Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐதராபாத்தில் தலை ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்: அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு

Posted: 07 Feb 2015 10:33 PM PST

தெலுங்கானாவை சேர்ந்த முரளிகவுடு–நாகலட்சுமி தம்பதிக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தலை ஒட்டிய நிலையில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இரட்டை குழந்தைக்கு வீனா–ராணி என பெயர் சூட்டினார்கள். குழந்தையை பராமரிக்க முடியாததால் பெற்றோர்கள் குழந்தையை ஐதராபாத்தில் உள்ள நீலோபர் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பில் ஒப்படைத்தனர். ஆஸ்பத்திரி

காளஹஸ்தி கோவிலில் 17–ந் தேதி மகா சிவராத்திரி: ராகு– கேது பூஜைகள் ரத்து

Posted: 07 Feb 2015 10:19 PM PST

ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாகவும், ராகு– கேது பரிகாரபூஜை தலமாகவும் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது உண்டு இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வருகிற 12–ந்தேதி தொடங்குகிறது. 24–ந் தேதி வரை 13 நாட்கள் விழா நடைபெறுகிறது.

டெல்லி தேர்தல் நிதி: ரூ. 30 கோடி இலக்கில் 18 கோடியை மட்டுமே திரட்டி சறுக்கலை சந்தித்த ஆம் ஆத்மி

Posted: 07 Feb 2015 10:18 PM PST

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் 30 கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இலக்கு நிர்ணயித்தது. அதன்படி தீவிர நிதி திரட்டும் பணியிலும் அக்கட்சி ஈடுபட்டது. அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நிதி வசூலிக்க பல புதிய

காஷ்மீர் முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டும்: பிரிவினைவாத தலைவர் வேண்டுகோள்

Posted: 07 Feb 2015 10:08 PM PST

இந்துக்கள் அனைவரும் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் சாத்வி கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஆசித் உசேன் காஷ்மீர் முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருப்பதியில் தேங்காய் தட்டுப்பாடு பக்தர்கள் தவிப்பு

Posted: 07 Feb 2015 09:32 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசனம் செய்யும் பக்தர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வெளியே மாவிளக்கு ஏற்றி தேங்காய் உடைத்து வழிபடுவது உண்டு தேங்காய்கள் தேவஸ்தான கடையிலேயே பக்தர்கள் பெற வேண்டும்.

மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆந்திராவில் தயாராகும் புதிய தலைமைச் செயலகம்

Posted: 07 Feb 2015 09:30 PM PST

ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா அருகே அமைக்கப்பட உள்ளது. இதற்காக விஜயவாடா மற்றும் குண்டூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புதிய தலைநகர் சிங்கப்பூர் தொழில் நுட்பத்துடன் நவீன முறையில் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

Posted: 07 Feb 2015 09:10 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு நந்தியோடு பகுதியில் ஒரு பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 10–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது கிரிஷ் (வயது40),

பாலக்காடு அருகே விவசாயியை மிதித்துக் கொன்ற காட்டுயானை

Posted: 07 Feb 2015 08:16 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள சோலையார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வட்டலக்கரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மாரிமுத்து (வயது 31). விவசாயி. இவர் இரவு 8 மணிக்கு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்து பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாரிமுத்து காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த காட்டு யானை மாரிமுத்துவை துரத்தியது.

உத்தரகாண்ட் மாநில மந்திரி சுரேந்திர ராகேஷ் மரணம்

Posted: 07 Feb 2015 07:25 PM PST

உத்தரகாண்ட் மாநில மந்திரி சுரேந்திர ராகேஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் குர்காண் மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் உயிர் பிரிந்தது. 48 வயதான

சாதனை புத்தகத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பெயர்

Posted: 07 Feb 2015 07:11 PM PST

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. ஒரே தொகுதியில், ஒரே கட்சி சார்பில், தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்ற முதல் பெண் என்பதே அவரது சாதனை. முதன்முதலாக அவர் 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டெல்லி சட்டசபை தேர்தல்: 67 சதவீதம் ஓட்டுப்பதிவு

Posted: 07 Feb 2015 06:45 PM PST

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 7-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

மனைவியை எரித்து கொன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

Posted: 07 Feb 2015 02:49 PM PST

மும்பை தகிசர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சீமா. இவர்களுக்கு 3 குழந்தைகள். ராகேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி அவர் மனைவி சீமாவிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டார்.

கே.ஆர்.பேட்டை அருகே ஒய்சாலர்கள் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Posted: 07 Feb 2015 02:08 PM PST

கே.ஆர்.பேட்டை அருகே பூமிக்கு அடியில் புதைந்திருந்த ஒய்சாலர்கள் காலத்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா வலகெரேமெனசா கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் இருந்து தோட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு மடை ஒன்று உள்ளது. அந்த பகுதியில்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக குலாம் நபி ஆசாத் மீண்டும் தேர்வு

Posted: 07 Feb 2015 06:46 AM PST

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக குலாம் நபி ஆசாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதாவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து தலா இரண்டு இடங்களுக்கு போட்டியிட்டன. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் இணைந்து மூன்று இடங்களுக்குப் போட்டியிட்டன.

டெல்லியில் ரூ.1.26 கோடி மது பாட்டில்கள்- 40 துப்பாக்கிகள் பறிமுதல்

Posted: 07 Feb 2015 06:40 AM PST

டெல்லியில் இன்று பலத்த பாதுகாப்புடன் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின்போது 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான 53 ஆயிரம் லிட்டர் மது வகைகளும், 40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.74 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள், 40 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 31-39, பா.ஜ.க. 27-35 இடங்களில் வெற்றி பெறலாம்: புதிய கணிப்பு முடிவுகள்

Posted: 07 Feb 2015 05:26 AM PST

டெல்லி சட்டசபைக்கு இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கணிப்பின்படி, 70 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 31-39 இடங்களிலும், பா.ஜ.க. 27-35 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2-4 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது.

பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மான்ஜி திடீர் நீக்கம்: மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்

Posted: 07 Feb 2015 04:10 AM PST

பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல்மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். தற்காலிக ஏற்பாடாக ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் சரத்யாதவுடனும், நிதிஷ்குமாருடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதனால் அவரை முதல் மந்திரி

திருமண விழாவில் வேடிக்கைக்காக துப்பாக்கிச் சூடு: குண்டு பாய்ந்து வாலிபர் பலி

Posted: 07 Feb 2015 02:50 AM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் எஹான் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண விருந்தின்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கேளிக்கை பொங்கி வழிந்தது. விருந்தில் பங்கேற்ற ஒருவர் ஆனந்த மிகுதியால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

நிதிஷுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: சட்டமன்றத்தை கலைக்க ஆளுநருக்கு மான்ஜி பரிந்துரை

Posted: 07 Feb 2015 02:36 AM PST

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக ஜித்தன்ராம் மான்ஜி பதவி வகித்து வருகிறார். அவருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களான சரத்யாதவ், நிதிஷ்குமார் ஆகியோருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மான்ஜியை பதவி விலகுமாறு மறைமுகமாக கட்டளையிட்டனர். ஆனால் பதவி விலக மான்ஜி மறுத்து விட்டார். மேலும்

டெல்லியில் பிற்பகல் 3 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு

Posted: 07 Feb 2015 02:34 AM PST

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டெல்லியில் மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் பிரம்மா கூறியதாவது:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™