மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவிலில் தர்ம தரிசன பக்தர்களுக்கு கூடுதலாக 2 லட்டு
- எந்த பட்டனை அழுத்தினாலும் ஓட்டு பா.ஜ.க.வுக்கு விழுகிறது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- விமானத்தில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர்
- இசை நிகழ்ச்சிக்கு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனம்: வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கும் மோகன்லால்
- மந்திரி மாணி ராஜினாமா செய்யக்கோரி கம்யூனிஸ்டுகள் மறியல்
- காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பால் வசந்தகுமார் பதவி ஏற்பு
- ப.சிதம்பரத்தை விமர்சித்தாரா?: இளங்கோவன் கூறியது பற்றி காங். மேலிட நிர்வாகி கருத்து
- பெங்களூருவில் துணி குடோனில் தீ விபத்து
- தீர்த்தஹள்ளி தாலுகாவில் 21 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: அதிகாரி தகவல்
- வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்
- தேர்தல் விளம்பர விவகாரம்: தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்
- டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல்
- காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது
- ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கடும் கண்டனம்
- டெல்லியில் தமிழக காங்.பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் இளங்கோவன் சந்திப்பு
- டெல்லியில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் கிரண்பேடி அலுவலகம் மீது தாக்குதல்
- தெலுங்கானாவில் ஒரே மாதத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 31 பேர் பலி
- இந்தியாவிலேயே அதிக வயதானதாக கருதப்படும் ஆண் புலி இன்று உயிரிழந்தது
- சத்தீஸ்கரில் நக்சலைட்கள் தாக்குதலில் 2 போலீசார் பலி: 6 பேர் படுகாயம்
- ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும்படி கூறிய கெஜ்ரிவால் மீதான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
| திருப்பதி கோவிலில் தர்ம தரிசன பக்தர்களுக்கு கூடுதலாக 2 லட்டு Posted: 02 Feb 2015 11:02 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தர்ம தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கூடுதலாக ரூ.25 விலையில் 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. |
| எந்த பட்டனை அழுத்தினாலும் ஓட்டு பா.ஜ.க.வுக்கு விழுகிறது: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted: 02 Feb 2015 09:54 PM PST டெல்லி சட்டசபைக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. நாளை மறுநாள் பிற்பகலில் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் மின்னணு எந்திரங்களை அந்தந்த பகுதிக்கு எடுத்துச் செல்லும் பணி தொடங்கியுள்ளது. 6–ந்தேதி |
| விமானத்தில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர் Posted: 02 Feb 2015 09:21 PM PST டெல்லியிலிருந்து புவனேஸ்வர் செல்லும் தனியார் விமானம் ஒன்றில் 60 வயதான தொழிலதிபர் 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், புவனேஸ்வர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 27 ஆம் தேதி தனியார் விமானத்தில் பயணம் செய்த தனது இருக்கைக்கு பின்னால் |
| இசை நிகழ்ச்சிக்கு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனம்: வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கும் மோகன்லால் Posted: 02 Feb 2015 09:17 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் 'லலிசம்' என்ற இசைக்குழுவும் பங்கேற்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. |
| மந்திரி மாணி ராஜினாமா செய்யக்கோரி கம்யூனிஸ்டுகள் மறியல் Posted: 02 Feb 2015 09:07 PM PST கேரளாவில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக மதுபார்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் மூடப்பட்ட மதுபார்களை திறக்க மதுபார் உரிமையாளர்களிடம் கேரள மந்திரி மாணி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. |
| காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பால் வசந்தகுமார் பதவி ஏற்பு Posted: 02 Feb 2015 07:45 PM PST சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த 60 வயது பால் வசந்தகுமார் அண்மையில் காஷ்மீர் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் காஷ்மீர் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். |
| ப.சிதம்பரத்தை விமர்சித்தாரா?: இளங்கோவன் கூறியது பற்றி காங். மேலிட நிர்வாகி கருத்து Posted: 02 Feb 2015 07:19 PM PST தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லிக்கு சென்றுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை விமர்சித்ததால்தான், காங்கிரஸ் மேலிடத்தின் அவசர அழைப்பின்பேரில், அவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. |
| பெங்களூருவில் துணி குடோனில் தீ விபத்து Posted: 02 Feb 2015 07:18 PM PST பெங்களூரு கமர்சியல் தெரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரபிள்ளை தெருவில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோனில் ஆயத்த ஆடை துணிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், குடோனில் இருந்த துணிகளில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ |
| தீர்த்தஹள்ளி தாலுகாவில் 21 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: அதிகாரி தகவல் Posted: 02 Feb 2015 06:59 PM PST தீர்த்தஹள்ளி தாலுகாவில் 21 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி நாகராஜ் கூறினார். சிவமொக்கா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி நாகராஜ் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் |
| வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் Posted: 02 Feb 2015 06:32 PM PST ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, 'நெட் பேங்கிங்' வசதியையோ, 'கிரெடிட் கார்டு' வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு |
| தேர்தல் விளம்பர விவகாரம்: தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார் Posted: 02 Feb 2015 04:06 PM PST டெல்லி சட்டசபைக்கு 7-ந் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், 'நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் உங்கள் இடையூறு உண்டாக்கும் |
| டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் Posted: 02 Feb 2015 03:35 PM PST டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அல்போன்சா தேவாலயத்தில் நேற்று அதிகாலை புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் சில முக்கியமான பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தேவாலயத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது Posted: 02 Feb 2015 01:22 PM PST வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்வது போல் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. |
| ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கடும் கண்டனம் Posted: 02 Feb 2015 12:19 PM PST ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். |
| டெல்லியில் தமிழக காங்.பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் இளங்கோவன் சந்திப்பு Posted: 02 Feb 2015 11:07 AM PST தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் நேற்று தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினார். டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக |
| டெல்லியில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் கிரண்பேடி அலுவலகம் மீது தாக்குதல் Posted: 02 Feb 2015 10:12 AM PST டெல்லி மாநில சட்டசபைக்கு வருகிற 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் கிரண்பேடிக்கு அதே பகுதியில் தேர்தல் அலுவலகம் உள்ளது. |
| தெலுங்கானாவில் ஒரே மாதத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 31 பேர் பலி Posted: 02 Feb 2015 08:11 AM PST தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 31 பேர் பலியானதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை 1,854 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட |
| இந்தியாவிலேயே அதிக வயதானதாக கருதப்படும் ஆண் புலி இன்று உயிரிழந்தது Posted: 02 Feb 2015 07:58 AM PST அழிவின் விளிம்பு நிலையில் உள்ள அரிய உயிரினமான புலிகளை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்திவரும் இந்தியாவில் வாழும் புலியினங்களிலேயே மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 'ஷாமு' என்ற வங்காள |
| சத்தீஸ்கரில் நக்சலைட்கள் தாக்குதலில் 2 போலீசார் பலி: 6 பேர் படுகாயம் Posted: 02 Feb 2015 05:50 AM PST வன்முறை தாக்குதல்களுக்கு பிரபலமான சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 போலீசார் பலியாகினர். இங்குள்ள கன்கெர் மாவட்டத்தில் இன்று நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கருதப்படுகிறது. |
| ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும்படி கூறிய கெஜ்ரிவால் மீதான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது Posted: 02 Feb 2015 05:02 AM PST டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த பேச்சு இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசார கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து அருண் குமார் என்பவர் கெஜ்ரிவால் மீது டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |