மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆலப்புழா மாநாட்டில் இருந்து வெளிநடப்பு: மார்க் கம்யூ. கட்சியில் இருந்து அச்சுதானந்தன் விலகுவாரா?
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உதவியாளர் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது
- ஐதராபாத்தில் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேருக்கு பன்றி காய்ச்சல்
- திருப்பதியில் சுட்டெரிக்கும் வெயில்: மாடவீதியில் கார்பெட் விரிப்பு
- முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்: சுப்ரமணியசாமி கருத்து
- பாராளுமன்றம் நாளை கூடுகிறது: காங். மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
- பீகார் முதல் மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
- காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் பா.ஜனதா- மக்கள் ஜனநாயக கட்சி உடன்பாடு: ஒரு வாரத்திற்குள் புதிய அரசு அமைகிறது
- சசிதரூர் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி: கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு
- மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
- நான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது: இளங்கோவன் பேட்டி
- நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம்: டெல்லியில் இன்று நடக்கிறது
- நியூட்டனுக்கு முன்பே புவி ஈர்ப்பு விசை குறித்து ஆர்யபட்டாவிற்கு தெரியும்: முன்னாள் இஸ்ரோ தலைவர் பேச்சு
- பீகார்: ஆளில்லா கேட் அருகே ரெயில் மோதிய விபத்தில் 7 பேர் பலி
- மோடி டீ விற்றதற்கான ஆதாரம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ரெயில்வே அமைச்சகம் பதில்
- ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது- 13 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்
- போலீசாருடன் மோதல்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு
- ஊழல் கட்சியான பா.ஜ.க.வில் கிரண்பேடி சேர்ந்தது தவறு: பிரசாந்த் பூஷண்
- அமெரிக்கவின் மதிப்பு மிக்க வேதியியல் துறை விருதுக்கு இந்திய-அமெரிக்கர் தேர்வு
- பன்மொழித் தன்மை தான் இந்தியாவின் சொத்து: சென்னையில் ஸ்மிருதி இராணி பேச்சு
| ஆலப்புழா மாநாட்டில் இருந்து வெளிநடப்பு: மார்க் கம்யூ. கட்சியில் இருந்து அச்சுதானந்தன் விலகுவாரா? Posted: 21 Feb 2015 10:46 PM PST கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன், முன்னாள் முதல்– மந்திரியான அவர், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அரசியல் ரீதியாக எந்த கருத்தாக இருந்தாலும் தன் மனதில் சரி என்று பட்டதை வெளிப்படையாக பேசுபவர் அச்சுதானந்தன். இதனால் இவர் மீது அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். |
| மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உதவியாளர் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது Posted: 21 Feb 2015 10:32 PM PST மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் உதவியாளர் ஷிபாஜி பாஞ்சா கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார். மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்ற மம்தா, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து டீஸ்டா நதி நீர் பிரச்சனை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து பேசினார். இப்பயணத்தில் மம்தாவின் உதவியாளர் |
| ஐதராபாத்தில் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேருக்கு பன்றி காய்ச்சல் Posted: 21 Feb 2015 10:06 PM PST ஐதராபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு பயிற்சி பெறும் 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு டாக்டர்கள் வந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் 9 பேருக்கு பன்றி |
| திருப்பதியில் சுட்டெரிக்கும் வெயில்: மாடவீதியில் கார்பெட் விரிப்பு Posted: 21 Feb 2015 10:05 PM PST திருப்பதியில் கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 41,152 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகு தர்ம தரிசனத்துக்கு 22 கம்பார்ட் மெண்டுகளில் பக்தர்கள் காத்து நின்றனர். இவர்களுக்கு தரிசனத்தக்கு 12 மணி நேரம் ஆனது. |
| முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்: சுப்ரமணியசாமி கருத்து Posted: 21 Feb 2015 10:01 PM PST மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற "இந்தியா பொருளாதாரம்-நேற்று, இன்று, நாளை" என்ற கருத்தரங்கில் பேசிய பா.ஜ.க. முக்கிய தலைவர் சுப்ரமணியசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். |
| பாராளுமன்றம் நாளை கூடுகிறது: காங். மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை Posted: 21 Feb 2015 09:22 PM PST பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி, மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கொறடா ஜோதிர் ஆதித்ய |
| பீகார் முதல் மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார் Posted: 21 Feb 2015 09:20 PM PST பீகாரில் புதிய முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான நிதிஷ் குமார் இன்று மாலை மீண்டும் பதவியேற்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக |
| Posted: 21 Feb 2015 05:13 PM PST காஷ்மீரில் பா.ஜனதா, மக்கள் ஜனநாயக கட்சிக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதால் ஒரு வாரத்திற்குள் அங்கு புதிய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 87 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி முடிவுகள் வெளியானது. இதில் |
