மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மங்களூர் மாநாட்டில் விசுவ இந்து தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை
- கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது
- 1 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகம்
- ஆசிரியர் நியமன ஊழல்: முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு தண்டனை-உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்
- ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பொங்காலை விழா
- பீகார் மாநிலத்தில் மாஞ்சி திட்டங்களுக்கு நிதிஷ்குமார் தடை
- அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை: மராட்டிய மாநில அரசு அறிவிப்பு
- வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார்: கமல்நாத் பேட்டி
- இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும்: நிர்பயாவின் தந்தை பேட்டி
- அன்னா ஹசாரேக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு
- மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது
- சொத்து குவிப்பு வழக்கு: கீழ்க்கோர்ட்டு தீர்ப்புக்கு பலம் சேர்க்க கூடுதல் ஆவணங்கள் உள்ளதா? - நீதிபதி கேள்வி
- திகார் சிறை அதிகாரியை அழைத்து ராஜ்நாத் சிங் விசாரணை
- புதிய சட்டப்படி கருப்பு பண பதுக்கலை ஊக்குவிக்கும் வங்கி, நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை
- பாகிஸ்தான் சிறைகளில் 352 இந்தியர்கள்: பாராளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் தகவல்
- கர்நாடகாவில் தொழிலாளி வீட்டில் தானாக தீப்பிடித்து எரியும் பொருட்கள் - பீதியில் கிராம மக்கள்
- கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப தடைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
- ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு தடை நீக்கம்: மத்திய மந்திரி தகவல்
- பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் விண்ணில் செலுத்துவது தள்ளிவைப்பு
- ஹாவேரி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
| மங்களூர் மாநாட்டில் விசுவ இந்து தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை Posted: 04 Mar 2015 10:32 PM PST விசுவ இந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பாலிகா சரஸ்வதி மங்களூரில் நடந்த இந்து மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ''இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களை ''ஷூ''–வால் அடித்து விரட்ட வேண்டும். அயோத்தியில் மட்டுமின்றி இஸ்லாமாபாத்திலும் ராமருக்கு கோவில் கட்டப்பட வேண்டும்'' என்று பேசினார். அவரது இந்த பேச்சு கடும் |
| கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது Posted: 04 Mar 2015 10:28 PM PST கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பள்ளிக்கத்தோடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிந்து (வயது 34). இவர் கோட்டயம் நகராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். வழக்கம் போல் நேற்றும் தகராறு ஏற்பட்டது. |
| 1 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகம் Posted: 04 Mar 2015 10:23 PM PST 1 ரூபாய் நோட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததால் கடந்த 1994–ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுக்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. எனவே, புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசு |
| Posted: 04 Mar 2015 10:17 PM PST அரியானா மாநிலத்தில் லோக் தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்-மந்திரியாக இருந்த போது கடந்த 2000-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் தயாரித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. |
| ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பொங்காலை விழா Posted: 04 Mar 2015 10:09 PM PST திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று காலை நடைபெற்றது. முதலில் பகவதியம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ளே |
| பீகார் மாநிலத்தில் மாஞ்சி திட்டங்களுக்கு நிதிஷ்குமார் தடை Posted: 04 Mar 2015 09:51 PM PST பீகார் மாநிலத்தில் முதல்–மந்திரியாக இருந்த ஜித்தன்ராம் மாஞ்சி சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகும் முன்பு பிப்ரவரி 10–ந் தேதியில் இருந்து 18–ந் தேதிக்குள் 36 திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார். |
| அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை: மராட்டிய மாநில அரசு அறிவிப்பு Posted: 04 Mar 2015 09:21 PM PST மராட்டிய மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டது. |
| வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார்: கமல்நாத் பேட்டி Posted: 04 Mar 2015 09:20 PM PST பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை. |
| இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும்: நிர்பயாவின் தந்தை பேட்டி Posted: 04 Mar 2015 09:16 PM PST டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங்கிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். ஆவணப்படமாக உருவாக்கப்பட்ட இப்பேட்டியை பி.பி.சி. தொலைக்காட்சி நேற்று பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் ஒளிபரப்பியது. |
| அன்னா ஹசாரேக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு Posted: 04 Mar 2015 09:11 PM PST பிரபல சமூகசேவகர் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவர் நிலம் கையப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அன்னா ஹசாரேக்கு கனடாவை சேர்ந்த ககன்விது, நீலு |
| மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது Posted: 04 Mar 2015 07:45 PM PST டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். ஆவணப்படமாக இப்பேட்டியை லெஸ்லி தயாரிக்க, உலக பெண்கள் தினமான வரும் 8-ந் தேதியன்று இந்த ஆவணப்படத்தை |
| Posted: 04 Mar 2015 07:34 PM PST கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியது. தனி நீதிபதி |
| திகார் சிறை அதிகாரியை அழைத்து ராஜ்நாத் சிங் விசாரணை Posted: 04 Mar 2015 07:13 PM PST டெல்லி மருத்துவ மாணவி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பஸ் டிரைவர் முகேஷ் சிங்கிடம், திகார் சிறையில் பேட்டி எடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, திகார் சிறையின் டைரக்டர் ஜெனரல் அலோக்குமார் |
| புதிய சட்டப்படி கருப்பு பண பதுக்கலை ஊக்குவிக்கும் வங்கி, நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை Posted: 04 Mar 2015 07:05 PM PST கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், கருப்பு பணத்தை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும், இதற்கான மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி இருந்தார். |
| பாகிஸ்தான் சிறைகளில் 352 இந்தியர்கள்: பாராளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் தகவல் Posted: 04 Mar 2015 06:56 PM PST பாகிஸ்தான் சிறைகளில் மீனவர்கள் உள்பட 352 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- |
| கர்நாடகாவில் தொழிலாளி வீட்டில் தானாக தீப்பிடித்து எரியும் பொருட்கள் - பீதியில் கிராம மக்கள் Posted: 04 Mar 2015 06:23 PM PST தமிழ்நாட்டில் ஒரு சிறு குழந்தையின் உடலில் தானாகவே தீப்பற்றி எரிந்த சம்பவம் அரங்கேறியது. அந்த குழந்தைக்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும், குழந்தையின் உடலில் எப்படி தானாகவே தீப்பிடித்து எரிந்தது பற்றி |
| கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப தடைக்கு உமர் அப்துல்லா கண்டனம் Posted: 04 Mar 2015 05:47 PM PST டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது 'டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், |
| ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு தடை நீக்கம்: மத்திய மந்திரி தகவல் Posted: 04 Mar 2015 01:45 PM PST இந்தியாவின் புகழ்பெற்ற அல்போன்சா உள்ளிட்ட உயர்ரக மாம்பழங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் இதில் புழுக்கள் போன்றவை இருப்பதாக கூறி, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. |
| பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் விண்ணில் செலுத்துவது தள்ளிவைப்பு Posted: 04 Mar 2015 12:56 PM PST பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வருகிற 9-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதனை விண்ணில் செலுத்துவது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வருகிற 9-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் |
| ஹாவேரி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி Posted: 04 Mar 2015 09:52 AM PST ஹாவேரி மாவட்டம் ஹெக்கேரி பகுதியை சேர்ந்தவர்கள் ஹரீஷ் கம்பளா (வயது 16), சரணு அலதகட்டி (16). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் அங்கு உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |