Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சத்தீஸ்கர் மாநிலத்தில் 3–வது குழந்தை பெற்றதால் அரசாங்க வேலை பறிபோனது

Posted: 25 Feb 2015 10:55 PM PST

சத்தீஸ்கர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அங்கு சுகாதார துறையில் பணி புரியும் 3 ஊழியர்கள் இந்த விதிமுறையை மீறி உள்ளனர். அவர்களுக்கு 3–வது குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசு 3 ஊழியர்களின் வேலையை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

திருமண விழாவுக்கு பிரதமர் என்ற முறையில் மோடியை அழைத்தோம்: முலாயம்சிங் யாதவ் விளக்கம்

Posted: 25 Feb 2015 10:54 PM PST

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் பேரன் –  லல்லு பிரசாத் யாதவின் மகள் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த திருமண விழாவுக்கு மோடியை அழைத்தது தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முலாயம்சிங் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, ''பிரதமர் என்ற முறையில் தான்

அமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: மேலும் 2 ஊழியர்கள் கைது

Posted: 25 Feb 2015 10:51 PM PST

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக ஊழியர்கள் அரசின் ஆவணங்களை திருடி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பட்ஜெட் தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒரு இணையதளத்தில் வெளியானது பற்றி விசாரணை நடத்தியதில் இந்த ஆவண திருட்டு அம்பலமானது.

எதிர்க்கட்சிகள் பற்றி விமர்சனம்: வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்டார்

Posted: 25 Feb 2015 10:45 PM PST

பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே எழுந்து பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி வெங்கையா நாயுடு எதிர்க் கட்சிகள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டினார். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். உடனே வெங்கையா நாயுடு எழுந்து மறுப்பு தெரிவித்தார். சபையில் பயன்படுத்த கூடாத வார்த்தை எதையும் குறிப்பிடவில்லை. யாரையும்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம்: சிவசேனா மிரட்டல்

Posted: 25 Feb 2015 10:45 PM PST

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்துவதற்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெறுவதற்காக மக்களவையில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது. அதோடு டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டமும்

காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்

Posted: 25 Feb 2015 10:00 PM PST

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோட்டப்பா கொண்டா மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஸ்ரீராம் புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஞ்சுநாயக் (18) தனது காதலியான கல்லூரி மாணவி சுவாதியுடன் வந்தார். பள்ளியில் படிக்கும் போதே தொடங்கிய இவர்களின் காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது. இருவரும் தனித்தனி கல்லூரியில் படிக்கிறார்கள். என்றாலும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள்.

திருப்பதி கோவில் முன்பு சிலுவை குறியிட்ட மர்ம நபர்: தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி

Posted: 25 Feb 2015 09:35 PM PST

திருப்பதியில் உள்ள திருமலை இந்துக்களின் புண்ணிய தலமாக உள்ளது. இங்கு வேற்று மத பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கலைக் கல்லூரியில் தெலுங்கு மொழி

திருப்பதி மலை வனப்பகுதியில் தீ விபத்து: 3 ஏக்கரில் மரங்கள் எரிந்தது

Posted: 25 Feb 2015 09:32 PM PST

திருமலை சேஷாசல மலை வனப்பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. திருமலை வனப்பகுதியில் ஏராளமான செம்மரம் மற்றும் சந்தன மரம் வளர்க்கப்படுகிறது. கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவது உண்டு. இதுதவிர

பன்றிக்காய்ச்சல் பலி 926 ஆக உயர்வு: ஒரே நாளில் 51 பேர் உயிரிழப்பு

Posted: 25 Feb 2015 08:58 PM PST

பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 51 பேர் பலியானார்கள். கடந்த 24–ந்தேதி வரை பன்றிக்காய்ச்சலுக்கு 926 பேர் வரை பலியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை

மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு அதிருப்தி

Posted: 25 Feb 2015 08:57 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான குப்பத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சமீபத்தில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

கண்ணூரில் கம்யூ. அலுவலகம் மீது குண்டு வீச்சு: நிர்வாகிகளுக்கு சரமாரி வெட்டு

Posted: 25 Feb 2015 08:25 PM PST

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே அடிக்கடி மோதல் நடப்பது வழக்கம். சமீபத்தில் கண்ணூர் மற்றும் அந்த பகுதியில் இந்த இரு கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் உருவாகி உள்ளது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்தது. இந்த நிலையில் கண்ணூர் அருகே உள்ள சரக்கல் என்ற இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்திற்கு 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை வந்தது.

உம்மன்சாண்டி கார் மீது கல்வீசிய கம்யூனிஸ்டு நிர்வாகி கைது

Posted: 25 Feb 2015 08:24 PM PST

கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி கடந்த ஜனவரி மாதம் 26–ந்தேதி திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கட்சியின் நிர்வாகியான அகில் (வயது 23) என்பவர் உம்மன்சாண்டி கார் மீது கற்களை

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு ஆவணங்கள் எங்கே?: கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி மீண்டும் சரமாரி கேள்வி

Posted: 25 Feb 2015 07:36 PM PST

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர்கள் ஜெயலலிதா உள்பட 4 பேர்கள் மற்றும் நிறுவனங்களின் வக்கீல்களின் இறுதி வாதம்

அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்

Posted: 25 Feb 2015 06:01 PM PST

உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி டெல்லியில், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட மாநில தலைவர்களுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பு பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட

திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை: மத்திய உள்துறை இணைமந்திரி தகவல்

Posted: 25 Feb 2015 05:10 PM PST

திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பொதுவான இழப்பீட்டுத் தொகையை உருவாக்குவதற்காக மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என்று மத்திய உள்துறை இணைமந்திரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்: தேவே கவுடா அறிவிப்பு

Posted: 25 Feb 2015 04:55 PM PST

இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று 82 வயதான முன்னாள் பிரதமர் தேவே கவுடா அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், 'அரசியலில் ஏற்றமும் வரும், இறக்கமும் வரும்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நிதிஷ் குமார் 11-ந் தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

Posted: 25 Feb 2015 02:42 PM PST

பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமார், 11-ந் தேதி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறார். அவரது தலைமையில் நேற்று கூடிய மந்திரிசபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. அன்றுதான், கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு மக்களை திசை திருப்ப பார்க்கிறது: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

Posted: 25 Feb 2015 01:29 PM PST

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில், மத்திய அரசு மக்களை திசை திருப்ப பார்க்கிறது என்று அன்னா ஹசாரே குற்றம் சாட்டினார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தினார்.

அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கிடையாது- பிரதமர் மோடி சூசகம்

Posted: 25 Feb 2015 12:46 PM PST

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கிடையாது என மூத்த மந்திரிகளிடம் பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நில சீர்திருத்தங்களும், நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள தடைகளை அகற்றுவதும் அவசியம் என

மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: இந்தியாவின் எந்த மூலையிலும் நெட்வெர்க் சேவையை இனி மாற்றிக்கொள்ளலாம்

Posted: 25 Feb 2015 11:24 AM PST

உலகளவில் மொபைல் போன் பயன்படுத்துவதில் இந்தியர்கள் தான் அதிகம் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பேர் மொபைல் போனை பயன்படுத்தினாலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™