Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு: கேரள சட்டசபையில் பயங்கர மோதல்

Posted: 12 Mar 2015 11:06 PM PDT

கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவர் கே.எம். மாணி நிதி மந்திரியாக உள்ளார். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு மதுபான பார்களை மூட உத்தர விட்ட போது, அவற்றை திறக்க ஏற்பாடு செய்வதாக கூறி மதுபார் உரிமையாளர்களிடம் நிதி மந்திரி மாணி லஞ்சம் பெற்றார் என

உடல் உறுப்பு தானத்துக்கு தயாரான போது உயிர் பிழைத்த லாரி அதிபர்

Posted: 12 Mar 2015 10:35 PM PDT

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் இப்ராகிம் பட்டினம் மண்டலத்துக்குரிய ஜூப்படி கிராமத்தை சேர்ந்தவர் பரத்குமார் (50). லாரி அதிபர். இவர் கடந்த 11–ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது வேகமாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருப்பதி கோவிலில் யுகாதி பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது: பக்தர்களுக்கு வழங்க 75 ஆயிரம் பிரதிகள்

Posted: 12 Mar 2015 10:31 PM PDT

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை வருகிற 21–ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏழுமலையான் முன்பு புதிய ஆண்டின் பஞ்சாங்கம் படிக்கப்படும்.

திருமண வீட்டில் மணமகனின் சகோதரர் அடித்துக்கொலை: வாலிபர் கைது

Posted: 12 Mar 2015 10:27 PM PDT

ராஜஸ்தான் மாநிலம் கிஷோர்புரா பகுதியில் ஒரு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த உறவினர்களுக்கு காலை உணவாக பூரி பரிமாறப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பூரி கிடைக்கவில்லை. இதையடுத்து உறவினர் ஒருவர் சமையல் அறைக்கு சென்று தகராறு செய்தார். அங்கு மணமகனின் அண்ணன் சுபாஷ் சந்திர ஜெயின் என்பவர் சமையல் பணியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. அவரை அந்த வாலிபர் அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த அவர்

கேரளா சட்டசபை முன்பு எதிர்க்கட்சியினர் போராட்டம் - போலீசார் தடியடி

Posted: 12 Mar 2015 09:41 PM PDT

மது பார் அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக கேரள நிதியமைச்சர் மாணி மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு இடையே பட்ஜெட் உரையை வாசித்தார் கேரள நிதி மந்திரி மாணி

Posted: 12 Mar 2015 08:58 PM PDT

கேரளாவில் மது பார்களை மீண்டும் திறக்க அனுமதி பெற்று தருவதாக கூறி நிதி மந்திரி மாணி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக மது பார் உரிமையாளர் சங்கத்தலைவர் பிஜு ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனால் மந்திரி மாணி ராஜினாமா செய்யக்கோரி

பெங்களூருவில் குடும்பத்தினர் 5 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை

Posted: 12 Mar 2015 08:43 PM PDT

பெங்களூரு நாகரபாவி எம்.பி.எம். லே-அவுட், 3-வது மெயின் தெருவில் வசித்து வந்தவர் கங்கஹனுமய்யா(வயது 57). புதிதாக கட்டிய 2 மாடி கட்டிடத்தில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி

உலக நாடுகள் முடியாதென்று கைவிட்ட அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியா

Posted: 12 Mar 2015 08:07 PM PDT

நைஜீரியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபே கடந்த 2003-ம் ஆண்டு 'பட் சியாரி சிண்ட்ரோம்' என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரலில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு கல்லிரல் வீங்கத் தொடங்கும். மனித கல்லீரலின் சராசரி எடையே 1.5 கிலோவாக இருக்கும் நிலையில், ஜார்ஜின் கல்லீரலோ 4.5 கிலோ எடையுடன் நன்கு வீங்கிய நிலையில் இருந்தது. இதனால் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் நரக வேதனையை அனுபவித்து வந்த ஜார்ஜ் தனது நோய்

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தை: முகநூலில் வெளியான படங்களால் பரபரப்பு

Posted: 12 Mar 2015 07:57 PM PDT

பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும்

மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை- கர்நாடக மந்திரி பாட்டீல்

Posted: 12 Mar 2015 07:40 PM PDT

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதிகட்ட பரிசீலனைக்கு 3 நிறுவனங்களை கர்நாடக அரசு தேர்வு செய்திருக்கிறது. இவற்றில் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், அதன்பின் அணை கட்டும் பணிகள் தீவிரமடையும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் இரு மாநில

மொரீசியஸ் பயணத்தை முடித்து இலங்கை சென்றடைந்தார் மோடி

Posted: 12 Mar 2015 07:25 PM PDT

ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேரில் சென்று வரவேற்றார். இலங்கை சென்றுள்ள அவர் இலங்கை அதிபர் ஸ்ரீசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், இலங்கை பிரதமர்

ரெயில்வேயை துடிப்புள்ள அமைப்பாக மாற்ற வருகிறது காய கல்ப கவுன்சில்: மந்திரி சுரேஷ் பிரபு அறிவிப்பு

Posted: 12 Mar 2015 07:01 PM PDT

பாராளுமன்றத்தில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கடந்த மாதம் 26-ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்மீது நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் கவுஷலேந்திர குமார் (ஐ.ஜனதாதளம்), சி.என்.ஜெயதேவன் (இந்திய கம்யூ), துஷ்யந்த் சவுதாலா

செல்போனில் குறுந்தகவல் அனுப்பினால் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் புதிய வசதி அறிமுகம்

Posted: 12 Mar 2015 05:09 PM PDT

இந்திய ரெயில்வே சமீபத்தில் பயணிகள் செல்போனில் இருந்து குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தாங்கள் பயணம் செய்யும் ரெயில்பெட்டி, கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுகோள் விடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது.

பெங்களூரில் 20 பேரால் தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர் புகார் அளிக்க மறுப்பு: தாமாக முன்வந்து 9 பேரை கைது செய்த போலீசார்

Posted: 12 Mar 2015 01:57 PM PDT

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே, பைரதியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மூன்று பேர் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இயற்கை வழி சிகிச்சையால் கெஜ்ரிவாலின் கடும் இருமல் 75 சதவீதம் குறைந்தது: எப்போது டெல்லி வருவார்?

Posted: 12 Mar 2015 01:06 PM PDT

பெங்களூரில் சிகிச்சை மேற்கொண்டு வரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மொரீசியஸ் சுற்றுப்பயணம் நிறைவு: இலங்கை புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

Posted: 12 Mar 2015 12:39 PM PDT

ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் சற்று முன் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை செல்கிறார். நேற்று மொரீசீயஸ் நாட்டின் 47-வது தேசிய தின விழாவில் சிறப்பு

வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடக் கூடாது: சட்ட ஆணையம் பரிந்துரை

Posted: 12 Mar 2015 09:06 AM PDT

தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான சில பரிந்துரைகளை சட்ட ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளர் ஒருவர் 2 தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிடக் கூடாது. ஒரு தொகுதியில் போட்டியிடவே அவருக்கு அனுமதி உண்டு. தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் 2 தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரை சம அதிகாரம் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் வழியே நியமிப்பது மற்றும் தேர்தலில் சுயேட்சைகள் போட்டியிடுவதை தடை செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

Posted: 12 Mar 2015 08:17 AM PDT

காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதை சட்டமாக்குவதற்கான மசோதாவை (காப்பீட்டு சட்ட திருத்த மசோதா) மாநிலங்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. இதையடுத்து மசோதா குரல் ஓட்டெப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவு அளித்தால் மந்திரி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி கூறியது: காங். முன்னாள் எம்.எல்.ஏ.வும் குற்றச்சாட்டு

Posted: 12 Mar 2015 07:31 AM PDT

புதுடெல்லி, மார்ச் 12- டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி செய்தார் என்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்திய நிலையில், ஆதரவு அளித்தால் மந்திரி பதவி வழங்குவதாக கூறி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் என்னை அணுகினார்கள் என்று முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார், டெல்லியின் ஒக்லா தொகுதியை சேர்ந்த முன்னாள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உளவு பார்த்த விவகாரம்: டெல்லி, மும்பையில் சி.பி.ஐ. அதிரடி சோதனை- ரூ. 60 லட்சம் சிக்கியது

Posted: 12 Mar 2015 06:47 AM PDT

மத்திய அரசின் ரகசிய ஆவணங்களை திருடி விற்பனை செய்த வழக்கில் மத்திய மந்திரி அலுவலகத்தில் வேலை பார்த்த சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. இன்று எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்து டெல்லி மற்றும் மும்பையில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனை சில மத்திய மந்திரி அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் நடைபெற்றதாகவும், இதில் 60 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் கூறுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™