மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரசியலுக்கு விடுமுறை: ராகுல் முடிவால் தடுமாறும் காங்கிரஸ்
- அரசு ஆவணம் திருடிய வழக்கு: ராணுவ அமைச்சக ஊழியர் கைது
- தலைநகருக்காக விவசாயிகள் நிலத்தை அபகரிக்க விட மாட்டோம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா எச்சரிக்கை
- எரிவாயு மானிய தொகையில் பொதுமக்கள் பெரும் அவதி: ரேஷன் பொருட்களிலும் நேரடி மானியம்-மத்திய அரசு தீவிரம்
- செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் அதிரடி நடவடிக்கை
- மொரிசியஸ் விமான நிலையத்தில் ஆந்திராவை கலக்கிய தாதா கைது
- கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது
- திருப்பதி கோவில் சொத்துக்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது: ஆக்கிரமிப்பை தடுக்க புதிய திட்டம்
- கேரள மார்க்சிஸ்ட் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன், ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்
- அன்னை தெரசாவின் உண்மையான நோக்கம் மதமாற்றமே - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சந்திப்பு
- மேலும் 35 திட்டங்களுக்கு நேரடி மானியம் வழங்கப்படும்: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை
- பாராளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
- மத்திய அரசின் ரகசியங்கள் திருட்டு: எங்களது அலுவலகங்களில் போலீஸ் சோதனை நடைபெறவில்லை- ரிலையன்ஸ் குழுமம் மறுப்பு
- நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் சின்ஹா தலையீடு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது
- டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற 255 வழித்தடங்கள்: போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த உத்தரவு
- காங்கிரஸ் பெண் எம்.பி. ஷாப்பிங் சென்றதால் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
- மெகபூபா-அமித் ஷா நாளை சந்திப்பு: காஷ்மீரில் மார்ச் 1-ல் புதிய அரசு பதவியேற்பு?
- ஐதராபாத்: எண்ணெய் நிறுவனத்தில் வெடி விபத்து- இருவர் பலி
- கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்நாடக மந்திரி
| அரசியலுக்கு விடுமுறை: ராகுல் முடிவால் தடுமாறும் காங்கிரஸ் Posted: 23 Feb 2015 10:26 PM PST பாரம்பரிய காங்கிரசை கட்டிக் காக்கும் ஒரே பரம்பரை வாரிசு. இதுதான் காங்கிரஸ்காரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. ராகுல் அரசியலுக்கு வந்த வேகமும், எளிமையும் எல்லோரையும் கவர்ந்தது. காங்கிரஸ்காரர்களை உற்சாகம் அடைய செய்தது. |
| அரசு ஆவணம் திருடிய வழக்கு: ராணுவ அமைச்சக ஊழியர் கைது Posted: 23 Feb 2015 10:23 PM PST அரசு ஆவணம் திருடிய வழக்கில் ராணுவ அமைச்சக ஊழியர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை திருடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், இணைய தளம், பத்திரிகைகள் |
| தலைநகருக்காக விவசாயிகள் நிலத்தை அபகரிக்க விட மாட்டோம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா எச்சரிக்கை Posted: 23 Feb 2015 10:22 PM PST ஆந்திர புதிய தலைநகர் விஜயவாடா–குண்டூர் இடையே அமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. ஆனால் பல விவசாயிகள் தங்களது விளை நிலங்களை கொடுக்க மறுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அரசு வலுக்கட்டாயமாக நிலத்தை |
| எரிவாயு மானிய தொகையில் பொதுமக்கள் பெரும் அவதி: ரேஷன் பொருட்களிலும் நேரடி மானியம்-மத்திய அரசு தீவிரம் Posted: 23 Feb 2015 10:22 PM PST நேரடி கியாஸ் மானிய திட்டம் இந்தியா முழுவதும் ஜனவரி 1–ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான மக்கள் (தமிழகத்தில் மட்டும்), முழு தொகை கொடுத்து சிலிண்டர் எடுத்து பல வாரங்களாகியும், தங்கள் வங்கி கணக்கில் இன்னும் பணம் வந்து சேரவில்லை என்று புலம்பியபடி உள்ளனர். |
| செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் அதிரடி நடவடிக்கை Posted: 23 Feb 2015 09:53 PM PST செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இறங்கியுள்ளது. இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்ற சேவை நிறுவனங்களுக்கு தொடர்பு கொடுப்பதற்கு தொலைபேசி சேவை |
| மொரிசியஸ் விமான நிலையத்தில் ஆந்திராவை கலக்கிய தாதா கைது Posted: 23 Feb 2015 09:11 PM PST ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல தாதா கங்கி ரெட்டி. செம்மரக்கட்டை கடத்தல் மூலம் கோடி, கோடியாக சம்பாதித்தவர். செம்மரக்கட்டை கடத்தலில் கைதாகி சிறையில் இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 15–ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இவரது ஜாமீனை |
| கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது Posted: 23 Feb 2015 08:57 PM PST கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள பாவச்சம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் அந்த பெண்ணுக்கு சிறுநீரகம் தானம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. |
| திருப்பதி கோவில் சொத்துக்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது: ஆக்கிரமிப்பை தடுக்க புதிய திட்டம் Posted: 23 Feb 2015 08:55 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்து பட்டியலில் விவசாய நிலங்கள், தோப்புகள், பண்ணைகள், மடங்கள், நந்தவனங்கள், வர்த்தக நிறுனங்கள், கோவில்கள் ஆகியவை |
| கேரள மார்க்சிஸ்ட் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன், ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் Posted: 23 Feb 2015 08:53 PM PST கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன். மாநில முதல்–மந்திரியாகவும் இருந்தவர். இவருக்கும் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் அடிக்கடி கருத்து |
| அன்னை தெரசாவின் உண்மையான நோக்கம் மதமாற்றமே - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் Posted: 23 Feb 2015 07:46 PM PST அன்னை தெரசாவின் செயல்பாடுகளுக்கு பின்புலமாக இருந்தது மதமாற்றமே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெரசாவின் சுயநல நோக்கத்தினால் ஒரு உன்னத காரணத்திற்கான நற்பண்புகள் மதிப்பிழந்து போய்விட்டதென்றும் பகவத் கூறினார். |
| சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சந்திப்பு Posted: 23 Feb 2015 04:25 PM PST சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை சமூகநீதி அடிப்படையில் நிரப்பக்கோரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மனு கொடுத்தனர். சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை ஒரே |
| மேலும் 35 திட்டங்களுக்கு நேரடி மானியம் வழங்கப்படும்: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை Posted: 23 Feb 2015 03:38 PM PST 3 மாத காலம் நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் கூட்டம் இரு சபைகளின் கூட்டு கூட்டமாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். |
| பாராளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு Posted: 23 Feb 2015 12:18 PM PST பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு அரசு தயாராக இருப்பதாகவும், இதற்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என |
| Posted: 23 Feb 2015 10:59 AM PST மத்திய அரசின் ரகசிய ஆவணங்களை திருடி விற்பனை செய்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு ரிலையன்ஸ் குழுமம் மறுப்பு தெரிவித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- |
| நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் சின்ஹா தலையீடு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது Posted: 23 Feb 2015 09:53 AM PST நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணையில் தலையீடு மற்றும் விசாரணையை முடக்கும் விசயத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. |
| டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற 255 வழித்தடங்கள்: போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த உத்தரவு Posted: 23 Feb 2015 09:22 AM PST டெல்லியில் பெண்கள் அதிகம் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மற்றும் உணவகங்களுக்கு அருகாமையில் இருக்கும் 255க்கும் மேற்பட்ட பாதைகள் அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. |
| காங்கிரஸ் பெண் எம்.பி. ஷாப்பிங் சென்றதால் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் Posted: 23 Feb 2015 08:37 AM PST ஷாப்பிங் சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. திரும்பி வர தாமதமானதால் இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. |
| மெகபூபா-அமித் ஷா நாளை சந்திப்பு: காஷ்மீரில் மார்ச் 1-ல் புதிய அரசு பதவியேற்பு? Posted: 23 Feb 2015 07:39 AM PST ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க. மற்றும் பி.டி.பி. இணைந்து மார்ச் 1-ம் தேதி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 87 தொகுதிகள் கொண்ட காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. பா.ஜனதா 25 தொகுதிகளில் வென்றது. ஆனால், ஆட்சியமைக்க |
| ஐதராபாத்: எண்ணெய் நிறுவனத்தில் வெடி விபத்து- இருவர் பலி Posted: 23 Feb 2015 07:21 AM PST ஐதராபாத்தின் குக்கட்பல்லி பகுதியில் உள்ள கல்ப் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான வெடிப்பொருள் கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். இங்குள்ள பழைய வெடிப் பொருட்களை அகற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இந்த விபத்தினால் |
| கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்நாடக மந்திரி Posted: 23 Feb 2015 06:46 AM PST மங்களூர் அருகே நடந்த கார் விபத்தில் கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சுகாதாரத்துறை மந்திரி காதர் நேற்று தனது உதவியாளருடன் மங்களூர் அருகே உள்ள மஞ்சனடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அதிகாலை 12.45 மணியளவில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |