Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் முதல்பட இயக்குநருடன் இணையும் தனுஷ்!

Posted:

தனுஷின் இந்தி சினிமா பயணம் அமர்க்களமாக இருக்கிறது. கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தனுஷ், இந்தியில், ராஞ்சனா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனந்த் எல்.ராய் இயக்கிய இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். தனுஷின் யதார்த்தமான நடிப்பு பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் முதல்படமே ரூ.100 கோடி வசூலிலும் ...

ஆர்யா பிரியாணி வேண்டாம்; அஜீத் பிரியாணி தான் வேண்டும் - பிந்து மாதவி

Posted:

வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி. இவர் கடைசியாக, ''ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்'' படத்தில் நடித்தார். இப்போது, ''தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'', ''சவாலே சமாளி'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், ''தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'' ...

'ஐ'யின் தொடர் சாதனை...!

Posted:

'ஐ' படம் பலத்த எதிர்பார்ப்பில் ஜனவரி மாதம் 14ம் தேதியன்று வெளியானது. வெளியான நாள் முதே இந்தப் படம் ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகமான விமர்சனத்துக்குள்ளாகியது. அவருடைய மற்ற படங்களைப் போல் இந்தப் படம் இல்லை, இந்தப் படத்திற்கு முன்னர் வந்த படங்களில்தான் ஷங்கர் கடுமையாக உழைத்திருந்தார், இந்தப் படத்தில் பெரிதாக ...

அட்லாண்டா போலீஸில் பிருத்விராஜுக்கு அப்பாயின்மென்ட்..!

Posted:

மலையாளத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டர்களை சாசனம் எழுதிக்கொடுத்ததுபோல இப்போது அதிகமான படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் போடுவது பிருத்விராஜ்தான். அதற்கேற்ற மாதிரி இவருக்கும் போலீஸ் கேரக்டர் கச்சிதமாக பொருந்துகிறது. இல்லையென்றால் 15 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்க முடியுமா? கடந்த 2013ல் மட்டும் 'மும்பை போலீஸ்', 'மெமோரிஸ்' ...

துல்கர் சல்மானின் 'விக்ரமாதித்யன்' இரண்டாம் பாகம் தயாராகிறது..!

Posted:

கடந்த வருடம் துல்கர் சல்மான் மலையாளத்தில் இரண்டு ஹிட்டுகளை கொடுத்தார்.. ஒன்று 'பெங்களூர் டேய்ஸ்'.. இன்னொன்று 'விக்ரமாதித்யன்'. இதில் விக்ரமாதித்யன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிளான் செய்திருக்கிறார் அந்தப்படத்தின் இயக்குனரான லால்ஜோஸ். அப்படி இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு அந்தப்படத்தில் என்ன ஸ்பெஷல்..? துல்கர் ...

கே.வி.ஆனந்த்தை பாராட்டும் கௌதம் மேனன்!

Posted:

சினிமாவில் நட்பு வளர்வதை போல நட்புக்கு இடையே பகையும் ஏற்படும். இந்த பகை சில காலம் நீடிக்கும் பிறகு மனமாறி நட்பாவார்கள். இதற்கு மாறாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நான்கு ஆண்டுகள் பகை இருந்தது. இதை இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் பேசி தீர்த்து வைத்தார். இதன் மூலம் என்னை அறிந்தால் ...

நண்பேன்டாவில் குத்தாட்டம் போடும் தமன்னா.?!

Posted:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா. தமிழில் கடைசியாக அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்தார். தற்போது அறிமுகமான சில இயக்குனர்களுக்கு போன் போட்டு நலம் விசாரிப்பது, வாழ்த்து செய்திகள் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுயிருக்கிறார். இதன் விளைவு உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் ஒரு சிறப்பு ...

தனுஷை மாற்றிய 'ஷமிதாப்'

Posted:

ஒரு படத்தை எப்படி பிரமோஷன் செய்ய வேண்டும், எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை ஹிந்தித் திரையுலகத்தினரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். 'சென்னை எக்ஸ்பிரஸ், தூம் 3, ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் கூட நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், ...

முக்கியத்துவம் இழந்து வரும் ஹீரோயின்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவில் பானுமதி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி, ஸ்ரீதேவி, சரிதா, ரேவதி என பல ஹீரோயின்கள் தங்கள் நடிப்பால் சினிமாவை தங்கள் கைபிடிக்குள் வைத்திருந்தார்கள். இன்றைக்கு, நடிக்கிற ஹீரோயின்களை விட கலர்புல் ஹீரோயின்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். நடிப்பு திறமைக்கு சவால்விடும் கேரக்டர்களை நடிகைகளும் விரும்புவதில்லை. அதற்கேற்ற ...

விலை உயர்ந்த கார் நம்பரை வாங்கிய ராம் சரண்

Posted:

விலை உயர்ந்த பேன்ஸி கார் நம்பரை வாங்கியிருக்கிறார் டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண். விஐபிகளும், சினிமா பிரபலங்களும்தான் பேன்ஸி நம்பர் மேல் குறியாகவே இருப்பார்கள், அது மொபைலாக இருந்தாலும் சரி, கார் நம்பராக இருந்தாலும் சரி அது சூப்பராக இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். இந்த வரிசையில் தற்போது ராம் சரணும் அவரது காருக்கு TS 09 EE ...

வி.எஸ்.ராகவன் நடித்த கடைசி படம்

Posted:

தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே சினிமாவில் நடித்தவர் வி.எஸ்.ராகவன், நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். அண்மையில் தனது 90வது வயதில் காலமானார்.

அவர் கடைசியாக அலைவரிசை என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். தனிமையில் விடப்பட்ட ஒரு முதியவருக்கு துணையாக இருப்பது ஒரு ரேடியோ பெட்டி மட்டுமே. ...

வைஷ்ணவதேவி கோயிலில் பூஷன் குமார் சாமி தரிசனம்

Posted:

வைஷ்ணவதேவி கோயிலி்ல், தயாரி்ப்பாளரும் மற்றும் இயக்குநருமான பூஷன் குமார் சாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலுக்கு, பூஷன் குமார், அடிக்கடி வருகை தருபவராக இருந்தாலும், தற்போதைய வருகை மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இவ்வார இறுதியில், அவரது இயக்கத்தில் உருவான ராய் படம் வெளியாக உள்ளது மற்றும் பூஷனின் தங்கை துள்சி குமாருக்கு ...

வஜ்ரம் படத்திற்கு யூ சான்றிதழ் பெற மறுபடப்பிடிப்பு

Posted:

உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் வஜ்ரம். இதில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டியுடன் பவானிசிங் என்ற புதுமுகம் நடித்துள்ளார்.

தம்பி ராமைய்யா அநாதை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார். பள்ளி உள்ள இடத்தை அபகரிப்பதற்காக ஒரு அரசியல்வாதி பள்ளியை இடித்து ...

அமிதாப் இடத்தில் பொருந்துவாரா அபிஷேக்?

Posted:

சினிமா மற்றும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், அமிதாப் பச்சனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக அபிஷேக் பச்சன கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் நடந்த கலை திருவிழாவில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், ஷமிதாப் படத்தில் நடித்த அக்ஷரா ...

கன்னட இயக்குனருக்கு கொலை மிரட்டல்: நித்யானந்தா மீது பரபரப்பு புகார்

Posted:

கன்னட இயக்குனர் மதன் பட்டேல், யாரிவானு (யார் இவன்) என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். இது போலி சாமியார் ஒருவரின் கதை. இந்த கதை தன்னை குறிவைத்து எடுக்கப்பட்டதாக கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு இயக்குனருக்கு சாதகமாக வரவே அங்கு படம் ரிலீசானது.

தற்போது இந்தப் படத்தை சொர்க்கம் என் ...

தாமதமாகும் லிங்கா செட்டில்மெண்ட்!

Posted:

ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி விநியோகித்த வகையில் தங்களுக்கு 40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தயாரிப்பாளர் திருப்பித் தரவேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் கோரி வந்தனர். உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்கள். படத்தை பற்றி அவதூறு பரப்பி ஓடாமல் செய்தது விநியோகஸ்தர்கள்தான் அதனால் நஷ்டஈடு தரமாட்டேன் என தயாரிப்பாளர் ...

சஸ்பென்சிற்காகவே புரோமோவில் பங்கேற்கவில்லை : ஹியூமா குரேஷி

Posted:

பட்லாபூர் படத்தில், தனது பங்கு அளப்பரியது மற்றும் பல சஸ்பென்ஸ்கள் நிறைந்தது. அந்த சஸ்பென்ஸ்களை, படம் பார்க்கும்போது மட்டும் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் ஹியூமா குரேஷி பங்கேற்கவில்லை என்று ஹியூமாவின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். வருண் தவான், யாமி கவுதம், ஹியூமா குரேஷி ...

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு தாவினார் சுனிதா

Posted:

ஜோடி நம்பர் ஒண் போட்டிகளில் ஆடி தீர்த்தவர் சுனிதா. பல போட்டிகளில் ரன்னர்அப் கோப்பையை தட்டியவர். இப்போது மான்வேட்டை படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவரான சுனிதா, மும்பையில் நடந்த டான்ஸ் இண்டியா டான்ஸ் என்ற லைவ் ஷோவை தொகுத்து வழங்கினார். அதன் மூலம் விஜய் டி.விக்கு வந்தார்.

இவரது நடனத்தை ...

ஹீரோ படம் ஜூலை மாதம் ரிலீஸ்

Posted:

சல்மான் கானின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹீரோ, ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், 1983ம் ஆண்டு ஜாக்கி ஷெராப் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் ரீமேக்கே, இந்த ஹீரோ ஆகும். இந்த படத்தின் மூலம், சூரஜ் பஞ்சோலி மற்றும் அதியா ஷெட்டி, பாலிவுட்டில் அறிமுகமாகின்றனர். சல்மான் கான் தயாரிப்பிலான படத்தில், ...

விரைவில் டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம்?

Posted:

தமிழ்த்திரை உலகில் தற்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன தெரியுமா? ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் படத்தின் வெற்றிதான். அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™