Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காரில் சென்றபோது விபத்து - பூஜா காந்தி காயம்

Posted:

கொக்கி, திருவண்ணாமலை போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தனது காரில் பெங்களூரு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதிவிட்டது. இதில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கும், காரில் இருந்த பூஜா காந்திக்கும் ...

''என்னை அறிந்தால்-2'' இப்போதைக்கு இல்லை!

Posted:

அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகி உள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார் என்று தகவல் அடிபட ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் கௌதம் மேனன் ...

ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசைப்புயல்!

Posted:

மணிரத்னத்தின், ''ரோஜா'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது அற்புதமான இசையால் உச்சத்திற்கு சென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது எல்லாம் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். இவரது குடும்பத்தில் இருந்து ஏற்கனவே இவரது சகோதரி ரஹானா, சகோதரியின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இசையமைப்பாளராக ...

தனுஷின், ''அனேகன்'' ஒரு பார்வை...!

Posted:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அனேகன். தனுஷ் ஜோடியாக அமைரா நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆமாம்.வருகிற பிப்., 13ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. இப்போது இப்படம் பற்றி சில ...

பாடகியான தீபிகா படுகோனே!

Posted:

பாலிவுட்டின் நம்பர்-1 நடிகை தீபிகா படுகோனே. இவரை வசூல் ராணி என்று கூட சொல்லலாம். இவர் நடித்த அனேக படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சமீபகாலமாக நடிகைகளும், பாடகியாக மாறுவது அதிகமாகி வருகிறது. அந்தவகையில் இப்போது தீபிகா படுகோனேவும் பாடகியாக அறிமுகமாக இருக்கிறார். இவர் இப்போது தமாஷா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ...

குளிர்பான கம்பெனிக்கு விளம்பர தூதுவரான விஷால்!

Posted:

பாண்டிய நாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள ஆகிய படங்கள் அதிரடி ஆக்ஷன் படங்கள். இவற்றில் பூஜை மட்டுமே கமர்ஷியல் ஹிட். மற்ற இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. என்றாலும், அதிரடி ஆக்ஷன் ஹீரோக்கள் பட்டியலில் விஷால் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். அடுத்து ...

பால்கி இயக்கத்தில் மீண்டும் ஒரு ஹிந்திப்படத்தில் நடிக்கும் தனுஷ்!

Posted:

ரஜினியின் மருமகன் என்ற விசிட்டிங் கார்டு உடன் கொலவெறி பாடல் மூலம் கிடைத்த அட்டென்ஷனும் சேர்ந்து கொள்ள, தனுஷுக்கு பாலிவுட்டின் கதவு விரியத்திறந்தது.
ராஞ்சனா என்ற ஹிந்திப் படத்தின் மூலமே பாலிவுட்டில் நுழைந்தார். தனது முதல் படமே வணிகரீதியில் வெற்றியடைய, அங்கே தனக்கான ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் தனுஷ்! இப்படத்தை தொடர்ந்து, ...

ஆர்.கே. - ஷாஜி கைலாஸ் ஹாட்ரிக் கூட்டணி

Posted:

ஆர்.கே.வின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் எல்லாம் அவன் செயல் என்ற படத்தை இயக்கினார் பிரபல மலையாளப்பட இயக்குநரான ஷாஜி கைலாஸ். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு இயக்குநர்களின் படங்களில் ஆர்.கே. நடித்தும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, மீண்டும் ஷாஜி கைலாஸை அணுகி, தன்னை வைத்து படம் எடுத்துத் தரும்படி கேட்டார் ஆர்.கே. ...

நாகார்ஜுனா, கார்த்தி படத்திற்கு இசை கோபி சுந்தர்!

Posted:

தமிழ் சினிமாவில் தற்போது பல புதிய இசையமைப்பாளர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார்கள். அதிலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் இசையைமக்கிறார்கள். அதனால், பல வளரும் நடிகர்களின் படங்களுக்கும், புதிய நடிகர்களின் ...

'என்னை அறிந்தால்' இறங்காத வசூல்..!

Posted:

'என்னை அறிந்தால்' படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்து விட்டது. படத்தைப் பற்றிக் கொஞ்சம் நெகட்டிவ்வான விமர்சனங்கள் வெளிவந்தாலும் அது படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் படத்திற்கான வசூல் நன்றாகவே இருந்து வருகிறதாம். அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் உள்ள ...

காதலிங்க... ஸ்கிரிப்ட் எழுதுங்க...!

Posted:

இன்றைய 40 வயதைக் கடந்த இயக்குனர்கள் அனைவருமே அவரவர் இளமைப் பருவத்தில் கண்டிப்பாக காதலித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியே காதலிக்கவில்லை என்றாலும் அவர்களது வாழ்க்கையில் யாராவது ஒரு பெண் கடந்து போயிருக்க வாய்ப்புண்டு. அந்தக் காலத்தில் மொபைல் போன்கள், இணையதளங்கள், சாட்டிங் வசதிகள் இல்லாத போது, அவர்கள் காதலுக்குக் கை ...

தெலுங்கிலும் சாதிக்கத் துடிக்கும் தனுஷ்...!

Posted:

"ராஞ்சனா, ஷமிதாப்" படங்களின் மூலம் இந்திய நடிகராகவும் மாறிவிட்டார் தனுஷ். 'ராஞ்சனா' படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது, ஆனால், 'ஷமிதாப்' படம் நெகட்டிவ் விமர்சனங்களால் திக்கித் திணறி ஓடிக்கொண்டிருக்கிறது. தான் நடித்த இரண்டு ஹிந்திப் படங்களின் மூலமும் தமிழ்நாட்டை விட்டு வெளியேயும், பல ரசிகர்களைப் பெற்றுள்ள தனுஷ் ...

புறம்போக்கு எந்தமாதிரியான கதை!

Posted:

தனது படங்களில் கம்யூனிஸ்ட் கருத்துக்களை படம் பார்ப்பவர் முகம் சுளிக்க கூடிய அளவில் சொல்லாமல் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லக் கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். சமீபத்தில் பேராண்மை படம் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது புறம்போக்கு என்ற பெயரில் படம் இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டது. ஆர்யா, விஜய் ...

மார்ச்சில் மிஷ்கினின் அடுத்தபடம்!

Posted:

கோடம்பாக்கம் சினிமாவில் படிக்கும் பழக்கம் உள்ள இயக்குனர்களின் லிஸ்ட்டை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் குறிப்பிடத்தக்கவர் மிஷ்கின். இவருடைய படங்களில் வெளிநாட்டு படங்களின் தாக்கம் துளியாவது இல்லாமல் இருக்காது. இவரின் படம் உருவாகும் போதே படத்துக்குரிய சர்ச்சையும் கூடவே வரும். சமீபத்தில் திரைக்கு வந்து அனைவராலும் கவரப்பட்ட ...

என் மார்க்கெட் சரியவில்லை - ராய்லட்சுமி!

Posted:

தமிழ் படங்கள் மட்டுமல்ல எல்லா மொழி படங்களிலும் நடிகைகளின் சுய பிரச்சனைகள் படத்தின் செய்தியை விட பிரபலமாக இருக்கும். அப்படி பேசப்பட்டவர் லட்சுமிராய். டோணியுடன் இரவில் பைக்கில் சுற்றியது. கிங்பிஷர் தொழில் அதிபருடன் காதல் என்றெல்லாம் செய்திகள் கிளம்பியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் படங்களில் நடித்துவந்தார் லட்சுமிராய். ...

மீண்டும் தயாரிப்பு வேலைகளில் பி.எல்.தேனப்பன்!

Posted:

முன்பு படம் எடுத்து பெரிய முதலாகிள் என பேசப்பட்ட பட தயாரிப்பாளர்கள் இப்போது யாரும் இல்லை என்று கூறலாம். அதிலும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக ஆஸ்கார், பி.எல். தேனப்பன், கலைப்புலி தாணு, சூப்பர்குட் பிலிம்ஸ் இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் உள்ளது. இதில் சினிமாவை தவிர வேற தொழில் தெரியாது என்பவர்கள் ...

யாரும் இதுவரை காணாத கமர்ஷியல் படமாக என் படம் இருக்கும் - பார்த்திபன்!

Posted:

தனது படங்களில் புதுமையை புகுத்தி வரும் நடிகர் பார்த்திபன் அண்மையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற பெயரில் படம் இயக்கினார். இந்த படம் திரைக்கு வந்து பார்த்திபனை போலவே பேசப்பட்டது. அதன்பிறகு சைலண்டாக தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விட்டார். இந்த படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கு ஏற்ப ...

எம்ஜிஆர் பாடல் வரிகளில் எஸ்டிஆர் பட டைட்டீல்!

Posted:

சிம்பு கதாநாயகனாக நடித்து வெளியான கடைசி படம் போடா போடி. அதன்பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தநிலையில், அவர் கதாநாயகனாக நடித்து வந்த வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் அதோ வருகிறது இதோ வருகிறது என்று செய்திகள் மட்டுமே வெளியாகின. ஆனால் படங்கள் இன்னும் திரைக்கு ...

முதல் ஷோவை கமலுக்குத்தான் காட்டப்போகிறாராம் ஜெயராம்!

Posted:

கமலுடன் தெனாலி உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராம். அந்த வகையில், அவர்களுக்கிடையே நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. அதனால்தான், தனது மகன் காளிதாஸை அவர் நாயகனாக நடிக்கும் ஒரு பக்க கதை படத்தின் தொடக்க நாளில் கமலை வைத்து அறிமுகம் செய்தார் ஜெயராம். விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இய்ககிய பாலாஜி ...

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!

Posted:

ஸ்ரீகாந்த்- ஜனனி அய்யர் ஜோடி சேர்ந்து நடித்த படம் பாகன். அந்த படத்தில் அவருடன் சூரி, ப்ளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருந்தனர். பெரிய வெற்றி இல்லை என்றபோதும், காமெடிக்காக ஓரளவு ஓடியது. இந்த நிலையில், தற்போது வருத்தப்படாத வாலிபர் சஙகம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™