Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் முதல்–மந்திரியாக முப்தி முகமது சயீது பதவி ஏற்றார்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

Posted: 28 Feb 2015 10:40 PM PST

காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்க வில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 28, பா.ஜ.க–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12, மற்ற கட்சிகள் சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்பதால் கடும் இழுபறி ஏற்பட்டது.

திருப்பதி கோவிலில் 5 நாள் தெப்ப உற்சவம்: இன்று தொடங்குகிறது

Posted: 28 Feb 2015 09:49 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தெப்ப உற்சவம் இன்று மாலை தொடங்குகிறது. 5–ந்தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விழா நடைபெறுகிறது. இதையொட்டி தெப்ப குளமும், தெப்பமும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தினமும் மாலை 7 மணி முதல் 8 மணிவரை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இன்று மாலை மலையப்பசாமி ஸ்ரீராமர் அவதாரத்தில் சீதை அனுமருடன்

பன்றிக் காய்ச்சலுக்கு 1041 பேர் பலி : 19 ஆயிரம் பேர் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

Posted: 28 Feb 2015 08:30 PM PST

பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 36 பேர் பலியானதையடுத்து நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1041 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,046 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அலுவலகங்களில் ஜி மெயில் போன்ற தனியார் இ-மெயில்களை பயன்படுத்த தடை

Posted: 28 Feb 2015 08:10 PM PST

மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சேவை, மத்திய கலால் வரி உயர்வால் விலைவாசி உயரும் அபாயம்: முலாயம் சிங் கண்டனம்

Posted: 28 Feb 2015 07:15 PM PST

மத்திய பட்ஜெட்டுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். இந்த பட்ஜெட்டில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது இம்மாநில மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது' என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டில் யோகாவுக்கு சிறப்பு அந்தஸ்து

Posted: 28 Feb 2015 07:07 PM PST

பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச்சபையில் கடந்த ஆண்டு உரை ஆற்றியபோது, யோகாவின் சிறப்பை எடுத்துக்கூறி, 'சர்வ தேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். அதை ஐ.நா. சபை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

தேசிய அறிவியல் தினம்: இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Posted: 28 Feb 2015 06:48 PM PST

தேசிய அறிவியல் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நமது

டெல்லியில் போலீஸ் கமிஷனருடன் கெஜ்ரிவால் சந்திப்பு

Posted: 28 Feb 2015 02:22 PM PST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுடன் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் கமிஷனர் பஸ்சியுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர், சட்டம்-ஒழுங்கை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது டெல்லியில்

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 28 Feb 2015 01:09 PM PST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது தொடரப்பட்ட வழக்கில், விரிவான விசாரணை நடத்துமாறு திருச்சி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, இந்த வழக்கில் இருந்து அவரையும் சம்பந்தப்பட்ட

பெங்களூரில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஆயத்த ஆடைகள் தயாரித்து விற்ற 2 பேர் கைது

Posted: 28 Feb 2015 12:38 PM PST

பெங்களூரில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஆயத்த ஆடைகள் தயாரித்து விற்கப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், பொம்மனஹள்ளி அருகே முனிஸ்வரா லே-அவுட் வீராட்நகர் 8-வது கிராசில் உள்ள ஒரு ஆயத்த ஆடை

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுடன் பேசி முடிவு: அருண்ஜெட்லி பேட்டி

Posted: 28 Feb 2015 11:27 AM PST

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். வசதி படைத்தவர்கள் மானியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏழைகள் மட்டுமே மானியம் பெறவேண்டும். சேது சமுத்திர

கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே உயரமான 240 அடி கொடி மரத்தில் அரியானாவில் 3-ம்தேதி தேசியக் கொடியேற்றம்

Posted: 28 Feb 2015 08:07 AM PST

புதிய கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 240 அடி உயரமுள்ள கொடி மரத்தில் வரும் 3-ம் தேதி இந்திய தேசியக் கொடியை பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள டவுன் பார்க் பகுதியில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிரஷன்

பீகார் முன்னாள் முதல் மந்திரி மான்ஜி புதிய கட்சி தொடங்கினார்

Posted: 28 Feb 2015 07:56 AM PST

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும், பீகார் மாநில முதல் மந்திரி பதவியில் இருந்தும் வெளியேற்றப்பட்ட ஜித்தன் ராம் மான்ஜி 'ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மகாதலித் மற்றும் பிற்படுத்த வகுப்பினரை இந்த புதிய கட்சியில் இணைத்துக் கொண்டு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மான்ஜி மீண்டும் ஆட்சியை பிடித்து

முதலாளிகளை மகிழ்விக்கும் பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எந்த நிவாரணமும் இல்லை: ப.சிதம்பரம் கடும் தாக்கு

Posted: 28 Feb 2015 06:21 AM PST

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கான எந்த நிவாரணமும் இல்லை என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்த பட்ஜெட்டின் மூலம் யார் மகிழ்ச்சியடைவார்கள்? என்றால் பெரும் முதலாளிகளும் வருமானவரி கட்டுபவர்களும்தான் என நான் சந்தேகப்படுகிறேன். வருமான வரி செலுத்துபவர்களுக்கு

பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு நிதிஷ் குமார் நன்றி

Posted: 28 Feb 2015 05:55 AM PST

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நிதீஷ்குமார் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். பாட்னாவில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார் பட்ஜெட் குறித்து கூறுகையில், "பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு கொடுத்தது மற்றும் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் திட்டத்தை அறிவித்ததற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எனது நன்றியை

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பச்சோரியின் ராஜினாமாவை பிரதமர் ஏற்றார்

Posted: 28 Feb 2015 05:46 AM PST

பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி தனது பதவியை கடந்த 24-ம்தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பிரதமரின் தலைமையிலான பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏற்றுக் கொண்டுள்ளார். பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர பச்சோரி,

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது

Posted: 28 Feb 2015 05:29 AM PST

சமீப காலமாக தொடர்ந்து குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் நமது நாட்டின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கம்

Posted: 28 Feb 2015 04:05 AM PST

ஒரு சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்கிய முகுல் ராய், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்ப்டடுள்ளார். மாநிலங்களவை உறுப்பினரான முகுல் ராயிடம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் மீது முறைகேடு வழக்கு

Posted: 28 Feb 2015 03:44 AM PST

மத்திய பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை திக்விஜய் சிங் முதல்வராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தலைமைச்

கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் வருகிறது: நேரடி பண பரிமாற்றம் கட்டுப்படுத்தப்படும்

Posted: 28 Feb 2015 02:58 AM PST

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க பண பரிவர்த்தனையில் புதிய நடைமுறை வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™