Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மின் புத்தகம் தேவை

Posted: 14 Feb 2015 09:37 AM PST

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்- வைரமுத்து எழுதியது

E -புக் லிங்க் கொடுத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறேன்

திரைப்பட பாடல்

Posted: 14 Feb 2015 09:33 AM PST

திரைப்பட பாடல்

நீ என்ன சொன்னாலும் சங்கீதா,
நெஞ்சம் சம்மதம் சொல்லதா !
நான் எங்கு சென்றாலும் சங்கீதா,
உள்ளம் உன் வசம் சேராதா....
வஞ்சி இளமானே மானே .....
விளையாட்டு பிள்ளை நானே....

இப்பாடல் இடம் பெற்ற படம் பெயர் அல்லது பாடலுக்கு லிங்க் யாராவது தந்து உதவவும்

வெகு நாள் தேடல் ... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

இவன் தான் பாலா

Posted: 14 Feb 2015 08:22 AM PST

கண்கள் வரை மட்டும் செல்லும் படைப்புகள் உண்டு , இதயம் வரை செல்லும் படைப்புகளும் உண்டு , ஆனால் இவரின் படைப்புகள் உயிரின் வேர் வரை ஊடுருவி சென்று நம்மை உலுக்கி எடுத்துவிடும், பாலா உன்னத படைப்புகளின் உண்மையான முகம் ,சாதாரண மனிதர்களின் வாழ்கையை வைத்து சரித்திர படைப்புகளை தந்து கொண்டிருக்கும் பிதாமகன் படைப்புகளை மட்டுமல்ல , விக்ரம் ,சூர்யா ,ஆர்யா என நல்ல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார் பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு பருந்துகளின் சிறகை மாட்டிவிட்டு சிகரம் ...

எனக்கு செவ்வாய் கிரகம்தான் பிடிச்சிருக்கு...! - மொக்க ஜோக்

Posted: 14 Feb 2015 08:10 AM PST

கு.காமராஜ்

Posted: 14 Feb 2015 07:45 AM PST

பெயர்:கு.காமராஜ்
சொந்த ஊர்:அகஸ்தீஸ்வரம், குமரிமாவட்டம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் தகவல்கள் தேடும்போது
பொழுதுபோக்கு: கவிதை, கட்டுரை,மேடைப்பேச்சு
தொழில்:அரசுப்பணி
மேலும் என்னைப் பற்றி:இரண்டு முதுகலைப்பட்டங்களும், தமிழில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளேன் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துவருகிறேன்.

வள்ளுவரின் வன்சொற்கள்

Posted: 14 Feb 2015 06:47 AM PST

வள்ளுவரின் வன்சொற்கள்     கு.காமராஜ்   எம்.ஏ., எம்.ஏ., எம்.பில்,       முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம். "இன்சொல்பேசி  பணிவுடன் நடக்கும் ஒருவருக்கு வேறெந்தச் சிறப்புகளும் தேவையில்லை, அவர்தம் இன்சொல்லும் ...

சென்னை I I T வனக் காட்சிகள் !

Posted: 14 Feb 2015 06:24 AM PST

சென்னை  I I T வனக் காட்சிகள் ! சென்னை I I T   ஒரு சிறந்த கல்வி மையம் என்பதை உலகு அறியும் ! ஆனால் அந்த வளாகம் இயற்கை ததும்பும் வனச் செல்வம் கொண்டது என்பதைப் பலர் அறியார் ! நான் ஓர் ஆய்விற்காக 14-2-2015 அன்று அங்கு சென்றபோது கண்ட காட்சிகள் ! -

சட்ட குறிப்புகள்

Posted: 14 Feb 2015 06:10 AM PST

சட்ட குறிப்புகள் 1. பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பணம் போடாதீர்கள். அது சட்டப்படி குற்றம். 2. தேதி நிரப்பாமல் காசோலைகள் கொடுக்காதீர்.. 3. வில்லங்கம் பார்க்காமல் சொத்து வாங்காதீர்கள். 4. செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும். 5. காவல் துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் 6. நுகரும் பொருட்கள் தரமில்லாவிட்டால் , சாப்பிடும் உணவு தரமில்லாவிட்டால் வழக்கிட்டு நிவாரணம் பெறலாம். 7. ஒரு இந்திய குடிமகன் இந்திய நிலப்பரப்பிற்குள் எங்கு வேண்டுமானலும் வசிக்கலாம். ...

தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள்

Posted: 14 Feb 2015 06:05 AM PST

தொல்காப்பியத்தில் உளவியல் கோட்பாடுகள்                                                                                   முனைவர்.ப.ஆனந்தநாயகி காமராஜ்., உதவிப்பேராசிரியர்.,                                                                                    நா.க.இரா அரசு மகளிர் கலைக்கல்லூரி., நாமக்கல்.                தமிழர்தம் பழைமையையும், பண்பாட்டு மேம்பாட்டையும் தெளிவாக விளக்கும் இலக்கணநூல் தொல்காப்பியம். தமிழ்மொழியின் மெல்லிய ஒலிநயத்தையும், சிறுசிறு சொற்குழுமத்தையும், தொன்மைக்கால சமுதாயமரபையும், ...

கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள்

Posted: 14 Feb 2015 05:59 AM PST

கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள்                                                                                                                                                                                                              முனைவர். ப.ஆனந்தநாயகி காமராஜ்                                                                                                        உதவிப் பேராசிரியர்                                                                                                       ...

சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!

Posted: 14 Feb 2015 05:00 AM PST

சென்னைத் தமிழில் திருக்குறள் பொழிப்புரை..!!! பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ஜபுர்தஸ்தா நீ கீறியோ, இல்லாங்காட்டி சொங்கியானாக் கீறியோ... ரெண்டுத்துக்குமே ஒன்னோட டீலிங்ஸ்தான் மாமு ரீஸனு! பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். பட்சவனுங்க கூட்டத்துக்குள்ளாற நொயஞ்சு உதார் வுட்டியானா... மவனே, சத்தாய்ச்சிருவானுங்கோ! ஒனுக்கு ரொம்ப ஷேமாப் பூடும்! கபர்தார்! தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். டுபாக்கூர் சோமாறிய ...

சர்வ தேச ரேடியோ தினம் கொண்டாட்டம்

Posted: 14 Feb 2015 04:02 AM PST

- புதுடில்லி: புது டில்லி் அருகே உள்ள நொய்டாவில் சர்வதேச ரேடியோ தினம் கொண்டாடப் பட்டது. ஐ.நாவின் ரேடியோ 1946-ம் ஆண்டு (பிப்-13) ஒலிபரப்பானதை அடுத்து ரேடியோ தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் இத்தினம் 2012-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நொய்டாவில் கொண்டாடப்பட்ட விழாவில் ஸ்லோவேனியா தூதர் டார்சா பவ்தாஸ் குரட், பா.ஜ., உறுப்பினர் சாசியா இல்மி, வணிக வரித்துறை துணை கமிஷனர் பங்கஜ்குமார்சி்ங் உட்பட பலர் கலந்து கொண்டனர். - --------------------தினமலர் படம்: ...

உலககோப்பை:கிரிக்கெட்:-

Posted: 14 Feb 2015 03:43 AM PST

கிறைஸ்ட்சர்ஸ்: நியூசிலாந்தில் நாட்டில் துவங்கிய உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 19ஒவரில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன் எடுத்து விளையாடி வருகிறது. - -------------------------------- 27 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு151 ரன் எடுத்து விளையாடி வருகிறது -

லவ்வுக்கு ஏதுங்க லேங்வேஜ்!

Posted: 14 Feb 2015 03:41 AM PST

- தமிழ் பெண்ணான மகாலட்சுமி, பஞ்சாப் சிங்கான சரப்ஜித்சிங் இருவருமே மொழி தெரியாமல் காதலித்து மணந்தவர்கள். "நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவள். சென்னையில் என்னுடைய சித்தி வீட்டில்தான் வளர்ந்தேன். அப்போது இவர் தனி நபராக எதிர்வீட்டில் குடியிருந்தார். அடிக்கடி பார்த்துக் கொள்வோம்.அவருக்கு என்னிடம் பேச தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. கான்டிராக்ட் தொழில் செய்து வந்ததால் எப்போதும் பிஸியாக இருப்பார். என்னுடைய நடவடிக்கைகள் அவருக்குப் பிடித்துப் போக, சித்தி வீட்டுக்கு வருவதுபோல் ...

சிவன் போற்றி - 108

Posted: 14 Feb 2015 03:31 AM PST

சிவன் போற்றி - 108 ஓம் அம்மையே அப்பா போற்றி ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி ஓம் அளப்பிலா அருளே போற்றி ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி ஓம் அன்பெனும் மலையே போற்றி ஓம் ஊங்கார ஒலியே போற்றி ஓம் அடியார்கள் துணையே போற்றி ஓம் ஊக்கமே உணர்வே போற்றி ஓம் அணுவினுள் அணுவே போற்றி ஓம் எல்லையில் எழிலே போற்றி ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி ஓம் எரிதவழ் விழியாய் போற்றி ஓம் அகரமே அறிவே போற்றி ஓம் எண்குண வடிவே போற்றி ஓம் அறிந்திடு மொழியே போற்றி ஓம் எருதேறும் ஈசா போற்றி ஓம் அகத்தனே போற்றி போற்றி! ஓம் ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 14 Feb 2015 03:29 AM PST

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

காதலர் தினம்...!! [ கவிதை ]

Posted: 14 Feb 2015 02:54 AM PST

* கனியைக் கடித்தச் சுவையிலிருந்து தான் தொடங்கியது ஆதிக் காதல். இச் சுவையின் இனிப்பு மனிதனுக்கு மன்மதப் போதையூட்டிவிட்டதால் யுகயுகமாய் பருகி ருசித்து வருகின்றான். உணர்ச்சிகளில் இரவு உற்சாகக் கொண்டாட்டம் உடல் வலி மெய் மறந்து காமத்தை வென்று உள்ளத் தெளிவு பெறுகின்றான். பிரபஞ்சத்தின் உள்நுழைந்து உள்ளொளிக் காண்கின்றான். காதல் இயற்கையின் உள்மன வெள்ளோட்டம் உலகமெங்கும் ஊற்றெடுத்து உற்சாக வெள்ளமாய் பாயும் சிறுதுளிப் பெருவெள்ளம் காதல் கொடுத்த பரிசுகளே இந்த உலக மக்கள் யாதும் ...

காதல்

Posted: 14 Feb 2015 02:48 AM PST




காதல் செயுங்க சார், லைப் நல்லா இருக்கும்

ராஜிராணி

எங்களுக்கும் காதலர்தினம் இன்றுதான் [/b]

Posted: 14 Feb 2015 02:43 AM PST

எங்களுக்கும் காதலர்தினம் இன்றுதான்




ரமணியன்

திருக்குறள் காவியம்

Posted: 14 Feb 2015 02:34 AM PST

இசை வடிவில் 1330 திருக்குறளையும் கேட்டு மகிழுங்கள்! MP3 யாகத் தரவிறக்கம் செய்ய! http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam_158MB.mp3 158MB 64 bitrate http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam.mp3 476MB 192 bitrate

புலவி நுணுக்கம்!

Posted: 14 Feb 2015 02:29 AM PST

புலவி நுணுக்கம் பற்றி முதன்முதல் புலப்படுத்தியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். "உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்'' (குறள்:1302) கறி காயின் அளவறிந்து உப்பிட்டுச் சமைத்ததற்கு ஒக்கும்; புலவியும் கலவியும் மிகாமலும் குறையாமலும் இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் பரிதியார் என்ற உரைகாரர். இப்புலவி இன்ப நுகர்ச்சிக்குத் துணை நின்று அதனை மிகுவிப்பதென்பது தமிழ் அக நூல்களில் பேசப்படும் உண்மை. அக வாழ்க்கையின் அன்பு தோய்ந்த உணர்வுகளை அவை அழகாகப் பட்டியலிட்டன. "குறள் என்ற இலக்கணத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™