Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லை-சொத்து வரி ரத்து

Posted: 27 Feb 2015 11:19 PM PST

நிதி மந்திரி அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- பினாமிகள் பெயரில் சொத்து சேர்ப்பதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். வருமான வரி விலக்கு வரம்புகள் தொடரும். 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் வாங்கும் போது பான்காடு விவரம் அவசியம். வரி தவிர்ப்பு தடுப்பு விதிமுறை மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் 7 ஆண்டு சிறை

Posted: 27 Feb 2015 11:13 PM PST

வரி மற்றும் கறுப்பு பணம் மீட்பு நடவடிக்கை குறித்து மத்திய பட்ஜெட்டில் உள்ள தகவல்கள் வருமாறு:- அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி 5 சதவீதம் குறைக்கப்படும். பின்னர் இதை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை மீட்க விரைவில் சட்ட திருத்த மசோதா கொண்டு

ராணுவத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு

Posted: 27 Feb 2015 11:08 PM PST

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- 2.50 லட்சம் கிராமங்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 1.75 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மற்றும்

கூடங்குளம் 2–வது பிரிவு இந்த ஆண்டு தொடங்கும்

Posted: 27 Feb 2015 11:01 PM PST

நாடெங்கும் 5 இடங்களில் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படும். அந்த மின் திட்டங்கள் தலா 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2–வது யூனிட் பணி

வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாக குறைப்பு

Posted: 27 Feb 2015 10:58 PM PST

மத்திய பட்ஜெட்டில், வணிக நிறுவனங்களுக்கான வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் உலகத்தரத்திலான நிதி சேவை மையங்கள் நிறுவப்படும். கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்படும். கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை

அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயங்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்

Posted: 27 Feb 2015 10:52 PM PST

2015ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:- * வங்கிகளில் தங்கத்தை டெபாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் * அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை விற்பனைக்காக அரசு வெளியிடும் * கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை

பொது பட்ஜெட் 2015: சமையல் எரிவாயு நேரடி மானியம் படிப்படியாக உயர்த்தப்படும்

Posted: 27 Feb 2015 10:47 PM PST

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * முதியவர்களுக்கு உதவும் கருவிகள் வழங்க புதிய திட்டம் அறிமுகம் * கிராமப்புற வளர்ச்சிக்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * சமையல் எரிவாயுவுக்கான நேரடி மானியம் படிப்படியாக உயர்த்தப்படும்

விவசாயிகளுக்கு ரூ.8.5 லட்சம் கோடி கடன்: பட்ஜெட்டில் ஒதுக்கீடு

Posted: 27 Feb 2015 10:43 PM PST

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * நாடு முழுவதும் 1 லட்சம் கி.மீ. தூரம் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும். * நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டத்தில் 6 கோடி கழிப்பறைகள்

Posted: 27 Feb 2015 10:43 PM PST

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:– இந்தியாவை தூய்மை தேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஏழ்மையை அகற்றுவதே அனைத்து திட்டங்களின் நோக்கம். வோண்

11 கோடி பேருக்கு நேரடி மானியம்: எம்.பி.க்களுக்கு சமையல் எரிவாயு மானியம் கிடையாது

Posted: 27 Feb 2015 10:41 PM PST

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:– * மானியங்கள் ஏழைகளை மட்டுமே சென்றடைய அனைவரும் உதவ வேண்டும். * சமையல் எரிவாயு மானியம் பெறுவதை எம்.பி.க்கள் கைவிட வேண்டும். * மானியங்கள் தவறானவர்களை சென்றடைவதை தடுக்க நடவடிக்கை

2000 கிராமங்களுக்கு சூரிய மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும்: பட்ஜெட்டில் தகவல்

Posted: 27 Feb 2015 10:09 PM PST

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மோடி அரசு பதவியேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட் இது. இதில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்கி நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:- இந்தியாவின் பட்ஜெட்டை உலகமே எதிர்பார்த்து வருகிறது. 2016-ம்

நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்க ஆந்திரா எல்லையில் மத்திய பாதுகாப்பு படை

Posted: 27 Feb 2015 09:57 PM PST

ஆந்திரா–தெலுங்கானா எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது. சதிஷ்கர் வனப்பகுதியில் உள்ள மாவோஸ்டு தீவிரவாதிகள் தெலுங்கானா வழியாக ஆந்திராவில் ஊடுருவாமல் இருக்க மத்திய படையை அனுப்ப வேண்டும் என்று ஆந்திர அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அருண் ஜெட்லி தகவல்

Posted: 27 Feb 2015 09:49 PM PST

பாராளுமன்றத்தில் இன்று 2015-2016-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்தார். நரேந்திர மோடி அரசின் முதலாவது முழுமையான பொது பட்ஜெட் இதுவாகும். வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வு, பல்வேறு வரிச்சலுகைள், முதலீட்டுக்கான புதிய திட்டங்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு

காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்க ராகுல்காந்தி தயக்கம்?: சோனியாவுடன் கருத்து வேறுபாடு நீடிப்பு

Posted: 27 Feb 2015 09:25 PM PST

காங்கிரசுக்கு ஏற்பட்ட தொடர் தோல்வி காரணமாக கட்சி தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை துணைத்தலைவர் ராகுல்காந்தி கவனித்து வந்ததால் அவர் தான் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று காங்கிரசில் சிலர் குற்றம் சாட்டினர். மேலும் ராகுலின் செயல்பாடுகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அதிருப்தி அடைந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு

தலைநகருக்காக விவசாய நிலத்தை பறிப்பதா?: சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பவன்கல்யாண் கட்சியினர் தர்ணா

Posted: 27 Feb 2015 09:23 PM PST

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் பொறுப்பாளருமான நடிகர் சீரஞ்சிவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கினார். ''தேர்தலில் போட்டியிட மறுத்த அவர் ஆந்திராவில் பதவி ஏற்கும் அரசின்

கேரளாவில் நள்ளிரவு வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் விழுந்த தீப்பிழம்பு: பொதுமக்கள் ஓட்டம்

Posted: 27 Feb 2015 09:22 PM PST

கேரளாவின் எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் குறைந்தாலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு ஆன பின்பும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

தலைமை ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூ. எம்எல்ஏ கைது

Posted: 27 Feb 2015 09:05 PM PST

கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த ஸ்ரீகண்டபுரத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது 53). இவர் தளிபரம்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி திரட்டிய போது, தளிபரம்பு

சோலார் பேனல் மோசடி வழக்கு: விசாரணை கமிஷன் முன்பு அச்சுதானந்தன் நேரில் ஆஜர்

Posted: 27 Feb 2015 09:03 PM PST

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் குற்றம் சாட்டினார். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

திருச்சூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை

Posted: 27 Feb 2015 08:39 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒலவக்கரை அருகேயுள்ள காந்தி கிராம பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 65). இவரது மனைவி சுஷ்மா(63). இருவரும் வெளிநாட்டில் வேலைபார்த்தனர். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினர்.

உல்லாச படகில் பயணம்: நிதின் கட்காரி மீது விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 27 Feb 2015 07:17 PM PST

மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி மீது புதிய புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™