மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்துகோஷ் மீது மீன்பிடி படகு மோதல்: பெரிஸ்கோப் சேதம்
- டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்
- டெல்லியில் அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது
- திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு டோக்கனை எளிதாக பெற புதிய ஏற்பாடு
- பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியில் 50 சதவீதத்தை தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்: அவையில் ஜனாதிபதி உரை
- மகாராஷ்டிரா முதல்வர் மீது சிவசேனா கடும் தாக்கு: முதல்வர் மட்டுமே மாறியுள்ளார் - மாநிலத்தில் மாற்றம் நிகழவில்லை
- விவசாயிகள் தற்கொலை - சந்திரபாபு நாயுடு ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்: ஜெகன்மோகன் ரெட்டி
- பிடிவாதத்தை கைவிட்டார்: மோடியை சந்தித்து பேச நிதிஷ்குமார் முடிவு
- நில அபகரிப்பு வழக்கு விசாரணை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல்
- எதிர்கட்சி தலைவர் பதவி ராஜினாமாவா?: ஆதரவாளர்களுடன் அச்சுதானந்தன் அவசர ஆலோசனை
- மோடி உடை ரூ.4½ கோடிக்கு ஏலம்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை
- ஓடும் காரில் ஆப்பிரிக்க பெண் கற்பழிப்பு: மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு
- காஷ்மீரில் பதுக்கி வைத்திருந்த தீவிரவாதிகளின் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு
- வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது?: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்
- 12 துறைமுகங்களில் ரூ.50 ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் நகரங்கள்: நிதின் கட்காரி தகவல்
- பன்சாரே கொலை வழக்கு: குற்றவாளிகளை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு- போலீஸ் அறிவிப்பு
- வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 48 பேர் பலி
- மாணவ-மாணவிகள் தேர்வை ஒரு கொண்டாட்டமாக கருதி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை
- வேதங்களை ஊக்குவிக்க அரசு பணம் செலவிடவில்லை: ராம்தேவ் பேச்சு
- பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
| கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்துகோஷ் மீது மீன்பிடி படகு மோதல்: பெரிஸ்கோப் சேதம் Posted: 22 Feb 2015 10:52 PM PST இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கி கப்பல், மீன்பிடி படகுடன் மோதியதில் அதன் பெரிஸ்கோப் சேதமடைந்தது. 3000 டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுவருகிறது. அரபி கடலில் கடந்த வியாழக்கிழமையன்று நீர்மூழ்கி கப்பலில் உள்ள குழாய் வழியாக |
| டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் Posted: 22 Feb 2015 10:50 PM PST டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். டெல்லி சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. |
| டெல்லியில் அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது Posted: 22 Feb 2015 10:49 PM PST நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு 77 வயது சமூக ஆர்வலரான அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2நாள் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்தார். அன்னாஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு |
| திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு டோக்கனை எளிதாக பெற புதிய ஏற்பாடு Posted: 22 Feb 2015 10:47 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு தவிர, தரிசன டிக்கெட் அடிப்படையில் ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு டோக்கன் வாங்க முன்பு தனி வரிசையில் காத்து இருக்க |
| Posted: 22 Feb 2015 10:47 PM PST பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி மார்ச் 20–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர் உரையுடன் அவை தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் பிரணாப் கூறுகையில்: |
| Posted: 22 Feb 2015 10:21 PM PST மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி தேர்தல் வெற்றிக்கு பின், ஆம் ஆத்மி துடைப்பம் - பா.ஜ.க. தூசியை வாரியது என தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியட்டது சிவசேனா. |
| விவசாயிகள் தற்கொலை - சந்திரபாபு நாயுடு ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்: ஜெகன்மோகன் ரெட்டி Posted: 22 Feb 2015 10:14 PM PST ஆந்திராவில் கடன் தொல்லையில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 29 பேர் தற்கொலை செய்து இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் |
| பிடிவாதத்தை கைவிட்டார்: மோடியை சந்தித்து பேச நிதிஷ்குமார் முடிவு Posted: 22 Feb 2015 10:12 PM PST பீகார் மாநில முதல்– மந்திரியாக நேற்று 4–வது தடவையாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவருடன் 22 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய அமைச்சரவை விரைவில் பட்ஜெட் தயாரிப்புக்கான ஏற்பாடுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில், ''பீகார் முதல்– மந்திரியாக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு |
| நில அபகரிப்பு வழக்கு விசாரணை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் Posted: 22 Feb 2015 09:30 PM PST நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க 2011–ம் ஆண்டு தமிழக அரசு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதன்படி நில அபகரிப்பு தொடர்பாக புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது. |
| எதிர்கட்சி தலைவர் பதவி ராஜினாமாவா?: ஆதரவாளர்களுடன் அச்சுதானந்தன் அவசர ஆலோசனை Posted: 22 Feb 2015 08:48 PM PST கேரள மாநிலம் ஆலப்புழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு நடந்து வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான அச்சுதானந்தன் மீது மாநில செயலாளர் பினராய்விஜயன் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார். மாநாட்டில் நடந்த விவாதத்தில் அச்சுதானந்தன் |
| மோடி உடை ரூ.4½ கோடிக்கு ஏலம்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Posted: 22 Feb 2015 05:07 PM PST அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி அணிந்திருந்த, அவரது பெயர் பொறிக்கப்பட்ட 'பந்த்கலா' சூட் சூரத் நகரில் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதுபற்றி நேற்று ஆமதாபாத் நகரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் |
| ஓடும் காரில் ஆப்பிரிக்க பெண் கற்பழிப்பு: மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு Posted: 22 Feb 2015 04:17 PM PST டெல்லியில் ஓடும் காரில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் ஒரு கும்பலால் டெல்லி கிழக்கில் உள்ள சில்லா எல்லை பகுதியில் கற்பழிக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டது. |
| காஷ்மீரில் பதுக்கி வைத்திருந்த தீவிரவாதிகளின் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு Posted: 22 Feb 2015 03:50 PM PST காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கஜ்ரியால் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது?: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் Posted: 22 Feb 2015 03:32 PM PST தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் |
| 12 துறைமுகங்களில் ரூ.50 ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் நகரங்கள்: நிதின் கட்காரி தகவல் Posted: 22 Feb 2015 02:51 PM PST சென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறைமுகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 'ஸ்மார்ட்' நகரங்கள் கட்டப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரி, டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| பன்சாரே கொலை வழக்கு: குற்றவாளிகளை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு- போலீஸ் அறிவிப்பு Posted: 22 Feb 2015 12:49 PM PST மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கடந்த 16-ந்தேதி, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் கோவிந்த்ராவ் பன்சாரே மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் மர்ம நபர்களால் சுடப்பட்டனர். இதில் படுகாயமடைந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்சாரே, 20-ந்தேதி உயிரிழந்தார். |
| வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 48 பேர் பலி Posted: 22 Feb 2015 11:52 AM PST வங்க தேசத்தில் எம்.எல். முஸ்தபா என்ற படகு, நேற்று 200-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டுரியா என்ற இடத்தில் இருந்து தவிலத்தியா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. |
| மாணவ-மாணவிகள் தேர்வை ஒரு கொண்டாட்டமாக கருதி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை Posted: 22 Feb 2015 10:39 AM PST பிரதமர் நரேந்திரமோடி 'மன் கி பாத்' என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை |
| வேதங்களை ஊக்குவிக்க அரசு பணம் செலவிடவில்லை: ராம்தேவ் பேச்சு Posted: 22 Feb 2015 10:11 AM PST சிறுபான்மையின அமைப்புகளுக்கு செய்ததை போன்று வேதங்களை ஊக்குவிக்க நரேந்திர மோடி அரசு தனது பர்சை திறந்து பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றும் வேதங்களை படிப்பதற்கு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் யோகா குரு ராம்தேவ் கேட்டு கொண்டுள்ளார். |
| பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 22 Feb 2015 09:32 AM PST பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் 4–வது முறையாக மீண்டும் பதவியேற்றார். அதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது: பீகார் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிதிஷக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |