகசூல் பாதிப்பை ஏற்படுத்திவிடும். |
| விளைச்சலை அதிகரிக்க பயிர் பாதுகாப்பு முறை Posted: 18 Mar 2015 12:13 PM PDT தற்போது மாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்து புழுக்கள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| மரங்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் Posted: 18 Mar 2015 12:11 PM PDT தமிழகத்தில் தற்போது மரம் வளர்ப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களில் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் அதிக இலாபம் பெறலாம். |
| பேரிடர் அபாய மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் Posted: 18 Mar 2015 12:06 PM PDT தூத்துக்குடியில் பேரிடர் அபாய மேலாண்மை திட்டம் குறித்த பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தொடங்கிவைத்தார். |
| தனியார் பேருந்து மீது கல்வீச்சு: 2 பேர் கைது Posted: 18 Mar 2015 12:06 PM PDT கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு தனியார் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 18 Mar 2015 12:06 PM PDT உடன்குடி அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் புதன்கிழமை பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். |
| ஆமணக்கு விதையைத் தின்ற 10 பேருக்கு உடல் நலம் பாதிப்பு Posted: 18 Mar 2015 12:06 PM PDT திருவண்ணாமலை அருகே பழம் என நினைத்து சாலையோரம் நின்ற ஆமணக்கு கொட்டையை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவியர் 10 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Posted: 18 Mar 2015 12:06 PM PDT திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| கேரளத்திற்கு மாடுகளைக் கடத்திய நால்வர் கைது; லாரி பறிமுதல் Posted: 18 Mar 2015 12:05 PM PDT திருவண்ணாமலையில் இருந்து கேரளத்திற்கு மாடுகளைக் கடத்திய நால்வரை போலீஸார் கைது செய்தனர். மாடுகள் மீட்கப்பட்டுத் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. |
| இயந்திரவியல் துறை தேசியக் கருத்தரங்கம் Posted: 18 Mar 2015 12:05 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில், தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| சாலை மறியல் முயற்சி: 3 பேர் கைது Posted: 18 Mar 2015 12:05 PM PDT ஆரணியை அடுத்த பனையூர் பெரிய ஏரியை சீரமைக்கும் பணியை சரிவர செய்யாததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 3 பேரை போலீஸார் கைது செய்ததால் மறியல் கைவிடப்பட்டது. |
| மீன்வளர்ப்பு மேலாண்மை பயிற்சி முகாம் Posted: 18 Mar 2015 12:05 PM PDT தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வள அபிவிருத்தி ஆணையத்தின் நிதியுதவியுடன் மீன்வளர்ப்பில் நீர்த்தரப் பண்புகள் மற்றும் அதன் மேலாண்மை என்ற மூன்று நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. |
| நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு Posted: 18 Mar 2015 12:05 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் 7 அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார். |
| பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகம் Posted: 18 Mar 2015 12:05 PM PDT நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் சுகாதாரத் துறை சார்பில், பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. |
| Posted: 18 Mar 2015 12:05 PM PDT ஆழ்வார்திருநகரி மாளவியா மழலையர் தொடக்கப்பள்ளியில் மாவட்ட பார்வைஇழப்பு தடுப்புச் சங்கம், சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. |
| இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு: மாவட்டத்தில் 26,794 பேர் எழுதுகின்றனர் Posted: 18 Mar 2015 12:04 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், 26 ஆயிரத்து 794 மாணவர், மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். |
| ஏரலில் பாலம் கட்ட வனத்துறை அனுமதி Posted: 18 Mar 2015 12:04 PM PDT ஏரலில் நீண்ட நாள்களாக தாமதமாகி வந்த பாலம் கட்டுவதற்கு வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புதன்கிழமை நடைபெற்ற திட்டக்குழுக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. |
| ஆறுமுகனேரியில் இலவச பல் மருத்துவ முகாம் Posted: 18 Mar 2015 12:04 PM PDT ஆறுமுகனேரி தெற்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு Posted: 18 Mar 2015 12:03 PM PDT சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு தமி |
| " தூத்துக்குடியில் தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவிய போலீஸார் ' Posted: 18 Mar 2015 12:03 PM PDT தூத்துக்குடியில் தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவிய 5 போலீஸார் புதன்கிழமை பிடிபட்டனர். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின் ஆபரேஷன் |
| கோவில்பட்டியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 பேர் மீட்பு Posted: 18 Mar 2015 12:02 PM PDT கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 பேர் மீட்கப்பட்டு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். |
| செல்லிடப்பேசியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்: மேயர் Posted: 18 Mar 2015 12:02 PM PDT தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |