Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரி அரசில் நம்பிக்கையில்லை; ஐ.நா. விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: யாழ் போராட்டத்தில் ...

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. எனவே, இறுதிமோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை காலம் தாமதிக்காது வெளியிட வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக சமூகமும், பொது அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்த இன்றைய போராட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

உலக கோப்பை தொடரின் முதலாவது இரட்டைச் சதமெடுத்தார் கிரிஸ் கேய்ல்!

Posted:

மேற்கு இந்திய தீவுகள் - சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்று வரும் உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் கிரிஸ் கேய்லின் இரட்டைச் சதம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இப்போட்டியில் கிரிஸ் கேய்ல் 215 ஓட்டங்களை எடுத்தார்.


Read more ...

லக்விக்கு மேலும் முப்பது நாட்கள் சிறை:பாகிஸ்தான் நீதிமன்றம்

Posted:

மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்விக்கு மேலும் 30 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

நான் ரெண்டையுமே படிக்கல - கவுதம்

Posted:

டைரக்டர் கவுதம் மேனன் மீடியாக்கள் மீது கடும் கோபத்திலிருக்கிறார்.


Read more ...

எங்களது எந்த அலுவலகங்களிலும் சோதனை செய்யப்படவில்லை:அனில் அம்பாணி

Posted:

எங்களது நிறுவனங்களுக்கு சொந்தமான எந்த அலுவலகக் கிளைகளிலும் சோதனை செய்யப்பட்டவில்லை என்று பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி கூறியுள்ளார்.


Read more ...

பாதுகாப்புத் துறையின் முக்கிய ஆவணங்களும் களவு?

Posted:

எரிசக்தித் துறை ஆவணங்கள் களவு போனதை அடுத்து பாதுகாப்புத் துறை ஆவணங்களும் களவு போயுள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக சமூகம் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 


Read more ...

மஹிந்த அரசின் முக்கியஸ்தர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புபட்டிருந்தனர்: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

2015 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் திரைப்படங்கள்!

Posted:

இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 87 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நிறைவுற்றது. இவ்விழாவில் பரிசளிக்கப் பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்த விபரம் கீழே:

1.மிகச் சிறந்த திரைப்படம் - ''Birdman''
2.மிகச் சிறந்த இயக்குனர் - Alejandro González Iñárritu, "Birdman"
3.மிகச் சிறந்த நடிகை - Julianne Moore, "Still Alice"
4.மிகச் சிறந்த நடிகர் - Eddie Redmayne, "The Theory of Everything"
5.மிகச் சிறந்த துணை நடிகை - Patricia Arquette, "Boyhood"
6.மிகச் சிறந்த துணை நடிகர் - J.K. Simmons, "Whiplash"
7.மிகச் சிறந்த திரைக்கதை தழுவல் - Graham Moore, "The Imitation Game"
8.மிகச் சிறந்த திரைக்கதை ஆரிஜினல் - Alejandro González Iñárritu, Nicolás Giacobone, Alexander Dinelaris and Armando Bo, "Birdman"
9.மிகச் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் - "Ida"
10.மிகச் சிறந்த அனிமேஷன் திரைப்படம் - "Big Hero 6"
11.மிகச் சிறந்த படத்தொகுப்பு (edit) - "Whiplash"
12.சிறந்த பாடல் - "Glory" from "Selma"
13.சிறந்த பின்னணி இசை - Alexandre Desplat, "The Grand Budapest Hotel"
14.சிறந்த சினிமாட்டோகிராஃபி - Emmanuel Lubezki, "Birdman"
15.சிறந்த ஆடை வடிவமைப்பு - "The Grand Budapest Hotel"
16.சிறந்த மேக்கப்/சிகை அலங்காரம் - "The Grand Budapest Hotel''
17.சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - "The Grand Budapest Hotel"
18.சிறந்த ஒலித் தொகுப்பு - ''American Sniper''
19.சிறந்த ஒலி மிக்ஸிங் - ''Whiplash''
20.சிறந்த காட்சியமைப்பு (visual effects) - ''Interstellar''
21.சிறந்த குறும்படம் - "The Phone Call"
22.சிறந்த அனிமேசன் குறும்படம் - feast
23.சிறந்த ஆவணப் படம் - "Crisis Hotline: Veterans Press 1"


Read more ...

பங்களாதேஷில் படகுகள் மோதி விபத்து:பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

Posted:

நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் பத்மா ஆற்றில் 150 பேருடன் பயணித்த படகு ஒன்று இன்னொரு சரக்குப் படகுடன் மோதி நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

நைஜீரியாவில் 7 வயதுச் சிறுமி தற்கொலைத் தாக்குதல்?:7 பேர் பலி

Posted:

வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள பொடிஸ்கும் என்ற நகரத்தில் அமைந்துள்ள சந்தை ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த 7 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருத்தி சோதனைச் சாவடியில் பரிசோதிக்கப் பட்ட போது தனது அங்கியில் பொருத்தப் பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் சம்பவ இடத்தில் 7 பேர் பலியானதாகவும் 19 பேர் காயம் அடைந்ததாகவும் அருகே இருந்த சில கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சுந்தர்சி அப்படி செய்யலாமா?

Posted:

முன் ஜென்ம கதையை 80 களில் எடுத்து, அதுவும் ரஜினியை வைத்து எடுத்தவர் முத்துராமன்.


Read more ...

டெல்லி சட்டப் பேரவையில் பாஜகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!

Posted:

டெல்லி சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ராகுல் காந்தி மூன்று வார கால ஓய்வில் உள்ளார்?

Posted:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3 வார கால ஓய்வில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சுமந்திரனின் கொடும்பாவியை எரித்தது நானல்ல; அவரோடு முரண்பாடு இருப்பது உண்மை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவி ஏற்றுகொண்டார்!

Posted:

பீகார் முதல்வராக நிதீஷ் குமாரும், 22 உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

நிதீஷ் குமாருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் அம்மாநில ஆளுநர் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று கடந்த ஆண்டு மே மாதம் 19ம் திகதி தமது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார் என்பதுக் குறிப்பிடத் தக்கது. இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே நிதீஷ் குமாருக்குப் பதிலாக பொறுப்பேற்ற ஜித்தன் ராம் மஞ்சி, நிதீஷ் குமார் இருவருக்குள்ளும் சுமுகமான உறவு இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிய வந்தது.

இதற்கிடையில் சட்டப்பேரவையில் தமது பெரும்பான்மை எம் எல் ஏக்களை ஜித்தன் ராம் மஞ்சி இழந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு பீகாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தற்போது மீண்டும் நிதீஷ் குமார் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப் பேரவைத் தொகுதிக்குத் தேர்தல் நடக்க உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Read more ...

நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோயை சோதிக்க உபகரணங்கள் பற்றாக்குறை!

Posted:

நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வரும் வேளையில் நோயை சோதிப்பதற்கான உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™