மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- தெலுங்கானாவில் நுழைய கட்டணம் வசூல்: 80 சதவீத ஆம்னி பஸ்கள் நிறுத்தம்
- திறமையாக செயல்படாதவர்களுக்கு கல்தா: மத்திய மந்திரிசபையை மாற்ற மோடி முடிவு
- கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
- பெங்களூர் விடுதியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை: காதல் தோல்வியால் அலுவலக ஊழியர் வெறிச்செயல்
- கோடை விடுமுறையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள்
- மீண்டும் நிலம் எடுப்பு அவசரச் சட்டம்: கட்சிகளின் ஆதரவை திரட்டும் பொறுப்பு மூத்த மந்திரிகளிடம் ஒப்படைப்பு
- செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு: மத்திய அரசு ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிறுவனங்கள்
- மது பார்களை மூட கேரள ஐகோர்ட்டு உத்தரவு: உம்மன்சாண்டி, காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு
- திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.24 கோடி உண்டியல் வசூல்: ஒரே பக்தர் ரூ.28.50 லட்சம் நன்கொடை
- ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு
- திருப்பதி பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி செம்மரம் பறிமுதல்: 34 பேர் கைது
- பதவி நீக்கத்தை எதிர்த்து மிசோரம் கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரியை கைது செய்த சி.பி.ஐ. குழு மீது தாக்குதல்
- மலையாளம்-தமிழ் அகராதி வெளியீடு: இருமொழி உறவை வளர்க்கும் பாலமாக அமையும் - கேரள கவர்னர் பேச்சு
- மருத்துவ மேற்படிப்புகளில் ஜாட் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்களை அச்சிடும் முடிவு நிறுத்தி வைப்பு
- நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
- மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்: நீதிபதி கடும் கண்டனம்
- பட்ஜெட்டில் சேவை வரி விலக்கு எதிரொலி: அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா கட்டணம் இன்று முதல் குறைகிறது
| கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 31 Mar 2015 11:26 PM PDT கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதி தந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளினால் ஆற்றின் வளம் பாதிக்கப்படும் |
| தெலுங்கானாவில் நுழைய கட்டணம் வசூல்: 80 சதவீத ஆம்னி பஸ்கள் நிறுத்தம் Posted: 31 Mar 2015 11:21 PM PDT ஆந்திரா, தெலுங்கானா தனித்தனி மாநிலங்கள் உருவான பிறகு ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவுக்கு செல்வதற்கு தனியார் வாகனங்களுக்கு இதுவரை நுழைவு வரி கிடையாது. |
| திறமையாக செயல்படாதவர்களுக்கு கல்தா: மத்திய மந்திரிசபையை மாற்ற மோடி முடிவு Posted: 31 Mar 2015 11:02 PM PDT பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதையடுத்து தமது ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகளை மக்களிடம் விளக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் விரிவான அறிக்கை வெளியிட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு துறையிலும் பா.ஜ.க. அரசு என்னென்ன வளர்ச்சித் திட்டங்களை |
| கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது Posted: 31 Mar 2015 10:59 PM PDT மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14–ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். |
| பெங்களூர் விடுதியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை: காதல் தோல்வியால் அலுவலக ஊழியர் வெறிச்செயல் Posted: 31 Mar 2015 10:58 PM PDT பெங்களூர் புறநகர்ப் பகுதியான ஒயிட் பீல்டு அருகே காடு கோடி என்ற இடத்தில் தனியார் நடத்தும் பிரகதி பி.யூ.சி. கல்லூரி உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த கவுதமி என்ற 18 வயது மாணவி பி.யூ.சி. 2–ம் ஆண்டு (பிளஸ்2) படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் சக மாணவிகளுடன் தங்கி இருந்தார். |
| கோடை விடுமுறையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் Posted: 31 Mar 2015 10:53 PM PDT கோடை விடுமுறையையொட்டி திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக நிர்வாக அதிகாரிகள் கூட்டம் திருமலையில் நடந்தது. அப்போது பக்தர்கள் வசதிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு கூறியதாவது:– |
| Posted: 31 Mar 2015 10:25 PM PDT முந்தைய காங்கிரஸ் அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வந்தது. பா.ஜனதா எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறைவேறவில்லை. இதற்கிடையே பா.ஜனதா அரசு அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்து நிறைவேற்ற முடிவு செய்தது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார். இந்த சட்டம் 6 மாதத்துக்குள் பாராளுமன்றத்தின் இரு |
| செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு: மத்திய அரசு ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிறுவனங்கள் Posted: 31 Mar 2015 10:19 PM PDT ஸ்பெக்ட்ரம் ஏலம் அதிகரிப்பால் செல்போன் கட்டணத்தை உயர்த்த செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். தகவல் தொடர்பில் செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் முதல் அனைவரும் ஆளுக்கொரு செல்போன்கள் வைத்துள்ளனர். |
| மது பார்களை மூட கேரள ஐகோர்ட்டு உத்தரவு: உம்மன்சாண்டி, காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு Posted: 31 Mar 2015 09:59 PM PDT கேரளாவில் மது பானம் அருந்துவோர் எண்ணிக்கை அதிகமாகி, குற்ற நிகழ்வுகள் உயர்ந்ததாக புள்ளி விவரங்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மது கடைகளையும், மதுபான பார்களையும் மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் |
| திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.24 கோடி உண்டியல் வசூல்: ஒரே பக்தர் ரூ.28.50 லட்சம் நன்கொடை Posted: 31 Mar 2015 09:57 PM PDT தற்போது பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் காத்திருக்காமல் கோவிலுக்கு வந்த உடனேயே தரிசனம் செய்கிறார்கள். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் தரிசனம் செய்து |
| ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு Posted: 31 Mar 2015 09:54 PM PDT உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெறும் ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அரேபிய நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அரசுப் படைகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வரும் |
| திருப்பதி பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி செம்மரம் பறிமுதல்: 34 பேர் கைது Posted: 31 Mar 2015 09:45 PM PDT சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, பிளேர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதுதொடர்பாக போலீஸ் குழு அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். |
| பதவி நீக்கத்தை எதிர்த்து மிசோரம் கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு Posted: 31 Mar 2015 09:44 PM PDT மிசோரம் மாநில கவர்னராக இருந்த அஜிஸ் குரேஷியை மத்திய அரசு சில நாட்களுக்கு முன் திடீர் என்று பதவி நீக்கம் செய்தது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவரான இவர் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் உத்தரகாண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முந்தைய ஆட்சியில் |
| லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரியை கைது செய்த சி.பி.ஐ. குழு மீது தாக்குதல் Posted: 31 Mar 2015 08:32 PM PDT உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வருமான வரித்துறை உயர் அதிகாரியாக இருப்பவர் நிரஞ்சன் குமார். வருமான வரி பிரச்சினையில் சிக்கிய ஒருவரிடம் அவர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுபற்றி அந்த நபர் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவித்தார். சி.பி.ஐ. வகுத்துக்கொடுத்த திட்டப்படி, அந்த நபர், நிரஞ்சன் குமாரிடம் முதல் |
| மலையாளம்-தமிழ் அகராதி வெளியீடு: இருமொழி உறவை வளர்க்கும் பாலமாக அமையும் - கேரள கவர்னர் பேச்சு Posted: 31 Mar 2015 08:31 PM PDT கேரள பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சார்பில் மலையாளம்-தமிழ் அகராதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா நேற்று திருவனந்தபுரம் காரியவட்டம் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. |
| மருத்துவ மேற்படிப்புகளில் ஜாட் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Posted: 31 Mar 2015 08:17 PM PDT முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜாட் வகுப்பினரை இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மாதம் 17-ந்தேதி இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. |
| சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்களை அச்சிடும் முடிவு நிறுத்தி வைப்பு Posted: 31 Mar 2015 08:01 PM PDT சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் |
| நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு Posted: 31 Mar 2015 07:48 PM PDT நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் சேப்பாக்கம் தொடங்கி ராயபுரம் வரை உள்ள |
| மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்: நீதிபதி கடும் கண்டனம் Posted: 31 Mar 2015 07:42 PM PDT டெல்லியில் பவன்குமார் என்ற ஆட்டோ டிரைவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சாலையில் அளவுக்கு அதிகமான குடிபோதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அவரை போக்குவரத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பவன்குமாருக்கு |
| பட்ஜெட்டில் சேவை வரி விலக்கு எதிரொலி: அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா கட்டணம் இன்று முதல் குறைகிறது Posted: 31 Mar 2015 07:41 PM PDT பட்ஜெட்டில் சேவை வரி விலக்கு அறிவித்து, அது அமலுக்கு வருவதால் இன்று முதல் அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் குறைகிறது. பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தாக்கல் செய்தார். அதில் சேவை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |