Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted: 03 Feb 2015 11:21 PM PST

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராகி வாதாட தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பொதுச் செயலாளர் அன்பழகன் மனு செய்தார். கர்நாடகா ஐகோர்ட்டில் அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அந்த மனு வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில்

டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடலாம்: ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்

Posted: 03 Feb 2015 11:19 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அவர் டெல்லி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் கமிஷன் இன்று ஐகோர்ட்டில்

மாவோயிஸ்டு தலைவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.11½ கோடி பரிசு: போலீஸ் பிரசாரம்– சுவரொட்டி

Posted: 03 Feb 2015 10:47 PM PST

மாவோயிஸ்டு தலைவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளில் போலீசார் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதுபற்றிய பரபரப்பு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் காட்டுப்பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளன. கரீம் நகர் மாவட்டம் பீர்பூர் பகுதியை சேர்ந்த லஷ்மன்ராவ் அவியாஸ்

காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு

Posted: 03 Feb 2015 10:37 PM PST

பிப்ரவரி 14–ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரமான இது சமீபகாலமாக இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அன்றைய தினம் காதலர்கள் கடற்கரை, பூங்காக்கள், மால்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டாடுவார்கள்.

சித்தூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியர் பலி

Posted: 03 Feb 2015 10:37 PM PST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுவாமிராஜு (வயது 45). இவர், ராமசமுத்திரம் மண்டலம் மாலேநத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து உடல்நலம் சரியில்லாமல்

பத்மநாபசாமி கோவில் கணக்குகளை தணிக்கை செய்யாதது ஏன்?: அறக்கட்டளைக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Posted: 03 Feb 2015 10:29 PM PST

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் கோடிக்கணக்கில் தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் இருப்பதாகவும், அதனை கோவிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தினர் அபகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

Posted: 03 Feb 2015 10:25 PM PST

ஆந்திராவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆந்திராவில் இதுவரை 79 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 37 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்திய கோடீசுவரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

Posted: 03 Feb 2015 09:49 PM PST

இந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல்: ஓட்டுப்பதிவு நாளன்று கருத்து கணிப்பு வெளியிட தடை- தேர்தல் கமிஷன்

Posted: 03 Feb 2015 09:43 PM PST

டெல்லி சட்டசபை தேர்தல் வருகிற 7–ந் தேதி நடக்கிறது. நாளை மாலை 5 மணியுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி முதல்– மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலும், பா.ஜனதா முதல்–மந்திரி வேட்பாளராக கிரண்பேடியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் முதல்– மந்திரி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ஆம் ஆத்மி வேட்பாளரின் உறவினர் வீட்டில் ரூ.8,352 மதுபாட்டில்கள் பதுக்கல்: தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Posted: 03 Feb 2015 09:36 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் உத்தம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக நரேஷ் பல்யான் போட்டியிடுகிறார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒம் விகார் பகுதியில் உள்ள நரேஷ் பல்யானின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 8,352 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவை

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது மோடி யாழ்ப்பாணம் செல்கிறார்: தமிழர் பகுதிகளை பார்வையிட திட்டம்

Posted: 03 Feb 2015 09:06 PM PST

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணம் வடக்கு மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. விடுதலைப் புலிகள் ஆதிக்கம் இருந்த போது யாழ்ப்பாணம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது வடக்கு மாகாண முதல்–அமைச்சராக விக்னேஸ்வரன் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா

ஊழலில் சிக்கிய நிதி மந்திரி மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம்: அச்சுதானந்தன் ஆவேசம்

Posted: 03 Feb 2015 09:06 PM PST

கேரளாவில் ஓட்டல் பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக கேரள நிதி மந்திரி மாணி மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரள நிதி மந்திரி கே.எம். மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி,

கோழிக்கோடு விமானத்தில் 3 கிலோ தங்க கட்டிகளுடன் வந்த மர்ம நபர் யார்? அதிகாரிகள் தீவிர விசாரணை

Posted: 03 Feb 2015 08:59 PM PST

ஜெட்டாவில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 11–ந்தேதி பயணி ஒருவர் வந்தார். அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பையை அவர்கள் பரிசோதித்தபோது, அந்த பயணி

நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் நஷ்டம்: 12 நிமிடங்களுக்கு ஒரு மோனோ ரெயிலை இயக்க திட்டம்

Posted: 03 Feb 2015 08:28 PM PST

இந்தியாவிலேயே மும்பையில் முதல் முறையாக கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மோனோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மோனோ ரெயில் சேவையால் மும்பை பெருநகர வளர்ச்சி கழகத்திற்கு தினந்தோறும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்வது குற்றமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

Posted: 03 Feb 2015 08:23 PM PST

பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்வது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் அரசு கருத்து கூறியுள்ளது. பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் கருத்துகள், பேச்சு சுதந்திரம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை மட்டும் கொண்டிருந்தால், அது தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வின் படி

காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 03 Feb 2015 08:15 PM PST

காஷ்மீர் மாநிலத்தில் 3-வது நாளாக கடும் பனிப்பொழிவு நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு பனி பெய்கிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட்டு உறுதி செய்தது

Posted: 03 Feb 2015 07:50 PM PST

மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது. மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 51). இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி வாக்குவாதம்

கார்கலா அருகே ரப்பர் தோட்டத்தில் தீ விபத்து

Posted: 03 Feb 2015 07:35 PM PST

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராபர்ட், சித்தரஞ்சன். இவர்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா சிர்த்தாடி பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்

பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி

Posted: 03 Feb 2015 07:12 PM PST

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

பவானிசிங்கை நீக்க கோரும் மனு வேறு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றம்

Posted: 03 Feb 2015 07:01 PM PST

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக ஆஜராகி வரும் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் ரிட் அப்பீல் மனு தாக்கல்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™