Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரள சட்டசபை மோதல்: பொதுமக்களிடம் அனைத்து கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும் - சபாநாயகர்

Posted: 15 Mar 2015 11:21 PM PDT

கேரள சட்டசபையில் நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்தபோது வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

Posted: 15 Mar 2015 11:19 PM PDT

பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகள் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல கால பூஜைகள் ஆகும். இந்த பூஜைகளில் பங்கேற்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இதுபோக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதைபோல பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14–ந்தேதி மாலை

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரம்: ஜனாதிபதி மாளிகை நோக்கி 10 கட்சிகள் நாளை பேரணி

Posted: 15 Mar 2015 11:18 PM PDT

2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தது. அதன்படி நிலங்களை கையகப்படுத்த, அந்த பகுதியை சேர்ந்த 80 சதவீத விவசாயிகள் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்குள் அந்த நிலத்தை கையகப்படுத்திய நோக்கத்துக்கு பயன்படுத்தா விட்டால் விவசாயிகளிடம் அந்த நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்பன

ராகுல் காந்தியை உளவு பார்த்த விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது: ராஜ்யசபையில் காங். குற்றச்சாட்டு

Posted: 15 Mar 2015 11:15 PM PDT

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்குச் சென்ற டெல்லி போலீசார் ராகுல் தலைமுடி கலர் மற்றும் கண் நிறம் குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசு ராகுல் காந்தியை உளவு பார்க்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடியது. பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து ராகுல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.3 கோடியை தாண்டி சாதனை

Posted: 15 Mar 2015 10:40 PM PDT

திருப்பதியில் வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சனிக்கிழமை தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 14 மணி நேரம் காத்து இருந்தனர். இதனிடையே முடி காணிக்கை செலுத்த பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து

திருப்பதி கோவிலில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து

Posted: 15 Mar 2015 10:36 PM PDT

ஆந்திராவில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை வருகிற 21–ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 21–ந்தேதி யுகாதி ஆஸ்தானம் கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் கோவில் தங்க வாசல் அருகே புதிய வருடமான ''மன்மத நாம'' வருடத்தின் பஞ்சாங்கம் படிக்கப்படும்.

நடுரோட்டில் நடந்த பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் சாவு: தாய் உயிர் ஊசல்

Posted: 15 Mar 2015 10:28 PM PDT

ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் செலிமே பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவரது மனைவி மாரட்கா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி ராயதுர்க்கா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தனர். ஆனால் வழியிலேயே மாரட்காவுக்கு பிரசவ வலி அதிகமானது. குழந்தை பிறக்கும் சூழ்நிலை உருவானது.

மேற்கு வங்காளத்தில் உள்ள பராக்கா அணையின் கேட் உடைந்து வெள்ளம் வெளியேற்றம்

Posted: 15 Mar 2015 10:26 PM PDT

மேற்கு வங்காளத்தில் வங்காள தேசம் எல்லை அருகே கங்கை ஆற்றின் குறுக்கே பராக்கா என்ற அணை உள்ளது. தற்போது வடமாநிலங்களில் எதிர்பாராத விதமாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் கங்கை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்த வெள்ளம் காரணமாக

பெங்களூர் அருகே ரெயில் விபத்தை தடுத்த 11 வயது சிறுவன்

Posted: 15 Mar 2015 10:19 PM PDT

மராட்டிய மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. பெங்களூர் அருகே டி.சி.எம். டவுன்சிப் அருகே தண்டவாளம் உடைந்து கிடந்ததை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பிரகாஷ் பார்த்து

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது 30 அடி பள்ளத்தில் கார் உருண்டு விழுந்து 3 பெண்கள் பலி

Posted: 15 Mar 2015 10:17 PM PDT

கேரள மாநிலம் கோழிக்கோடு காக்கவயல் அடுத்த கூட்டச்சேரியை சேர்ந்தவர் ஹம்சா. இவரது மனைவி ஷெரீப் (வயது 47), மகள் ஹசினா, மகன் ஹம்சா, அவரது மனைவி சம்சீனா, இவர்களது 9 மாதக்குழந்தை, ஹசினாவின் மகள் சானு என 6 பேரும் காப்பம் என்ற இடத்தில் நடந்த உறவினர் திருமண வீட்டுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டனர். கூட்டச்சேரி பிரிவு என்ற

கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உம்மன்சாண்டி

Posted: 15 Mar 2015 09:36 PM PDT

கேரளாவில் ஊழல் புகாரில் சிக்கிய நிதி மந்திரி மாணியை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மாணி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரலாறு காணாத அமளியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து கேரள கவர்னர் சதாசிவம் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

திருப்பதியில் போலீஸ் என கூறி பெண்ணை கற்பழித்த 5 பேர் கைது

Posted: 15 Mar 2015 09:28 PM PDT

திருப்பதி ராஜீவ்நகரில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. திருப்பதி நகர பாரதீய ஜனதா யுவமோட்சா தலைவர் ராஜகொண்டா விஸ்வநாத் மற்றும் அவரின் நண்பர்கள் 4 பேர் ஸ்ரீநகர் காலனிக்கு சென்றனர். விபசார பெண்ணின் வீட்டுக்கு சென்ற அவர்கள் நாங்கள் அலிபிரி போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறோம் என கூறி அந்த பெண்ணை 5 பேரும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் அந்த பெண் பணம் கேட்டதற்கு போலீசாரிடமே பணம் கேட்கிறாயா? என கூறி மிரட்டி உள்ளனர்.

எல்லை பாதுகாப்புப் படை வீரர்களிடையே மாரடைப்பு நோய் அதிகரிப்பு: டைரக்டர் ஜெனரல் கவலை

Posted: 15 Mar 2015 09:04 PM PDT

இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் வேலை பார்க்கும் ஜவான்களிடையே மாரடைப்பு நோய் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று எல்லை பாதுகாப்புப் படை வீரர் டைரக்டர் ஜெனரல் தேவேந்திர குமார் பதக் தெரிவித்துள்ளார்.

ம.பி.: ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமியை தூக்கி எறிந்த கொடூர மனிதன்

Posted: 15 Mar 2015 08:52 PM PDT

ஓடும் ரெயிலில் இருந்து 8 வயது சிறுமியை சக பயணி ஒருவர் தூக்கி எறிந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அச்சிறுமி மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார்.

நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன் சிங்குக்கு மோடியின் சகோதரர் ஆதரவு

Posted: 15 Mar 2015 08:28 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம்(ஏப்ரல்) 8-ந்தேதி ஆஜராகும்படி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. இப்பிரச்சினையில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சோம்நாத் மோடி

விசாரணைக்காக ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்றதை பிரச்சினை ஆக்குவதா?: வெங்கையா நாயுடு கண்டனம்

Posted: 15 Mar 2015 08:24 PM PDT

கடந்த வாரம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வசிக்கும் டெல்லி துக்ளக் லேன் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கிருந்தவர்களிடம் அவருடைய அங்க அடையாளங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். பாதுகாப்பு தணிக்கைக்காகவே போலீசார் இதுபோல் விசாரணை நடத்தினர் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸ்சி குறிப்பிட்டார்.

2050-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியை எட்டும்: மத்திய மந்திரி தகவல்

Posted: 15 Mar 2015 08:21 PM PDT

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என்றும், 2050-ம் ஆண்டில் இது 160 கோடியை எட்டும் என்றும் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிவிப்பு

Posted: 15 Mar 2015 08:16 PM PDT

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிலக்கரி சுரங்க ஊழல்: காங்கிரஸ் செய்த பாவத்தின் பலனை மன்மோகன்சிங் அனுபவிக்கிறார்-பா.ஜ.க கருத்து

Posted: 15 Mar 2015 08:16 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் காங்கிரஸ் செய்த பாவத்தின் பலனை மன்மோகன்சிங் அனுபவிக்கிறார் என்று பா.ஜனதா கருத்து தெரிவித்து உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு

ராகுல்காந்தி பற்றிய போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் திட்டம்?

Posted: 15 Mar 2015 08:16 PM PDT

ராகுல் காந்தி பற்றிய போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அரசியல் நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து, விடுப்பில் சென்றுள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் இல்லை. இந்த நிலையில், டெல்லி துக்ளக் லேனில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™