Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆவண திருட்டில் உயர்மட்ட அளவில் தொடர்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Posted: 20 Feb 2015 11:00 PM PST

ஆவண திருட்டு தொடர்பாக டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், ''இந்த ஆவண திருட்டில் உயர் மட்ட அளவிலான தொடர்பும் இருக்கிறது. போலீசார் அதை கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். பெட்ரோலியத்துறை மட்டும் அல்லாது நிலக்கரி, எரிசக்தி, ராணுவம்

ஆவண திருட்டில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

Posted: 20 Feb 2015 10:59 PM PST

மத்திய அரசு அலுவலகங்களில் நடந்த ஆவண திருட்டு பற்றி உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறுகையில், ''இதில் குற்றவாளிகள் யாரையும் தப்ப விடக்கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க

ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு

Posted: 20 Feb 2015 10:58 PM PST

டெல்லியில் மத்திய அமைச்சகங்களின் ரகசிய ஆவணங்கள் திருடி விற்பனை செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக டெல்லி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி 'பொறி' வைத்து சிலரை பிடித்து நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த திருட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

முலாயம் சிங் பேரன் மணவிழாவில் பங்கேற்கும் மோடி

Posted: 20 Feb 2015 10:42 PM PST

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேரனின் திருமண விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ்பிரதாப் சிங். இவர், உ.பி., மாநிலம் எடாவா தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இவருக்கும், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறை: ஓடும் காரில் நைஜீரிய சுற்றுலா பயணி கற்பழிப்பு- 4 பேர் கைது

Posted: 20 Feb 2015 09:58 PM PST

டெல்லியில் ஓடும் காருக்குள் வைத்து நைஜீரிய சுற்றுலா பயணியை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012-ல் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு

திருப்பதி நகர வளர்ச்சிக்கு ஏழுமலையானிடம் நிதி உதவி கேட்கும் சந்திரபாபு நாயுடு

Posted: 20 Feb 2015 09:48 PM PST

ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று திருப்பதி வந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்த அவர் திருப்பதியில் நடந்து வரும் அரசின் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது

Posted: 20 Feb 2015 08:43 PM PST

கேரள மாநிலம் பாற சாலையை அடுத்த உதயன் குளக்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக பாற சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஷைஜு

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிகிறது: ஜெயலலிதா வழக்கில் இரண்டு வாரத்தில் தீர்ப்பு

Posted: 20 Feb 2015 07:41 PM PST

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வழக்கு விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் படகு குண்டுவீசி அழிப்பு: சர்ச்சைக்குள்ளான கடலோர காவல்படை அதிகாரி மன்னிப்பு கேட்டார்

Posted: 20 Feb 2015 03:17 PM PST

பாகிஸ்தான் படகு தான் உத்தரவிட்டதாலேயே குண்டுவீசி அழிக்கப்பட்டது என்று கூறிய பிரச்சினைக்குரிய கடலோர காவல்படை அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய கடல் எல்லையில் நடமாடிய ஒரு பாகிஸ்தான் படகு டிசம்பர் 31-ந் தேதி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் பலியானார்கள். இந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சினை: டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

Posted: 20 Feb 2015 02:18 PM PST

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மும்பையில் மீண்டும் திங்கட்கிழமை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், வங்கி நிர்வாகிகள், மத்திய அரசின் பிரநிதிகளுக்கு இடையே ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன

மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்களும் திருடப்பட்டதா?: கைதான 7 பேரிடம் விசாரணை

Posted: 20 Feb 2015 01:11 PM PST

டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான சாஸ்திரி பவனில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அமைச்சகத்தின் அலுவலகத்தில் தனிச்செயலாளர் ராஜீவ் குமார், இணைச்செயலாளர்கள் சந்தீப் பவுண்ட்ரிக், யு.பி.சிங், இயக்குனர்கள் நளின்குமார், ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டவர்களின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், வரி

ஒபாமாவின் ஹெலிகாப்டரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கேபின்

Posted: 20 Feb 2015 10:23 AM PST

பெங்களூருவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியான 'ஏரோ இந்தியா 2015' நடந்து வருகிறது. இதில் பன்னாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விமானங்களை காட்சிக்கு வைத்துள்ளன. சாகசங்களும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கண்காட்சியின் மற்றொரு பகுதியாக விமான தயாரிப்புக்கான ஒப்பந்தங்களும் இந்திய நிறுவனங்களுடன் கையெழுத்தாகி வருகின்றன.

நிலம் கையப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு

Posted: 20 Feb 2015 09:46 AM PST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்றும், இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

பா.ஜனதா கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்

Posted: 20 Feb 2015 08:27 AM PST

மகாராஷ்டிராவில் பா.ஜனதா கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இருந்ததையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனேயின் கோத்ரூட் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வுற்று காணப்பட்டார். எனவே, அவரை குடும்பத்தினர் புனே தீனாநாத் மங்கேஸ்கர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ரெயில் சேவை மூலம் ஒவ்வொரு நகரையும் இணைக்க மத்திய அரசு விரும்புகிறது: மோடி

Posted: 20 Feb 2015 08:22 AM PST

நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக ரெயில்வே துறை திகழ்வதாகவும், ஒவ்வொரு நகரையும் ரெயில் சேவை மூலம் இணைக்க அரசு விரும்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் ரெயில் நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், ஹசாரிபாக்- கோடர்மா ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டின் வளர்ச்சிக்கு ரெயில்வே

பஞ்சாப் சிறைகளில் கிறிஸ்துவ கைதிகள் நோன்பிருக்க சிறப்பு ஏற்பாடு: துணை முதல் மந்திரி உத்தரவு

Posted: 20 Feb 2015 08:14 AM PST

கிறிஸ்தவர்களின் 40 நாள் துக்க தினமான சாம்பல் புதன் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த 40 நாட்களும் கடுமையான விரதம் இருக்கும் கிறிஸ்துவர்கள் வரும் ஏப்ரல் 3-ம்தேதி புனித வெள்ளியன்று தங்களது நோன்பினை நிறைவு செய்வார்கள். இந்நிலையில், பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள கிறிஸ்துவ கைதிகள் இந்த விரதத்தை கடைபிடிக்க வசதியான சூழ்நிலையையும், தேவையான ஏற்பாடுகளையும் செய்து தரும்படி மாநிலத்தில் உள்ள

பதவியை கண்டு வியாதிகள் அஞ்சுவதில்லை: குஜராத் சபாநாயகருக்கு பன்றிக் காய்ச்சல்

Posted: 20 Feb 2015 07:45 AM PST

குஜராத் மாநில சட்டசபையில் இவ்வாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23-ம்தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் கணபத் வாசவா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சூரத் நகரில் உள்ள மஹாவீர் மருத்துவமனையில் அவரை நேற்றிரவு

டெல்லியில் ஒபாமா நட்ட மரக்கன்று பட்டுப்போனதா?: தலைவிரித்தாடும் புதிய சர்ச்சை

Posted: 20 Feb 2015 07:28 AM PST

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஒரு போதி மரக்கன்றினை நட்டார். இந்த மரக்கன்று நடப்பட்ட ஒரே மாதத்தில் பட்டுப்போய் விட்டதாக சில இந்திய ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி அமெரிக்கா வரை எட்டியதால் ஒபாமா நட்ட மரக்கன்று இப்போது சர்வதேச ஊடகங்களுக்கு தீனியாகி உள்ளது. அந்த மரக்கன்றினை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள

நீதிமன்ற அறையில் பேய்: திறக்க மறுக்கும் அதிகாரிகள்

Posted: 20 Feb 2015 07:24 AM PST

பேய் இருப்பதாக கூறி நீதிமன்ற அறையை மூடி வைத்திருப்பது மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமன்றத்தில் உள்ள ஒரு விசாரணை அறையில் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கோர்ட்டின் நுழைவு வாயிலில் உள்ள இந்த அறையைத்தான் பேய் அறை என்று கூறி மூடி வைத்துள்ளனர். உடைந்த நாற்காலிகள் மற்றும் டேபிள்களை அந்த அறையில் போட்டு வைத்துள்ளனர்.

பதவிக்காலம் நீட்டிப்பு விவகாரம்: அமர்த்தியா சென் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

Posted: 20 Feb 2015 06:48 AM PST

நாலந்தா பல்கலைக்கழக வேந்தர் அமர்த்தியா சென் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மீண்டும் அந்த பதவியில் வகிப்பதற்காக அவர் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அந்த விண்ணப்பம் மீது முடிவு எடுக்க அரசு தாமதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய அமர்த்தியா சென், தனது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக, பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தனது விண்ணப்பம் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுவது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™