| சசிதரூர் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி: கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு Posted: 21 Feb 2015 04:36 PM PST கேரள மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற வெளி விவகாரக்குழு தலைவருமான சசிதரூர். இவர் பொய்யான சாதனை பட்டியலை வெளியிட்டு பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று, எலியாஸ் ஜான் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். |
| மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை Posted: 21 Feb 2015 04:18 PM PST டெல்லி பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், இறக்குமதி தொடர்பான முக்கிய கொள்கை ஆவணங்கள் களவாடப்பட்டு, பிரபல நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஊழல், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. |
| Posted: 21 Feb 2015 03:48 PM PST தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷியம், பிராங்கிளின்பிரகாஷ், நாஞ்சில்பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். |
| Posted: 21 Feb 2015 11:25 AM PST பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 8-ந்தேதி வரை நடைபெறும் இந்த நீண்டகால தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி நாளை முதல் மார்ச் 20-ந்தேதி வரை முதற்கட்டமாகவும், ஏப்ரல் 20-ந்தேதி முதல் மே 8-ந்தேதி வரை 2-ம் கட்டமாகவும் நடைபெறுகிறது. |
| Posted: 21 Feb 2015 09:46 AM PST இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான ஜி. மாதவன் நாயர், நிலவில் நீர் உள்ளதற்கான ஆதாரத்தை வேதங்களில் உள்ள சில சுலோகங்கள் கூறி உள்ளதாகவும் மற்றும் ஆர்யபட்டா போன்ற வானியல் நிபுணர்களுக்கு ஐசக் நியூட்டனுக்கு முன்பாகவே புவி ஈர்ப்பு விசை குறித்து தெரியும் என்றும் கூறியுள்ளார். |
| பீகார்: ஆளில்லா கேட் அருகே ரெயில் மோதிய விபத்தில் 7 பேர் பலி Posted: 21 Feb 2015 08:30 AM PST பீகார் மாநிலத்தின் நலந்தா மாவட்டத்தில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் அருகே அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் 7 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் |
| மோடி டீ விற்றதற்கான ஆதாரம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ரெயில்வே அமைச்சகம் பதில் Posted: 21 Feb 2015 07:26 AM PST பிரதமர் நரேந்திர மோடி தனது இளம்வயதில் ரெயில்வே பிளாட்பாரங்களிலும், ரெயில் பெட்டிகளின் உள்ளேயும் டீ விற்றதாக கூறி வருகிறார். அவருக்கு ரெயில்வே துறையினர் ஏதாவது அனுமதி (பாஸ்) அல்லது பதிவு எண் கொடுத்திருந்தனரா? என காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான தெஹ்சீன் பூனவாலா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ரெயில்வே வாரியத்துக்கு கேள்வி அனுப்பியிருந்தார். இதற்கு பதில் அனுப்பியுள்ள ரெயில்வே துறையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை இயக்குனரகம், 'இது தொடர்பான |
| Posted: 21 Feb 2015 07:19 AM PST நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 31 பேர் பலியானதையடுத்து இந்த ஆண்டில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. |
| போலீசாருடன் மோதல்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு Posted: 21 Feb 2015 05:53 AM PST வடக்கு டெல்லியின் பிரதான் என்கிளேவ் காலனியை சேர்ந்த ஒரு சிறுவனை கடத்திய குற்றவாளியை மடக்கி பிடித்த சிலர் அவனை நேற்றிரவு புராரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்வதில் போலீசார் மெத்தனம் காட்டியதால் ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் அப்பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜா என்பவருக்கு தகவல் அளித்து போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த எம்.எல்.ஏ.வின் காரை போலீஸ் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என அங்கு |
| ஊழல் கட்சியான பா.ஜ.க.வில் கிரண்பேடி சேர்ந்தது தவறு: பிரசாந்த் பூஷண் Posted: 21 Feb 2015 04:45 AM PST பா.ஜ.க வில் சேர்ந்ததற்காக கிரண் பேடி கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில். ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரும், உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் அவர் பா.ஜ.க.வில் சேர்ந்தது தவறான முடிவு என்று தெரிவித்துள்ளார். 'நால்சார்' பல்கலைக் கழக மாணவர்களிடம் சட்டம் குறித்து உரையாற்றுவதற்காக இன்று ஐதராபாத் வந்த பூஷண், நிகழ்ச்சி |
| அமெரிக்கவின் மதிப்பு மிக்க வேதியியல் துறை விருதுக்கு இந்திய-அமெரிக்கர் தேர்வு Posted: 21 Feb 2015 04:41 AM PST வேதியியல் துறையில் சிறந்த பங்களிப்பினை வழங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் அமெரிக்கன் வேதியியல் சங்கம் விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டு பகுப்பாய்வு வேதியியலுக்கான ஜே.கால்வின் கிட்டிங்ஸ் விருதை இந்திய-அமெரிக்கரான புர்னென்டு தாஸ் குப்தா பெறுகிறார். அமெரிக்காவின் அர்லிங்டன் மாகாணத்தில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றும் புர்னென்டு தாஸ் குப்தா, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் |
| பன்மொழித் தன்மை தான் இந்தியாவின் சொத்து: சென்னையில் ஸ்மிருதி இராணி பேச்சு Posted: 21 Feb 2015 04:34 AM PST இந்தியாவில் புழக்கத்தில் இருந்துவரும் பன்மொழித் தன்மை தான் நாட்டின் சொத்து என மத்திய மனிதவளத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற தாய்மொழி தினம் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் கூறியதாவது:- |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |