மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரூ.2 கோடி தேர்தல் நிதி விவகாரம்: ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
- ஆம் ஆத்மி சுனாமியால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்
- டெல்லியில் வெற்றி பெற்ற பா.ஜனதா புதுமுகங்கள்
- 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி
- அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு
- சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை: டெல்லி காவல் ஆணையர் பாஸி தகவல்
- பாரதீய ஜனதாவுக்கு மக்கள் இன்னும் பாடம் புகட்டுவார்கள்: கெஜ்ரிவால் ஆவேச பேட்டி
- ஆந்திராவை பிரித்தது நாங்கள் செய்த பெரும் தவறு: காங்கிரஸ் தலைவர் பேச்சு
- அரசியல் வேறுபாடு பார்க்காமல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்: கெஜ்ரிவாலிடம் வெங்கையா நாயுடு உறுதி
- தமிழகத்தை போல ஆந்திராவில் மதுக்கடைகளை அரசே நடத்த முடிவு
- போலீசாருக்கு வாரவிடுமுறை அளிக்க வேண்டும்: டி.ஜி.பி.யிடம் மனு
- திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்
- டெல்லி தேர்தலில் கட்சி மாறி போட்டியிட்டு வெற்றி கண்ட - மண்ணை கவ்விய வேட்பாளர்கள்
- பத்மநாபசுவாமி கோவிலில் அதிநவீன பாதுகாப்பு கருவிகள்: உம்மன்சாண்டி இன்று தொடங்கி வைக்கிறார்
- அரசுக்கு எதிரான வன்முறை போராட்டம் தொடரும்: மாவோயிஸ்டுகள் அறிவிப்பு
- பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார் டெல்லியின் தல கெஜ்ரிவால்: பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார்
- தேசிய கட்சி அந்தஸ்தை பகுஜன் சமாஜ் இழக்கிறது?
- தேர்தல் வெற்றியால் இறுமாப்பு கூடாது: கட்சியினருக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
- ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தலைமைத்தேர்தல் ஆணையரிடம் கனிமொழி புகார்
- பவானிசிங்கை நீக்கக்கோரும் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் தொடர்ந்து விவாதம்
| ரூ.2 கோடி தேர்தல் நிதி விவகாரம்: ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் Posted: 10 Feb 2015 11:44 PM PST ஆம் ஆத்மி கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றது. இதில் முறையான அங்கீகாரம் இல்லாத 4 நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.2 கோடி தேர்தல் நிதியாகப் பெற்றது. இதுகுறித்து அந்த கட்சி நன்கொடை பெற்ற விவரத்தில் வெளியிட வில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த |
| ஆம் ஆத்மி சுனாமியால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் Posted: 10 Feb 2015 11:38 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஏற்படுத்திய சுனாமி பேரலை வெற்றி நாடெங்கும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:– * பாரதீய ஜனதாவை இன்னும் சில ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் தோற்கடிக்க முடியாது என்று ஒரு மாயை இருந்தது. அந்த மாயை நேற்று உடைக்கப்பட்டு விட்டது. பா.ஜ.க.வை யாராலும், எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை மற்ற கட்சிகளிடம் |
| டெல்லியில் வெற்றி பெற்ற பா.ஜனதா புதுமுகங்கள் Posted: 10 Feb 2015 11:36 PM PST 2013–ம் ஆண்டு டிசம்பரில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 31 இடங்கள் கிடைத்தன. இந்த முறை நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனாவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. டெல்லியில் உள்ள ரோகிணி, விஸ்வாஸ் நகர், முஸ்தபாபாத் ஆகிய 3 தொகுதிகளில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. |
| 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி Posted: 10 Feb 2015 11:04 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது மிகவும் பரிதாபமே. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். |
| அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு Posted: 10 Feb 2015 10:49 PM PST அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. |
| சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை: டெல்லி காவல் ஆணையர் பாஸி தகவல் Posted: 10 Feb 2015 10:48 PM PST முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர் அது |
| பாரதீய ஜனதாவுக்கு மக்கள் இன்னும் பாடம் புகட்டுவார்கள்: கெஜ்ரிவால் ஆவேச பேட்டி Posted: 10 Feb 2015 10:10 PM PST டெல்லியில் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:– கேள்வி:– உங்கள் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, கிரண்பேடி ஆகியோரை அழைப்பீர்களா? பதில்:– அவர்களை அழைப்பேன். பிரதமரை பொருத்தவரை முதல்– மந்திரிகள் பதவியேற்பு விழாவுக்கு செல்வதில்லை. ஆனாலும் அவரை அழைப்பேன். |
| ஆந்திராவை பிரித்தது நாங்கள் செய்த பெரும் தவறு: காங்கிரஸ் தலைவர் பேச்சு Posted: 10 Feb 2015 09:37 PM PST திருப்பதி தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற 13–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்ராக மரணம் அடைந்த எம்.எல்.ஏ. வெங்கட்ரமணாவின் மனைவி சுகுணம்மா நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீதேவி போட்டியிடுகிறார். |
| Posted: 10 Feb 2015 09:30 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி சுனாமியாக சுழன்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம்ஆத்மி கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே வியந்து பார்க்கின்றன. |
| தமிழகத்தை போல ஆந்திராவில் மதுக்கடைகளை அரசே நடத்த முடிவு Posted: 10 Feb 2015 09:24 PM PST ஆந்திர மாநில நிதி மந்திரி எமைல ராம கிருஷ்ணடு நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவதால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆந்திராவில் மதுக்கடைகளுக்கு லைசென்சு வழங்கப்பட்டு தனியாரே நடத்தி வருகிறது. |
| போலீசாருக்கு வாரவிடுமுறை அளிக்க வேண்டும்: டி.ஜி.பி.யிடம் மனு Posted: 10 Feb 2015 09:16 PM PST ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், ''போலீசாரின் ஆரோக்கியம் மீது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. போலீசாருக்கு ஆரோக்கியம் என்பது மிக முக்கியம். எனவே அனைத்து போலீசாருக்கும் ஹெல்த் கார்டு வழங்கப்படும். அதன் |
| திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம் Posted: 10 Feb 2015 08:59 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் ரூ. 2400 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது. இதனால் தேவஸ்தானம் குட்டி அரசு போல செயல்பட்டு வருகிறது. திருப்பதி கோவிலில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு |
| டெல்லி தேர்தலில் கட்சி மாறி போட்டியிட்டு வெற்றி கண்ட - மண்ணை கவ்விய வேட்பாளர்கள் Posted: 10 Feb 2015 08:57 PM PST டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சி மாறி போட்டியிட்ட சில வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், பல வேட்பாளர்கள் மண்ணை கவ்வியுள்ளனர். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அல்கா லம்பா சாந்தினி |
| பத்மநாபசுவாமி கோவிலில் அதிநவீன பாதுகாப்பு கருவிகள்: உம்மன்சாண்டி இன்று தொடங்கி வைக்கிறார் Posted: 10 Feb 2015 08:46 PM PST திருவனந்தபுரத்தில் பிரசித்திப்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினசரி ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலின் ரகசிய நிலவறைகளில் இருந்து தங்கம், வைரம், வைடூரியம் உள்பட விலை மதிக்க முடியாத பொக்கிஷ |
| அரசுக்கு எதிரான வன்முறை போராட்டம் தொடரும்: மாவோயிஸ்டுகள் அறிவிப்பு Posted: 10 Feb 2015 08:29 PM PST கேரள வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகள் அவ்வப்போது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அட்டப்பாடியில் கேரள அரசின் வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் அங்கு நிறுத்தியிருந்த ஜீப்புக்கு தீ வைத்தனர். |
| பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார் டெல்லியின் தல கெஜ்ரிவால்: பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார் Posted: 10 Feb 2015 07:58 PM PST டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அக்கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| தேசிய கட்சி அந்தஸ்தை பகுஜன் சமாஜ் இழக்கிறது? Posted: 10 Feb 2015 07:28 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதேபோல் அண்மையில் நடந்த மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி 1.4 சதவீத ஓட்டுகளையே பெற்று இருக்கிறது. |
| தேர்தல் வெற்றியால் இறுமாப்பு கூடாது: கட்சியினருக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் Posted: 10 Feb 2015 06:53 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னர் அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சித்தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீங்கள் இந்த அதிசயத்தை நிகழ்த்தி காட்டி இருக்கிறீர்கள். நீங்கள் |
| ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தலைமைத்தேர்தல் ஆணையரிடம் கனிமொழி புகார் Posted: 10 Feb 2015 06:41 PM PST ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதால் அவரை உடனடியாக மாற்றக்கோரி தி.மு.க. எம்.பி. கனிமொழி டெல்லியில் தலைமைத்தேர்தல் ஆணையர் பிரம்மாவிடம் புகார் மனு அளித்தார். தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் தலைமைத்தேர்தல் |
| பவானிசிங்கை நீக்கக்கோரும் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் தொடர்ந்து விவாதம் Posted: 10 Feb 2015 06:26 PM PST ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீல்பவானிசிங்கை நீக்கக்கோரும் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் நேற்றும் விவாதம் நடைபெற்றது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |