மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடியின் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோட் சூட்: 1 கோடிக்கு ஏலம் கேட்ட சூரத் தொழிலதிபர்
- ஐ.ஜ.தளத்தை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க நிதிஷ் கோரிக்கை: சபாநாயகரின் அனைத்து கட்சி கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு
- பாதுகாப்பு தளவாட இறக்குமதியில் 20 முதல் 25 சதவீதத்தை குறைத்தால் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்: மோடி
- லஞ்சம் வாங்கி ரூ.10 ஆயிரம் கோடி சொத்து குவித்த அரசு என்ஜினீயரிடம் சி.பி.ஐ. விசாரணை
- இலங்கை அதிபர் சிறிசேனா திருப்பதியில் சாமி தரிசனம்
- மோடியின் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோட் சூட் இன்று ஏலம்: கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு தொகையை வழங்க முடிவு
- டெல்லியில் ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம் இல்லை: தேர்தல் வாக்குறுதியை கெஜ்ரிவால் நிறைவேற்றினார்
- மும்பை அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த 78 பக்தர்கள் மீட்பு
- மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் 2 விமானிகள் தற்காலிக பணி நீக்கம்
- வெளியே போ என வாசகம் எழுதி அமெரிக்காவில் இந்து கோவிலில் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்
- ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் 25-ந்தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்
- மணல் திருட்டு இடங்கள் செயற்கைகோள் மூலம் கண்காணிப்பு: மத்திய மந்திரி உறுதி
- கேதர்நாத் கோவில் ஏப்ரல் 24-ந்தேதி திறப்பு
- ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சி: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
- உலகிலேயே மிக உயரமான மும்பை குடியிருப்பு கட்டிடம்
- இந்திய அரசியலில் அதிசயம்: டெல்லி விழாவில் கெஜ்ரிவாலின் அருகில் அமர்ந்து உடல்நலம் விசாரித்த கிரண் பேடி
- 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு எதிராக புதிய சட்டம்: மத்திய மந்திரி தகவல்
- மான்ஜி ஆதரவு மந்திரிகள் 7 பேர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து அதிரடி நீக்கம்
- பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 624 ஆனது: கட்டுப்படுத்த மத்திய மந்திரி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை
- மோடியின் ஆட்சியில் தொழிலதிபர்களுக்கு தான் நல்ல காலம் பிறந்துள்ளது: அன்னா ஹசாரே விளாசல்
| மோடியின் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோட் சூட்: 1 கோடிக்கு ஏலம் கேட்ட சூரத் தொழிலதிபர் Posted: 17 Feb 2015 10:46 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது ஒபாமாவை சந்தித்து பேசிய பிரதமர் மோடி ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 'கோட் சூட்' அணிந்திருந்தார். அதில் நரேந்திர மோடி என்ற பெயர், வரிசையாக சிறிய அளவில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த விலை உயர்ந்த கோட் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| Posted: 17 Feb 2015 10:19 PM PST பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சரத் யாதவுடனும், நிதிஷ்குமாருடனும் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால் அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க இருவரும் முடிவெடுத்தனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும், பின்னர் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் மான்ஜி நீக்கப்பட்டார். |
| Posted: 17 Feb 2015 09:36 PM PST பெங்களுரில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 'ஏரோ இந்தியா' விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். அங்குள்ள யெலகங்கா விமானப்படை நிலையத்தில் 10-வது சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: |
| லஞ்சம் வாங்கி ரூ.10 ஆயிரம் கோடி சொத்து குவித்த அரசு என்ஜினீயரிடம் சி.பி.ஐ. விசாரணை Posted: 17 Feb 2015 09:01 PM PST உத்தரபிரதேச மாநில அரசு தலைமை என்ஜினீயராக பணிபுரிந்த வந்தவர் யாதவ்சிங். இவருக்கு சொந்தமான வீடு நொய்டாவில் உள்ளது. உத்தரபிரதேச அரசில் 1980–ம் ஆண்டு இளநிலை என்ஜினீயராக பணியை தொடங்கிய அவர் 20 ஆண்டுகளில் தலைமை என்ஜினீயர் ஆனார். |
| இலங்கை அதிபர் சிறிசேனா திருப்பதியில் சாமி தரிசனம் Posted: 17 Feb 2015 08:38 PM PST இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாள் இந்திய சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பீகாரில் உள்ள புத்தகயாவுக்கு சென்றார். |
| Posted: 17 Feb 2015 08:14 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். ஒபாமாவுடன் கூடிய சந்திப்பின் போது மோடி ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 'கோட்சூட்' அணிந்திருந்தார். அதில் நரேந்திரமோடி என்ற பெயர் கோட் முழுக்க மிகச்சிறியதாக உருவாக்கப்பட்டிருந்தது. |
| டெல்லியில் ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம் இல்லை: தேர்தல் வாக்குறுதியை கெஜ்ரிவால் நிறைவேற்றினார் Posted: 17 Feb 2015 07:09 PM PST டெல்லி மாநில அரசில் கடந்த சில ஆண்டுகளாக கல்வி, பொதுப்பணித்துறை, சுகாதாரம், பெண்கள்-குழந்தைகள் மேம்பாடு துறைகளில் ஒப்பந்த ரீதியில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இப்படி டாக்டர்கள், நர்சுகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் என 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். |
| மும்பை அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த 78 பக்தர்கள் மீட்பு Posted: 17 Feb 2015 06:56 PM PST மகா சிவராத்திரியை முன்னிட்டு, மராட்டிய மாநிலம் எலிபெண்டா கேவ்ஸ் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு 38 பெண்கள், குழந்தைகள் உள்பட 78 பக்தர்கள் ஒரு படகில் சென்றனர். மும்பை கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அவர்களது படகின் என்ஜின், திடீரென மண் குவியலில் சிக்கியதால் நின்று விட்டது. இதையடுத்து, 78 பக்தர்களும் நடுக்கடலில் படகில் தத்தளித்தனர். |
| மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் 2 விமானிகள் தற்காலிக பணி நீக்கம் Posted: 17 Feb 2015 06:47 PM PST கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 194 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேருடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் நீண்ட வால் பகுதி எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் தரையில் உரசியது. |
| வெளியே போ என வாசகம் எழுதி அமெரிக்காவில் இந்து கோவிலில் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம் Posted: 17 Feb 2015 06:37 PM PST அமெரிக்க நாட்டில், வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் துறைமுக நகரில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் 20 ஆண்டுகளாக இருக்கிறது. அதன் இரண்டாவது கட்டப்பணிகள் சமீபத்தில் தொடங்கி உள்ளன. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. |
| ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் 25-ந்தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் Posted: 17 Feb 2015 06:04 PM PST ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தது. |
| மணல் திருட்டு இடங்கள் செயற்கைகோள் மூலம் கண்காணிப்பு: மத்திய மந்திரி உறுதி Posted: 17 Feb 2015 03:36 PM PST மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் விதிமுறைகளுக்கு மாறாக மணல் திருட்டு நடைபெறுதைத் தடுக்கும் வகையில் செயற்கைகோள் மூலம் |
| கேதர்நாத் கோவில் ஏப்ரல் 24-ந்தேதி திறப்பு Posted: 17 Feb 2015 01:03 PM PST சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று கேதர்நாத் கோவில் ஆகும். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,581 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. |
| ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சி: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் Posted: 17 Feb 2015 10:37 AM PST இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் நடந்து வரும் 'ஏரோ இந்தியா' விமான கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு 10-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள யெலகன்கா ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் இன்று துவங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். |
| உலகிலேயே மிக உயரமான மும்பை குடியிருப்பு கட்டிடம் Posted: 17 Feb 2015 09:14 AM PST உலகிலேயே மிக உயரமான குடியிருப்பு கட்டிடமாக மும்பையில் 'வேர்ல்டு ஒன் டவர்' அபார்ட்மெண்ட்டுகள் கட்டப்பட்டு வருகிறது. 1,456 அடி உயரத்தில், ரூ.2 ஆயிரம் கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. |
| Posted: 17 Feb 2015 08:02 AM PST டெல்லி போலீஸ் கமிஷனர் பாசி இன்று ஏற்பாடு செய்த ஒரு தேனீர் விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த கிரண் பேடி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். |
| 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு எதிராக புதிய சட்டம்: மத்திய மந்திரி தகவல் Posted: 17 Feb 2015 07:14 AM PST குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கான இணை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், கரிம் நகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை |
| மான்ஜி ஆதரவு மந்திரிகள் 7 பேர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து அதிரடி நீக்கம் Posted: 17 Feb 2015 06:42 AM PST நிதிஷ் குமாருக்கு எதிராகவும், பீகார் முதல் மந்திரிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் 7 மந்திரிகள் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல்மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். தற்காலிக ஏற்பாடாக ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் |
| Posted: 17 Feb 2015 06:22 AM PST இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் ஆயிரம் பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய (16-ம் தேதி) நிலவரப்படி இவர்களில் 624 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். |
| மோடியின் ஆட்சியில் தொழிலதிபர்களுக்கு தான் நல்ல காலம் பிறந்துள்ளது: அன்னா ஹசாரே விளாசல் Posted: 17 Feb 2015 06:07 AM PST பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் நல்ல காலம் பிறக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்துள்ள நரேந்திர மோடியின் தலைமையிலான அரசில் தொழிலதிபர்களுக்கு தான் நல்ல காலம் பிறந்துள்ளது என ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்த அன்னா ஹசாரே, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனைப் பற்றி மோடி நினைப்பதில்லை. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |