Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொடத் தொடத் தொல்காப்பியம்(349)

Posted: 08 Mar 2015 12:11 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 08 Mar 2015 12:03 PM PDT

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா-புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்

Posted: 08 Mar 2015 08:16 AM PDT

சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து , சென்னையில் புதிய தலைமுறை சேனல் ஒளிப்பதிவாளர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிய தலைமுறை சேனலின் அலுவலகம் இயங்கி வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அச்சேனலில், உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா என்ற தலைப்பில் தயாரிக்கப் ...

சாட்டை எடுத்த ஜெ.!!!!!

Posted: 08 Mar 2015 07:51 AM PDT

கழுகார் உள்ளே நுழைவதற்கும், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவிகளை ஜெயலலிதா பறிப்பதற்கும் சரியாக இருந்தது! ''இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்றுதான் கோட்டையில் பேச்சு! ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் முந்திச் செயல்படுத்துவதுதானே ஜெயலலிதாவின் பாணி!' என்றபடி கழுகார் ஆரம்பித்தார்! ''திருநெல்வேலியில் இருந்து உமது நிருபர் எழுதிய உருக்கமும் கோபமுமான கட்டுரைதான் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவியை காவு வாங்கி இருக்கிறது. எந்த நேரமும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் ...

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., நூலிலிருந்து:

Posted: 08 Mar 2015 07:43 AM PDT

ராணி மைந்தன் எழுதிய, 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., நூலிலிருந்து: – 'ஒரு பாட்டு சரியாக வரும்வரை, தான் எதிர்பார்த்தபடி அமையும் வரை, பாடுவோர் மற்றும் வாசிப்பவர்களை கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி வேலை வாங்குவார் – எம்.எஸ்.வி., சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தில், 'மேரா நாம் அப்துல் ரஹ்மான்…' என்ற பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடிய போது, எம்.எஸ்.வி.,க்கு அது திருப்தியாக இல்லை. தான் எதிர்பார்த்த, 'எபெக்ட்' வராததால், டி.எம்.எஸ்.சை, 'டிரில்' வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ...

இயலாமையின் மொழி அல்ல!

Posted: 08 Mar 2015 07:34 AM PDT

- கல்யாணக் கன்னியும் கடை நாற்காலியும் வேறுபாடுகளில்லாத விற்பனை பொருட்கள்! விவாகமும், விற்பனையும் கணநேரத்தில் காவு வாங்கிவிடும் கடுமை மிக்கவை! வரும் வரனையும், வாங்கும் நபரையும் பொறுத்து அமைகிறது இவற்றின் வாழ்க்கை! நங்கையின் குமுறலும் நாற்காலியின் அழுகையும் ஊமைக்குரலாகவே ஒடுங்கி விடுகின்றன! தவிக்கும் பெண்ணும் சுமக்கும் நாற்காலியும் 'சும்மாடுகள்' அவை சுமை தாங்கிகளே ஒழிய சுகம் நாடிகள் அல்ல! கொண்டவன் வாங்கும் லஞ்சமும் செய்யும் சூழ்ச்சியும் தடுக்கத் திறனில்லாமல் தவிக்கவே ...

சினிமா துளிகள்

Posted: 08 Mar 2015 07:32 AM PDT

* திருமணத்துக்கு தயாராகி விட்ட அந்த ஷா நடிகை, தன்னுடன் கிசுகிசுக்கப்பட்டவர்களால், திருமண வாழ்க்கையில், புயல் வீசி விடக் கூடாது என்பதற்காக, சென்னை, ஆந்திரா, பெங்களூரு என்று, மொழிவாரியாக பார்ட்டி கொடுத்து, மேற்படி நபர்களிடமிருந்து பிரியா விடை பெற்றிருக்கிறார். அப்போது, பழைய விஷயங்களை, எக்காரணம் கொண்டும், 'லீக்' அவுட் செய்ய வேண்டாம் என்றும், அன்பொழுக கேட்டுக்கொண்டுள்ளார். – —————————————- * ஊதா கலரு நடிகைக்கு, மெரினா நடிகர் சிபாரிசு செய்கிற விவகாரம், அவரது குடும்பத்தில் பெரும் ...

மத்திய அரசு தர்றத வாங்கி மாநில அரசுக்கு குடுத்துடுவாரு…!!

Posted: 08 Mar 2015 07:25 AM PDT

மகளீர் தின வாழ்த்துக்கள்

Posted: 08 Mar 2015 07:17 AM PDT

மகளீர் தின வாழ்த்துக்கள்  மகளீர் தினம் என்று மட்டுமில்லை  தினம் தினம் வரவேண்டும் , உங்கள் பெயர்கள் . தினசரிகளில் வரவேண்டும் . வலைகளில் வரவேண்டும்  அலைகள் கடந்தும் வரவேண்டும் . கணினியை வென்ற  சகுந்தலா தேவி போன்றும் , ககனம் கடந்த  கல்பனா போன்றும்  சுதந்திர போராளி  தில்லையாடி போன்றும்  தொழுநோய் நோயாளிகளை  வாழ்வித்த அன்னை தெரசா போன்றும்  உன்னை போற்ற , உந்தன் உழைப்பை போற்ற  உந்தன் வெற்றிகளை போற்ற  ஊடகங்கள் உன்னை அணுக  உழைத்திடு பெண்ணே உழைத்திடு . தமிழ் இந்துஜாக்கள் வேண்டாம் ...

வள்ளலார் பாடியவை அருட்பா தான் மருட்பா அல்ல

Posted: 08 Mar 2015 07:17 AM PDT

சி.பி.மாசிலாமணி முதலியார் எழுதிய பழைய நூல் ஒன்றிலிருந்து: ஆறுமுக நாவலருக்கும், ராமலிங்க சுவாமிகளுக்கும் நடைபெற்று வந்த போராட்டம், கடைசியில் நீதி மன்றத்தில் நிறுத்தி விட்டது. நாவலர் தம் கல்வி புலமைக்கு அத்தாட்சியாக, பிரபல வித்வான்களின் புகழ் மாலைகளும், பெரிய பெரிய பிரபுக்களின் நற்சாட்சிப் பத்திரங்களும், அவருடைய பலவித நூலாராய்ச்சி புத்தகங்களும், ரிக்கார்டுகளும், மஞ்சகுப்பம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. சுவாமிகள் சார்பாக, தாக்கல் செய்ய அருட்பா தவிர வேறொன்றும் இல்லை. அக்காலத்தில் ...

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.

Posted: 08 Mar 2015 07:00 AM PDT

- ராதாபாய். தற்போது புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரியில் வரலாற்று துறைதலைவராக உள்ளார். – வள்ளூவன் பார்வை என்ற பார்வை இல்லாதவர்களுக்கான இணையதளத்தின்வளர்சிக்காக உழைப்பவர். – இந்த இடத்தை அடையவும் இந்த பொறுப்பை பெறவும் இவர் தந்திருக்கும்உழைப்பும் காட்டியிருக்கும் பொறுமையும் அசாத்தியமானது. – ராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலேயே அவருக்கு பார்வையில் பிரச்னை என்பது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தெரிந்தது, நான்கு வயது வந்தபோது இனிபார்வை கிடையாது என்பதும் புரிந்தது. ராதாபாய்க்கு தனக்கு ...

பூனம் பாண்டேயின் உற்சாக ஆட்டம்! -

Posted: 08 Mar 2015 06:44 AM PDT

- - கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, 'இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன்…' என்று சொல்லி, பெரிய பரபரப்பை உருவாக்கியவர் இந்தி நடிகை பூனம் பாண்டே. சமீபத்தில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக் கொண்ட போது, அன்றைய தினம், மும்பை விமான நிலையத்தில் இருந்தவர், இந்திய வீரர்கள், 4, 6 என்று ரன் அடிக்கிற போதெல்லாம், குத்தாட்டம் ஆடத் துவங்கினார். அவருடன், விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளும் சேர்ந்து உற்சாக நடனமாடினர். இதனால், அங்கு விரைந்த போலீசார், ...

பட்டப்பெயரை தூக்கி கடாசிய தனுஷ்!

Posted: 08 Mar 2015 06:28 AM PDT

- இதுவரை இணையதளங்களில், விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களுக்கிடையேதான் மோதல்கள் நடந்து வந்தது. ஆனால், அனேகன் படம் ரிலீசான போது, தனுஷின் ரசிகர்களும் களமிறங்கி, தனுஷுக்கு, 'இளைய சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து, ஏற்கனவே சூப்பர் ஸ்டார் யார் என்கிற போட்டியில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களை டென்ஷன் செய்துள்ளனர். இதனால், எரிச்சல் அடைந்துள்ள விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள், தனுஷை, 'சூப்பர் ஸடார்' என்று சொன்ன, அவரது ரசிகர்களை கிண்டல் செய்தனர். இதில், ...

ஜட்டி போராட்டம்!

Posted: 08 Mar 2015 06:22 AM PDT

- நம் அரசியல்வாதிகள், சொத்து சேர்ப்பதற்காக கட்சி நடத்துகின்றனர். அக்கட்சிகளை வாழ வைக்க அடிக்கடி போராட்டங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால், சமீபத்தில், அமெரிக்காவில் நியூயார்க் நகரில், பொது பிரச்னைக்காக ஆண்களும், பெண்களும் ஜட்டி அணிந்து, வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கான காரணம், முதுமையின் போது, உடல் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுவதால், சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அக்கறை ...

பூவுக்கென்ன சிரிப்பு

Posted: 08 Mar 2015 06:06 AM PDT

- நட்சத்திரம் உருகி வழிகிறதோ வெளியில் மழை - ———————- - அவள் தடம் பதித்த இடம் எது? தல யாத்திரை போக வேண்டும் - ———————— - கரும்பு வண்டிக்காரன் காசில் ரேஷன் சர்க்கரை - ———————— - சுட்ட அப்பளம் சுற்றிலும் பருக்கைகள் பட்டினி ராத்திரி - ———————– - புல்லின் விரல்கள் கிள்ளியதோ? பூவுக்கென்ன சிரிப்பு - ————————— கவிஞர் ஜீவி ஜீவி கவிதைகள் நூலிலிருந்து

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலி

Posted: 08 Mar 2015 05:23 AM PDT

- கராச்சியில் இந்துக்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி அமைத்த தேசிய மாணவர் கூட்டமைப்பினர். கராச்சியில் இந்துக்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி அமைத்த தேசிய மாணவர் கூட்டமைப்பினர். கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில் இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம் மாணவர்கள் அங்கு மனிதச் சங்கிலி அமைத்தனர். தேசிய மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதுகுறித்து அந்த அமைப்பு ...

சுத்தானந்த பாரதியார்

Posted: 08 Mar 2015 05:00 AM PDT

– சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 – மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார். – சுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக் கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். – ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் ...

மீண்டும் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 1100 : ஆண்ட்ராய்டு 5.0 உட்பட பல அதி நவீன வசதிகளுடன்

Posted: 07 Mar 2015 10:29 PM PST

செல்போன் பிரியர்களுக்கு 1100 என்பது வெறும் மாடல் அல்ல. ஏன் அது ஒரு செல்போன் கூட அல்ல. பால்ய கால நண்பனைப் போன்று நெருக்கமான ஒரு ஜீவன். 2003 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 1100 "உலகின் மிக பிரபலமான போன்" என்ற அங்கீகாரத்தையும், எந்த நிறுவனமும் இதுவரை சாதிக்காத வகையில் உலகமெங்கும் 250 மில்லியன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட ஒரே செல்போனாக சந்தையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. இப்போது அதே நோக்கியா 1100 ஆண்ட்ராய்டு போனாக கிடைத்தால் எப்படி இருக்கும்? கிடைத்தால் என்ன விரைவில் கிடைக்கப் போகிறது. ...

ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்து பிரச்சினையை ஊதிப்பெருக்க வேண்டாம்: தோனி

Posted: 07 Mar 2015 09:37 PM PST

- சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார் என்ற விஷயம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் தோனி. மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 ரன்களில் டிவைன் ஸ்மித் வீசிய சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தில் ரெய்னா கேட்ச் கொடுத்து வெளியேறிய விவகாரத்தை செய்தியாளர்கள் கேப்டன் தோனியிடம் எழுப்ப, அவர் கூறும்போது: "ஊடகங்கள்தான் இதனை ஒரு பெரிய விஷயமாக ஊதிப் பெருக்குகின்றனர். மற்ற நாட்டு வீரர்கள் சிலரும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழக்கின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இது எங்கள் தலையில் ...

வானவில்‌லில் இடம்பெறாத நிறம் – பொது அறிவு தகவல்

Posted: 07 Mar 2015 07:42 PM PST

- 1. வானவில்‌லில் இடம்பெறாத நிறம் – பிங்‌க் – 2. பூமி எதனை சுற்‌றி வரு‌கிறது – சூரியன் – 3. ஆரஞ்சு பழத்‌தில் நிறைந்‌திருக்கும் விட்டமின் – விட்டமின் சி – 4. உடலின் எந்த உறுப்பு ரத்தத்தை சுத்‌திகரிக்‌கிறது? – சிறுநீரகம் – 5.. ஒரு அடி – என்பது – 12 அங்குலங்கள் – 6.DVD என்றால் – டிமேன்‌ட் விடியோ டிஸ்‌க் – 7. இந்‌திய தேசியக் கொடியில் உள்ள கா‌வி நிறம் – தியாகத்தைக் குறிக்கிறது – 8. SMS-ன் விரிவாக்கம் -ஷார்‌ட் மெசேஜ் சர்‌விஸ் – 9. சூரியன் உதிக்கும் திசை – கிழக்கு – 10-) ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™