Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லியில் 5–ந் தேதி பசுமை மாநாடு: நடிகர் அர்னால்டு பங்கேற்பு

Posted: 01 Feb 2015 11:40 PM PST

டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதில் பிரபல ஆலிவுட் நடிகரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி உரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் மத்திய அரசு

சர்ச்சைக்குரிய தேர்தல் விளம்பரம்: பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி

Posted: 01 Feb 2015 11:35 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தனக்கு முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படவில்லை என்று

தேர்தல் பணியை கவனித்து வந்த டெல்லி பா.ஜனதா நிர்வாகி திடீர் விலகல்: கிரண்பேடி மீது குற்றச்சாட்டு

Posted: 01 Feb 2015 11:26 PM PST

டெல்லியில் சட்டசபை தேர்தல் வருகிற 7–ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி பா.ஜனதா நிர்வாகி நரேந்திர தாண்டன் திடீர் என்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மாநில பா.ஜனதா நிர்வாக குழு உறுப்பினரான இவர் முதல் – மந்திரி வேட்பாளர் கிரண்பேடியின் தேர்தல் பிரசார பொறுப்பாளராக

30 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீரைத் தயாரித்து 50 பைசாவுக்கு விற்று மக்களின் தாகம் தீர்க்கும் அதிசய கிராமம்

Posted: 01 Feb 2015 11:23 PM PST

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுசுதன்கதி என்ற கிராம மக்கள் ஒருகாலத்தில் விஷத்தன்மையுள்ள மாசுபட்ட நிலத்தடி நீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள மாற்றம் அருகிலுள்ள கிராமங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம கூட்டுறவு சொசைட்டியான 'மதுசுதன்கதி சமாபாய் கிரிஷி உன்னயன் சமிதி' பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு

பெங்களூர்: பள்ளிக்கு வராமல் டிமிக்கி கொடுத்த 2 மாணவர்கள் தலையை மொட்டையடித்து தண்டனை

Posted: 01 Feb 2015 11:03 PM PST

பெங்களூர் விட்டல் மல்லய்யா ரோட்டில் செயின்ட் ஜோசப் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதியும் உள்ளது. இங்கு செபஸ்டியன் அகஸ்டியன் என்பவரின் 2 மகன்கள் தங்கிப் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வகுப்புக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்தனர். இதையடுத்து இரு மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் அழைத்து தலையை

கர்நாடக மந்திரிகள் மீது காங். நிர்வாகிகள் அதிருப்தி: திக்விஜய் சிங்கிடம் புகார்

Posted: 01 Feb 2015 11:02 PM PST

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங் 3 நாட்கள் பயணமாக பெங்களூரு வந்தார். நேற்று கட்சியின் மாநில நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்களின்

சித்தராமையா ஹெலிகாப்டரில் மீண்டும் கோளாறு: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினார்

Posted: 01 Feb 2015 10:40 PM PST

கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஹெலிகாப்டரில் சென்று வருவது வழக்கம். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவண பெலகொலாவில் நேற்று நடந்த கன்னட இலக்கிய மாநாடு தொடக்க விழாவில் கலந்து

மாரத்தான் ஓட்டத்தின் போது மாரடைப்பில் பலியான சாப்ட்வேர் என்ஜினீயர்

Posted: 01 Feb 2015 09:40 PM PST

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் குப்தா (வயது 27). மென்பொருள் பொறியாளரான இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவர் நேற்று பெங்களூரில் பசவன்புரா பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். 1245 பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி 21.1கி.மீ, 11 கி.மீ மற்றும் 7 கி.மீ. என்று மூன்று பிரிவாக நடந்தது. இதில் 21.1 கி.மீ பிரிவில் பங்கேற்ற

கேரளாவிற்கு வந்த வெளிநாட்டு சிறுவனுக்கு எபோலா நோய் அறிகுறி

Posted: 01 Feb 2015 08:34 PM PST

வெளிநாடுகளில் எபோலா நோய் தாக்குதல் காரணமாக பலர் உயிர் இழந்தனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோயின் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் காதலால் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்

Posted: 01 Feb 2015 07:38 PM PST

சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முகமது

சிறுவர்–சிறுமிகள் சர்க்கஸில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 01 Feb 2015 07:11 PM PST

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் வித்யார்த்தி டெல்லியில் நடத்தி வரும் 'பச்பன் பச்சாவ் ஆந்தோலன்' (குழந்தைப் பருவம் மீட்போம் இயக்கம்) என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையைக்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் மீட்பு

Posted: 01 Feb 2015 05:46 PM PST

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள நிக்னூர் என்ற கிராமத்தில், சங்கர் ஆக்ரே என்ற 2 வயது சிறுவன் நேற்று முன்தினம் மாலை விளையாடிக்கொண்டிருந்தபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில்

ராஜஸ்தானில் முன்னாள் முதல்-மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல்

Posted: 01 Feb 2015 03:56 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 28 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் பன்றி காய்ச்சல் நோய்

டெல்லியில் சிறப்பாக நடைபெற்ற வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் நிகழ்ச்சி

Posted: 01 Feb 2015 03:29 PM PST

பாரம்பரிய கலைகள் மூலம் சர்வதேச கதை சொல்வோர் மாநாடு இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் நிவேஷ் இந்தியா சார்பில் டெல்லியில் 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, அங்கேரி நாடுகளைச் சேர்ந்த பல்வேறு குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழ்நாட்டின் திண்டிவனத்தைச்

எனக்கு வயதாகி விட்டது- இனி தேர்தலில் போட்டி இல்லை: தேவேகவுடா அறிவிப்பு

Posted: 01 Feb 2015 03:13 PM PST

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன். தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு

2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா 16-ந்தேதி இந்தியா வருகிறார்

Posted: 01 Feb 2015 02:24 PM PST

இலங்கையில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார்.

சட்டசபைக்கு 7-ந் தேதி தேர்தல்: டெல்லியில் ஒரேநாளில் மோடி-சோனியா போட்டி பிரசாரம்

Posted: 01 Feb 2015 01:35 PM PST

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சில மாநிலங்களில் நடைபெற்ற

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டு ஜெயில்: மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது

Posted: 01 Feb 2015 01:22 PM PST

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது. தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு அதிக பணம் கொடுப்பது அல்லது மது, துணிமணி, தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப்

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு

Posted: 01 Feb 2015 12:19 PM PST

பேச்சாற்றல் மிக்கவர் என்று பிரதமர் மோடியை முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பாராட்டி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 புள்ளியாக பதிவு

Posted: 01 Feb 2015 11:42 AM PST

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™