மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கன்னியாஸ்திரி கற்பழிப்பு பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு 75 வயது மூதாட்டி கற்பழித்து கொலை
- பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல்
- கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது காங். எம்.எல்.ஏ.க்கள் லட்டு வழங்கியது தவறு: சக்தன் பேட்டி
- 45 நிமிடம் தரிசனம் செய்ததால் திருப்பதி கோவிலில் ஆந்திர கவர்னர் மயங்கி விழுந்தார்
- கடும் பனி, நிலச்சரிவால் மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை 3 நாட்களுக்குப் பிறகு திறப்பு
- டெல்லி மாநகராட்சிக்கு பணம் கட்டத் தவறிய 300 எம்.பி.க்கள்
- சி.பி.ஐ. விசாரணை நடத்த மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் பேட்டி
- கூடங்குளம் 3, 4-வது அணு உலை மின் உற்பத்தி செலவு இரட்டிப்பாகும்: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
- பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
- வாரணாசியில் இருந்து புறப்பட்டது சோலார் இம்பல்ஸ் விமானம்: அடுத்து மியான்மரிலுள்ள மாண்டலே நகரில் தரையிறங்குகிறது
- விமானம் தாமதம், லக்கேஜ் மிஸ்சிங் மற்றும் விமான விபத்தில் மரணம் ஆகியவற்றுக்கு இனி அதிக நஷ்ட ஈடு: மத்திய அரசு
- தேர்தல் செலவு கணக்கு காட்டாத 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- பெங்களூர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலை வழக்கை விசாரித்த சி.ஐ.டி. உயர் அதிகாரி பணியிடமாற்றம்
- ஆண்ட்ரிக்ஸ்-தேவா நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 578 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மூத்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
- இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற சோனியா காந்தி 20-ம் தேதி ராஜஸ்தான் பயணம்
- ஏ.டி.எம்.மை உடைத்து ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது-கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட மனைவி தலைமறைவு
- 30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்
- அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி திடீர் கடிதம்
- ரெயில் மோதி இளம் வயது சகோதரிகள் பலி
| கன்னியாஸ்திரி கற்பழிப்பு பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு 75 வயது மூதாட்டி கற்பழித்து கொலை Posted: 18 Mar 2015 10:34 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை கான்வென்ட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம கும்பல், அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்தது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியை கற்பழித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மேற்கு வங்கத்தில் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து |
| பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல் Posted: 18 Mar 2015 10:16 PM PDT பஞ்சாப்பை சேர்ந்த சிறைக்கைதிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தங்கள் படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தண்டனை அனுபவிப்பதற்காகத்தான் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கைதிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுவது இயல்பு. ஆனால், பஞ்சாப் சிறை கைதிகளின் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. |
| கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது காங். எம்.எல்.ஏ.க்கள் லட்டு வழங்கியது தவறு: சக்தன் பேட்டி Posted: 18 Mar 2015 10:02 PM PDT கேரள சட்டசபையில் கடந்த 13–ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வரலாறு காணாத ரகளை ஏற்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிதி மந்திரி மாணி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், வெற்றியை கொண்டாடும் விதத்தில் சபைக்கு உள்ளேயே எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியினர் லட்டு |
| 45 நிமிடம் தரிசனம் செய்ததால் திருப்பதி கோவிலில் ஆந்திர கவர்னர் மயங்கி விழுந்தார் Posted: 18 Mar 2015 09:47 PM PDT ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் கவர்னராக இருக்கும் கவர்னர் நரசிம்மன் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவது உண்டு. அதன்படி நேற்று அதிகாலை தனது மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு வந்தார். மகாவாயில் வழியாக கோவிலுக்கு வந்த அவர் கொடிமரத்தை தொட்டு |
| கடும் பனி, நிலச்சரிவால் மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை 3 நாட்களுக்குப் பிறகு திறப்பு Posted: 18 Mar 2015 09:24 PM PDT ஜம்மு- காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடுமையான பனி மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் இரண்டு வழிகளிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதில் ஆங்காங்கே பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உணவு |
| டெல்லி மாநகராட்சிக்கு பணம் கட்டத் தவறிய 300 எம்.பி.க்கள் Posted: 18 Mar 2015 08:48 PM PDT டெல்லியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கான பயன்பாட்டு, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய செலுத்தாதது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான பட்டியலை டெல்லி மாநகராட்சி பகிரங்கமாக வெளியிட்டு |
| Posted: 18 Mar 2015 08:13 PM PDT கர்நாடக மாநில அரசின் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவிகுமார், நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். 35 வயதான அதிகாரி ரவிகுமார், கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணம் தூக்கில் |
| Posted: 18 Mar 2015 07:36 PM PDT நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தின் 3 மற்றும் 4-வது அணு உலைகளில் இருந்து 2020-21-ம் ஆண்டில் முழுவீச்சில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவு குறித்து பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு |
| பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு Posted: 18 Mar 2015 07:29 PM PDT மத்திய பிரதேச மாநில தொழில்நுட்ப தேர்வு வாரியத்தில் நடந்த பணி நியமன முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். |
| Posted: 18 Mar 2015 05:53 PM PDT சூரிய சக்தியால் இயங்கும் உலகின் ஒரே விமானமான சோலார் இம்பல்ஸ்-2, இன்று காலை 5 மணியளவில் வாரணாசியில் இருந்து மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. இன்றைய பயணத்தின் போது விமானி பர்டினார்ட் பிக்கார்ட் விமானத்தை ஓட்டிச்சென்றார். முன்னதாக மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு 15 மணி |
| Posted: 18 Mar 2015 03:43 PM PDT விமான சேவை சட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, இனி விமானங்கள் தாமதமானாலும், லக்கேஜ்கள் தொலைந்து போனாலும், விபத்தில் பயணி மரணமடைந்தாலும் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அதிக நஷ்ட ஈடு தரவேண்டும். |
| தேர்தல் செலவு கணக்கு காட்டாத 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Posted: 18 Mar 2015 02:53 PM PDT கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் தொடர்பான வரவு - செலவு கணக்குகளை ஒப்படைக்காத முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, அரியானா ஜாங்கிட் காங்கிரஸ், கேரள காங்கிரஸ்(மாணி), தேசிய மக்கள் கட்சி மற்றும் |
| பெங்களூர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலை வழக்கை விசாரித்த சி.ஐ.டி. உயர் அதிகாரி பணியிடமாற்றம் Posted: 18 Mar 2015 02:01 PM PDT பெங்களூரில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ந்தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். கோலார் மாவட்ட கலெக்டராக இருந்த போது மணல் கடத்தல், சாலைப் பணிகளில் முறைகேடு, புறம்போக்கு நில அபகரிப்பு, ஏரிகள் ஆக்கிரமிப்பு |
| Posted: 18 Mar 2015 11:49 AM PDT தனியார் நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ்-தேவா நிறுவனத்துக்கு முறைகேடான வகையில் 578 கோடி ரூபாய் லாபம் கிடைக்க வழிவகை செய்ததாக கூறி மூத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. |
| இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 18 Mar 2015 11:06 AM PDT இஸ்ரேலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; |
| வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற சோனியா காந்தி 20-ம் தேதி ராஜஸ்தான் பயணம் Posted: 18 Mar 2015 09:14 AM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வாரம் பருவமற்ற காலத்தில் பெய்த தொடர்மழையினால் இங்குள்ள 20 மாவட்டங்களில் விளைவிக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமடைந்தன. இந்த இழப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டா மாவட்ட விவசாயிகளை |
| Posted: 18 Mar 2015 09:06 AM PDT ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.ஐ கடந்த 15-ம் தேதி இரவு உடைத்த ஒரு கும்பல் உள்ளே இருந்த 16 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. |
| 30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல் Posted: 18 Mar 2015 08:52 AM PDT எச்1என்1 என்ற வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவியபடி உள்ளது. |
| அன்னா ஹசாரேவுக்கு சோனியா காந்தி திடீர் கடிதம் Posted: 18 Mar 2015 08:33 AM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அவருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அன்னா ஹசாரேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், |
| ரெயில் மோதி இளம் வயது சகோதரிகள் பலி Posted: 18 Mar 2015 08:14 AM PDT உத்தராகண்ட் மாவட்டத்தில் பாலத்தை கடக்க முயன்ற இரு இளம் வயது பெண்கள் இன்று ரெயில் மோதி பலியாகினர். இங்குள்ள ஹரித்வார் மாவட்டத்தின் ஜ்வால்பூர் பகுதியில் உள்ள லால்புல் பாலத்தை இன்று மதியம் சிலர் கடக்க முயன்றனர். அப்போது, |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |