Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பெட்ரோலியத்துறை முக்கிய ஆவணங்கள் திருட்டு: பத்திரிக்கையாளர் உட்பட மேலும் இருவர் கைது

Posted: 19 Feb 2015 11:24 PM PST

பெட்ரோலியத்துறையின் முக்கிய ஆவணங்களை திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்றதாக அத்துறை ஊழியர்கள் உள்பட 5 பேரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று இத்திருட்டு தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் உட்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம்

இலவச வாக்குறுதிகள் மூலம் ஆம் ஆத்மி மக்களிடையே திருட்டை ஊக்குவிக்கிறது: ஷீலா தீட்சித் ஆவேசம்

Posted: 19 Feb 2015 11:01 PM PST

டெல்லி தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி இலவச தண்ணீர், குறைந்த செலவில் மின்சாரம் போன்ற சேவைகளை அளிப்பதாக உறுதி கூறுவதன் மூலமாக திருட்டை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியுள்ளார்

12 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக தோல் ஷூ–க்களுக்கு வரி குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

Posted: 19 Feb 2015 10:56 PM PST

மத்திய அரசின் பொது பட்ஜெட் வருகிற 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மோடி அறிவித்துள்ள மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என்ற எதிர்பார்ப்பு

காதலியுடனான செக்ஸ் வீடியோவை வாட்ஸ்–அப்பில் அனுப்பிய வாலிபர் தலைமறைவு: மகளிர் அமைப்பு போராட்டம்

Posted: 19 Feb 2015 10:35 PM PST

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பாயகாபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ராணி (பெயர் மாற்றம்). இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி மகன் சேசு (21) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

முக்கிய வழித்தடங்களில் ரெயில் பயணிகளை வீடியோவில் பதிவு செய்ய திட்டம்: புதிய பாதுகாப்பு நடவடிக்கை

Posted: 19 Feb 2015 10:13 PM PST

வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்காக புதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்: ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்

Posted: 19 Feb 2015 09:44 PM PST

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் சரத்யாதவுடனும், நிதிஷ்குமாருடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால் அவர் முதல் மந்திரி

ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்

Posted: 19 Feb 2015 09:43 PM PST

விஜயவாடா கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்த தம்பதியர் குமாரராஜா–மனைவி சந்தோஷி. இவர்களுடைய மகன் சிவா (வயது 7). இவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். சந்தோஷியின் அண்ணன் கோபி (30). இவர், விசாகப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், அடிக்கடி குமாரராஜாவிடம் பணம் கேட்பது வழக்கம். அதேபோல் கடந்த 3 நாளுக்கு முன்பு கோபி, குமாரராஜாவிடம் ரூ.2 ஆயிரம் பணம்

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சாமி தரிசனம்

Posted: 19 Feb 2015 09:12 PM PST

ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு 2 நாள் பயணமாக நேற்று சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா வந்தார். கொத்தகோட்டா மண்டலம் கும்மசமுத்திரம் அருகே உள்ள ஒரு ஏரிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகளுடன் நடந்து சென்று பார்வையிட்டார்.

கேரளாவில் பதுங்கி இருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது

Posted: 19 Feb 2015 08:34 PM PST

அசாமில் கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் பலர் உயிர் இழந்தனர். இதில் போடோ தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கையில் இறங்கினார்கள். ராணுவ உளவு துறையினரும் தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை திரட்டி வந்தனர். அப்போது இந்த

கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர்கள் அச்சுதானந்தன்–பினராய் மீண்டும் மோதல்

Posted: 19 Feb 2015 08:34 PM PST

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன். கேரள மாநில முன்னாள் முதல்–மந்திரியான இவர் தற்போது எதிர்கட்சி தலைவராக உள்ளார். இவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில்

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு: குற்றத்தை மறுக்க ஆவணங்களுடன் வாதிடுங்கள்: நீதிபதி அறிவுரை

Posted: 19 Feb 2015 07:21 PM PST

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை

லட்சாதிபதி ஆகும் அதிர்ஷ்டசாலி குரங்கு: தத்து எடுத்த தம்பதி சொத்துக்களை எழுதி வைக்க முடிவு

Posted: 19 Feb 2015 07:04 PM PST

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர். அந்த குரங்குக்கு 'சுன்முன்' என்று பெயரிட்டு தங்கள் மகன் போல வளர்த்தனர்.

உரவிலையை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி

Posted: 19 Feb 2015 04:23 PM PST

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் நேற்று மாலை சென்னையில் இருந்து பெங்களுருக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 19 Feb 2015 03:34 PM PST

சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்த மாதச்சம்பளம் பெறுவோர் விருப்பம்

Posted: 19 Feb 2015 03:15 PM PST

மத்திய பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மாதச்சம்பளம் பெறுவோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாதச்சம்பளம் பெறுவோருக்கு தற்போது ரூ.2½ லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது.

பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்

Posted: 19 Feb 2015 01:14 PM PST

இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந்தேதியை (நாளை) தாய்மொழி தினமாக கொண்டாடுங்கள் என்று சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு சுற்றறிக்கையை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- சர்வதேச தாய்மொழி தினவிழா நாளை உலகம் முழுவதும்

வங்காளதேசத்தை சேர்ந்த 111 மீனவர்கள் இந்தியாவால் திரும்ப ஒப்படைப்பு

Posted: 19 Feb 2015 10:06 AM PST

அலிப்பூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையான வங்காளதேசத்தை சேர்ந்த 111 மீனவர்களை இந்தியா இன்று அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பியது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் தெற்கு 24

கனடாவுக்கான இந்திய தூதராக விஷ்ணு பிரகாஷ் நியமனம்

Posted: 19 Feb 2015 09:26 AM PST

கனடாவுக்கான அடுத்த இந்திய தூதராக மூத்த தூதர் விஷ்ணு பிரகாஷ் இன்று நியமிக்கப்பட்டார். கடந்த 1981ம் ஆண்டின் ஐ.எப்.எஸ். அதிகாரியான பிரகாஷ் தற்பொழுது தென் கொரியாவுக்கான இந்திய தூதராக இருக்கிறார்.

ஒடிசாவில் மது ஆலையைக் கொளுத்திய மாவோயிஸ்டுகள்

Posted: 19 Feb 2015 08:31 AM PST

ஒடிசா மாநிலத்தின் பலாங்கிர் மாவட்டத்தில் உள்ள மது ஆலை ஒன்றை மாவோயிஸ்டுகள் தீயிட்டுக் கொளுத்தினர். ஒடிசாவில் துரிகேலா காவல் நிலைய வட்டாரத்திற்கு உட்பட்ட ஜம்கி கிராமத்தில் அமைந்துள்ள மது ஆலைக்குள் நேற்றிரவு புகுந்த மாவோயிஸ்டுகள் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை தங்கள் செல்போனைக் கொடுத்துவிட்டு வெளியேறச் சொன்னார்கள். அவர்கள் வெளியேறியதும் ஆலைக்குத் தீ வைத்தனர்.

பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருட்டு: 5 பேர் கைது

Posted: 19 Feb 2015 08:18 AM PST

மத்திய பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக டெல்லி முழுவதும் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட ஆவணங்களை எரிசக்தி ஆலோசனை வர்த்தக நிறுவனங்களுக்கும் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கும் விற்க ஐவரும் முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்டவை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™