மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் பலத்த மழை: நிலச்சரிவால் 2 வீடுகள் புதைந்தன- 16 பேரின் கதி என்ன?
- ஏமனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானம் புறப்பட்டது: மத்திய அரசு நடவடிக்கை
- பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை 8.80 கோடியை தாண்டியது: உலகிலேயே பெரிய கட்சியானது
- திருப்பதி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா
- திருப்பதி கோவிலில் அன்னதானம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு: நன்கொடையாளர்களை கவுரவிக்க முடிவு
- திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை
- கடந்த ஆண்டு ஏற்பட்ட சேதம் மீண்டும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்: உமர் அப்துல்லா
- டெல்லியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
- கேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை
- ஜார்க்கண்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி
- ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி சாவு
- காஷ்மீரில் மேலும் 6 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு
- வண்டல்மண் படுகைகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டம்
- உத்தரபிரதேச சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு
- உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் சூதாட்டம்: 8 பேர் கைது
- காங்கிரசுக்கு ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு: மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்
- இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய கல்வி கொள்கை வகுக்கப்படும்: ஸ்மிரிதி இரானி தகவல்
- ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் பிரசாந்த் பூஷண் நீக்கம்
- காவிரியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும்: சதானந்த கவுடா உறுதி
- மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஐக்கிய ஜனதாதளம் ஆதரிக்காது: சரத் யாதவ்
| காஷ்மீரில் பலத்த மழை: நிலச்சரிவால் 2 வீடுகள் புதைந்தன- 16 பேரின் கதி என்ன? Posted: 29 Mar 2015 10:50 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 28–ந்தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்தது. இதனால் இந்த சாலை மூடப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சிரார்–இ–சரீப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. |
| ஏமனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானம் புறப்பட்டது: மத்திய அரசு நடவடிக்கை Posted: 29 Mar 2015 10:32 PM PDT ஏமனில் குண்டு வீச்சு இந்தியர்களை அழைத்து வர விமானம் புறப்பட்டது: மத்திய அரசு நடவடிக்கை |
| பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை 8.80 கோடியை தாண்டியது: உலகிலேயே பெரிய கட்சியானது Posted: 29 Mar 2015 10:29 PM PDT பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதை தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் வரவேற்பு பெற்ற |
| திருப்பதி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா Posted: 29 Mar 2015 10:15 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவ மூர்த்திகளான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். |
| திருப்பதி கோவிலில் அன்னதானம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு: நன்கொடையாளர்களை கவுரவிக்க முடிவு Posted: 29 Mar 2015 10:13 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது சிறப்பு அம்சமாகும். இந்த அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த 1985–ம் ஆண்டு ஏப்ரல் 5–ந்தேதி தொடங்கப்பட்டது. இதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதான டிரஸ்ட் |
| திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை Posted: 29 Mar 2015 10:09 PM PDT திருப்பதி அருகே ரேணிகுண்டா சாலையில் சாக்கடை கால்வாயில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் அடையாளம் தெரியாத வகையில் பெண் பிணம் ஒன்று |
| கடந்த ஆண்டு ஏற்பட்ட சேதம் மீண்டும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்: உமர் அப்துல்லா Posted: 29 Mar 2015 10:05 PM PDT ஜம்மு-காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜீலம் நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அரசு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கனமழை மேலும் 6 நாட்கள் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஜம்மு- காஷ்மீர் சின்னாபின்னமானது. அங்குள்ள மக்கள் இன்னும் சகஜ |
| டெல்லியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை Posted: 29 Mar 2015 09:39 PM PDT டெல்லியின் தென் மேற்கு பகுதியில் உள்ள நஜப்கர் தொகுதியில் இருந்து கடந்த 2009–ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்வானவர் பாரத்சிங். இந்திய தேசிய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த அவருக்கும் டெல்லியில் உள்ள தாதாக்களில் ஒருவரான உதய்வீருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த 2012–ம் ஆண்டு உதய்வீர் கோஷ்டியினர் துப்பாக்கியால் சுட்டதில் பாரத்சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிறகு உதய்வீர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். |
| கேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை Posted: 29 Mar 2015 09:22 PM PDT கேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விஜயதாஸ் (வயது 65) தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியில் வசித்து வந்தார். அப்போது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கமலம் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் |
| ஜார்க்கண்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி Posted: 29 Mar 2015 08:51 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்வா மாவட்டத்தில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
| ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 6 பேர் உடல் கருகி சாவு Posted: 29 Mar 2015 08:43 PM PDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுலபாடு என்ற பகுதியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ ஆலை முழுவதும் பரவியது. |
| காஷ்மீரில் மேலும் 6 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு Posted: 29 Mar 2015 08:39 PM PDT காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜீலம் நிதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதற்கிடையே கனமழை மேலும் 6 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| வண்டல்மண் படுகைகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டம் Posted: 29 Mar 2015 08:38 PM PDT அமெரிக்காவில் எரிவாயு எடுக்கும் பணி வெற்றிகரமாக நடப்பதைப் பின்பற்றி, இந்தியாவில் உள்ள 26 வண்டல்மண் படுகைகளில் இருந்து எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். |
| உத்தரபிரதேச சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு Posted: 29 Mar 2015 08:33 PM PDT உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம் முழுவதும் 917 மையங்களில் நடைபெற்ற தேர்வை நான்கரை லட்சம் தேர்வர்கள் எழுதினர். காலை 9.30 மணிக்கு, முதல் ஷிப்ட் தேர்வு தொடங்க இருந்த நிலையில், 9.15 மணிக்கு திடீரென கேள்வித்தாள் 'வாட்ஸ்அப்' மூலம் ரகசியமாக |
| உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் சூதாட்டம்: 8 பேர் கைது Posted: 29 Mar 2015 08:30 PM PDT உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) நடைபெற்றது. அதில் எந்த அணி ஜெயிக்கும் என்று, உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி 8 பேரை சாகரன்பூர் காகல்ஹெதி போலீசார் கைது செய்தனர். |
| காங்கிரசுக்கு ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு: மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார் Posted: 29 Mar 2015 08:28 PM PDT கடந்த மாதம் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 8 தொகுதிகளே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. |
| இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய கல்வி கொள்கை வகுக்கப்படும்: ஸ்மிரிதி இரானி தகவல் Posted: 29 Mar 2015 08:26 PM PDT பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். |
| ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் பிரசாந்த் பூஷண் நீக்கம் Posted: 29 Mar 2015 08:20 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷண், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் |
| காவிரியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும்: சதானந்த கவுடா உறுதி Posted: 29 Mar 2015 08:11 PM PDT காவிரியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா உறுதி அளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஒரே குழுவாக |
| மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஐக்கிய ஜனதாதளம் ஆதரிக்காது: சரத் யாதவ் Posted: 29 Mar 2015 07:59 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஐக்கிய ஜனதாதளம் ஆதரிக்காது என அக்கட்சி தலைவர் சரத் யாதவ், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் பலத்த |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |