Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லிபியாவில் 21 பேர் கழுத்தறுத்து கொலை: ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீண்டும் கொடூரம்

Posted:

கெய்ரோ : லிபியாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், எகிப்தைச் சேர்ந்த, 21 கிறிஸ்தவ பிணைக் கைதிகளை, கழுத்தை அறுத்து கொலை செய்தது, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.லிபியா தலைநகர் திரிபோலியில், கடற்கரை அருகே, மஞ்சள் உடையணிந்து, பின்புறம் கைகள் கட்டப்பட்ட, 21 பேரின் கழுத்தை அறுத்து கொல்லும் வீடியோ காட்சியை, ஐ.எஸ்., அமைப்பு நேற்று வெளியிட்டது.உலகையே பதைபதைக்க வைத்த, இந்த ஐந்து நிமிட காட்சியின் இறுதியில் பேசிய பயங்கரவாதி, 'எந்தக் கடலில் ஒசாமா பின்லேடன் போடப்பட்டாரோ, அதில், உங்கள் ரத்தம் கலக்கப்படும். இது, அல்லா மீது ஆணை' என்கிறான்.கொல்லப்பட்டவர்கள், எகிப்தைச் ...

பா.ஜ.,வுக்கு சயீதின் மக்கள் ஜனநாயக கட்சி நிபந்தனை: கூடி வரும் நேரத்தில் கூட்டணி பானையை உடைக்கிறது

Posted:

ஸ்ரீநகர்:'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமெனில், 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, பா.ஜ.,வுக்கு, மக்கள் ஜனநாயக கட்சியான - பி.டி.பி., நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அங்கு பா.ஜ., - பி.டி.பி., கட்சிகளின் ஆட்சி விரைவில் அமையும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு வீணாகி உள்ளது. இழுபறி நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என, நம்பப்படுகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், 28 இடங்களைப் பிடித்த, முப்தி முகமது சயீதுவின் மக்கள் ஜனநாயக கட்சியும், 25 இடங்களைப் ...

கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு எப்படி? டில்லி போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

Posted:

புதுடில்லி:''முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அவரின் விருப்பத்திற்கு ஏற்ப, பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என, டில்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி தெரிவித்துள்ளார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு குறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது:முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்க, போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களுடன் எளிதாக கலந்துரையாட, இந்த பாதுகாப்பு தடையாக இருக்கும் என, கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டதாக ...

சீன விவகாரங்களை கவனிக்க ஐ.பி.,யில் தனிப்பிரிவு துவக்கம்

Posted:

புதுடில்லி:உளவு அமைப்பான ஐ.பி.,யில், சீனாவுக்காக தனி பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை மற்ற, 20 நாடுகளுடன் சேர்ந்து, சீனாவும் கையாளப்பட்டு வந்தது. மேலும், தற்போது துவக்கப்பட்டுள்ள தனிப்பிரிவானது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும். அதேநேரத்தில், சீனா தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பிரதான பணி, மற்றொரு உளவு அமைப்பான, 'ரா'விடமே தொடரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்திய எல்லை பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவுவது, அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அதனால், அந்நாட்டின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட ...

அந்த ஒரு ரூபாயை கூட வாங்காமல் இருந்திருக்கலாமே: ஜெ., வழக்கில் நீதிபதி கேள்வி

Posted:

பெங்களூரு:'இலவச சேவை செய்ய வேண்டும் என எண்ணுபவர், ஒரு ரூபாய் கூட ஏன் வாங்க வேண்டும்? ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியே ஆக வேண்டும் என சட்டம் ஏதாவது உள்ளதா?" என, ஜெயலலிதா வழக்கில், நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீடு மனு மீதான விசாரணை, நேற்றும் தொடர்ந்தது.ஜெ., வழக்கறிஞர் குமார், 'ஜெயலலிதா, முதல்வராக இருந்த போது, மாதம், ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார்' என்றார்.உடனே குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, 'இலவசமாக சேவை செய்ய வேண்டும் என எண்ணுபவர், ஒரு ரூபாய் கூட, ஏன் வாங்க வேண்டும்; ஒரு ...

தே.மு.தி.க., உள்ளடி வேலை அம்பலம்: பா.ஜ., அதிர்ச்சி

Posted:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., உள்ளடி வேலை பார்த்ததால் தான், பா.ஜ.,விற்கு குறைவான ஓட்டுகள் கிடைத்தன என்ற தகவல் அம்பலமாகி உள்ளதால், அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு போட்டியாக வேட்பாளரை களமிறக்க, தே.மு.தி.க., முடிவு செய்தது. தே.மு.தி.க., ஆதரவுடன், போட்டியிட பா.ஜ., விரும்பியது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர்; திடீரென வேட்பாளரையும் அறிவித்தனர். அறிவிப்பு இல்லை:அதேநேரத்தில், பா.ஜ.,விற்கு ஆதரவு அளிப்பது ...

நியாயமாக நடந்திருந்தால் அ.தி.மு.க., தோற்றிருக்கும்: கனிமொழி

Posted:

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி கூறியதாவது: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், ஏதோ அபார வெற்றி பெற்று விட்டது போல, ஆளுங்கட்சியினர் கொண்டாடி தீர்க்கின்றனர். அ.தி.மு.க., பக்கம் தான் மக்கள் இருக்கின்றனர் என்றால், முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், திருச்சிக்கு சென்று பணம் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்க சொன்னது ஏன்? நியாயமாக தேர்தல் நடந்திருந்தால், அ.தி.மு.க., தோற்றிருக்கலாம். 29 அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு, கறி பிரியாணி சமைத்துப் போட்டு, பணம் கொடுத்து ஓட்டை வாங்கினர்.பணத்தை கொடுத்து ...

ஜெ.,யை விட அதிக ஓட்டு பெற்றார் வளர்மதி: ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி

Posted:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, 96,516 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா வாங்கிய ஓட்டுகளை விட, 46,233 ஓட்டுகள் கூடுதலாக பெற்று புது சாதனை படைத்துள்ளார்.சொத்து குவிப்பு வழக் கில், ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். காலியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

துடிப்பு:
இதுவரை நடந்த இடைத்தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், ...

அணு சக்தி துறையில் இந்தியா - இலங்கை ஒப்பந்தம்: சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க மோடி முயற்சி

Posted:

புதுடில்லி:இந்தியா - இலங்கை இடையேயான உறவை, புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணு சக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம், இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி முற்பட்டுள்ளார்.இலங்கையில், ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்?ஷ தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன அமோக வெற்றி பெற்று அதிபரானார். அதிபராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக, அதிபர் சிறிசேன நேற்று முன்தினம் இரவு, ...

ம.பி., முதல்வர் மீது 'பகீர்' குற்றச்சாட்டு

Posted:

போபால்:மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முக்கியமான அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வில், லஞ்சம் பெற்று, முறைகேடாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முக்கியபங்குள்ளதாக காங்., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், காங்., மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்டோர், நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:தேர்வு வாரியத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு ...

டில்லி போக்குவரத்தில் புதிய அத்தியாயம் : விரைவில் 'மெட்ரினோ' திட்டம் துவக்கம்

Posted:

புதுடில்லி: டில்லியில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மெட்ரோ ரயிலுக்கு அடுத்தபடியாக, 'மெட்ரினோ' திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. படையெடுப்பு:தலைநகர் டில்லியில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குர்கான் அருகேயுள்ள மனேசர் என்ற நகரத்தை நோக்கி, இப்போது அதிகமான நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன. டில்லியிலிருந்து, மானேசர், 32 கி.மீ., தொலைவில் உள்ளது. கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், டில்லியிலிருந்து, மானேசரில் உள்ள அலுவலகங்களுக்கு செல்வதற்கு நீண்ட நேரமாகிறது. இந்த ...

கெஜ்ரிவால் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்க!

Posted:

புதுடில்லி: ''முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என, டில்லி போலீசுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு உள்ளார். டில்லி போலீசின், 68வது உதய தின அணிவகுப்பு, டில்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: டில்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், புதிய கட்சி ஒன்று, மக்களின் ஆதரவைப் பெற்று, அரசு அமைத்துள்ளது; அந்த அரசுக்கு, டில்லி போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அப்போது தான், டில்லி நகரம் மேம்பாடு அடையும். 'கட்சி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™