Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நாவிதர்கள் தட்டுப்பாடு: திருப்பதியில் முடி காணிக்கையில் நெரிசல்–தள்ளு முள்ளு

Posted: 14 Mar 2015 10:48 PM PDT

திருமலையில் உள்ள கல்யாண கட்டா, மற்றும் தங்கும் விடுதி அருகில் முடி காணிக்கை செலுத்தப்படுகிறது. தினமும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகிறார்கள். ஆண், பெண் பக்தர்களுக்காக தனித்தனி நாவிதர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 2–வது சனிக்கிழமை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை 56,242

ஆந்திரா மின்சாரம் தேவையில்லை: தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் சொல்கிறார்

Posted: 14 Mar 2015 10:46 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது கடுமையான மின்சார தட்டுப்பாடு உள்ளது. மின்சார தட்டுப்பாட்டை நீக்க முதல்–மந்திரி சந்திரசேகராவ் அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி வருகிறார். தெலுங்கானாவுக்கு தேவையான மின்சாரத்தை ஆந்திரா தர தயாராக இருப்பதாக முதல்–மந்திரி, சந்திரபாபுநாயுடு அறிவித்து இருந்தார். ஆனால் ஆந்திரா மின்சாரம் எங்களுக்கு தேவையில்லை என்று தெலுங்கானா

மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரியை பலாத்காரம்: 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

Posted: 14 Mar 2015 10:44 PM PDT

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமம் உள்ளது. நேற்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த நான்கைந்து பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை கொடூரமான முறையில் கற்பழித்தது. மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த

நடைபயிற்சிக்காக சென்ற போது வாகனம் மோதி விபத்து: 3 பேர் பலி

Posted: 14 Mar 2015 10:20 PM PDT

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள முளப்பாலத்தை சேர்ந்தவர் அரவிந்தன். புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி சுலோச்சனா (வயது 53). இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தோழி பத்மாவதி (57). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

அரியானாவில் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற 19 பேர் கண் பார்வை பாதிப்பு

Posted: 14 Mar 2015 10:17 PM PDT

அரியானா மாநிலம் பானிபட் நகரில் கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அங்குள்ள தனியார் மருத்துமனையில் கண்ணில் ஏற்பட்ட பாதிப்புக்கு கேட்ராக்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 19 பேருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சில நாட்களில் அவர்கள் வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் 19 பேருக்கும் திடீர் என்று கண்

கேரள சட்டசபையில் ரகளை: கவர்னர் சதாசிவம் கடும் கண்டனம்- ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்ப முடிவு

Posted: 14 Mar 2015 10:08 PM PDT

கேரள சட்டசபையில் கடந்த 13–ந்தேதி வரலாறு காணாத ரகளை நடந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக உள்ள மாணி மீது பார் உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் உள்ளதால் அவர் சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று கூறி எதிர்க்கட்சிகள் இந்த ரகளையில் ஈடுபட் டன. இதனால் கேரள சட்டசபை போர்க்களமாக மாறியது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கடும்

சத்தீஷ்கரில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜவான் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

Posted: 14 Mar 2015 08:54 PM PDT

இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஜவான் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரரான இமாசல் பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் (45) நக்சலைட்டுக்கள் ஆதிக்கம் காணப்படும் மான்பூர் பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நேற்றிரவு 10 மணியளவில் இவர் தன்னுடைய துப்பாக்கியின் மூலம் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராகுல்காந்தி பற்றி வேவு புகார்: ராஜ்நாத் சிங் வீட்டின் முன் இளைஞர் காங். ஆர்ப்பாட்டம்

Posted: 14 Mar 2015 07:20 PM PDT

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு போலீசார் சென்று ராகுல்காந்தி பற்றி விசாரணை நடத்தியதை கண்டித்து இளைஞர் காங்கிரசார், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டின் முன் திரண்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Posted: 14 Mar 2015 03:06 PM PDT

5 நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் நாடுகளான செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நள்ளிரவில் தலைநகர் டெல்லி திரும்பினார். முதலில் செஷல்ஸ் சென்ற மோடி அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ்

ஜம்மு காஷ்மீர் அரசை நிலைகுலைய வைக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது: துணை முதல்வர் நிர்மால் சிங் குற்றச்சாட்டு

Posted: 14 Mar 2015 01:48 PM PDT

ஜம்மு காஷ்மீர் அரசை நிலைகுலைய வைக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் நிர்மால் சிங் நேற்று குற்றம் சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. - பி.டி.பி. கூட்டணி ஆட்சியின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைய செய்யும் நோக்கில், அரசு

அரசின் ஆவணங்கள் வேவு பார்த்த விவகாரம்: பிரைஸ் வாட்டர் கூப்பர்சின் அதிகாரி மீது சி.பி.ஐ.யின் கழுகு பார்வை

Posted: 14 Mar 2015 01:47 PM PDT

அரசின் ரகசிய ஆவணங்களை வேவு பார்த்து விவகாரத்தில், பிரைஸ் வாட்டர் கூப்பர்சின் முக்கிய அதிகாரி மீது சி.பி.ஐ.யின் கழுகு பார்வை பதிந்துள்ளது. அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் பொருளாதார விவகாரங்கள் துறை அலுவலகத்தில் இருந்து ரகசிய தகவல்களை பெற்ற குற்றச்சாட்டில்,

நாகாலாந்தில் கிடுகிடு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி - 19 பேர் படுகாயம்

Posted: 14 Mar 2015 10:46 AM PDT

நாகாலாந்தின் பெக் மாவட்டத்தில் உள்ள லேயீ பாலம் அருகே கிடுகிடு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயமடைந்தனர்.

பீகாரில் வீடு தீப்பிடித்து 4 குழந்தைகள் உடல் கருகி பலி

Posted: 14 Mar 2015 10:00 AM PDT

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பற்றி எரிந்த வீட்டுக்குள் சிக்கிய 4 குழந்தைகள் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமஸ்திபூர் மாவட்டம் பட்ரோலி பகுதியில் உள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், மாட்டுத்தீவனம் சேமித்து

நீச்சல் சாம்பியன் வீட்டில் புகுந்து தங்க கிரீடம் - பாராட்டு பட்டயங்களை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

Posted: 14 Mar 2015 09:44 AM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரியின் வீட்டில் உள்ள நகை மற்றும் பதக்கங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டனர். மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ஹிந்த்மோடார் பகுதியில்

ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Posted: 14 Mar 2015 08:50 AM PDT

இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைந்துள்ள

ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 2215 கோடி வருவாய்

Posted: 14 Mar 2015 08:42 AM PDT

முந்தைய ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேட்டால் அரசிற்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தியது. எனவே, ஏல முறையினை பின்பற்றி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, ஏல முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல்: படுகாயங்களுடன் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 14 Mar 2015 06:50 AM PDT

கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் மீது இன்று இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு ஐந்து ரோந்துப் படகுகளில் வந்த கடற்படையினர்

எருமையின் சிறுநீர் செல்களில் இருந்து குளோனிங் கன்றுக்குட்டியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Posted: 14 Mar 2015 06:49 AM PDT

அரியானா மாநிலம் கர்னால் நகரில் உள்ள தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிலையத்தில், விஞ்ஞானிகள் குளோனிங் மூலம் கால்நடை இனங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், இனப்பெருக்க செல்கள் இல்லாமல், எருமை மாட்டின் சிறுநீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சொமாட்டிக் உயிரணு மூலம் குளோனிங் கன்றுக்குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது கர்னால் தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட 10-வது குளோனிங் கன்று ஆகும். இது குளோனிங் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

தவறான வாழ்க்கை முறையினால் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு: பெங்களூர் டாக்டர்கள் தகவல்

Posted: 14 Mar 2015 06:38 AM PDT

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள ஜிண்டால் நேச்சர் கியூர் மருத்துவமனையில் இயற்கை முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் இருந்து புறப்பட இருந்த சோலார் விமான பயண திட்டத்தில் திடீர் மாற்றம்

Posted: 14 Mar 2015 06:09 AM PDT

அபுதாபியிலிருந்து தனது உலக சுற்றுப்பயணத்தை தொடங்கிய 'சோலார் இம்பல்ஸ் 2' சூரியசக்தி விமானம் கடந்த 10-ம் தேதி இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. ஒரே ஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த நவீன விமானம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™