மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
- 38 நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்படுகிறது: பாரிக்கர் தகவல்
- ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் புறக்கணிப்பு: எதிர்க்கட்சி இல்லாமல் நடக்கும் ஆந்திர சட்டசபை கூட்டம்
- உத்தரபிரதேசத்தில் 3 பெண்கள் கற்பழித்து கொலை: 2 பேர் கைது
- பிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார்: அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு
- சோமாலிய கடற்கொள்ளையர்களின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது: மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர்
- கோடை விடுமுறை கூட்டத்தை சமாளிக்க திருப்பதி கோவிலில் கூடுதலாக 100 பெண் நாவிதர்கள் நியமனம்
- மராட்டிய மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 2 போலீஸ்காரர்கள் பலி
- இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா
- கேரள காங். எம்.எல்.ஏ. மீது மானபங்க வழக்கு பதிவு: கம்யூ. பெண் எம்.எல்.ஏ. புகாரை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை
- ஊழல் புகாரில் சிக்கிய மாணி பதவி விலகவேண்டும் - எதிர்க்கட்சிகள் கடும் அமளி: கேரள சட்டமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு
- கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது
- நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக சாகும் வரை போராடுவேன்: அன்னா ஹசாரே அறிவிப்பு
- 12 மாதங்களில் 27 ராணுவ ஒப்பந்தங்கள் ரத்து
- டெல்லியில் மாதம் ரூ.333 வாடகையில் இயங்கும் லாலு கட்சி அலுவலகம்
- தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகிறார் கேரள கவர்னர் சதாசிவம்: மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்
- கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேர் ஜாமீனில் விடுதலை
- மத்திய பிரதேசத்தில் நிலத்தகராறில் வாலிபரை சுட்டுக்கொன்ற எம்.எல்.ஏ. மகன்
- ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை
- சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பலி
| லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் Posted: 22 Mar 2015 10:36 PM PDT சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் 'அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யூ வாழ்க்கை அனைவருக்கும் விலை மதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த |
| 38 நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்படுகிறது: பாரிக்கர் தகவல் Posted: 22 Mar 2015 10:35 PM PDT மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:– இந்தியா எந்த நாடு மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. அதே |
| ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் புறக்கணிப்பு: எதிர்க்கட்சி இல்லாமல் நடக்கும் ஆந்திர சட்டசபை கூட்டம் Posted: 22 Mar 2015 10:32 PM PDT ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். |
| உத்தரபிரதேசத்தில் 3 பெண்கள் கற்பழித்து கொலை: 2 பேர் கைது Posted: 22 Mar 2015 10:31 PM PDT உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தோலா கிராமத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை புல் அறுப்பதற்காக சிவான் காட்டுப்பகுதிக்குள் சென்றனர். வழக்கமாக மாலையில் வீடு திரும்பி விடும் அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். இதுபற்றி 3 பெண்களின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். |
| பிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார்: அன்னா ஹசாரே பரபரப்பு குற்றச்சாட்டு Posted: 22 Mar 2015 10:31 PM PDT நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பிரதமர் மோடி தான், விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத்துகிறார் என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். மனதோடு பேசுகிறேன் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறான பாதையில் வழி நடத்துகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்துக்கு |
| Posted: 22 Mar 2015 10:07 PM PDT தங்களின் வழக்கமான இடங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களின் பார்வை தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளதாக மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். சரக்கு ஏற்றி செல்லும் கப்பல்களையும் அதில் இருக்கும் சிப்பந்திகளையும் சிறை பிடித்து, கப்பல் நிறுவனம் அல்லது அந்த நாடுகளிடம் பெரிய |
| கோடை விடுமுறை கூட்டத்தை சமாளிக்க திருப்பதி கோவிலில் கூடுதலாக 100 பெண் நாவிதர்கள் நியமனம் Posted: 22 Mar 2015 09:58 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போதிய நாவிதர்கள் இருந்தும் தாமதத்துக்கு காரணம் என்ன என்று அறிய அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். |
