Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லியில் பலத்த மழை மேலும் நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

Posted: 01 Mar 2015 10:25 PM PST

டெல்லியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில், இரவில் குளிர், அதிகாலையில் பனி என மூன்று விதமான சீதோஷ்ணம் நிலவி வந்தது. இந்த நிலையில் திடீரென்று இன்று காலை டெல்லியின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. மழை மேலும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தோல்வி நெருக்கடியில் பதவி விலகியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: நிதிஷ் குமார் பேச்சு

Posted: 01 Mar 2015 10:23 PM PST

பீகாரில் முதல் – மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பு ஏற்று பதவி விலகினார். தனது ஆதரவாளராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சியை முதல் – மந்திரியாக்கினார்.

பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிப்பு: சந்திரபாபு நாயுடுவுடன் பவன்கல்யாண் ஆலோசனை

Posted: 01 Mar 2015 10:07 PM PST

மாநில பிரிவினையின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. மேலும் புதிய தலைநகர் சர்வதேச தரத்தில் அமைக்க உதவி செய்யப்படும் என்றும் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி வாக்குறுதி அளித்தார்.

மத்திய பட்ஜெட் எதிரொலி: 30000-ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்- நிப்டியும் 9000-ஐ நோக்கி முன்னேறுகிறது

Posted: 01 Mar 2015 10:05 PM PST

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2015-2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றதாக உள்ளது என பரவலாக கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியவுடன்,

கோதாவரி நதிக்கரையில் என்.டி.ராமராவ் 30 அடி உயர வெண்கல சிலையை அமைக்கிறது ஆந்திர அரசு

Posted: 01 Mar 2015 09:53 PM PST

'மகாமகம்' திருவிழா போல் ஆந்திராவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோதாவரி புஷ்கரம் விழா நடைபெறுகிறது. ராஜமுந்திரியில் உள்ள கோதாவரி நதியில் நடைபெறும் இந்த விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டு கோதாவரி நதியில் புனித நீராடுவார்கள். கடந்த முறை 2003–ம் ஆண்டு இந்த விழா நடந்தது. 12 ஆண்டுக்கு பிறகு இப்போது வருகிற ஜூலை மாதம் நடைபெறுகிறது.

பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த வாட்ஸ்–அப் வீடியோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 01 Mar 2015 09:44 PM PST

இன்று நாடு முழுவதும் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடூர நோய் மனித உயிர்களை பல்வேறு கால கட்டங்களில், வித விதமான பெயர்களில் அழைக்கப்படும் நோய்கள் களவு வாங்கிக் கொண்டே வந்திருக்கின்றன. சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் போன்றவை இதற்கு முன்னர், மனிதர்களை பாடாய் படுத்தியுள்ளன.

மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 5 உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

Posted: 01 Mar 2015 08:47 PM PST

சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு மிச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு மானிய விலை சிலிண்டர்

திருச்சூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி வெட்டிக்கொலை: இன்று முழு அடைப்பு போராட்டம்

Posted: 01 Mar 2015 08:45 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் அருகே திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிகாப் (வயது 38). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருநல்லூர் கிளை பொறுப்பாளராக இருந்து வந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பார்சல் வாங்குவதற்காக நின்று கொண்டு இருந்தார்.

துபாயில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் கடத்தி வந்த 12 கிலோ குங்குமப்பூ பறிமுதல்

Posted: 01 Mar 2015 08:45 PM PST

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு நேற்று மாலை துபாயில் இருந்து இன்டிகோ விமானம் வந்தது. அதிகாரிகள் பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர். இதில் ஒருவர் சந்தேகப்படும்படி பையுடன் நடந்து வந்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 12 கிலோ எடையுள்ள குங்குமப்பூ இருந்தது தெரியவந்தது. இதற்கு முறையான ஆவணங்கள்

ராகுல்காந்தியை காணவில்லை-கண்டுபிடித்தால் பரிசு: உ.பி.யில் பரபரப்பு போஸ்டர்

Posted: 01 Mar 2015 08:40 PM PST

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தற்காலிக விடுமுறை எடுத்துள்ளார். ராகுல்காந்தியின் அரசியல் விடுமுறை குறித்து மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அந்த கட்சியிலும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு: ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

Posted: 01 Mar 2015 08:38 PM PST

காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது. வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல்

பா.ஜனதாவிடம் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத்

Posted: 01 Mar 2015 07:46 PM PST

காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் நேற்று முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த கூட்டணியை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை விமர்சனம் செய்துள்ளன. டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், இந்த கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் நாக்பூரில் (ஆர்.எஸ்.எஸ். தலைமை

அமெரிக்காவுக்கான புதிய தூதராக அருண்சிங் நியமிக்கப்படுகிறார்

Posted: 01 Mar 2015 07:37 PM PST

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக செயல்பட்டு வந்த ஜெய்சங்கர், கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கான புதிய தூதராக, தற்போது பிரான்சு நாட்டில் இந்திய தூதராக பணியாற்றி வரும் அருண் சிங்கை மத்திய அரசு நியமிக்க இருக்கிறது. இது குறித்து அமெரிக்காவின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பப்பட்டு உ

காங்கிரசுக்கு தலைமையேற்க அதிக பலத்துடன் ராகுல் திரும்புவார்: ஏ.கே.அந்தோணி

Posted: 01 Mar 2015 07:28 PM PST

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி திடீரென, அரசியலுக்கு 2 வாரம் விடுமுறை போட்டுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் எதுவும் தெரியாத நிலையில், அவர் விரைவில் கட்சிப்பணிகளுக்கு திரும்புவார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி, திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது,

காஷ்மீரில் பிரிவினைவாத இயக்க முன்னாள் தலைவர் மந்திரி ஆனார்

Posted: 01 Mar 2015 07:23 PM PST

காஷ்மீரில் ஸ்ரீநகரில் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டவர், ஹூரியத் மாநாடு பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அப்துல் கனி லோன். இவரது இளைய மகன் சஜத் கனி லோன் (வயது 48). தந்தையின் மரணம், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவர் தனது மற்றொரு சகோதரரான பிலால் கனி லோனிடம் இருந்து பிரிந்து வந்து 2004-ம் ஆண்டு, பிப்ரவரி

காஷ்மீர் தேர்தல் பற்றிய முப்தி முகமது சயீத் கருத்துக்கு பாரதீய ஜனதா பதில்

Posted: 01 Mar 2015 07:16 PM PST

காஷ்மீர் முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்ற முப்தி முகமது சயீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 'ஹூரியத் இயக்கம், தீவிரவாத அமைப்புகள், எல்லைக்கு அப்பால் உள்ள மக்களின்(பாகிஸ்தான்) ஒத்துழைப்பால்தான் காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்தது. அதனால்தான் அதிக அளவிலான ஓட்டுகளும் பதிவானது' என்று குறிப்பிட்டார். இது சர்ச்சையை

பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவாரா?

Posted: 01 Mar 2015 07:08 PM PST

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது. கட்சியில் தனது ஆலோசனைகளை மூத்த தலைவர்கள் சிலர் ஏற்காமல் தடுத்துவிடுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கருதுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு

மோடியின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்: நிதிஷ்குமார் சொல்கிறார்

Posted: 01 Mar 2015 06:57 PM PST

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநில செயல் வீரர்கள் கூட்டம் நேற்று பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் முன்னணி தலைவருமான நிதிஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடுவானில் சிதறி விழுந்தது எரிகல்தான்: விஞ்ஞானிகளின் முதல் கட்ட ஆய்வில் தகவல்

Posted: 01 Mar 2015 06:49 PM PST

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது. இந்த நெருப்புக் கோளம் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி: வெங்கையா நாயுடு தகவல்

Posted: 01 Mar 2015 06:28 PM PST

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அர்த்தமுள்ள பரிந்துரைகளை பரிசீலிக்க தயார் என்றும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™