Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி கோவிலில் உடனடி தரிசனத்துக்கு அனுப்பவதாக கூறி பக்தர்களிடம் பணம் மோசடி: இடைத்தரகர் கைது

Posted: 21 Mar 2015 10:59 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பிறகும் தர்மதரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலை வழக்கில் திருப்பம்: ரவி எனக்கு தொல்லை தந்தார் - பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வாக்குமூலம்

Posted: 21 Mar 2015 10:51 PM PDT

பெங்களூரில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி, கடந்த 16-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தற்கொலை அல்ல என்று பலத்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வரும் நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ரவியும், அவருடன் ஒன்றாக

சந்திரபாபு நாயுடு மகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Posted: 21 Mar 2015 10:51 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் ஒரே மகன் லோகேஷ். இவர் தெலுங்கு தேசம் கட்சி நிதி பொறுப்பாளராக உள்ளார். லோகேசுக்கும், என்.டி.ராமராவ் மகன் நடிகர் பால கிருஷ்ணாவின் ஒரே மகள் பிராமினிக்கும் கடந்த 2007–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமாகி 7 ஆண்டுக்கு பிறகு கர்ப்பம் தரித்த பிராமினி பிரசவத்துக்காக ரங்காரெட்டி மாவட்டம் கட்சிபவுலி பகுதியில் உள்ள

நான் மகிழ்ச்சியாக உள்ளேன் - இந்தியாவுக்கு திரும்பபோவது இல்லை: ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மும்பை வாலிபர் பேச்சு

Posted: 21 Mar 2015 10:07 PM PDT

மும்பையில் இருந்து ஈராக் சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்தியாவுக்கு திரும்பி வரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையின் கல்யாண் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள், ஐ.ஸ்.தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஈராக் சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிகம்

மனதோடு பேசுகிறேன் ரேடியோ நிகழ்ச்சி இன்று: விவசாயிகளை திருப்தியடைய வைப்பாரா மோடி?

Posted: 21 Mar 2015 09:27 PM PDT

மனதோடு பேசுகிறேன் என்ற நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் ரேடியோவில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்றைய நிகழ்ச்சியில் விவசாயிகள் பற்றி பேசுகிறார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கூறப்படும் நிலையில்

அசாம் முதல்வருடன் அனில் அம்பானி சந்திப்பு: கமாக்யா கோவில் பகுதியை தூய்மையாக்க விருப்பம்

Posted: 21 Mar 2015 05:31 PM PDT

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி அசாம் மாநிலத்தில் உள்ள கமாக்யா கோவிலின் சுற்றுப்புறம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்கான வழித்தடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து செய்ய விரும்புவதாக அம்மாநில முதல்வரிடம் தெரிவித்தார்.

பிட் கொடுத்து உதவ மீண்டும் குவிந்த கும்பல்: காப்பி அடிப்பதை தடுக்க போலீஸ் துப்பாக்கி சூடு- தடியடி

Posted: 21 Mar 2015 05:26 PM PDT

பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவும் போக்கு நேற்றும் நீடித்தது. வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூர் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு 'பிட்' கொடுத்து உதவுவதற்காக, அவர்களுக்கு வேண்டியவர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். முன்பு கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், நேற்று

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி தாயார் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இரங்கல்

Posted: 21 Mar 2015 05:20 PM PDT

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஐதராபத்தில் பிறந்து, அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்து, தற்போது டெக் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சத்யா நாதெல்லா. நேற்று இவரது தாயார் பத்மாவதி(85) காலமானார்.

பிளஸ்-2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு?: கல்வி அதிகாரிகள் விசாரணை

Posted: 21 Mar 2015 05:04 PM PDT

வாட்ஸ் அப் மூலம் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை அனுப்பிய விவகாரத்தில் யார்-யாருக்கு தொடர்பு என்பது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு கண்காணிப்பாளர்கள் 118 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது

Posted: 21 Mar 2015 04:24 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில் சம்பவத்தன்று தேர்வு நடந்தது. அப்போது பி.எஸ்சி மாணவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காப்பி அடித்தனர். இதனை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பேராசிரியர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு: நிதின் கட்கரியிடம் குறுக்கு விசாரணை- வாக்குவாதத்தால் கோபம் அடைந்த நீதிபதி

Posted: 21 Mar 2015 02:04 PM PDT

ஓராண்டுக்கு முன்பு, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட 'இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதிகள்' பட்டியலில் பா.ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்கரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதனால், கெஜ்ரிவால் மீது டெல்லி மெட்ரோபாலிடன்

குஜராத்: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர்

Posted: 21 Mar 2015 12:49 PM PDT

குஜராத் மாநிலம் சூரத் நகரின் நவ்சாரி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் 900 பேர் கைது

Posted: 21 Mar 2015 12:40 PM PDT

பீகாரில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பீகாரில் எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேசன் தேர்வுகள் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1217 மையங்களில், 14.26 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த

மண்மேடு சரிந்து விழுந்து 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலி

Posted: 21 Mar 2015 08:54 AM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியானார்கள். சித்தி மாவட்டம் சர்காட் பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சந்தியா (14), காஜல்(16), ராஜேந்திர கவுல் (18) மற்றும் வித்யா கவுல் (18) ஆகியோர்

தற்காலிக ஜாமினாவது கொடுங்கள்: நீதி மன்றத்திடம் சாமியார் ஆசாராம் பாபு கெஞ்சல்

Posted: 21 Mar 2015 08:33 AM PDT

சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு(73) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் உண்ணாவிரதம்: உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

Posted: 21 Mar 2015 08:23 AM PDT

உத்தரகாண்ட் மாநில தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாய், வருகிற 24-ந்தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை பிரதமர் வீடு முன்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Posted: 21 Mar 2015 07:58 AM PDT

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன்

ராணுவ வீரர்களுக்கு சக்ரா விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்

Posted: 21 Mar 2015 07:57 AM PDT

ராணுவத்தில் வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சக்ரா விருதுகளை வழங்கி கவுரவித்தார். புது டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 3-வது பட்டாலியன் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பாராசூட்

செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்

Posted: 21 Mar 2015 07:33 AM PDT

கோவாவை சேர்ந்த ஒரு ஆடைகள் வடிவமைப்பு நிறுவனமும் பிளெண்டர்ஸ் பிரைட் மது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கைபேசி மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து அனுப்பும் 'சிறந்த செல்பி' போட்டியை கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. சுமார் நான்கு

மோடிக்கு மற்றொரு கோவில் உருவாகிறது: உ.பி.யில் இன்று பூமி பூஜை

Posted: 21 Mar 2015 07:14 AM PDT

குஜராத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டது. இதுகுறித்து பல சர்ச்சை கருத்துகள் எழுந்ததால் மோடியே அந்த கோவிலை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த கோவில் இடிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™