Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தோகைமலை அருகே சூதாட்டம்: 16 பேர் கைது; ரூ. 40 ஆயிரம், 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Posted: 12 Mar 2015 01:25 PM PDT

தோகைமலை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை தோகைமலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 40 ஆயிரம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Mar 2015 01:25 PM PDT

கரூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாட்டரி விற்பனை: 2 பேர் கைது

Posted: 12 Mar 2015 01:25 PM PDT

கரூரில் லாட்டரி சீட்டு விற்றதாக இரண்டு பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். கரூர் புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே சிலர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

மார்ச் 27-ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

Posted: 12 Mar 2015 01:24 PM PDT

கரூரில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கருவூல அலுவலர் பொ. சிதம்பரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அதிக வட்டிக் கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

Posted: 12 Mar 2015 01:24 PM PDT

கரூரில் அதிக வட்டிக்கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ. 2.60 லட்சத்தில் ஆழ்குழாய் குடிநீர் திட்டப்பணி

Posted: 12 Mar 2015 01:24 PM PDT

ஆத்தூர் ஊராட்சியில் ரூ. 2.60 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் குடிநீர் திட்டப்பணியை கரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ். திருவிகா வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

ரூ. 3 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Posted: 12 Mar 2015 01:23 PM PDT

அரவக்குறிச்சி ஒன்றியம் வெஞ்சமாங்கூடலூரில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி அண்மையில் திறந்து வைத்தார்.

சாலை விபத்தை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Mar 2015 01:23 PM PDT

அரியலூரில் லாரிகளால் ஏற்படும் சாலை விபத்தைத் தடுக்கக் கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Posted: 12 Mar 2015 01:22 PM PDT

திருமானூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இலவசக் கல்வி அளிக்க தேமுதிக வலியுறுத்தல்

Posted: 12 Mar 2015 01:22 PM PDT

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இலவசக் கல்வி அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று புதன்கிழமை நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்ட

இன்று 3 வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 12 Mar 2015 01:22 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் தலா ஒரு கிராமம் வீதம், 3ஆம் கட்டமாக, "அம்மா' திட்ட முகாம் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர்க் கூட்டம்

Posted: 12 Mar 2015 01:22 PM PDT

பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய "சிறப்பு குறைதீர்க் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 14 ஆம் தேதி) நடைபெற உள்ளது.

வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Mar 2015 01:21 PM PDT

திருநெல்வேலியில் வேளாண் துறை பொறியாளர் முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு

வேப்பந்தட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Posted: 12 Mar 2015 01:21 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வு பேரணி

Posted: 12 Mar 2015 01:20 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வரதட்சிணை கொடுமை:கணவன் கைது

Posted: 12 Mar 2015 01:20 PM PDT

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப் படுத்தியதாக அப்பெண்ணின் கணவரை மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இலவச ஸ்பெக்ட்ரம், 4ஜி சேவை கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Mar 2015 01:20 PM PDT

தொலைபேசி துறையை (பிஎஸ்என்எல்) தனியார்மயமாக்க முயற்சி செய்துவரும் மத்திய அரசைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து, தொலைபேசி

விராலிமலையில் தாய்சேய் நல மருத்துவ முகாம்

Posted: 12 Mar 2015 01:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மகளிர் தின தாய் சேய் நல மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மருத்துவமனையாக விரைவில் தரம் உயரும்: எம்எல்ஏ

Posted: 12 Mar 2015 01:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை விரைவில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவுள்ளது என்றார் சட்டப்பேரவை உறுப்பினர் மு. ராஜநாயகம்.

புதுகையில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Mar 2015 01:19 PM PDT

புதுக்கோட்டையில் காந்தி உலக மையம், தமிழ்நாடு சுகாதார திட்டம் சார்பில், புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வு, உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரிமளம் பள்ளியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

Posted: 12 Mar 2015 01:18 PM PDT

திருமயம் வட்டம், அரிமளம் சிவகமலம் மெட்ரிக் பள்ளியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகையில் புத்தகக் கண்காட்சி

Posted: 12 Mar 2015 01:18 PM PDT

புதுக்கோட்டையில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வி.ஏ. அபிநயா புத்தக நிலையத்தினர் 6-வது ஆண்டாக நடத்தும் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

முத்தமிழ்ப் பாசறை செயற்குழு கூட்டம்

Posted: 12 Mar 2015 01:18 PM PDT

பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறையின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாசறையின் தலைவர் ரமேஷ் தலைமைவகித்தார். அறங்காவலர் குழு தலைவர் மருத்துவர்

உயர் கல்விக்காக தஞ்சையில் அம்மா நூலகம்

Posted: 12 Mar 2015 01:17 PM PDT

உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திட நவீன வசதிகளுடன் அம்மா நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நூலகம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார் மேயர் சாவித்திரி கோபால்.

நியாய விலைக் கடைகளில் நாளை குறைதீர் கூட்டம்

Posted: 12 Mar 2015 01:17 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டக் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெறவுள்ளது.

தென்னகப் பண்பாட்டு மைய விருதுக்கு சாஸ்த்ரா மாணவி தேர்வு

Posted: 12 Mar 2015 01:17 PM PDT

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பவியல் பயிலும் பி.எஸ். நந்தினி (படம்) தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு

திருவெண்காடு கோயிலில் அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு

Posted: 12 Mar 2015 01:16 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருவண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராணுவப் பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 12 Mar 2015 01:16 PM PDT

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் ஜன. 2016-க்கான 8-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனங்குடியில் சாலை மறியல்

Posted: 12 Mar 2015 01:16 PM PDT

திருமருகல் ஏனங்குடி பேருந்து நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்கள்

Posted: 12 Mar 2015 01:15 PM PDT

நாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் வட்டம் பனங்குடியிலும், மயிலாடுதுறை வட்டம் அருவாப்பாடியிலும், சீர்காழி வட்டம்

பள்ளி வேனை ஆசிரியை ஓட்டிப் பழகியபோது விபத்து: ஓட்டுநர் கைது

Posted: 12 Mar 2015 01:15 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புதன்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனை ஆசிரியை ஓட்டிப் பழகியபோது, வேன் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக, வேன் ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்

Posted: 12 Mar 2015 01:14 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

"ஊரக வளர்ச்சித் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம்'

Posted: 12 Mar 2015 01:14 PM PDT

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 12 Mar 2015 01:14 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

கரூர்

Posted: 12 Mar 2015 01:13 PM PDT

தஞ்சாவூர்

Posted: 12 Mar 2015 01:13 PM PDT

புதுக்கோட்டை

Posted: 12 Mar 2015 01:13 PM PDT

பன்றிக் காய்ச்சல்: கரூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதி

Posted: 12 Mar 2015 01:12 PM PDT

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவனுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் பெண் உறுப்பினர்கள் அடிதடி

Posted: 12 Mar 2015 01:11 PM PDT

கோவை மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக, திமுக பெண் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருவழிப் பாதைப் பணிகள்: ரயில் சேவையில் இன்று மாற்றம்

Posted: 12 Mar 2015 01:10 PM PDT

கருங்குழி - மதுராந்தகம் இடையே இருவழிப் பாதை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாய் மொழியில் எண்களை உச்சரிக்க நடவடிக்கை: மாநிலங்களவையில் தருண் விஜய் வலியுறுத்தல்

Posted: 12 Mar 2015 01:08 PM PDT

தாய் மொழியில் எண்களை மாணவர்கள் உச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.

கடவுச்சீட்டு பெற விரும்பும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டியதில்லை

Posted: 12 Mar 2015 01:07 PM PDT

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விரும்பும் மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலாக மாற்று ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் எவை என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹஜ் பயணம்: மார்ச் 18-இல் குலுக்கல்

Posted: 12 Mar 2015 12:57 PM PDT

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்துள்ளோரைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

Posted: 12 Mar 2015 12:57 PM PDT

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன.

வாழ்க்கையை அறியும் கல்வி

Posted: 12 Mar 2015 12:55 PM PDT

இந்தியாவை அறிவு சார்ந்த வல்லரசாக உருவாக்கவும், அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளிலும் தேவைகளை நிறைவு செய்யவும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வடமொழியும் தென்தமிழும்

Posted: 12 Mar 2015 12:54 PM PDT

இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, இந்திய விடுதலைக்குப் போராடி, சிறையில் வாடியபோது ஜவஹர்லால் நேரு எழுதிய பொக்கிஷம் "டிஸ்கவரி ஆஃப் இண்டியா'. அதே சமயம் நேருவை முந்திக் கொண்டவர், வில்லியம் ஜோன்ஸ்.

அரசாணை அல்ல தீர்வு!

Posted: 12 Mar 2015 12:50 PM PDT

மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றத் தடை செய்யும் சட்டம் தமிழகத்தில் மார்ச் 15 தேதி முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஜரிவால் மீதான புகார்: ஆம் ஆத்மி மறுப்பு

Posted: 12 Mar 2015 12:42 PM PDT

தில்லியில் "ஆம் ஆத்மி' ஆட்சி அமைக்க, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரை விலைக்கு வாங்க அரவிந்த் கேஜரிவால் முயன்றதாக வெளியான குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது டீசல் குண்டு வீச்சு

Posted: 12 Mar 2015 12:41 PM PDT

தனுஷ்கோடி அருகே புதன்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் டீசல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு படகு சேதமடைந்தது.

திட்ட அமலாக்கத்தில் எம்.பி.க்களும் பங்கேற்பு: மத்திய அரசு திட்டம்

Posted: 12 Mar 2015 12:39 PM PDT

மத்திய அரசின் திட்டங்களை அமலாக்கும்போது, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுக்கும் வகையில் புதிய வழிமுறைகளை உருவாக்க உள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

வருவாய்த் துறை மூலம் 2 நாள்களில் சான்றிதழ்கள்: பொதுச் சேவை மைய அதிகாரி தகவல்

Posted: 12 Mar 2015 12:39 PM PDT

வருவாய்த் துறையில் அனைத்து அலுவலர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளதால், ஜாதிச் சான்றிதழ் உள்பட பல்வேறு வகையான சான்றிதழ்களும் இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊடக விசாரணைகளால் நீதிபதிகளுக்கு மறைமுக நெருக்கடி: தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 12 Mar 2015 12:37 PM PDT

"ஊடகங்கள் நடத்தும் விசாரணைகள், நீதிபதிகளுக்கு மறைமுக நெருக்கடியை ஏற்படுத்துகின்றன; அவை, தீர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன' என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் அதிரடி சீர்திருத்தங்களை எதிர்பார்க்க முடியாது: அரவிந்த் சுப்ரமணியன்

Posted: 12 Mar 2015 12:36 PM PDT

இந்தியா போன்ற நாடுகளில் அதிரடியான பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பது சரியல்ல என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொடர் கண்காணிப்பில் மஸரத் ஆலம்: மத்திய அரசிடம் ஜம்மு-காஷ்மீர் அரசு உறுதி

Posted: 12 Mar 2015 12:35 PM PDT

பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், பாதகமான செயல்களில் ஈடுபட்டால், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு, மத்திய அரசுக்கு உறுதியளித்துள்ளது.

மதுரை கிரானைட் குவாரிகள் ஆய்வு: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு மேலும் கால அவகாசம்

Posted: 12 Mar 2015 12:34 PM PDT

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு கூடுதலாக இரண்டு மாத கால அவகாசகம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமே மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்

Posted: 12 Mar 2015 12:27 PM PDT

மீனவர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம், பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 246 பேர் கைது

Posted: 12 Mar 2015 12:27 PM PDT

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 246 பேர் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை பேக்கரிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

Posted: 12 Mar 2015 12:27 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பேக்கரிகளில் நகராட்சி அலுவலர்களால் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது.

கல்லூர் ஊராட்சி தலைவரின்வெற்றி செல்லாது: ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 12 Mar 2015 12:26 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கல்லூர் ஊராட்சி மன்றத் தலைவரின் வெற்றி செல்லாது என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறந்த மாணவராக ராமநாதபுரம் மாணவர் தேர்வு

Posted: 12 Mar 2015 12:26 PM PDT

கல்வி மற்றும் தொழில் நுட்பத் திறன் அடிப்படையில் சிறந்த மாணவராக ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் செயலர் டாக்டர்

கமுதி கோயில்களில் இன்று மாசித் திருவிழா

Posted: 12 Mar 2015 12:26 PM PDT

கமுதியில் வீரமாகாளியம்மன், சுடலைமாடன் சுவாமி கோயில்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) இரவு மாசி திருவிழா நடைபெறுகிறது.

கெளரவக் கொலை செய்வோரை தண்டிக்க தனிச்சட்டம்: எம்.எல்.ஏ.

Posted: 12 Mar 2015 12:25 PM PDT

சிவகங்கையில் அனைத்திந்திய ஜனநாயக சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை, தேசிய சட்டத்தின் பரிந்துரைப்படி கவுரவ கொ

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் கிராமப்புற தபால் சேவை பாதிப்பு

Posted: 12 Mar 2015 12:25 PM PDT

தபால் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, சிவகங்கை மாவட்ட கிராமப்புறங்களில் தபால்துறையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் வன உயிரினச் சரணாலயத்துக்கு எதிர்ப்பு

Posted: 12 Mar 2015 12:24 PM PDT

கொடைக்கானல் மலைப் பகுதியை வன உயிரினச் சரணாலயமாக அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை மச்சூர் கிராம மக்கள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

தொப்பம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 12 Mar 2015 12:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கம்பத்தில் சாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

Posted: 12 Mar 2015 12:24 PM PDT

தேனி மாவட்டம் கம்பத்தில் சாதிச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் வருமானச் சான்று கேட்டு ஆன்லைனில் பதிவு செய்துள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

ராம்தேவ்: ஹரியாணா பேரவையில் அமளி

Posted: 12 Mar 2015 12:23 PM PDT

ஹரியாணா மாநிலத்தின் யோகா, ஆயுர்வேத தூதுவராக யோகா குரு பாபா ராம்தேவை நியமிப்பதற்காக, அவரை மகிழ்விக்கும் பணியில் மாநில அரசு இறங்கியுள்ளது என்று பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டினார்.

வெல்டர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 12 Mar 2015 12:23 PM PDT

திருச்சியில் வெல்டர் தொழில் பிரிவில் குறுகிய கால பயிற்சி பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு: போடியில் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Mar 2015 12:22 PM PDT

அஞ்சல் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, போடியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனைவியுடன் கருத்துவேறுபாடு: கணவர் தற்கொலை

Posted: 12 Mar 2015 12:22 PM PDT

கடமலைக்குண்டு அருகே சிறப்பாறையைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (40). இவரின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்: திட்ட முதலீடுகளுக்கான நிதி ஆதாரங்கள் தெரிவிக்கப்படவில்லை: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Posted: 12 Mar 2015 12:22 PM PDT

ரயில்வே துறையில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவைப்படும் முதலீடுகளுக்கான நிதி ஆதாரங்கள் குறித்த விவரங்கள் ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை.

புனலூர்-செங்கோட்டை அகல ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 12 Mar 2015 12:22 PM PDT

புனலூர்-செங்கோட்டை அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மையான காற்று நமது பிறப்புரிமை: ஜாவடேகர்

Posted: 12 Mar 2015 12:22 PM PDT

தூய்மையான காற்றை சுவாசிப்பது நமது பிறப்புரிமை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கல்குறிச்சியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 12 Mar 2015 12:21 PM PDT

மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் படை சார்பில் மரம் வளர்த்தல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலை ரூ 2.08 கோடியில் விரைவில் சீரமைப்பு

Posted: 12 Mar 2015 12:20 PM PDT

சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாய் சாலை ரூ. 2.08 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சி.சுப்பிரமணியம் புதன்கிழமை தெரிவித்தார்.

கணவன் மாயம்: மனைவி புகார்

Posted: 12 Mar 2015 12:20 PM PDT

திருத்தங்கலில் கணவரை காணவில்லை என மனைவி புதன்கிழமை போலீஸில் புகார் செய்துள்ளார்.

மனநிலை பாதித்த இளைஞர் விஷம் குடித்து சாவு

Posted: 12 Mar 2015 12:20 PM PDT

விருதுநகர் அருகே தண்ணீர் என நினைத்து விஷம் குடித்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் வியாழக்கிழமை இறந்தார்.

"பெண்கள், பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது'

Posted: 12 Mar 2015 12:19 PM PDT

பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திராமல் இருக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.

பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேக நிறைவு விழா

Posted: 12 Mar 2015 12:19 PM PDT

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் 1008 கலசாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு எதிரான பாவச் செயலில் ஈடுபட விரும்பவில்லை: சிவசேனை

Posted: 12 Mar 2015 12:19 PM PDT

விவசாயிகளுக்கு எதிரான பாவச் செயலில் ஈடுபட விரும்பாததால், நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று சிவசேனை கட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.

பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

Posted: 12 Mar 2015 12:19 PM PDT

மானாமதுரையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

சுனந்தா கொலை வழக்கு: பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரிடம் விரைவில் விசாரணை?

Posted: 12 Mar 2015 12:18 PM PDT

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக, தேவைப்பட்டால் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தராரிடம் விசாரணை நடத்துவோம் என்று, தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி தெரிவித்தார்.

குழந்தை தொழிலாளர் ஓழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 12 Mar 2015 12:18 PM PDT

தேவகோட்டையில் தொழிலாளர் நலத்துறை சார்பாக குழந்தை தொழிலாளர் ஓழிப்பு விழிப்புணர்வு பேரணி வட்டாசியர் ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடிநீர்த் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்தவில்லை

Posted: 12 Mar 2015 12:18 PM PDT

குடிநீர், தண்ணீர் சுத்திகரிப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்துவதில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

பரமக்குடி கல்லூரியில் மகளிர் தின விழா

Posted: 12 Mar 2015 12:18 PM PDT

பரமக்குடி அழகப்பா பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிணற்றில் சடலமாக மிதந்த மூதாட்டி

Posted: 12 Mar 2015 12:18 PM PDT

தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் அருகே வேம்பக்கோட்டை கிணற்றில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை சடலமாக மிதந்தார்.

பள்ளி வேன் கவிழ்ந்து 4 குழந்தைகள் படுகாயம்

Posted: 12 Mar 2015 12:17 PM PDT

முதுகுளத்தூர் அருகே கொழுந்துரை கிராமத்தில் வியாழக்கிழமை பள்ளி வேன் கவிழ்ந்து மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மூடப்படும் பொதுத் துறை ஆலைகள்: ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம்

Posted: 12 Mar 2015 12:17 PM PDT

தொடர் நஷ்டத்தால் மூடப்படவுள்ள 5 பொதுத்துறை நிறுவன ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதியம் அதிக அளவில் வழங்கப்படும் என மத்திய கனரகத் தொழிற்சாலைத் துறை அமைச்சர் அனந்த் கீதே தெரிவித்தார்.

உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 160 பேர் கைது

Posted: 12 Mar 2015 12:17 PM PDT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியிர் 160 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தென் மாநிலங்களுக்கென ரூ.26,000 கோடியில் தனி மின் பகிர்மானத் திட்டம்: மத்திய அமைச்சர்

Posted: 12 Mar 2015 12:17 PM PDT

தென் மாநிலங்களுக்கென பிரத்யேக மின் பகிர்மானத் திட்டத்தை ரூ.26 ஆயிரம் கோடி முதலீட்டில் மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று மக்களவையில் மத்திய மின் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி கிலோ ரூ.3: பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 12 Mar 2015 12:17 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்பு

Posted: 12 Mar 2015 12:16 PM PDT

தேனி மாவட்டத்தில் திருட்டு, கஞ்சா விற்பனை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் மீது பாலியல் புகார்

Posted: 12 Mar 2015 12:16 PM PDT

பழனி அருகே பெண்கள் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது, காவல் நிலையத்தில் வியாழக்கிழமை பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Posted: 12 Mar 2015 12:16 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடங்கியுள்ள இ-சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, ஆட்சிய

நிலம் கையக மசோதா: மக்கள் மன்றமே மேலானது என நிரூபிக்க வேண்டி வரும்: ஹசாரே

Posted: 12 Mar 2015 12:16 PM PDT

மாநிலங்களவையில் நிலம் கையக திருத்த மசோதா நிறைவேற்றப்படுமானால் மக்கள் மன்றமே மேலானது என்பதை பொதுமக்கள் நிரூபிக்க வேண்டி வரும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.

குழந்தைத் திருமணம் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 12 Mar 2015 12:15 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது.

சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது

Posted: 12 Mar 2015 12:15 PM PDT

சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். சாத்தூர் அருகே தாயில்பட்டி,கலைஞர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில

இரு மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

Posted: 12 Mar 2015 12:15 PM PDT

இரு மோட்டார் வாகன விபத்துக்களில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள்

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 12 Mar 2015 12:14 PM PDT

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியினர் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

Posted: 12 Mar 2015 12:14 PM PDT

அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பணம் வைத்து சூதாடியதாக வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™