மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி விருந்து- பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
- பவானிசிங்கை மாற்ற கோரும் அன்பழகன் மனு மீதான தீர்ப்பு தள்ளி வைப்பு
- உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் புதிய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல்
- ஐதராபாத்தில் பன்றி காய்ச்சல்: ஜிம்பாப்வே நாட்டு பெண் உள்பட மேலும் 3 பேர் பலி
- திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்களுக்கும் கூடுதலாக 2 லட்டு
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்கிறது
- திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பன்றிக்காய்ச்சல் சோதனை: அலிபிரியில் மருத்துவ முகாம் அமைக்க முடிவு
- கல்விக்கட்டணம் செலுத்தாத 250 குழந்தைகளை அறையில் பூட்டிய பள்ளி நிர்வாகம்: கேரளாவில் நடந்த கொடுமை
- கலை நிகழ்ச்சிக்கு வாங்கிய பணத்தை திருப்பி அனுப்பிய மோகன்லால்: உம்மன்சாண்டி ஏற்க மறுப்பு
- டீசல் விலை குறைந்ததால் ஒடிசாவில் பஸ் கட்டணம் குறைப்பு
- அன்பழகன், சுப்பிரமணியசாமி மனுக்கள் மீது இன்று தீர்ப்பு?: தள்ளுபடி செய்யுமாறு ஜெயலலிதா வக்கீல் வாதம்
- ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் தலையிட்டதாக ராகுல் ஒப்புக்கொண்டு விட்டார்: பா.ஜனதா
- நேர்மையான மனிதர்களின் வேடம் அம்பலமாகி விட்டது: டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி இல்லை: கெஜ்ரிவால் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
- வருமான வரி விலக்கு பெறுவதற்கான சேமிப்பு உச்ச வரம்பை உயர்த்த ரிசர்வ் வங்கி கவர்னர் யோசனை
- சட்ட புத்தகத்தில் தற்கொலை முயற்சியை தண்டிக்கும் விதி குறித்து டெல்லி கோர்ட்டு நீதிபதி கருத்து
- கொல்கத்தா விமானம் நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
- பிரதமர் தொடங்கி வைத்த வங்கி கணக்குகளில் எந்த பணமும் இல்லை: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி
- ஒடிசா சிட்பண்டு விசாரணை குழு தலைவராக நீதிபதி மதன் மோகன் தாஸ் நியமனம்
| டெல்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி விருந்து- பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு Posted: 04 Feb 2015 11:10 PM PST டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. பா.ஜனதா, ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகார் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாரதீய ஜனதா வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. |
| பவானிசிங்கை மாற்ற கோரும் அன்பழகன் மனு மீதான தீர்ப்பு தள்ளி வைப்பு Posted: 04 Feb 2015 10:54 PM PST பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, பெங்களூரு ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். பவானிசிங் தொடர்ந்து இந்த விவாதத்தில் ஆஜர் ஆவதற்கு தடைவிதிக்ககோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு |
| உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் புதிய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் Posted: 04 Feb 2015 09:52 PM PST மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உள்துறை செயலாளராக எல்.சி. கோயல் நியமிக்கப்பட்டார். ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பொறுப்பில் இருந்த கோயல், உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து இன்று காலை அத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். 1979 பேட்ச் கேரள கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோயல் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியாற்றியவர் ஆவார். |
| ஐதராபாத்தில் பன்றி காய்ச்சல்: ஜிம்பாப்வே நாட்டு பெண் உள்பட மேலும் 3 பேர் பலி Posted: 04 Feb 2015 09:51 PM PST ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானாவில் தான் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 2044 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 686 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் உஸ்மானியா, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் |
| திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்களுக்கும் கூடுதலாக 2 லட்டு Posted: 04 Feb 2015 09:30 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் லட்டு பெற தனி கவுண்டர் இருந்தது. கூடுதல் லட்டுகளை பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க தேவஸ்தானம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி தர்ம தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் செய்ய |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்கிறது Posted: 04 Feb 2015 09:24 PM PST மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் |
| திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பன்றிக்காய்ச்சல் சோதனை: அலிபிரியில் மருத்துவ முகாம் அமைக்க முடிவு Posted: 04 Feb 2015 09:06 PM PST ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் வெகு வேகமாக பரவியபடி உள்ளது. தெலுங்கானாவிலும் அந்த நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சலை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. |
| கல்விக்கட்டணம் செலுத்தாத 250 குழந்தைகளை அறையில் பூட்டிய பள்ளி நிர்வாகம்: கேரளாவில் நடந்த கொடுமை Posted: 04 Feb 2015 09:02 PM PST கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஹில்டாப் பப்ளிக் பள்ளியில், கல்விக்கட்டணம் செலுத்தாததால் எட்டு வயதுக்கும் குறைவான 250 குழந்தைகளை ஒரே அரங்கில் அடைத்து வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது. |
| கலை நிகழ்ச்சிக்கு வாங்கிய பணத்தை திருப்பி அனுப்பிய மோகன்லால்: உம்மன்சாண்டி ஏற்க மறுப்பு Posted: 04 Feb 2015 08:57 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவன்று கோலாகலமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் லாலிசம் குழுவினர் நடத்தினர். இதற்காக கேரள அரசு மோகன்லாலுக்கு |
| டீசல் விலை குறைந்ததால் ஒடிசாவில் பஸ் கட்டணம் குறைப்பு Posted: 04 Feb 2015 08:53 PM PST சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை சரிவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்ந்த போது பல்வேறு மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது டீசல் விலை குறைந்துள்ளது. எனவே, பஸ், ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. |
| அன்பழகன், சுப்பிரமணியசாமி மனுக்கள் மீது இன்று தீர்ப்பு?: தள்ளுபடி செய்யுமாறு ஜெயலலிதா வக்கீல் வாதம் Posted: 04 Feb 2015 06:41 PM PST சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3-வது நபராக சேர்க்கக்கோரி க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனுக்கள் மீது இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் தலையிட்டதாக ராகுல் ஒப்புக்கொண்டு விட்டார்: பா.ஜனதா Posted: 04 Feb 2015 06:26 PM PST ஜெயந்தி நடராஜனின் அமைச்சகத்தில் தலையிட்டதாக ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டு விட்டார் என்று பா.ஜனதா கூறி உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| நேர்மையான மனிதர்களின் வேடம் அம்பலமாகி விட்டது: டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு Posted: 04 Feb 2015 06:09 PM PST டெல்லி சட்டசபை தேர்தல் 7-ந்தேதி நடைபெறும் நிலையில், இன்று தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தெற்கு டெல்லி அம்பேத்கர் நகரில் தனது கடைசி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். |
| மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி இல்லை: கெஜ்ரிவால் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் Posted: 04 Feb 2015 04:25 PM PST வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த மோசடியும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் செயல் விளக்கம் அளித்தனர். டெல்லி சட்டமன்றத்துக்கு 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் |
| வருமான வரி விலக்கு பெறுவதற்கான சேமிப்பு உச்ச வரம்பை உயர்த்த ரிசர்வ் வங்கி கவர்னர் யோசனை Posted: 04 Feb 2015 04:09 PM PST பொது வருங்கால வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டம், காப்பீட்டு திட்டங்கள், பங்குசார்ந்த சேமிப்பு திட்டங்கள் போன்ற சேமிப்புகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான முதலீட்டுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ரூ.1½ லட்சம் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். |
| சட்ட புத்தகத்தில் தற்கொலை முயற்சியை தண்டிக்கும் விதி குறித்து டெல்லி கோர்ட்டு நீதிபதி கருத்து Posted: 04 Feb 2015 03:53 PM PST டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே அமித்குமார் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி, பினாயில் குடித்து மயங்கி கிடந்தார். ரோகினி பகுதியை சேர்ந்த அவர், சுல்தான்புரி போலீஸ் நிலைய அதிகாரி தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாகவும், அந்த பயத்தினால் தற்கொலை செய்வதாகவும் தனது கையில் எழுதியிருந்தார். |
| கொல்கத்தா விமானம் நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 04 Feb 2015 01:07 PM PST பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இறங்கிய ஒருவரிடம் பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1¾ கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது |
| பிரதமர் தொடங்கி வைத்த வங்கி கணக்குகளில் எந்த பணமும் இல்லை: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted: 04 Feb 2015 11:24 AM PST ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் டெல்லியில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் நேற்று பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:- 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின் கீழ் பல லட்சம் ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் கூறுகிறார். இதை மிகப்பெரிய |
| வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி Posted: 04 Feb 2015 10:56 AM PST 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதாவின் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி போட்டியிடுகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். |
| ஒடிசா சிட்பண்டு விசாரணை குழு தலைவராக நீதிபதி மதன் மோகன் தாஸ் நியமனம் Posted: 04 Feb 2015 09:33 AM PST ஒடிசாவில் பல கோடி ரூபாய் சிட்பண்டு நிறுவன மோசடி தொடர்பான விசாரணை குழுவின் தலைவராக நீதிபதி மதன் மோகன் தாஸ் என்பவரை ஒடிசா அரசு இன்று நியமித்துள்ளது. கடந்த ஜனவரி 28ந்தேதி நீதிபதி ஆர்.கே. பத்ரா மரணமடைந்ததை அடுத்து காலியான பதவிக்கு ஒடிசா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தாஸ் பொறுப்பேற்றார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |