Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லி முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்

Posted: 13 Feb 2015 11:15 PM PST

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 67 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தடவை வெறும் 3 இடங்களே கிடைத்தன. எதிர்க்கட்சியே இல்லை என்ற அளவுக்கு டெல்லி மக்கள் ஆம்ஆத்மிக்கு ஏகோ பித்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆம்ஆத்மி

இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது: பிரதமர் மோடி பேச்சு

Posted: 13 Feb 2015 11:04 PM PST

பிரதமர் நரேந்திரமோடி இன்று மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், உள்நாட்டு உற்பத்தி வளர்சசி 7.4 சதவீதமாக வேகமாக உயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி

Posted: 13 Feb 2015 10:45 PM PST

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பங்களாவிற்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டிய பகுதி இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 29-ம் தேதி பா.ஜ.க. எம்.பி பூனம் மகாஜன் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில், நடிகரின் பெயரை குறிப்பிடாமல், ஒரு

பச்சை வண்ணத்தில் 1 ரூபாய் நோட்டு மீண்டும் வருகிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 13 Feb 2015 10:28 PM PST

1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்ததால் மத்திய அரசு 1994–ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை நிறுத்தியது. அதை தொடர்ந்து 1995 பிப்ரவரியில் 2 ரூபாய் நோட்டும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

நாகார்ஜுனா அணை தண்ணீரை அத்துமீறி திறக்க முயற்சி: ஆந்திரா–தெலுங்கானா போலீசார் மோதல்

Posted: 13 Feb 2015 10:10 PM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது நதிநீரை இருமாநில அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இரு மாநிலத்திலும் பாயும் கிருஷ்ணா நதியில் நாகார்ஜுனா அணை உள்ளது. இந்த அணையின் மதகின் ஒருபாதி ஆந்திர மாநிலம் குண்டூரிலும்

ஓசூர் அருகே ரெயில் விபத்தில் 9 பேர் பலி: இன்று மாலைக்குள் போக்குவரத்து சீராகும்

Posted: 13 Feb 2015 09:58 PM PST

பெங்களுர் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு நேற்று காலை 6.15 மணிக்கு புறப்பட்ட பெங்களூரு– எர்ணாகுளம் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7–35 மணிக்கு விபத்துக்குள்ளானது.

திருப்பதி தொகுதி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போடுவதை பார்த்து கதறி அழுத காங். வேட்பாளர்

Posted: 13 Feb 2015 09:52 PM PST

திருப்பதி தொகுதி எம்.எல். ஏ.வான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த வெங்கட் ரமணா மரணம் அடைந்ததையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு தெலுங்கு தேச வேட்பாளராக வெங்கட் ரமணா மனைவி சுகுணம்மாள் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீதேவி போட்டியிட்டார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போட்டியிடவில்லை. திருப்பதி தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 49.92

பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

Posted: 13 Feb 2015 09:41 PM PST

பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் வைத்து 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் பெகலா பகுதியில் விளையாட சென்ற தன் குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதட்டமடைந்து குழந்தையை தேடிய தாய் தகவல் கேட்பதற்காக அப்பகுதியிலுள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தின்

பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கு: கேரள மின்வாரிய பெண் ஊழியர் உட்பட 3 பெண்கள் கைது

Posted: 13 Feb 2015 09:20 PM PST

ஆலப்புழா பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வேணுகோபால். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றபோது, மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆலப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை கொன்றவர்கள் யார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்று

ரெயில் விபத்தில் இறந்த 9 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Posted: 13 Feb 2015 09:06 PM PST

ஓசூர் அருகே ஆனேக்கல் பகுதியில் நடந்த இண்டர் சிட்டி ரெயில் விபத்தில் இறந்த 9 பேர் பெயர் விவரம் வருமாறு:– 1) அமான் (வயது 9). பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன். 2) இட்டிரா அந்தோணி (57). பெங்களூரு.

திருவனந்தபுரத்தில் 266 கிலோ தங்கம் மாயம்: பத்மநாபசுவாமி கோவிலில் 82 முறை நடந்த நகை திருட்டு

Posted: 13 Feb 2015 08:40 PM PST

கேரளாவில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. பல நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் பல ஆயிரம் கோடி தங்க, வைர, வைடூரிய நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை மன்னர் குடும்பத்தினர்

மூணாறு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்று நகை–பணம் கொள்ளை

Posted: 13 Feb 2015 08:00 PM PST

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள அடிமாலியை சேர்ந்தவர் குஞ்சுமுகமது (வயது69). இவர் அங்கு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி நடத்தி வந்தார். அதன் அருகே உள்ள வீட்டில் மனைவி ஆயிஷா (57), மாமியார் நாச்சி (80) ஆகியோருடன் வசித்து வந்தார்.

முதல்-மந்திரி அலுவலக சுற்றறிக்கையில் போலி கையெழுத்து: ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

Posted: 13 Feb 2015 07:31 PM PST

பீகார் மாநில சட்டசபையில் வருகிற 20-ந்தேதி தனது பலத்தை நிரூபிக்கும்படி முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சிக்கு, கவர்னர் கேசரிநாத் திரிபாதி உத்தரவிட்டு உள்ளனர். இந்த நிலையில் 20-ந்தேதி கவர்னர்

டெல்லி முழுவதும் இலவச வை-பை அமைக்கும் திட்டம்: ஆம் ஆத்மி தீவிரம்

Posted: 13 Feb 2015 07:20 PM PST

டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச 'வை-பை' வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதற்கான பேச்சுவார்த்தையை கட்சி

தீஸ்தா செதல்வாட் தம்பதியரை 19-ந்தேதி வரை கைது செய்ய தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 13 Feb 2015 07:03 PM PST

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத் நகரின் குல்பர்க் சொசைட்டிக்கு கலவரக்காரர்கள் வைத்த தீயில் 69 பேர் பலியாயினர். இந்த இடத்தை அருங்காட்சியகமாக அமைக்க சமூக சேவகி தீஸ்தா செதல்வாட்டும், அவருடைய கணவர் ஜாவேத் ஆனந்தும் ரூ.1½ கோடி நிதி திரட்டி அதை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான

தேர்தல் நெருக்கத்தில் கிரண் பேடியை கட்சியில் சேர்த்ததே படுதோல்விக்கு காரணம்: பாஜக கருத்து

Posted: 13 Feb 2015 04:14 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு 3 வாரங்களே இருக்கும்போது கிரண் பேடியை கட்சியில் சேர்த்ததுதான் பா.ஜனதாவின் படுதோல்விக்கு காரணம் என்று டெல்லி பா.ஜனதா நடத்திய ஆய்வு கூட்டத்தில் கண்டறியப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்நிலையில், படுதோல்விக்கான காரணங்களை ஆராய டெல்லி பா.ஜனதா சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

4 நாட்கள் பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா நாளை இந்தியா வருகிறார்

Posted: 13 Feb 2015 02:35 PM PST

இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். அவர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, 4 நாட்கள் பயணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லிக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். 16-ந்தேதி, சிறிசேனா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் 2-வது நாளாக விசாரணை

Posted: 13 Feb 2015 01:54 PM PST

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசிதரூரிடம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் கடந்த மாதம் 19-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Posted: 13 Feb 2015 01:09 PM PST

ஓசூர் அருகே நேற்று நடந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்த அனுதாப செய்தியில், "பெங்களூர் அருகே அனேக்கல் ரோடு பகுதியில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களுக்காக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு விரைவில் தடை: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 13 Feb 2015 12:43 PM PST

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அந்த இயக்கத்துக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் விரைவில் முறைப்படி தடை விதிக்கப்பட உள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இதற்கான தடை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™