4TamilMedia செய்திகள் | |
- திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை!
- சிறுத்தை சிவா கண்ணீர்?
- சென்னையில் தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை
- அந்த படத்துக்கு 35 கோடி செலவா? அடக்கடவுளே...
- ஒடிசாவில் மாநில உணவுப் பாதுகாப்பு மசோதா:நவீன் பட்நாயக்
- பாஜக தோல்விக்கு கிரண்பேடியை காரணம் சொல்லக் கூடாது:அன்னா ஹசாரே
- யோஷித்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற்றம்(?)
- ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மாற்றம்!
- எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்: சஜித் பிரேமதாஸ
- இனப்படுகொலை இடம்பெறவில்லை; வடக்கு மாகாண சபைத் தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு!
- அர்விந்த் கெஜ்ரிவால் நாளை பிரதமரை சந்திக்க உள்ளார்!
- லண்டனில் யுத்தகால பாலியல் துஷ்பிரயோக விழிப்புணர்வு கல்வி நிலையத்தைத் திறந்த ஏஞ்சலினா ஜூலி!
- ஓரினச் சேர்க்கை குற்றத்துக்காக மலேசிய எதிரணித் தலைவர் அன்வாருக்கு மீண்டும் சிறைத் தண்டனை!
- ISIS இன் பிடியில் இருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொலை உறுதியானது!
- சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராவதுக் குறித்த விசாரணை தீர்ப்பு
- ஸ்ரீரங்கம் காவல்துறை துணை ஆணையர் பணியிட மாற்றம்!
- ரணிலும் கொடுத்த வாக்குறுதிகளை மீறி ஏமாற்றுகிறார்: இனப்படுகொலைப் பிரேரணையை சமர்ப்பித்து சி.வி. ...
- ஆம் ஆத்மியின் அபார வெற்றி!
- சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது!:உயர் நீதிமன்றம்
- ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதை நினைத்து டெல்லி காவல்துறை கலக்கம்!
- காணாமல் போன குழந்தைகள் குறித்து அறிய புதிய இணைய தளம்: மகாராஷ்டிர அரசு
- தெலுங்கானாவின் வளர்ச்சிக்கு தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு செய்யும்:சந்திரசேகர ராவ்
- பணம் பட்டுவாடாவுக்கு பணம் கொடுக்கவே முதல்வர் ஸ்ரீரங்கம் வந்தார்: தமிழிசை
- அகமதாபாத் நீதிமன்றத் தீர்ப்பு தவறில்லை:உச்ச நீதிமன்றம்
- விண்வெளியில் உணவுப் பழக்கம் எவ்வாறு?:சில அபூர்வ தகவல்கள்
| Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இறுதி நாட்களில் சுகாதார அமைச்சராக பதவி வகித்தவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் (இன்று புதன்கிழமை) உத்தரவிட்டது. Read more ... |
| Posted: |
| சென்னையில் தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை Posted:
Read more ... |
| அந்த படத்துக்கு 35 கோடி செலவா? அடக்கடவுளே... Posted: |
| ஒடிசாவில் மாநில உணவுப் பாதுகாப்பு மசோதா:நவீன் பட்நாயக் Posted:
Read more ... |
| பாஜக தோல்விக்கு கிரண்பேடியை காரணம் சொல்லக் கூடாது:அன்னா ஹசாரே Posted:
Read more ... |
| யோஷித்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற்றம்(?) Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படையின் லெப்ரினன் தர வீரருமான யோஷித்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். Read more ... |
| ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மாற்றம்! Posted:
Read more ... |
| எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்: சஜித் பிரேமதாஸ Posted:
எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்காவிட்டால், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இராஜினாமாச் செய்யவைத்து அதனூடாக பாராளுமன்றம் வந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். Read more ... |
| இனப்படுகொலை இடம்பெறவில்லை; வடக்கு மாகாண சபைத் தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு! Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவால் நாளை பிரதமரை சந்திக்க உள்ளார்! Posted:
Read more ... |
| லண்டனில் யுத்தகால பாலியல் துஷ்பிரயோக விழிப்புணர்வு கல்வி நிலையத்தைத் திறந்த ஏஞ்சலினா ஜூலி! Posted:
பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐ.நாவின் அகதிகளுக்கான நல்லெண்ண தூதராகவும் அறியப் படும் ஏஞ்சலினா ஜூலி இன்று லண்டனில் பொருளியலுக்கான பள்ளியில் பாலியல் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிலையத்தைத் (rape study center) திறந்து வைத்துள்ளார். Read more ... |
| ஓரினச் சேர்க்கை குற்றத்துக்காக மலேசிய எதிரணித் தலைவர் அன்வாருக்கு மீண்டும் சிறைத் தண்டனை! Posted:
இன்று செவ்வாய்க்கிழமை மலேசியாவின் சுப்ரீம் கோர்ட் அந்நாட்டின் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது முன்னால் அரசியல் உதவியாளர் ஒருவருடன் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்தை உறுதி செய்து அவரது மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது. Read more ... |
| ISIS இன் பிடியில் இருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொலை உறுதியானது! Posted:
சிரியாவில் ISIS போராளிக் குழுவால் கடந்த 1 1/2 வருடங்களாகப் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்த 26 வயதாகும் அமெரிக்காவின் தொண்டு நிறுவன ஊழியரான கைலா ஜீன் முல்லர் என்ற பெண்மணி சமீபத்தில் கொல்லப் பட்டுள்ளார் என்பதை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முல்லரின் குடும்பத்தினரும் உறுதிப் படுத்தியுள்ளனர். Read more ... |
| சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராவதுக் குறித்த விசாரணை தீர்ப்பு Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு தண்டனையை எதிர்த்த மேன் முறையீட்டு மனு வழக்கில், வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுவின் மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. Read more ... |
| ஸ்ரீரங்கம் காவல்துறை துணை ஆணையர் பணியிட மாற்றம்! Posted: |
| ரணிலும் கொடுத்த வாக்குறுதிகளை மீறி ஏமாற்றுகிறார்: இனப்படுகொலைப் பிரேரணையை சமர்ப்பித்து சி.வி. ... Posted:
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் மீள்குடியேற்றதுக்கு உதவுவதாக தேர்தலுக்கு முன்னர் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இப்போது அந்த வாக்குறுதிகளை மீறி இராணுவ முகாம்களை அகற்றுவதில்லை என்று கூறுகின்றார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| Posted:
“நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்குக் கொடுத்துவிட்டனர் டெல்லிவாசிகள். அவர்களுக்கு நான் ஒரு உண்மையான முதலமைச்சராக இருப்பேன்” என்று டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நன்றி கூறி உரையாற்றும் போது தெரிவித்தார். Read more ... |
| சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது!:உயர் நீதிமன்றம் Posted:
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம், அறிவுறுத்தி உள்ளது. Read more ... |
| ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதை நினைத்து டெல்லி காவல்துறை கலக்கம்! Posted:
ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதை நினைத்து டெல்லி காவல்துறை கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| காணாமல் போன குழந்தைகள் குறித்து அறிய புதிய இணைய தளம்: மகாராஷ்டிர அரசு Posted:
மகாராஷ்டிர அரசு, காணாமல் போன குழந்தைகள் குறித்து அறிந்துகொள்ள புதிய இணைய தளத்தைத் துவக்கி உள்ளது. Read more ... |
| தெலுங்கானாவின் வளர்ச்சிக்கு தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு செய்யும்:சந்திரசேகர ராவ் Posted:
தெலுங்கானாவின் வளர்ச்சிக்கு தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு செய்யும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read more ... |
| பணம் பட்டுவாடாவுக்கு பணம் கொடுக்கவே முதல்வர் ஸ்ரீரங்கம் வந்தார்: தமிழிசை Posted:
ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணம் கொடுக்கவே முதல்வர் ஸ்ரீரங்கம் வந்தார் என்று, பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறியுள்ளார். Read more ... |
| அகமதாபாத் நீதிமன்றத் தீர்ப்பு தவறில்லை:உச்ச நீதிமன்றம் Posted:
இரண்டாம் திருமணம் செல்லாது என்கிற அகமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறில்லை என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read more ... |
| விண்வெளியில் உணவுப் பழக்கம் எவ்வாறு?:சில அபூர்வ தகவல்கள் Posted: பூமியின் தரை மேற்பரப்புக்கு மேலே 400 Km உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) எப்போதும் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. நமது பூமிக்கு நிலவுக்கு அடுத்ததாக மிகப் பெரிய செயற்கைக் கோளாக விளங்கும் ISS இற்கு 2000 ஆம் ஆண்டு நவம்பரில் முதலாவது விண்வெளி வீரர் குழு விஜயம் செய்திருந்தது. இதையடுத்து இதுவரை 15 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 வீரர்கள் ISS இற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் மையப் பகுதியில் மிதக்கும் ஆய்வு கூடத்தில் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒரு தடவை 6 குழு உறுப்பினர்கள் பணியாற்றியும், உடற் பயிற்சி செய்தும், உறங்கியும் முக்கியமான உணவு உட்கொண்டும் வருகின்றனர். இங்கு தங்கி வரும் நாசாவின் வீரர்களுக்கு சத்துள்ள உணவு வகைகளை விநியோகிப்பதை ஹௌஸ்டனில் உள்ள ஜோன்சொன் விண்வெளி ஆய்வு நிலையத்திலுள்ள உணவு விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வீரர்கள் உண்ணும் 40% வீத உணவுக்குப் பொறுப்பான இக் குழுவின் மாயா கூப்பர் என்பவர் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப் படும் ஆரோக்கியமான விண்வெளி சூழலுக்கு உகந்த உணவு வகைகள் குறித்த அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விபரம் கீழே:
விண்வெளி வீரர்களுக்கு அளித்து வரும் சத்துள்ள பிரத்தியேக உணவுகளில் பெரும்பான்மையானவை மிகவும் ருசியானவை ஆகும். ஆனால் சமீப காலமாக இந்த உணவு வகைகளின் மெனுவில் மிகப் பெருமளவு சோடியம் பதார்த்தங்கள் குறைக்கப் பட்டுள்ளது. இதனால் பல உணவு வகைகளது தயாரிப்பு மீள உருவாக்கப் பட்டுள்ளது! மேலும் விண்வெளியில் நாம் எமது நிறையை இழப்பதால் எமது உடலுக்கு மிக அதிக சக்தி தேவைப் படுகின்றது. அதாவது ISS இல் விண்வெளி வீரர்களின் உடல் பூச்சிய நிறையைக் கொண்டிருப்பதால் அவர்களது உடல் எப்போதும் நூறு வீத இளைப்பாறும் நிலையில் (ஓய்வில்) இருப்பதே இல்லை. இதனால் ISS இல் ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு 3000 கலோரி ஊட்டச் சத்து தேவைப் படுகின்றது. பல வருடங்களாக விண்வெளியில் உணவின் சமிபாடு அதன் தாக்கம் குறித்த பல தரப்பட்ட தகவல்கள் சேகரிக்கப் பட்டுள்ளதால் தற்போது அங்கு உணவு முறையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சுற்று வட்டப் பாதையில் (orbit) இயங்கிக் கொண்டிருக்கும் உடலில் உணவிலுள்ள ஊட்டச் சத்தானது வெப்ப செயற்பாட்டால் நீண்ட நேரத்துக்கு சேமிக்கப் பட வேண்டிய நிலையில் விட்டமின்கள் உறிஞ்சப் படுவதால் தமது ஊட்டச்சத்தின் அளவை இழக்க நேரிடும். இது போன்ற சில சிக்கல்களை விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்குக்கும் கூப்பர் போன்ற விஞ்ஞானிகள் எதிர் நோக்க நேரிடுகின்றது. இதன் காரணமாக பல விண்வெளி உணவுகள் திரவ நிலையிலும் மாத்திரைகள் போன்ற வடிவத்திலுமே தயாரிக்கப் படுகின்றன. ஆரம்ப காலத்தில் நாசாவின் மேர்குரி செயற்திட்டத்தின் போது தயாரிக்கப் பட்ட அரைவாசி திரவ வடிவிலான பற்பசை போன்ற உணவுகள் ஜெலட்டினுடன் சேர்த்து டியூப் மூலமாக உண்ட வீரர்களுக்கு அது பசியைப் போக்குவதாக அமையவில்லை என்ற குறை ஏற்பட்டது. ஆனால் இன்றைய நவீன விண்வெளி உணவானது கலவையாக அல்லாது மிக சுவையான பிரான்சின் 'கொர்டென் பிளௌ' போன்ற உயர் ரக உணவாக முன்னேறியுள்ளது. அதாவது இன்றைய விண்வெளி வீரர்கள் மிக சுவையான திரவ வடிவான உணவுடன் அனைத்து விட்டமின்களும் அடங்கிய ஒரு மாத்திரையை (pill) மாத்திரம் உட்கொண்டாலே போதுமானது என கூப்பர் கூறுகின்றார். விண்வெளி வீரர்களது உணவை பூமியில் பரிமாறப் படும் உணவு வகைகளுடன் ஒப்பிட முடியா விட்டாலும் பூமியில் உள்ளது போன்ற உணவு வகைகளுக்கு சமமாக Dessert போன்றவை விண்வெளிக்கும் வந்து விட்டன. அதாவது விண்வெளி வீரர்கள் தமது அனைத்து உணவையும் ஸ்ட்ராவ் இனால் உறிஞ்சத் தேவையில்லை. அல்லது தமது ஊட்டச் சத்துக்களுக்காக எப்போதும் ஒரே மாத்திரையையே உட்கொள்ளத் தேவையில்லை. ISS இல் குளிர் பதனாக்கிகள் இல்லை என்பதால் உணவு வகைகள் மிகக் கவனமாக சேகரிக்கப் பட வேண்டும். இதனால் விண்வெளி உணவுகள் பூமியிலேயே குளிரூட்டப் பட்டு அல்லது உலர்த்தப் பட்டே விண்ணுக்கு வருவதுடன் பின் அங்கு திரவத்துடன் (rehydrated) சேர்க்கப் படுகின்றன. மேலும் விண்வெளி வீரர்களுக்கு பூமியில் இருந்து வரும் உணவுகளில் பொதியில் அடங்கியுள்ள உணவின் அளவை விட அதில் அடங்கியுள்ள கலோரியின் அளவே முக்கியமாக கருதப் படுகின்றது.
இன்று விண்வெளியில் வீரர்களுக்குப் பரிமாறப் படும் dessert வகைகளில் இந்திய மீன் கறி, நண்டு கேக் ஆகியவற்றுடன் சேர்த்து நாசாவின் மெனுவில் சாக்லெட் புட்டிங், எலுமிச்சை தயிர் கேக் (lemon curd cake) மற்றும் சர்க்கரையால் ஆக்கப் படும் Apricot cobbler என்பவை கூட அனுப்பப் பட்டுள்ளன என்றால் ஆச்சரியப் படுவீர்கள். இதைவிட நாசா தனது விண்வெளி வீரர்களுக்கு பிறந்தநாள் கேக் கூட ISS இற்கு அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து dessert வகைகளிலும் கலோரி அளவு முக்கியமாகக் கணிக்கப் பட்டே அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்பதை மறவாதீர்கள்! மேலும் இதற்கு முக்கிய காரணமாக, 'நீங்கள் எவரும் உணவுக்குப் பின்னரான இனிப்பு (dessert) இன்றி வாழ முடியாது! ஏனெனில் அது ஒரு உளவியல் அனுபவம்!' என சிரித்துக் கொண்டே சொல்கின்றார் கூப்பர். நன்றி:தகவல் CNN Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ ஏகப்பட்ட இதயத்துடிப்புக்கு இடையே ரிலீஸ் ஆகிவிட்டது.
அம்பு நடித்த படம் ஒன்று முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஒடிசாவில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதாவோடு, மாநில அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டபேரவைத் தேர்தல் தோல்விக்கு பாஜக கிரண்பேடியை காரணம் சொல்லக் கூடாது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் இன்றுடன் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடையும் நிலையில், அங்கு பணியாற்றிவந்த தேர்தல் அதிகாரி மனோகரன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வருகிற 14ம் திகதி டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், நாளை பிரதமரை சந்தித்து, பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.













