மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ராகுல் நாளை டெல்லி திரும்புகிறார்
- பாகிஸ்தானுக்கு வேவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர் பஞ்சாபில் கைது
- நிர்பயா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்புவதை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: மத்திய அரசு
- தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கற்பழிப்பு குற்வாளியின் பேட்டியை ஒளிபரப்ப தடை: டெல்லி போலீஸ் கோர்ட்டில் வழக்கு
- மனித கழிவுகளால் சீரழியும் எவரெஸ்ட் சிகரம்
- உள்துறை அனுமதி வாங்கிதான் பேட்டி எடுத்தோம்: பெண் தயாரிப்பாளர் தகவல்
- டால்மியாவை வரவேற்க நள்ளிரவு வரை விமான நிலையத்தில் காத்திருந்த 50 அனாதைக் குழந்தைகள்
- கேரளாவில் புரட்சிகர கம்யூ. தலைவர் கொலை: தலைமறைவாக இருந்தவர் விமான நிலையத்தில் கைது
- ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு எதிரொலி: 30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை
- குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் .25 சதவிகதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி
- திருச்சூரில் லாரி மோதியதில் இளம்பெண் சாவு
- 3 முறை மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு: அனைத்தையும் வென்று உயிர்பிழைத்த 762 கிராம் குழந்தை
- டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகளின் திருத்தம் நிறைவேறியது: மத்திய அரசுக்கு பின்னடைவு
- இடதுசாரிகள் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் காப்பீடு மசோதா தாக்கல்
- தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது: மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தகவல்
- அரியானாவில் முதல் மந்திரியுடன் வந்த வாகனம் மோதி ஒருவர் பலி
- தென்ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உள்பட 19 பேர் விடுதலை
- அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
- வரன் தேடும் தமிழக பெண் என்ஜினீயரின் வலைப்பக்கத்தால் பரபரப்பு
- திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு
| ராகுல் நாளை டெல்லி திரும்புகிறார் Posted: 03 Mar 2015 11:13 PM PST பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் நிலை குலைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி கொடுக்க ராகுலை அடுத்த மாதம் தலைவராக தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து |
| பாகிஸ்தானுக்கு வேவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர் பஞ்சாபில் கைது Posted: 03 Mar 2015 11:12 PM PST இந்திய ராணுவ ரகசியங்களை வேவு பார்த்து பாகிஸ்தானுக்கு வழங்கிய முன்னாள் ராணுவ வீரரை பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை சிறப்பு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. பஞ்சாபில் வசிக்கும் சுக்வீந்தர் சிங் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரரிடமிருந்து, ராணுவ தளங்கள் பற்றிய புகைப்படங்கள், ராணுவ |
| நிர்பயா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்புவதை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: மத்திய அரசு Posted: 03 Mar 2015 11:10 PM PST நிர்பயா என்ற பெயரில் அழைக்கப்பட்ட, பிஸியோதெரபி மாணவி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த நிர்பயாவை குடிகார கும்பல் ஒன்று கற்பழித்ததுடன், கொடூரமாக தாக்கி சாலையோரம் வீசியது. உடன் சென்ற |
| Posted: 03 Mar 2015 10:51 PM PST டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் இந்த சம்பவத்துக்கு அதிர்ச்சியை வெளியிட்டன. |
| மனித கழிவுகளால் சீரழியும் எவரெஸ்ட் சிகரம் Posted: 03 Mar 2015 10:49 PM PST உலகின் மிக உயரமான இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து வருகின்றனர். ஆண்டு தோறும் பல நாடுகளை சேர்ந்த 700–க்கும் மேற்பட்ட மலையேறும் வீரர்கள் இதில் ஈடுபடுகின்றனர். |
| உள்துறை அனுமதி வாங்கிதான் பேட்டி எடுத்தோம்: பெண் தயாரிப்பாளர் தகவல் Posted: 03 Mar 2015 10:08 PM PST தூக்கு தண்டனை கைதி முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்த ஆவணப்பட பெண் தயாரிப்பாளர் வெஸ்லீ உத்வின் கூறியதாவது:– பெண்கள் மீதான ஆண்களின் மனோபாவத்தை வெளிப்படுத்தவே இந்த ஆவணப்படத்தை எடுத்தேன். இதற்காக 2013–ம் ஆண்டு திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரலிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தேன். அவர் |
| டால்மியாவை வரவேற்க நள்ளிரவு வரை விமான நிலையத்தில் காத்திருந்த 50 அனாதைக் குழந்தைகள் Posted: 03 Mar 2015 09:17 PM PST கொல்கத்தா விமான நிலையத்தில் இரவு 11.30 மணி வரை கையில் பூங்கொத்துகளுடன் 50 அனாதைக் குழந்தைகள் காத்திருக்கின்றனர். அவர்களிடம் சென்று "யாருக்காக காத்திருக்கிறீர்கள்" என்றால் "தெரியாது" என்கின்றனர். பல குழந்தைகள் தூங்கி விழுந்து பின் சுதாரித்து கண்ணை |
| கேரளாவில் புரட்சிகர கம்யூ. தலைவர் கொலை: தலைமறைவாக இருந்தவர் விமான நிலையத்தில் கைது Posted: 03 Mar 2015 08:41 PM PST கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து புரட்சிக்கர கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கியவர் சந்திரசேகரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை அப்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு எதிரொலி: 30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை Posted: 03 Mar 2015 08:40 PM PST குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே மிகப்பெரும் உயர்வை சந்தித்தது. |
| குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் .25 சதவிகதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி Posted: 03 Mar 2015 08:40 PM PST குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 2 மாதத்தில் 2வது முறையாக வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கியின் இம்முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. |
| திருச்சூரில் லாரி மோதியதில் இளம்பெண் சாவு Posted: 03 Mar 2015 08:33 PM PST திருச்சூர் களம்பச்சேரியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் மின் வாரியத்துறையில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி மஞ்சு (வயது 38). இவர் நேற்று களம்பச்சேரியில் உள்ள எச்.எம்.டி. ரோட்டில் ஸ்கூட்டரில் சென்றார். |
| 3 முறை மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு: அனைத்தையும் வென்று உயிர்பிழைத்த 762 கிராம் குழந்தை Posted: 03 Mar 2015 08:14 PM PST பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகரான நேகா வியாஸ் தாய்மையடைந்த ஒவ்வொரு பெண்ணும் உணரும் சுகத்தை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் உருவத்தை தனது கணவர் சுரப் வியாஸிடம் காட்டி மகிழ்ச்சியடைந்தார். |
| டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகளின் திருத்தம் நிறைவேறியது: மத்திய அரசுக்கு பின்னடைவு Posted: 03 Mar 2015 07:36 PM PST டெல்லி மேல்-சபையில், ஜனாதிபதி உரை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தம் நிறைவேறியதால், மத்திய அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. ஜனாதிபதி |
| இடதுசாரிகள் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் காப்பீடு மசோதா தாக்கல் Posted: 03 Mar 2015 07:25 PM PST காப்பீட்டு துறையில் தற்போது அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 26 சதவீதமாக உள்ளது. இதை 49 சதவீதமாக உயர்த்த வகை செய்து, கடந்த டிசம்பர் மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அவசர சட்டத்தை, முறைப்படி சட்டம் ஆக்க வேண்டிய அரசியல் சட்ட நெருக்கடி மத்திய அரசுக்கு உள்ளது. |
| தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது: மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தகவல் Posted: 03 Mar 2015 07:22 PM PST இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில், தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்து நிதி மந்திரி அருண்ஜெட்லி |
| அரியானாவில் முதல் மந்திரியுடன் வந்த வாகனம் மோதி ஒருவர் பலி Posted: 03 Mar 2015 07:09 PM PST அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் நேற்று சண்டிகாரில் இருந்து டெல்லி புறப்பட்டார். பாதுகாப்புக்காக அவரது வாகனத்துக்கு முன்னும் பின்னும் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. தரரோரி என்ற இடத்துக்கு அருகே சென்ற போது போலீசாரின் வாகனத்துக்கு முன் ஒருவர் குறுக்கே வந்தார். அவர் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் |
| தென்ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உள்பட 19 பேர் விடுதலை Posted: 03 Mar 2015 06:56 PM PST தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 21 மீனவர்கள் தென்னாப்பிரிக்காவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்திய வெளியுறவுத்துறை மூலம் மேற்கொண்டார். இதனையடுத்து தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 19 மீனவர்கள் மற்றும் 2 மாலுமிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை 2.55 மணிக்கு மும்பை வ |
| அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம் Posted: 03 Mar 2015 06:48 PM PST பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. காஷ்மீரில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர் முப்தி முகமது சயீத் முதல்- |
| வரன் தேடும் தமிழக பெண் என்ஜினீயரின் வலைப்பக்கத்தால் பரபரப்பு Posted: 03 Mar 2015 06:27 PM PST திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியது அந்தக்காலம். திருமணங்கள், திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவது இந்தக்காலம். பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்க்கிற 24 வயது இந்துஜாவிற்கு, |
| திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு Posted: 03 Mar 2015 06:07 PM PST டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக திகார் சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதியான அந்த பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங்கிடமும் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |