Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சூர்யா ஜோடியாக அமலா பால்...!

Posted:

அமலாபால் அறிமுகமான தமிழ்ப் படம் என்றால் "விகடகவி, சிந்து சமவெளி, வீரசேகரன்" ஆகிய மூன்று படங்களையும் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் 'மைனா' படம்தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம். அதன் பின் 'தெய்வத் திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி" ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. ...

ஈரான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

Posted:

மும்பை:பிரபலமான ஈரான் திரைப்பட இயக்குனர் மஜித் மஜிதி இயக்கும் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர், ஏ.ஆர்.ரஹ்மான். 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததன் மூலம், ஆஸ்கர் விருதையும் பெற்றார். சில மாதங்களுக்கு முன், ஈரானிய ...

என்னை அறிந்தால் பார்ட் - 2 - கௌதம் மேனன் பேட்டி!

Posted:

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான படம் எடுக்கும் இயக்குனர்களில், கவுதம் மேனனுக்கு முக்கிய இடம் உண்டு. 'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு' என, வெற்றியின் உச்சத்துக்கு சென்ற அவர், 'நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம்' என, தோல்வியின் வீழ்ச்சிக்கு சென்றார். தடுமாறி நின்ற கவுதமை, அவரால் மறு வாழ்வு பெற்ற சிலர், முதுகில் குத்தி மேலும் ...

நன்றி சொல்லவே உனக்கு...

Posted:

இதுவரை, நடித்தோமா, சம்பாதித்தோமா என, தானுண்டு தன் வேலையுண்டு இருந்த
அனுஷ்காவுக்கு, சமீபகாலமாக மனித நேயம் எட்டிப் பார்க்க துவங்கியுள்ளது. தன்னிடம், நீண்ட காலமாக உதவியாளர்களாக இருந்தவர்களுக்கு, ஐதராபாத்தில் வீடு கட்டித் தரும் முயற்சியில் இறங்கியுள்ளார் அனுஷ்கா. நீண்ட நாட்களாகவே, தன் மனதில் இருந்த திட்டத்துக்கு, கடந்த ஒரு ...

கெட்டி மேளம் கேட்கும் நேரம்

Posted:

சிங்களத்து சின்ன குயில் ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும், பாலிவுட்டின் எவர்கிரீன் பேச்சிலர்
சல்மானுக்கும் (பார்ட்டிக்கு,49 வயதாகி விட்டது), 'கிக்' படத்தில் நடித்தபோது, காதல் நெருப்பு பற்றிக் கொண்டதாக கூறப்பட்டது. இருவருமே, 'எங்களுக்கு இடையே அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என, மறுத்து வந்தனர். ஆனால், சமீபகாலமாக, சல்மான் கான் ...

முடிவுக்கு வந்த போராட்டம்

Posted:

இதோ... அதோ... என, பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த, 'இது நம்ம ஆளு' படம், ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம். இதனால், சிம்பு ரசிகர்கள்
மட்டுமல்லாமல், படக்குழுவும் சந்தோஷத்தில் திளைக்கிறது. இந்த படத்தில், சிம்பு - நயன்தாரா கெமிஸ்ட்ரி, பக்காவாக 'ஒர்க் அவுட்' ஆகியுள்ளதாகவும், படத்தின் வெற்றிக்கு, அது மிகவும் உதவியாக ...

வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு

Posted:

சித்தார்த்தும், சமந்தாவும், காதலிப்பதாக இருவரும் வெளிப்படையாக ஒருபோதும் கூறவில்லை. ஆனாலும், திருமண நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்களுக்கு, இந்த,'லவ் பேர்ட்ஸ்' ஒன்றாகவே சிறகடித்து பறந்தன. யார் கண்பட்டதோ, இவர்களின் காதல், சமீபத்தில், 'பிரேக் அப்'
ஆகி விட்டது. இந்நிலையில், இரண்டு பேரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கப் போவதாக, ...

தாரை தப்பட்டை பாலாவுக்கு சவாலானது - இளையராஜா!

Posted:

பரதேசி படத்திற்கு பிறகு பாலா இயக்கும் படம் ''தாரை தப்பட்டை''. சசிகுமார், வரலெட்சுமி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது, இவர் இசையமைக்கும் 1000-மாவது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புகள் தஞ்சாவூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகவே நடந்து வருகிறது. இந்நிலையில், இளையராஜா படப்பிடிப்பு நடக்கும் ...

'இசை'-யில் ஆபாசம் - மனம் மாறிய எஸ்.ஜே.சூர்யா

Posted:

குஷி, வாலி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, சிலகாலம் நடிப்பு பக்கம் சென்றுவிட்டார். நீண்ட இடைவௌிக்கு பிறகு அவர், இயக்கி, நடித்து, இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள படம் இசை. கடந்தவாரம் வௌியான இசை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் படத்தில் நிறைய ஆபாச காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டும் ...

ரேடியோ ஜாக்கி ஆகிறார் அமிதாப் பச்சன்

Posted:

கோல்கட்டா : ஷமிதாப் படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, நாளை இரவு 8 - 9 மணிக்குள், நடிகர் அமிதாப் பச்சன், 93.5 ரெட் எப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாக, நேயர்களிடம் பேச உள்ளார்.

இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம், இவ்வார இறுதியில் வெளியாக ...

மாரி படத்தில் தனுஷ் யார்?

Posted:

காதலில் சொதப்புவது எப்படி? என்ற வெற்றிப்படத்தையும், வாயை மூடி பேசவும் என்ற தோல்விப்படத்தையும் இயக்கியவர் பாலாஜிமோகன். வாயை மூடி பேசவும் படத்திற்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் படம் - மாரி. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். மாரி படத்தில் முறுக்கு மீசை, குறுந்தாடி ...

அம்மாவா நடிச்சா என்ன தப்பு..? சீறும் ஸ்ரேயா!

Posted:

'மழை' படத்தில் நடித்து மயக்கி, சிவாஜியில் அடடா... என ஆச்சரியப்பட வைத்தவர் ஸ்ரேயா. அடுத்த சிம்ரன் இவர்தான் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. தொடர்ந்து விஜய், விஷால் உட்பட பலரின் படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவருடைய தமிழ் மார்க்கெட்டைப் பதம் பார்த்துவிட்டது. அதன் பின் அவரால் இங்கு தொடர்ந்து ...

சந்தோஷ் சிவன் டைரக்சனில் நடிக்கிறார் நிவின் பாலி..!

Posted:

பலமுறை தேசியவிருதுகளை சந்தோஷ் சிவனை இங்கே பலருக்கும் ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவரோ ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர். கடந்த 2011ல் சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி' படம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் ...

உதவி இயக்குனர் மீது தாக்குதல் : தயாரிப்பாளர் கைது

Posted:

மும்பை : சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதை தட்டிக்கேட்ட உதவி இயக்குனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், படத்தின் தயாரிப்பாளரும் மற்றும் முன்னணி இசை அமைப்பாளருமான இஸ்மாயில் தர்பாரை, அம்போலி போலீசார் கைது செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார், அசுடோஷ ரானா நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளராகவும் உள்ளார். ...

நாடகத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்

Posted:

நடிகர் கணேஷ் வெங்கட்ராம், முதன்முறையாக,நாடகத்தில் நடிக்க உள்ளார். சிண்ட்ரெல்லா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாடகத்தில், கணேஷ் வெங்கட்ராம் இளவரசர் ஆகவும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இளவரசியாகவும் நடிக்க உள்ளனர்.

சிண்ட்ரெல்லா நாடகத்தின் கதை, நடனம் மற்றும் இயக்கம் உள்ளிட்டவைகளை ஜாகிர் உசேன் மேற்கொள்கிறார்.

இசை ...

உத்தமவில்லன் விழாவில் ஆட்டக்களரி நிகழ்ச்சி!

Posted:

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் - உத்தம வில்லன். இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெயராம், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

உத்தம ...

குறைந்து வரும் மேடை நாகரீகம் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

வர வர சினிமா மேடையும், அரசியல் மேடை போல ஆகிக்கொண்டிருக்கிறது. அநாகரீக பேச்சுக்களும், நடத்தையும் அரங்கேறத் தொடங்கிவிட்டது. மைக் கிடைத்தால் போதும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலை வந்திருக்கிறது. இது பாரம்பரிய சினிமா கலைஞர்களையும், தரமான சினிமா ரசிகர்களையும், விமர்சகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா ...

“மோகன்லாலை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்” - பொங்கிய மம்முட்டி..!

Posted:

கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் மோகன்லாலின் 'லாலிசம்' இசைக்குழுவினர் சொதப்பிவிட்டனர் என்றும் இந்த நிகழ்ச்சிக்காக மோகன்லால் 2 கோடி ரூபாய் வாங்கிவிட்டார் என்றும் விழா முடிந்த பின்னரும் கூட விமர்சன கணைகள் மோகன்லாலின் மீது பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக மலையாள திரையுலகை சேர்ந்த சிலரே ...

மலையாளப் படத்தில் ஹீரோவாகும் சவுந்தரராஜா

Posted:

இயக்குனர், நடிகர் சசிகுமாரின் டீமைச் சேர்ந்தவர் சவுந்தரராஜா. சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகிர்தண்டா படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார் அடுத்து ராமகிருஷ்ணன் இயக்கி, நடிக்கும் படத்தில் இணை ஹீரோவாக நடிக்கிறார்.

இதற்கிடையில் மலையாளப் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ...

பிரபுசாலமனின் அடுத்த படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted:

கயல் படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார். தனுஷ் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வௌியான செய்தி என்றாலும் இப்போது படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மைனா, கும்கி வெற்றிப் படங்களை கொடுத்த பிரபுசாலமனுக்கு கயல் சிறு சறுக்கலாக அமைந்தது. ஆனாலும் அடுத்த படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™