மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சாரதா நிதி நிறுவன முறைகேடு: நடிகர் மிதுன்சக்கரவர்த்திக்கு மீண்டும் சம்மன்
- நாளை தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் கட்டண சேவைகள் ரத்து
- உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலி
- வீட்டு உபயோகப்பொருள் என்று அனுப்பிய பார்சலில் ரூ.5 கோடி தங்கம் கடத்தல்: 2 வாலிபர்கள் கைது
- திருப்பதி மலைப்பாதைகளில் டெல்லி அதிகாரிகள் ஆய்வு
- புரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி 92 வயதில் மரணம்: கடவுளின் மனித துணைவி முறை முடிவுக்கு வந்தது
- தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு
- காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி
- ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை நிராகரிப்பு: கர்நாடக மந்திரிசபை முடிவு
- டெல்லியில் குடிநீர் கட்டணம் 10 சதவீதம் உயர்வு
- சி.பி.எஸ்.இ. நடத்திய 12-ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார்: கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?
- மியான்மரின் மாண்டலே நகரில் தரையிறங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம்
- குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது
- சுரங்க மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்: ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் பேச்சால் அமளி
- நாட்டில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 1900-ஐ நெருங்கியது
- வானிலிருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்கை தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
- 6 ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவு
- ஆந்திராவில் ஜெகன் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம்
- ஷேவிங் செய்யும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை
- திட்டக் கமிஷன் கலைப்பு: மத்திய அரசு மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் பாய்ச்சல்
| சாரதா நிதி நிறுவன முறைகேடு: நடிகர் மிதுன்சக்கரவர்த்திக்கு மீண்டும் சம்மன் Posted: 19 Mar 2015 10:47 PM PDT மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு சாரதா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ஒடிசா, அசாம் மாநிலங்களிலும் ஆயிரக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வந்தது இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. |
| நாளை தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் கட்டண சேவைகள் ரத்து Posted: 19 Mar 2015 10:45 PM PDT தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை நாளை (21–ந்தேதி) கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. |
| உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலி Posted: 19 Mar 2015 10:40 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலையில் சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ரெயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர் என்று ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் 3 பெட்டிகள் |
| வீட்டு உபயோகப்பொருள் என்று அனுப்பிய பார்சலில் ரூ.5 கோடி தங்கம் கடத்தல்: 2 வாலிபர்கள் கைது Posted: 19 Mar 2015 09:59 PM PDT கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் 12 கிலோ தங்கம் கடத்தி வரப்படுவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் உஷாரானார்கள். குறிப்பிட்ட விமானம் வந்தபோது அதில் இருந்த பார்சல்களை சோதனை செய்தனர். அதில் வீட்டு |
| திருப்பதி மலைப்பாதைகளில் டெல்லி அதிகாரிகள் ஆய்வு Posted: 19 Mar 2015 09:55 PM PDT திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் இரு மலைப்பாதைகள் உள்ளன. அதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மழை காலத்தில் மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு சாலைகளில் விழுவதாலும், மண்சரிவு ஏற்படுவதாலும் வாகனங்கள் செல்ல முடியவில்லை, விபத்துகளும் ஏற்படுகின்றன. அத்துடன் கொண்டை ஊசி வளைவுகளில் |
| புரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி 92 வயதில் மரணம்: கடவுளின் மனித துணைவி முறை முடிவுக்கு வந்தது Posted: 19 Mar 2015 09:19 PM PDT புரி ஜெகன்நாத் கோவிலின் 800 ஆண்டு கால பழமையன தேவதாசி முறையானது, சஷிமாணி தேவி என்ற 92 வயது பெண்னின் மரணத்தால் முடிவுக்கு வந்தது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாத் கோவிலில் சஷிமாணி தேவி கடவுளின் மனித துணைவியாகவும், அந்த கோவிலின் ஒரே பெண் பணியாளரகவும் இருந்து வந்தார். இவரின் முக்கிய பணி கோவிலின் விஷேச நாட்களில் கடவுள் முன் நடனம் ஆடுவது மற்றும் |
| தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு Posted: 19 Mar 2015 08:05 PM PDT ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தீவிரவாதத்துக்கு எதிரான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. சட்டவிரோத குடியேற்றம், எல்லை பாதுகாப்பு, தீவிரவாதம், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கள்ளநோட்டு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. |
| காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி Posted: 19 Mar 2015 07:36 PM PDT காஷ்மீரில் முப்தி முகமது சயீத் தலைமையில் பி.டி.பி.–பா.ஜனதா கூட்டணி மந்திரிசபை பதவி ஏற்ற பின்பு அங்கு தீவிரவாதிகள் முதல் முறையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தலின் போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் |
| ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை நிராகரிப்பு: கர்நாடக மந்திரிசபை முடிவு Posted: 19 Mar 2015 02:50 PM PDT ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை கர்நாடக மாநில மந்திரிசபை நிராகரித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ந்தேதி அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை தொடங்கி உள்ளது. |
| டெல்லியில் குடிநீர் கட்டணம் 10 சதவீதம் உயர்வு Posted: 19 Mar 2015 01:41 PM PDT டெல்லியில், குடிநீர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற டெல்லி குடிநீர் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது, உடனடியாக அமலுக்கு வந்தது. மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு இந்த கட்டண உயர்வால் பாதிப்பு இல்லை. |
| Posted: 19 Mar 2015 01:11 PM PDT மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ., 12-வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறுகின்றனர். பாடதிட்டத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. |
| மியான்மரின் மாண்டலே நகரில் தரையிறங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம் Posted: 19 Mar 2015 12:26 PM PDT உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து இன்று அதிகாலை மியான்மருக்கு புறப்பட்ட சோலார் இம்பல்ஸ் விமானம் இன்றிரவு அந்நாட்டின் மாண்டலே நகரில் தரையிறங்கியது. சூரிய சக்தியால் இயங்கும் உலகின் ஒரே விமானமான சோலார் இம்பல்ஸ்-2, ஒரு சொட்டு எரிபொருளை கூட பயன்படுத்தாமல் உலகை சுற்றி வருகிறது. இன்று காலை வாரணாசியிலிருந்து விமானி பர்டினார்ட் பிக்கார்ட் விமானத்தை ஓட்டிச்சென்றார். வாரணாசியிலிருந்து கிளம்பிய |
| குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது Posted: 19 Mar 2015 11:35 AM PDT வடக்கு குஜராத்தில் இன்று நிகழ்ந்த மிதமான நிலநடுக்கம், அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழப்போ சேதாரமோ ஏற்படவில்லை. வடக்கு குஜராத்தில் உள்ள சபர்கந்தா, பனஸ்கந்தா மற்றும் மேஹ்சன் ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக நில |
| சுரங்க மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்: ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் பேச்சால் அமளி Posted: 19 Mar 2015 11:29 AM PDT பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் போதிய பலம் கிடையாது. இதன் காரணமாகவே அடிக்கடி எதிர்க்கட்சிகளின் தயவை ஆளுங்கட்சி நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள கனிம வளங்கள் தொடர்பாக புதிய சுரங்க மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மீது இன்று மாநிலங்களவையில் |
| Posted: 19 Mar 2015 10:30 AM PDT கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32 பேரின் உயிரை பன்றிக்காய்ச்சல் நோய் பலி வாங்கியதால், நாடு முழுவதும் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்க ஆரம்பித்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தை தாண்டியது. எச்.1.என்.1. எனப்படும் வைரஸால் பரவும் பன்றிக்காய்ச்சல் நோய், நாட்டிலுள்ள வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தலை விரித்தாடுகிறது. அம்மாநிலங்களில் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, |
| வானிலிருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்கை தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி Posted: 19 Mar 2015 10:15 AM PDT இந்தியாவின் காட்சிக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட, வானிலிருந்து ஏவி வானில் உள்ள இலக்கை தாக்கும் அஸ்திரா ஏவுகணை இன்று 2வது நாளாக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியான பாலசோரில்(சந்திபூர்) உள்ள ஒருங்கிணைந்த சோதனை வட்டத்திற்குள் சோதித்து பார்க்கப்பட்டது. |
| 6 ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவு Posted: 19 Mar 2015 09:00 AM PDT குத்தகைப்பணம் செலுத்தாததால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 6 விமானங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி சிவில் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் விமான |
| Posted: 19 Mar 2015 08:13 AM PDT ஆந்திர மாநில சட்டசபையில் இன்று சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு |
| ஷேவிங் செய்யும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை Posted: 19 Mar 2015 07:22 AM PDT ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஷேவிங் செய்ய உபயோகப்படுத்தும் பிளேடால் கழுத்தை அழுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேந்திரபாரா மாவட்டத்தின் பெலார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்ராஜ் ரகிதாஸ் (24). தினக் கூலியாக வேலை பார்த்து வரும் அவர் குடும்பத் தகராறு காரணமாக ஷேவிங் செய்யும் பிளேடினால் இன்று தனது |
| திட்டக் கமிஷன் கலைப்பு: மத்திய அரசு மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் பாய்ச்சல் Posted: 19 Mar 2015 06:48 AM PDT திட்டக் கமிஷனைக் கலைத்தது, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கொண்டு வந்த மரபார்ந்த முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |