மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஊழல் புகாரில் சிக்கிய மாணிக்கு புதிய பதவி: சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரம் அளிக்கும் குழுவின் தலைவராக நியமனம்
- சோனியா மருமகன் மீது மோசடி புகார்: ரூ.41 கோடி வசூலிக்க பரிந்துரை
- பீகாரில் முன் கூட்டியே பிரசாரத்தை தொடங்குகிறது பா.ஜனதா: இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்
- லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் செல்ல பிரதமர் அலுவலகம் அனுமதி மறுப்பு
- ஏமன் அரசுக்கு ஆதரவாக தாக்குதலை தொடங்கியது சவுதி அரேபியா: கிளர்ச்சி படைகள் மீது சரமாரி குண்டு மழை
- கேரளாவில் அரசு ஊழியர்கள் பணியின் போது மது அருந்தினால் சஸ்பெண்டு: உம்மன்சாண்டி உத்தரவு
- பிவண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் சாவு
- 2 ஆண்டுகளில் சித்தராமையா ரூ.42 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார்: சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சு
- 28-ந் தேதி ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது
- பசுவதை தடுப்பு சட்டத்துக்கு காங்கிரஸ் யோசனை அளித்தது: நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் பேச்சு
- அந்தேரியில் 8 மாடி வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து
- பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் வி.கே.சிங் பங்கேற்றது பற்றி மத்திய அரசு விளக்கம்
- சேப்பாக்கம் ஸ்டேடிய வழக்கு: மக்களின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- 12-ம் வகுப்பு மாணவர்கள் போராட்டம்: குஜராத்தில் கணினி தேர்வு ரத்து
- மத்திய அரசின் நிதி குறித்து ஆலோசிக்க பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்
- பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது
- ஒரே நாளில் 4 பேர் பலி: 421 ஆக உயர்ந்த குஜராத் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை
- உள்நாட்டுப்போர் எதிரொலி: ஏமனில் இருந்து நாடு திரும்ப இந்தியர்களுக்கு அறிவுரை
- அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த நோயாளி பரிதாப பலி
| Posted: 25 Mar 2015 11:07 PM PDT இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் குழுவின் தலைவராக மாநில நிதி மந்திரி ஒருவர் நியமிக்கப்படுவார். இதனை மத்திய அரசின் நிதித்துறை தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இக்குழுவின் தலைவராக காஷ்மீர் மாநில மந்திரி அப்துல் ரஹீம் ரத்தோர் இருந்து வந்தார். காஷ்மீரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்துல் ரஹீம் ரத்தோர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். |
| சோனியா மருமகன் மீது மோசடி புகார்: ரூ.41 கோடி வசூலிக்க பரிந்துரை Posted: 25 Mar 2015 10:46 PM PDT அரியானா மாநில சட்டசபையில் நேற்று 2013–2014–ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி |
| பீகாரில் முன் கூட்டியே பிரசாரத்தை தொடங்குகிறது பா.ஜனதா: இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் Posted: 25 Mar 2015 10:45 PM PDT பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு அடுத்தடுத்து நடந்த மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி கிடைத்தது. அதே போல் டெல்லி சட்டசபை தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என்று |
| Posted: 25 Mar 2015 10:31 PM PDT சிங்கப்பூரின் தந்தை மற்றும் நவீன சிங்கப்பூரின் சிற்பி என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் 29–ந்தேதி நடக்கிறது. லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று (புதன்கிழமை) இரவு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். |
| ஏமன் அரசுக்கு ஆதரவாக தாக்குதலை தொடங்கியது சவுதி அரேபியா: கிளர்ச்சி படைகள் மீது சரமாரி குண்டு மழை Posted: 25 Mar 2015 10:29 PM PDT ஏமனில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக புரட்சியாளர்கள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு சவுதி அரேபியா அந்நாட்டுக்கு ஆதரவாக தாக்குதலை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி தலைமையிலான அதிபர் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவுடன் ஷியா இனத்தின் ஒரு பிரிவான |
| கேரளாவில் அரசு ஊழியர்கள் பணியின் போது மது அருந்தினால் சஸ்பெண்டு: உம்மன்சாண்டி உத்தரவு Posted: 25 Mar 2015 09:39 PM PDT கேரளாவில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் படிப்படியாக பூரண மது விலக்கை அமுல்படுத்த உம்மன்சாண்டி நடவடிக்கை எடுத்து வருகிறார். கேரளாவில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் மது அருந்தவும் |
| பிவண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் சாவு Posted: 25 Mar 2015 08:21 PM PDT தானே மாவட்டம் பிவண்டியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் மாலை 4 மணியளவில் மின்கசிவு காரணமாக |
| 2 ஆண்டுகளில் சித்தராமையா ரூ.42 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார்: சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சு Posted: 25 Mar 2015 08:15 PM PDT கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி (பா.ஜனதா) தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:- அனைத்து சமுதாயத்தினருக்கும் சமமான நியாயம் மற்றும் அக்கறை செலுத்துவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ஆனால் எந்த சமுதாயத்துக்கும் அவர் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. அவரது பேச்சுக்கும், தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லும் இந்த காங்கிரஸ் அரசு, அவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. |
| 28-ந் தேதி ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது Posted: 25 Mar 2015 08:10 PM PDT இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 4-வது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-டி யை பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து அனுப்ப திட்டமிட்டிருந்தது. |
| பசுவதை தடுப்பு சட்டத்துக்கு காங்கிரஸ் யோசனை அளித்தது: நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் பேச்சு Posted: 25 Mar 2015 07:55 PM PDT மராட்டிய சட்டசபையில் கடந்த வாரம் நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் மீது விவாதத்துக்கு நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் நேற்று பதிலளித்து பேசியதாவது:- பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வருமாறு காங்கிரஸ் |
| அந்தேரியில் 8 மாடி வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து Posted: 25 Mar 2015 07:43 PM PDT மும்பை அந்தேரி மேற்கு விரைவு சாலை அருகில் 'பிசினஸ் பாயிண்ட்' என்ற 8 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. |
| பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் வி.கே.சிங் பங்கேற்றது பற்றி மத்திய அரசு விளக்கம் Posted: 25 Mar 2015 05:24 PM PDT டெல்லியில் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதின் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- |
| Posted: 25 Mar 2015 03:32 PM PDT சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் தொடர்பான வழக்கில், ஐ.பி.எல். போட்டியை நடத்துவதை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட்டது. |
| 12-ம் வகுப்பு மாணவர்கள் போராட்டம்: குஜராத்தில் கணினி தேர்வு ரத்து Posted: 25 Mar 2015 03:07 PM PDT குஜராத் மாநிலத்தில் 12-ம் வகுப்பு கணினித்தேர்வில் பழைய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராடியதையடுத்து, மாநில மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகல்வி வாரியம் கணினித்தேர்வினை ரத்து செய்தது. |
| மத்திய அரசின் நிதி குறித்து ஆலோசிக்க பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்குமார் Posted: 25 Mar 2015 02:19 PM PDT சமீபத்தில் பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார், பதவியேற்ற பின் முதன் முறையாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, 14 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது, மத்திய நிதி நீக்கம், மற்றும் மாநில பிரச்சனைகள் உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து Posted: 25 Mar 2015 12:56 PM PDT இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே கைதிகள் மாற்றம், |
| இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது Posted: 25 Mar 2015 12:08 PM PDT அரியானா மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடிய கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ராம் காலனியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த |
| ஒரே நாளில் 4 பேர் பலி: 421 ஆக உயர்ந்த குஜராத் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை Posted: 25 Mar 2015 11:25 AM PDT பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 421 ஆக உயர்ந்துள்ளது. |
| உள்நாட்டுப்போர் எதிரொலி: ஏமனில் இருந்து நாடு திரும்ப இந்தியர்களுக்கு அறிவுரை Posted: 25 Mar 2015 10:36 AM PDT அரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏதன் நகரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிற கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள விமான தளம் ஒன்றை கைப்பற்றினர். |
| அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த நோயாளி பரிதாப பலி Posted: 25 Mar 2015 08:08 AM PDT மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ராமேஷ்வர்(37) என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |