மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடியின் சாதனையை விளம்பரப்படுத்துவதா?: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ரகசிய கேமிராக்கள்: ஆம் ஆத்மி ஏற்பாடு
- பாலியல் கல்வி கற்றுத்தருவதாக கூறி அத்துமீறல்: அரசு அதிகாரி மீது விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் பரபரப்பு புகார்
- பீகார் சட்டசபையை கலைக்க முதல்–மந்திரி அதிரடி திட்டம்
- வீட்டின் முன்பு இரும்பு தடுப்பு வேலி: ஷாருக்கானுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
- குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்
- கெஜ்ரிவால் ரொம்ப நல்லவர்: நடிகர் சத்ருகன் சின்கா புகழாரம்
- டெல்லியில் அரசியல் கட்சிகள் 21 ஆயிரம் கூட்டங்கள் நடத்தி சாதனை: தேர்தலை நடத்த ரூ.70 கோடி செலவு
- தீவிரவாதிகள் தாக்குதல்: மணிப்பூரில் குண்டு வெடித்து ஒருவர் பலி
- அரசு ஊதியம் பெறும் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் வருமான வரி செலுத்த வேண்டும்: கேரள ஐகோர்ட்டு
- தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 43 சதவீத சம்பள உயர்வு: சந்திரசேகரராவ் அறிவிப்பு
- குற்றப்பின்னணியை மறைத்தால் வேட்பாளரின் வெற்றி செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
- ஜெயலலிதா வழக்கில் 3-வது நபராக சேர்க்க கோரிய க.அன்பழகனின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி
- ஈராக் போர்முனையில் இருந்து கேரள நர்சுகள் 11 பேர் மீட்பு
- சட்டசபை பிரசாரம் ஓய்ந்தது: டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்?- நாளை தேர்தல்
- டெல்லியில் நடந்த தேவாலய தாக்குதல்களை கண்டித்து போராட்டம்
- பீகாரில் நகைக்கடை உரிமையாளரை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த கும்பல்
- டெல்லியில் 45 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: புதிய கருத்து கணிப்பு
- இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி முதல் முறையாக இந்தியா வருகிறார்
- குஜராத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் இரண்டு பெண்கள் பலி
| மோடியின் சாதனையை விளம்பரப்படுத்துவதா?: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு Posted: 05 Feb 2015 11:28 PM PST டெல்லி சட்டசபை நாளை நடக்கிறது. நேற்று மாலையே அங்கு பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். இதனால் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. |
| வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ரகசிய கேமிராக்கள்: ஆம் ஆத்மி ஏற்பாடு Posted: 05 Feb 2015 11:02 PM PST டெல்லியில் நாளை (சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது பா.ஜ.க.வா அல்லது ஆம் ஆத்மியா என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பா.ஜ.க., ஆம் ஆத்மி இரண்டும் உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தை நடத்தின. பா.ஜ.க. 70 தொகுதிகளிலும் நேற்று ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தி தொண்டர்களை |
| Posted: 05 Feb 2015 10:05 PM PST கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது ராமநகரா. இங்கு மாநில அரசுக்கு சொந்தமான மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு தங்கியிருக்கும் மாணவிகள் பெரும்பாலும் பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த வாரம் இவர்கள் கர்நாடக மாநில பெண்கள் |
| பீகார் சட்டசபையை கலைக்க முதல்–மந்திரி அதிரடி திட்டம் Posted: 05 Feb 2015 10:01 PM PST பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல்–மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். தற்காலிக ஏற்பாடாக ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். |
| வீட்டின் முன்பு இரும்பு தடுப்பு வேலி: ஷாருக்கானுக்கு மாநகராட்சி நோட்டீஸ் Posted: 05 Feb 2015 09:56 PM PST நடிகர் ஷாருக்கானின் பங்களா மும்பை மன்னாத் பகுதியில் உள்ளது. அவர் தனது ரசிகர்களை சந்திப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் உள்ள திறந்த வெளியை ஆக்கிரமித்து இரும்பு கூண்டு போல் அமைத்து சுற்றிலும் தடுப்பு வேலி போட்டுள்ளார். தனது பிறந்த நாள் மற்றும் மும்பையில் இருக்கும் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை இந்த மேடையில் இருந்தவாறு தான் |
| குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல் Posted: 05 Feb 2015 09:55 PM PST உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் (ஊசி) இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத மருந்து கடை ஒன்றில் |
| கெஜ்ரிவால் ரொம்ப நல்லவர்: நடிகர் சத்ருகன் சின்கா புகழாரம் Posted: 05 Feb 2015 09:52 PM PST பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்கா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கெஜ்ரிவாலின் செயல்பாடுகள் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு நடிகர் சத்ருகன் சின்கா பதில் கூறுகையில், ''கெஜ்ரிவால் ரொம்ப நல்ல மனிதர். அதில் சந்தேகமே வேண்டாம். அவருக்கு டெல்லி மக்கள் மத்தியில் நல்ல கிளீன் இமேஜ் இருக்கிறது'' என்றார். |
| டெல்லியில் அரசியல் கட்சிகள் 21 ஆயிரம் கூட்டங்கள் நடத்தி சாதனை: தேர்தலை நடத்த ரூ.70 கோடி செலவு Posted: 05 Feb 2015 09:50 PM PST டெல்லி மாநிலத்தில் மொத்தம் ஒரு கோடியே 86 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் 1 கோடியே 33 லட்சம் பேர் வாக்காளர்கள் ஆவார்கள். ஆண் வாக்காளர்கள் 73.9 லட்சம், பெண் வாக்காளர்கள் 59.2 லட்சம், மற்றவர்கள் 862 பேர் உள்ளனர். |
| தீவிரவாதிகள் தாக்குதல்: மணிப்பூரில் குண்டு வெடித்து ஒருவர் பலி Posted: 05 Feb 2015 09:50 PM PST மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் நாட்டு எல்லையில் உக்ருல் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் தரோங் கிராமத்தில் இந்திய – மியான்மர் எல்லையில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்தப் பகுதியில் செயல்படும் தீவிரவாதிகள் அங்கு முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினரை குறி வைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். |
| அரசு ஊதியம் பெறும் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் வருமான வரி செலுத்த வேண்டும்: கேரள ஐகோர்ட்டு Posted: 05 Feb 2015 08:45 PM PST கேரளாவில் அரசு உதவி பெறும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வருமான வரி பிடித்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலத்தில் பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களில் |
| தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 43 சதவீத சம்பள உயர்வு: சந்திரசேகரராவ் அறிவிப்பு Posted: 05 Feb 2015 08:44 PM PST ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் முதல், முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார். |
| குற்றப்பின்னணியை மறைத்தால் வேட்பாளரின் வெற்றி செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு Posted: 05 Feb 2015 07:51 PM PST கடந்த 13.10.2006 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா தேக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவகுமார் என்பவர் கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் |
| ஜெயலலிதா வழக்கில் 3-வது நபராக சேர்க்க கோரிய க.அன்பழகனின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி Posted: 05 Feb 2015 07:23 PM PST சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. |
| ஈராக் போர்முனையில் இருந்து கேரள நர்சுகள் 11 பேர் மீட்பு Posted: 05 Feb 2015 04:16 PM PST ஈராக்கில் அரசு படைகளை எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். போர் நடைபெற்று வருகிற பகுதிகளில் ஒன்றான கிர்குக் நகரில் கேரளாவை சேர்ந்த 11 நர்சுகள் தங்கி பணியாற்றி வந்தனர். இப்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு குர்திஷ்தான் பகுதியில் |
| சட்டசபை பிரசாரம் ஓய்ந்தது: டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்?- நாளை தேர்தல் Posted: 05 Feb 2015 03:06 PM PST 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள பாரதீய ஜனதா அந்த வெற்றியை டெல்லியில் தக்க வைக்க வரிந்து கட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சி, இந்த |
| டெல்லியில் நடந்த தேவாலய தாக்குதல்களை கண்டித்து போராட்டம் Posted: 05 Feb 2015 02:24 PM PST தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 5 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்து உள்ளன. கிறிஸ்தவ வசந்த்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள புனித அல்போன்சா தேவாலயத்தில் சமீபத்தில் தாக்குதல் நடந்தது. |
| பீகாரில் நகைக்கடை உரிமையாளரை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த கும்பல் Posted: 05 Feb 2015 09:25 AM PST பீகாரில் 20 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் கணக்காளர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று நகைக்கடை உரிமையாளரை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 05 Feb 2015 08:38 AM PST டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், ஆர்.டி.ஐ. என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டது. இதில் முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 41 முதல் 45 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. |
| இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி முதல் முறையாக இந்தியா வருகிறார் Posted: 05 Feb 2015 07:40 AM PST இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி மோஷே யாலோன் இந்த மாத இறுதியில் முதல் முறையாக இந்தியா வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வந்த தகவலின் படி, பாதுகாப்பு |
| குஜராத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் இரண்டு பெண்கள் பலி Posted: 05 Feb 2015 07:11 AM PST குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயதான தல் சுக்பாய் மற்றும் 33 வயதான மம்தா சோனி என்ற இருவரும் கடந்த 24 மணி நேரத்திற்குள் பலியானதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் பலியான 42 வயதான யூனுஸ் என்பவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்திருக்குமென அதிகாரிகள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |