Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு

Posted: 18 Feb 2015 11:06 PM PST

இந்திய திரை உலகை தடம் புரட்டிப் போட்டவர்கள் வெகு சிலர் தான். அந்த வெகு சிலரில் உலக சாதனை படைக்கும் அளவுக்கு இந்திய சினிமாவுக்கு கலைச் சேவை செய்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரபல படத்தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு. 13 மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த இவர், அதற்காக உலக சாதனை புத்தமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 18 Feb 2015 11:06 PM PST

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சேர்க்கப்படும் ஏவுகணைகள் அடிக்கடி சோதனை செய்து பார்க்கப்படும். அதன்படி இன்று பிரிதிவி – 2 வகை ரக ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது.

மரணம் அடைந்த தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி

Posted: 18 Feb 2015 10:51 PM PST

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட 13 படங்களில் 150 படங்களுக்கு மேல் தயாரித்தவர் டி.ராமாநாயுடு. 78 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டில் மரணம் அடைந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டார். சுரேஷ், வெங்கடேஷ் என்ற மகன்களும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை

Posted: 18 Feb 2015 10:22 PM PST

புனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள். நேற்று ஓட்டலின் மாடியில் உள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் அடியில் சிறுமி பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஒரே வீட்டுக்கு மருமகளாக சென்ற உயிர் தோழிகள் தற்கொலை: மாமியார் அடித்துக் கொன்றதாக புகார்

Posted: 18 Feb 2015 09:45 PM PST

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புத்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (25), சிவா (23) அண்ணன்– தம்பிகளான இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த உயிர் தோழிகளான முரளி ரமனம்மா (19), ஜான்சி ராணி (18) ஆகியோரை காதலித்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. முதலில் ராம்பாபு– முரளி ரமனம்மா

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்: 670 பேர் பலி - 10025 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted: 18 Feb 2015 09:43 PM PST

மழை காலமும், பனிக்காலமும் மக்களை பாடாய் படுத்துவது தெரிந்த கதை தான். ஆனால் இம்முறை உயிரை கொல்லும் அளவுக்கு தீவிரமாக பரவி வருகிறது பன்றி காய்ச்சல். கொசுக்களால் டெங்கு காய்ச்சல், கோழிகளால் பறவை காய்ச்சல் என மக்களை காவு வாங்கும் நோய்களை குணப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

சரிதா நாயரை, உம்மன்சாண்டி சந்தித்ததற்கு ஆதாரம் உள்ளது: மார்க். கம்யூ. எம்.எல்.ஏ. பேட்டி

Posted: 18 Feb 2015 09:34 PM PST

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பொதுமக்களையும், நிறுவனங்களையும் ஏமாற்றி பல கோடிகள் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு கேரள முதல்– மந்திரியுடன் தொடர்பு இருப்பதாகவும், முதல்–மந்திரியின் அலுவலக உதவியாளர்கள் சரிதா நாயருக்கு துணை புரிந்ததாகவும் எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார் கூறின.

ஐதராபாத்தில் ஒரே நாளில் 30 பேருக்கு பன்றி காய்ச்சல்: 46 பேர் பலியானதாக அறிவிப்பு

Posted: 18 Feb 2015 09:27 PM PST

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் தான் பன்றி காய்ச்சலுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கெஜ்ரிவால் அதிரடி திட்டம்: லஞ்சம் வாங்குவோர் பற்றி தகவல் தெரிவிக்க டெலிபோன் எண் அறிமுகம்

Posted: 18 Feb 2015 09:02 PM PST

2013–ல் முதன் முறையாக கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக பதவி ஏற்றபோது, மாநில தலைமை செயலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் 'ஜனதா தர்பார்' நடத்தினார். முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினார்கள். பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை கடத்தி நண்பர்களுடன் கற்பழித்த வாலிபர்: 6 பேர் கைது

Posted: 18 Feb 2015 08:30 PM PST

திருவனந்தபுரத்தை அடுத்த வர்கலா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 9–ந்தேதி முதல் காணவில்லை. இதுபற்றி அவரது தாயார் வர்கலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடினர். இதில் அந்த

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு

Posted: 18 Feb 2015 07:26 PM PST

பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. 'தி கேட்டலிஸ்ட் டிரஸ்டு' என்ற தனியார் தொண்டு நிறுவனம் தேசிய

குஜராத் அருகே பாகிஸ்தான் படகு விபத்து: கடலோர காவல்படை அதிகாரியின் முரண்பட்ட கருத்தால் சர்ச்சை

Posted: 18 Feb 2015 07:16 PM PST

இந்திய கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகை தகர்த்தோம் என்று கடலோர காவல்படை அதிகாரி கருத்து தெரிவித்ததால் சர்ச்சை வெடித்து உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில், இந்திய கடல்

மோடியின் சூட்டுக்கான ஏலத்தொகை ரூ.1.21 கோடியாக உயர்வு: சூரத் துணி வியாபாரி ஏலம் கேட்டார்

Posted: 18 Feb 2015 06:57 PM PST

ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது சர்ச்சையை ஏற்படுத்திய மோடியின் 'சூட்'டை, சூரத்தை சேர்ந்த துணி வியாபாரி ஒருவர் ரூ.1.21 கோடிக்கு ஏலம் கேட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்,

அவதூறு வழக்குகள் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற கோரி விஜயகாந்த் மனு தாக்கல்

Posted: 18 Feb 2015 06:33 PM PST

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பி.பார்த்தசாரதி, எல்.வெங்கடேசன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் மீது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்ட கோர்ட்டுகளில், தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதியில் சிறிசேனாவுக்கு பூட்டை உடைத்து மூலவர் தரிசனம்

Posted: 18 Feb 2015 06:21 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவியுடன் சென்றார். அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில் உள்ள தங்க கதவை கோவில் ஊழியர்கள் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால்

6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

Posted: 18 Feb 2015 03:40 PM PST

ராணுவ அமைச்சகத்தின், பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அப்போது, இந்தியாவின் கடல்பாதுகாப்பையும், கடற்படையின் பலத்தையும் உறுதி செய்யும் விதமாக நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு: சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன்

Posted: 18 Feb 2015 02:36 PM PST

குஜராத் மாநிலத்தில் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்பட்டவர், சர்ச்சைக்குரிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி. வன்சாரா. இவர் சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், துளசி பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஊழல் மந்திரிகளை பாதுகாக்க மத்திய அரசு முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Posted: 18 Feb 2015 01:36 PM PST

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதாக பா.ஜனதா வாக்குறுதி அளித்தது.

பாக்., படகு எரிந்த சம்பவம்: மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ராணுவ மந்திரி திட்டவட்டம்

Posted: 18 Feb 2015 12:35 PM PST

வடமேற்கு கடலோர காவல் படை தலைமை அதிகாரி பி.கே.லோசாலி பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு குஜராத் கடலோர பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படகை நாங்கள் தகர்த்தோம் என்று கூறி இருந்தார்.

காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: அருண் ஜெட்லியுடன் மெகபூபா பேச்சுவார்த்தை

Posted: 18 Feb 2015 11:57 AM PST

காஷ்மீரில், முப்தி முகமது சயீதின் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வகுப்பதில் இரு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™