| மராட்டிய மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 2 போலீஸ்காரர்கள் பலி Posted: 22 Mar 2015 09:58 PM PDT மராட்டிய மாநிலத்தில் உள்ள கட்சிரோலி என்னும் மாவட்டம் சத்தீஸ்கர் மாநில எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த மாவட்டம் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். நேற்றிரவு கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஜரபண்டி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது |
| இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா Posted: 22 Mar 2015 09:55 PM PDT அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6 மில்லியன் டன்னுக்கு இரும்பு உற்பத்தி செய்துள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இரும்பு உற்பத்தியில் 4வது இடத்தை இந்தியா தக்க வைத்துக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் சீனா முதலிடத்தையும், ஜப்பான் 2வது இடத்தையும், அமெரிக்கா 3வது |
| Posted: 22 Mar 2015 09:21 PM PDT கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதி மந்திரி மாணி பட்ஜெட் தாக்கல் செய்தபோது வரலாறு காணாத ரகளை ஏற்பட்டது. மதுபார் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு |
| Posted: 22 Mar 2015 09:13 PM PDT கேரள சட்டமன்றம் இன்று கூடியதும் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊழல் புகாரில் சிக்கிய நிதி மந்திரி கே. எம். மாணி பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரத்த கோஷம் அவையை ஸ்தம்பிக்க வைக்க, அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அம்மாநில சபாநாயகர் சக்தன் கூறினார். |
| கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது Posted: 22 Mar 2015 09:12 PM PDT கேரள மாநிலம் தொடு புழாவை அடுத்த கடலைக்காட்டு வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 58). இவர் அந்த பகுதியில் யோகா சென்டர் நடத்தி வந்தார். மேலும் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டு குடும்ப பிரச்சினை, மாணவிகளுக்கு தேர்வு பயம், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆன்மீக |
| நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக சாகும் வரை போராடுவேன்: அன்னா ஹசாரே அறிவிப்பு Posted: 22 Mar 2015 08:20 PM PDT காந்தியவாதியும் பிரபல சமூக சேவகருமான அன்னா ஹசாரே, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சென்ற அன்னா ஹசாரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது |
| 12 மாதங்களில் 27 ராணுவ ஒப்பந்தங்கள் ரத்து Posted: 22 Mar 2015 08:09 PM PDT மத்திய ராணுவ அமைச்சகம் ராணுவ தளவாட கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட 27 ஒப்பந்தங்களை பல்வேறு காரணங்களுக்காக கடந்த 12 மாதங்களில் ரத்து செய்து உள்ளது. |
| டெல்லியில் மாதம் ரூ.333 வாடகையில் இயங்கும் லாலு கட்சி அலுவலகம் Posted: 22 Mar 2015 08:01 PM PDT லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கான வாடகை என்ன? என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் |
| தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகிறார் கேரள கவர்னர் சதாசிவம்: மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் Posted: 22 Mar 2015 05:18 PM PDT கேரள மாநில கவர்னர் பி.சதாசிவம் தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் பி.சதாசிவம். அந்த பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் கேரள மாநில கவர்னராக பி.சதாசிவம் பதவி வகித்து வருகிறார். |
| கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேர் ஜாமீனில் விடுதலை Posted: 22 Mar 2015 05:18 PM PDT பல கோடி ரூபாய் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் நேற்று ஜாமீன் பெற்று விடுதலையாகினர். கடந்த 20-ம் தேதி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 14 பேரையும் ரிமாண்டில் வைக்க அனுமதி அளிக்குமாறு சிறப்பு நடவடிக்கைக் குழு போலீஸார் கொடுத்த மனுவை நீதிமன்றம் |
| மத்திய பிரதேசத்தில் நிலத்தகராறில் வாலிபரை சுட்டுக்கொன்ற எம்.எல்.ஏ. மகன் Posted: 22 Mar 2015 04:59 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் துகோஜி ராவ் பவுர். இவரது மகன் விக்ரம். தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ராகவ்கார்க் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில விவசாயிகளுக்கும், விக்ரமிற்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். |
| ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை Posted: 22 Mar 2015 03:35 PM PDT சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சிராலா என்ற இடம் அருகே ரெயில் சென்றபோது, படுக்கை வசதி கொண்ட பெட்டியில் இருந்த ஒரு |
| சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பலி Posted: 22 Mar 2015 02:54 PM PDT மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், லோனாவாலா என்ற மலை வாசஸ்தலத்திற்கு அருகே உள்ள பவானா அணைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்களில் 4 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகினர். புனே மாவட்டத்தின் ததாவ்டே நகரில் உள்ள ஜேஎஸ்பிஎம் கல்லூரி மாணவர்கள் 10 பேர், நேற்று பவானா அணைக்கு சுற்றுலா சென்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |