மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடி, அருண்ஜெட்லி, ராஜ்நாத் வெளிநாடு பயணம்: மத்திய அரசை வழி நடத்தும் தலைவர் யார் என்பதில் சர்ச்சை
- அரியானா மாநிலத்தில் தலித் பெண் கடத்தி கற்பழிப்பு: 6 பேர் கும்பல் வெறிச்செயல்
- பாலக்காடு அருகே ஆதிவாசி வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை: ஒருவர் கைது
- மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு: கேரள சட்டசபையில் நாளை எதிர்க்கட்சிகள் முற்றுகை போராட்டம்
- என்னைப்போன்ற நல்ல தலைவர் யாரும் இல்லை: சந்திரபாபுநாயுடு பேச்சு
- கெஜ்ரிவால் குடியேற புதிய பங்களா தயார்: 17–ந் தேதி டெல்லி திரும்புகிறார்
- திருவனந்தபுரம் அருகே கோவில் விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 சிறுவர்கள் மயக்கம்
- பன்றிக்காய்ச்சல் மருந்துகள் இல்லை எனக் கூறி நோயாளியை ஏமாற்றிய டெல்லி தனியார் மருத்துவமனை: விசாரணை தீவிரம்
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- நாகாலாந்து சம்பவத்தில் திடீர் திருப்பம்: நடந்தது கற்பழிப்பு அல்ல -மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
- ரெயில்வே வளர்ச்சிக்கு எல்.ஐ.சி. ரூ.1½ லட்சம் கோடி முதலீடு
- வெறும் கண்டனம் மட்டும் போதாது- என்னை தூக்கில் போடுங்கள்: நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேச்சு
- நீதிபதிகள் நியமன ஆணையம் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை
- 96,000 கோடியைத் தொட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம்
- பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 27-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
- காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்: பெற்றோர் போலீசில் புகார்
- மும்பை குண்டு வெடிப்பில் சல்லடையான உடல்: 22 வருடங்களாகியும் இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் முதியவர்
- சிட்னியில் கொல்லப்பட்ட பிரபாவின் பிரேதம் விமானம் மூலம் நாளை பெங்களூர் கொண்டு வரப்படுகிறது
- பெங்களூரில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 3 பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
- 700 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கம்: பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
| மோடி, அருண்ஜெட்லி, ராஜ்நாத் வெளிநாடு பயணம்: மத்திய அரசை வழி நடத்தும் தலைவர் யார் என்பதில் சர்ச்சை Posted: 11 Mar 2015 10:26 PM PDT பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார். நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு அவர் டெல்லி திரும்ப உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் உள்ள நிதி மந்திரி அருண்ஜெட்லி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டு |
| அரியானா மாநிலத்தில் தலித் பெண் கடத்தி கற்பழிப்பு: 6 பேர் கும்பல் வெறிச்செயல் Posted: 11 Mar 2015 10:18 PM PDT அரியானா மாநிலம் கெய்தால் மாவட்டத்தில் ஹார்சோவா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கர்ஜிந்த் மாவட்டம் ரோப்கர் கிராமம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்தது. |
| பாலக்காடு அருகே ஆதிவாசி வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை: ஒருவர் கைது Posted: 11 Mar 2015 10:07 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகளி வனப்பகுதியில் உள்ளது சிட்டங்கு கிராமம். இந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி முருகன் (வயது 29). கூலித்தொழிலாளி. நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து அகளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முருகனின் உடலை மீட்டு அகளி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த சிவன் என்ற |
| மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு: கேரள சட்டசபையில் நாளை எதிர்க்கட்சிகள் முற்றுகை போராட்டம் Posted: 11 Mar 2015 09:52 PM PDT கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த உம்மன்சாண்டி திட்டமிட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக கேரளாவில் செயல்பட்டு |
| என்னைப்போன்ற நல்ல தலைவர் யாரும் இல்லை: சந்திரபாபுநாயுடு பேச்சு Posted: 11 Mar 2015 09:51 PM PDT மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பா.ஜனதா கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறி எங்களுடன் போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சட்ட சபையில் பேசினார். |
| கெஜ்ரிவால் குடியேற புதிய பங்களா தயார்: 17–ந் தேதி டெல்லி திரும்புகிறார் Posted: 11 Mar 2015 09:49 PM PDT டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது புறநகர் பகுதியான காசியாபாத்தில் உள்ள கவுசம்பி நகரில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீடு மிகச்சிறிய வீடாக இருப்பதால், டெல்லி மக்கள் அவரை சந்தித்துப் பேச வசதியாக டெல்லி நகருக்குள் பெரிய வீட்டில் குடியேற |
| திருவனந்தபுரம் அருகே கோவில் விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 சிறுவர்கள் மயக்கம் Posted: 11 Mar 2015 09:49 PM PDT திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒருவர் குல்பி ஐஸ்கிரீம் விற்பனை செய்தார். இந்த ஐஸ்கிரீமை சிறுவர், சிறுமிகள் ஆசையுடன் வாங்கி |
| Posted: 11 Mar 2015 09:48 PM PDT டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை, பன்றிக்காய்ச்சலுக்கான மருந்துகள் இல்லை என கூறி நோயாளியை ஏமாற்றிய சம்பவம் அந்நகர மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. |
| கனிமொழி கோரிக்கை ஏற்பு: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 11 Mar 2015 08:43 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியமான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கனிமொழி விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மார்ச் 16-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி |
| நாகாலாந்து சம்பவத்தில் திடீர் திருப்பம்: நடந்தது கற்பழிப்பு அல்ல -மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை Posted: 11 Mar 2015 08:42 PM PDT நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24-ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5-ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள் புகுந்து வெளியே இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை |
| ரெயில்வே வளர்ச்சிக்கு எல்.ஐ.சி. ரூ.1½ லட்சம் கோடி முதலீடு Posted: 11 Mar 2015 08:21 PM PDT இந்தியாவில் மிகப்பெரிய அரசு துறை நிறுவனமாக ரெயில்வே துறை திகழ்கிறது. இதேபோல் எல்.ஐ.சி.யும் மிக முக்கிய துறையாகும். ரெயில்வே துறையை மேம்படுத்தவும், கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் ரூ.1½ லட்சம் கோடி நிதியை ரெயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி. முடிவு செய்துள்ளது. |
| வெறும் கண்டனம் மட்டும் போதாது- என்னை தூக்கில் போடுங்கள்: நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேச்சு Posted: 11 Mar 2015 07:59 PM PDT காந்தியை விமர்சித்ததற்காக, தனக்கு எதிராக டெல்லி மேல்-சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- |
| நீதிபதிகள் நியமன ஆணையம் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை Posted: 11 Mar 2015 07:41 PM PDT நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்துக்கு எதிரான வழக்குகளை எந்த ஐகோர்ட்டும் விசாரிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தின் இரு |
| 96,000 கோடியைத் தொட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் Posted: 11 Mar 2015 05:17 PM PDT ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் டெல்லியில் நேற்று 7-வது நாளாக நடந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கறை ஏலத்தில் ஆச்சர்யப்படும் விதமாக அரசுக்கு அதிக அளவிலான வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 27-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது Posted: 11 Mar 2015 05:09 PM PDT விண்ணில் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 27-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. |
| காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்: பெற்றோர் போலீசில் புகார் Posted: 11 Mar 2015 04:26 PM PDT தனது முன்னாள் காதலியும் பள்ளி மாணவியுமான 16 வயது பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பிய 21 வயது வாலிபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பண்டாரி(21). இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 16 வயதுப் |
| மும்பை குண்டு வெடிப்பில் சல்லடையான உடல்: 22 வருடங்களாகியும் இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் முதியவர் Posted: 11 Mar 2015 02:33 PM PDT நாட்டையே உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து இன்றுடன் 22 ஆண்டு நிறைவு பெறுகிறது. கிர்தி அஜ்மேரா, மும்பை பங்குச் சந்தை அலுவலகத்திற்கு உள்ளே சென்று கொண்டிருந்த போது, திடீரென கண்ணாடிச் சில்லுகளால் |
| சிட்னியில் கொல்லப்பட்ட பிரபாவின் பிரேதம் விமானம் மூலம் நாளை பெங்களூர் கொண்டு வரப்படுகிறது Posted: 11 Mar 2015 02:11 PM PDT ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கொல்லப்பட்ட ஐ.டி ஊழியரான பிரபாவின் உடல் நாலை பெங்களூர் கொண்டு வரப்படுகிறது. சிட்னியில் ஐ.டி. துறையில் ஆலோசகராக பணியாற்றிவந்த பிரபா அருண் குமார்(41) அங்குள்ள பாராமட்டா பூங்கா வழியாக நடந்துவந்தபோது மர்ம |
| பெங்களூரில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 3 பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் Posted: 11 Mar 2015 12:43 PM PDT கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே, பைரதியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மூன்று பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மூவரில் ஒருவர் மிகவும் |
| 700 க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கம்: பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல் Posted: 11 Mar 2015 11:03 AM PDT இணையதளங்களை முடக்கும் 'ஹேக்கிங்' குழுக்கள் தங்கள் கைவரிசையை அரசு இணையதளங்களிலும் காட்டியுள்ளது. 2012-ஆண்டிலிருந்து இதுவரை 700க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |