Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


குஜராத்திலும் தீவிரமடைகிறது பன்றிக்காய்ச்சல்: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு-744 பேர் நோயால் பாதிப்பு

Posted: 08 Feb 2015 10:50 PM PST

குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 81 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச், அகமதாபாத், சூரத் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், வதோதரா, தாடி, நர்மதா, சுரேந்திர மாவட்டங்களில் தலா

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய புள்ளிகள்: ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியது

Posted: 08 Feb 2015 10:24 PM PST

எச்.எஸ்.பி.சி. வங்கியின் வெளிநாட்டு கிளைகளில் இந்தியர்கள் பலரின் கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள அந்த தகவலில் 2006-2007 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய

திருப்பதி ஆஸ்பத்திரியில் நர்சுக்கு பன்றி காய்ச்சல்: 8 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted: 08 Feb 2015 10:22 PM PST

ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் நோய் பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் கிராம மக்கள்: ஆண் சிசு கருவிலே அழிப்பு

Posted: 08 Feb 2015 10:14 PM PST

குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லையே என நம்மில் பலர் ஏங்கி தவிக்கும் நிலையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆண் குழந்தை பிறந்தால் குடும்பமே சோகத்தில் மூழ்கி விடுகிறது. அதேநேரம் பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி சிலைகள் உடைப்பு: ரோஜா கண்டனம்

Posted: 08 Feb 2015 09:38 PM PST

விபத்துகள் அதிகரிப்பதற்கு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலைதான் காரணம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து ஆந்திராவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும்

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்?: நாளை ஓட்டு எண்ணிக்கை

Posted: 08 Feb 2015 09:27 PM PST

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் கடந்த 7–ந் தேதி நடந்தது. 70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் வாக்காளர் எண்ணிக்கை 1 கோடியே 33 லட்சம். ஓட்டுப் பதிவுக்காக 12 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்புக்கிடையே ஓட்டுப்பதிவு நடந்தது.

கேரள மாநில மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது

Posted: 08 Feb 2015 09:26 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளறடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வேகமாக வந்தது.

கேரளாவில் கடலில் குளித்த 2 மாணவர்கள் பலி

Posted: 08 Feb 2015 08:31 PM PST

கேரள மாநிலம் மட்டாஞ்சேரி, போர்ட் கொச்சியை சேர்ந்தவர் ஜோணி. இவரது மகன் ஜோமோன் (வயது14), பீச் சாலையை சேர்ந்த குஞ்சு மோன் என்பவரது மகன் பெலின் (வயது14), கண்டந்தரையை சேர்ந்த இஸ்மாயில் மகன் அமீர் (வயது14) உட்பட 7 பேர் போர்ட் கொச்சி தெற்கு கடல் பகுதியில்

கருப்பு பண விவகாரம்: 60 பேருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையை துவங்கியது மத்திய அரசு

Posted: 08 Feb 2015 07:54 PM PST

வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்த 60 பேருக்கு எதிராக மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 60 பேரின் வங்கி கணக்குகளிலும் சுமார் 1500 கோடிக்கும் அதிகமாக கருப்பு பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களில் பலர் பெரு

டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா

Posted: 08 Feb 2015 07:23 PM PST

திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அவர் சார்பில் பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை.

நீதிபதி கொலை வழக்கில் பரோலில் வந்து தலைமறைவான கில்லாடி பெண் டாக்டர் கைது

Posted: 08 Feb 2015 07:15 PM PST

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த பெண் டாக்டர் ரவ்தீப் கவுர், தன்னை திருமணம் செய்ய மறுத்த சண்டிகார் கூடுதல் செசன்சு நீதிபதி விஜய்சிங் என்பவரை 2005-ம் ஆண்டு கொலை செய்தார். இதற்காக நேபாளத்தை சேர்ந்த கிராந்தி மன்ஜித் என்பவருக்கு ரூ.5 லட்சம்

கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 97 கோடியை தாண்டியது

Posted: 08 Feb 2015 06:49 PM PST

கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் தொலைபேசி இணைப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை (செல்போன் + லேண்டுலைன்) 97 கோடியை தாண்டியுள்ளது. நவம்பர் மாதத்தில் 96.40 கோடி இணைப்புகள் இருந்தது. டிசம்பரில் அது 97.10 கோடியாக உயர்ந்துள்ளது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் அதிவேகத்தில் செல்லும் ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம்

Posted: 08 Feb 2015 06:36 PM PST

சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில், மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் ரெயில் பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து, உள்நாட்டில் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி

கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

Posted: 08 Feb 2015 04:15 PM PST

கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. டெல்லியை சேர்ந்தவர்கள் ஹரிஷ், ஸ்வேதா தம்பதியர் (பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது.) இவர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு

Posted: 08 Feb 2015 01:22 PM PST

வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுவதாக பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். உலகில் 110 நாடுகளில் உள்ள இந்திய தூதர்கள், தூதரகங்களின் உயர் அதிகாரிகள் 4 நாள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது.

பீகார் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான ராமர், லட்சுமனன், சீதை சிலைகள் உ.பி.யில் மீட்பு

Posted: 08 Feb 2015 08:11 AM PST

பீகார் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட ராமர், லட்சுமனன், சீதை சிலைகளை உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் இன்று மீட்டுள்ளனர். அஷ்டதாது எனப்படும் 8 வகை உலோகங்களினால் உருவாக்கப்பட்ட இந்த சிலைகளின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள போலீசார் மீட்கப்பட்ட இந்த சிலைகளில் ஒன்று முழுக்க முழுக்க பிளாட்டினத்தால் ஆனது என்று கூறினர்.

ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மான்ஜி திட்டவட்டம்

Posted: 08 Feb 2015 07:39 AM PST

பீகார் மாநில சட்டசபை ஆளும்கட்சி தலைவராக நிதிஷ் குமார் தேர்வாகியுள்ளதை அம்மாநில சபாநாயகர் அங்கீகரித்துள்ள நிலையில் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மான்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மான்ஜி, மாநில மந்திரிசபையை விரைவில் விரிவுப்படுத்தப் போவதாக அறிவித்தார். இரண்டு துணை முதல் மந்திரிகளை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும், அவர்களில்

டெல்லி தேர்தல் முடிவு: வெற்றியோ தோல்வியோ பொறுப்பேற்க தயார்- கிரண் பேடி அதிரடி பேட்டி

Posted: 08 Feb 2015 07:30 AM PST

டெல்லி சட்டசபை தேர்தலின் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைவது சந்தேகம் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகும் நிலையில் வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் முதல் மந்திரி பதவி வேட்பாளரும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண் பேடி இன்று தெரிவித்துள்ளார். இத்தகைய கருத்துக் கணிப்புகள் பற்றி உங்களது கருத்து என்ன? என்று கேட்ட செய்தியாளர்களுக்கு பதிலளித்த கிரண் பேடி, 'கருத்துக் கணிப்புகள்

முதல் மந்திரியாகும் நாற்காலி கனவுடன் டெல்லியில் சினிமா பார்த்த கெஜ்ரிவால்

Posted: 08 Feb 2015 07:07 AM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என பிரபல ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது நாற்காலி கனவுகளில் மிதக்க தொடங்கி விட்டனர். அவர்களின் கனவுகளுக்கு தூபம் போடுவதுபோல் இன்று டுவிட்டரில் கருத்து வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், 'அருமையாக பணியாற்றிய தொண்டர்களே.., இன்னும் 2 நாட்களுக்கு ஓய்வு எடுங்கள்.

நிதிஷ் குமாரை ஆளும்கட்சி தலைவராக ஏற்றது பீகார் சட்டசபை: நாளை கவர்னருடன் சந்திப்பு

Posted: 08 Feb 2015 05:56 AM PST

பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மான்ஜியை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு மீண்டும் அம்மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமாரை நியமிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையின் முடிவை பீகார் சட்டசபை இன்று ஏற்றுக் கொண்டுள்ளது. நேற்று நிதிஷ் குமார் வீட்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான சரத் யாதவ் தலைமையில் நடைபெற்ற மேலிட ஆலோசனை கூட்டத்தில் மொத்தமுள்ள 111 ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களில் 97 பேர் ஆதரவுடனும், 41 எம்.எல்.சி.க்களில் 37 பேர் ஆதரவுடனும் நிதிஷ்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™