Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மசரத் ஆலம் விடுதலை: மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

Posted: 09 Mar 2015 12:03 AM PDT

காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலத்தை சிறையில் இருந்து விடுவித்து அம்மாநில முதல்வர் முப்தி முகமது சையத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். முப்தியின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்

பிரிவினைவாத தலைவர் விடுதலையை கண்டித்து ஜம்முவில் முழு அடைப்பு: மத்திய அரசு விளக்கம் கேட்கிறது

Posted: 08 Mar 2015 11:59 PM PDT

மசாரத் ஆலம் விடுதலையைக் கண்டித்து ஜம்முவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜனதா ஆதரவுடன் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற முப்தி முகமது சயீத் பிரிவினைவாத தலைவர் மசாரத் ஆலம் என்பவரை

இங்கிலாந்தில் பள்ளி சிறார்களுக்கு பாலியல் பலாத்காரம் குறித்து பாடம் நடத்த திட்டம்

Posted: 08 Mar 2015 11:55 PM PDT

இங்கிலாந்து 11 வயது சிறார்களுக்கு பாலியல் பலாத்காரம் பற்றி வகுப்புகள் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டின் நாளிதழ் ஒன்றில், இங்கிலாந்து கல்வி மந்திரி நிக்கி மோர்கன் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது;

கர்நாடகாவில் ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை அடித்து உதைத்த மாணவிகள்: கிராமமக்கள் பாராட்டு

Posted: 08 Mar 2015 10:45 PM PDT

பெங்களூரைச் சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில் படம் எடுத்தார். இந்த நிலையில் ஒரு மாணவி ஒரு மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றினார். இதனையும் அந்த வாலிபர் படம் எடுத்தார். இதனை அந்த

திருப்பதியில் வருகிற 17–ந் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

Posted: 08 Mar 2015 10:00 PM PDT

வருகிற 21–ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு புத்தாண்டு ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி வருகிற 17–ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதனால் 17–ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து 12 மணிவரை நடைசாத்தப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால்

சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடும் 7 மாத கர்ப்பிணி

Posted: 08 Mar 2015 09:58 PM PDT

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரர். தடகள வீரர். ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்று உள்ளார். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்தார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சாமானிய மனிதனின் வருவாயை சுரண்டும் மத்திய அரசு: தினசரி வருவாயில் 29 சதவீதத்தை விழுங்கும் பெட்ரோல் விலை

Posted: 08 Mar 2015 09:47 PM PDT

கடந்த காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதன்பிறகு பெட்ரோல் விலை தாறுமாறாக உயரத்தொடங்கியது. காரணம் கேட்டபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால், இங்கும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறின.

திருப்பதியில் வேற்று மத பிரசாரத்தில் ஈடுபட்ட வாலிபர்: போலீசார் விசாரணை

Posted: 08 Mar 2015 09:41 PM PDT

திருப்பதி ரெயில் நிலையம் அருகே திருமலை–திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதி உள்ளது. அதில், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் குமார்ரெட்டி என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.

விசாரணை கைதி சாவு: 4 போலீசாருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்- டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

Posted: 08 Mar 2015 09:32 PM PDT

டெல்லியை சேர்ந்த மகேந்தர் சிங் என்பவரை அலிப்பூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவர் உயிர் இழந்ததாக புகார் எழுந்தது.

கேரளாவில் 19 வயது மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த 45 வயது தொழிலாளி கைது

Posted: 08 Mar 2015 09:31 PM PDT

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு பெண் தனது 19 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் அருகில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த பெண்ணுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுபற்றி அந்த பெண், ஆண்டனியிடம் கூறினார். உடனே அவர் அந்த

கற்பழிப்பு குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும்: பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ பேச்சு

Posted: 08 Mar 2015 08:58 PM PDT

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பெண்கள் தின நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவரும் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யுமான உஷாதாகூர் கலந்து கொண்டார்.

உத்தரபிரதேசத்தில் ஊனமுற்ற பெண் துப்பாக்கி முனையில் கற்பழிப்பு

Posted: 08 Mar 2015 08:26 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி என்ற இடத்தில் வாய்பேச இயலாத, காது கேளாத உடல் ஊனமுற்ற பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அந்த நபர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் பிடியில் இருந்து அந்த பெண் தப்பிச் சென்றார்.

செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

Posted: 08 Mar 2015 08:26 PM PDT

செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்து உள்ளது. மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக பரவலான கருத்து உள்ளது. செல்போன் பேசும்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு: நிதிஷ்குமார் 14-ந்தேதி உண்ணாவிரதம்

Posted: 08 Mar 2015 08:26 PM PDT

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும், மக்கள் விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் வருகிற 14-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமை தாங்குகிறார்.

வெளிநாடுகளுக்கு இந்திய குழந்தைகளை தத்து கொடுக்கக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

Posted: 08 Mar 2015 08:10 PM PDT

இந்திய குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தத்து கொடுப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டமசோதா மனித வள மேம்பாட்டுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது.

கோட்சே படத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: புனே கோர்ட்டு உத்தரவு

Posted: 08 Mar 2015 08:01 PM PDT

புனே சிவில் கோர்ட்டில் சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- விரைவில் வெளியாக உள்ள 'தேஷ் பக்த் நாதுராம் கோட்சே' திரைப்படத்தில், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை

டெல்லியில் தொடரும் வெட்கக்கேடு: இரண்டு மாதத்தில் மட்டும் 300 பேர் கற்பழிப்பு

Posted: 08 Mar 2015 07:56 PM PDT

நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள், உலக அரங்கில் நம்மை தொடர்ந்து தலைகுனிய வைக்கிறது. நாள்தோறும் கற்பழிப்பு, கொலை என அடுத்தடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்கள் தான் இதற்கு காரணம். அந்த வகையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் அங்கு 300 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மானபங்கப்படுத்தப்பட்டதாக 500 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும்: தேர்தல் கமிஷன்

Posted: 08 Mar 2015 07:36 PM PDT

ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை, இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக ஆதார் அட்டை பெறாதவர்கள்,

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி நடை திறப்பு

Posted: 08 Mar 2015 07:27 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூ

25000-க்கும் மேலானது பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் 1370 பேர் பலி

Posted: 08 Mar 2015 03:53 PM PDT

பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து, நாடு முழுவதும் இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,370ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™