Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லி தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19.65 சதவீத வாக்குகள் பதிவு

Posted: 06 Feb 2015 11:14 PM PST

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி அங்கு 19.65 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வட கிழக்கு டெல்லியில் 22.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வட மேற்கில் 20.3 சதவீத வாக்குகளும்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் தேடி அலைந்து கண்டுபிடித்த கதாநாயகன்

Posted: 06 Feb 2015 10:30 PM PST

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த ஜூன் 2013 ஆண்டு 30 சுற்றுலா பயணிகளையும், தனது மனைவி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 13 நாட்கள் சிவராத்திரி விழா: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

Posted: 06 Feb 2015 10:00 PM PST

ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி விழா வருகிற 12–ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 24–ந் தேதி வரை 13 நாள் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆந்திர மாநில வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் ஆலோசனை நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிப்பதற்காக அதிகாரிகள் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சிவன் கோவில் நிர்வாக அதிகாரி ராமிரெட்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–

திருப்பதி கோவிலில் கடந்த மாதம் 7½ லட்சம் பேர் மொட்டை போட்டனர்

Posted: 06 Feb 2015 09:55 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். 7 லட்சத்து 65 ஆயிரம் பேர் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். 16 லட்சத்து 6800 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 72 லட்சத்து 29

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு போதும் ஆதரவு தராது: அஜய் மக்கான்

Posted: 06 Feb 2015 09:45 PM PST

டெல்லி தேர்தலில் பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி இருந்தாலும் உண்மையில் பா.ஜ.க., ஆம் ஆத்மி இடையே தான் போட்டி உள்ளது. டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி 5 இடமாவது கிடைக்குமா என்று அல்லாடும் வகையில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆந்திராவை விட தமிழ்நாட்டில் அரசியல் விமர்சனம் தரமாக உள்ளது: கவர்னர் ரோசையா பேட்டி

Posted: 06 Feb 2015 09:12 PM PST

தமிழக கவர்னர் ரோசையா ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சென்றார். அங்கு தனது சொந்த ஊரான சீராளாவில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது ஆந்திராவை விட தமிழ்நாடு அரசியல் சிறப்பாக உள்ளதாக பாராட்டினார்.

திருப்பதி கோவில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கு திருமலை தபால் நிலையத்தில் 5 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கீடு

Posted: 06 Feb 2015 09:07 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும். இதனை அறியாத கிராம மக்கள் கோவிலுக்கு வந்து டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் கிராம மக்களும் பயன்பெறும் வகையில் தபால் நிலையத்தில் 300

மணிப்பூர் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

Posted: 06 Feb 2015 09:04 PM PST

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. அப்போது லேசான அதிர்வு உணரப்பட்டது. 15கி.மீ சுற்றளவுக்கு மட்டும் நில நடுக்கம் இருந்ததாக டெல்லி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனியர் மாணவர்களின் ராக்கிங்கை தட்டிக்கேட்ட ஜூனியர் மாணவர் பார்வை பறிபோனது: 6 பேர் சஸ்பெண்டு

Posted: 06 Feb 2015 09:04 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் உள்ள அம்பலப்பரம்பை சேர்ந்தவர் முகமது மூசீன் (வயது 19). இவர் கல்லடிக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு: பிரணாப்-கெஜ்ரிவால்-கிரண் பேடி-சோனியா வாக்களித்தனர்

Posted: 06 Feb 2015 09:03 PM PST

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குபதிவு இன்று காலை ஏழு மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தேர்தலில் முக்கிய தலைவர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோர் தத்தமது வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை மருந்துடன் சிக்கிய இளம்பெண்

Posted: 06 Feb 2015 08:58 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் குவைத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஹெராயின்' போதை பொருளை கடத்தல் காரர்கள் கடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த போதை மருந்து கடத்தலுக்கு ஒரு பெண்ணை அந்த கும்பல் பயன்படுத்த போவதாகவும் திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிக

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பன்றிகாய்ச்சல் பரவாமல் தடுக்க முக கவசம்

Posted: 06 Feb 2015 08:49 PM PST

ஆந்திர மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல்

ஏர்செல்–மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி செய்ததை திரும்பப்பெற்றது சுப்ரீம்கோர்ட்

Posted: 06 Feb 2015 07:47 PM PST

ஏர்செல்–மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அடுத்த மாதம் (மார்ச்) 2–ந்தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது: அனைவரும் வாக்களிக்குமாறு கெஜ்ரிவால் அழைப்பு

Posted: 06 Feb 2015 07:39 PM PST

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை சரியாக ஏழு மணிக்கு தொடங்கியது. பாரத பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி வாகை சூடினாலும், டெல்லியில் பா.ஜ.க.வால் அத்தகைய வெற்றியை பெற முடியாது என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ள நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

பிரபல மராத்தி எழுத்தாளருக்கு ஞான பீட விருது

Posted: 06 Feb 2015 07:39 PM PST

இந்திய இலக்கிய உலகில் வழங்கப்படுகிற மிகப்பெரிய விருது, 'ஞான பீட' விருது ஆகும். 2014-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது, பிரபல மராத்தி எழுத்தாளர் பாலசந்திர நமதேவுக்கு (வயது 76) வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க கோரும் மனு மீது 10-ந் தேதி தீர்ப்பு?

Posted: 06 Feb 2015 07:38 PM PST

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் அரசு சார்பில் ஆஜராகும் சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் ரிட் அப்பீல் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில்

நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம்: பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட் குறித்து மோடி ஆலோசனை

Posted: 06 Feb 2015 07:29 PM PST

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது, திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பிரதமர் தலைமையில் கடந்த ஜனவரி

கட்சி நிர்வாகிகள் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க காங்கிரஸ் திட்டம்

Posted: 06 Feb 2015 07:17 PM PST

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும், ஆந்திரா, மராட்டியம், அரியானா, காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து கட்சிக்கு புத்துயிர் அளிப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறது.

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம் உறுதி

Posted: 06 Feb 2015 07:01 PM PST

சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன.

ஐதராபாத்தில் கற்பழிப்பு கும்பலை அம்பலப்படுத்திய சமூக சேவகியின் கார் மீது தாக்குதல்

Posted: 06 Feb 2015 07:01 PM PST

ஐதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். இப்பெண்மணி, தனது இளம் வயதில் கற்பழிக்கப்பட்டவர் ஆவார். தற்போது, 'பிரஜ்வாலா' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கு எதிராக இவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™