Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புல்லட் ரயில் தொழில்நுட்ப மையம் :இந்தாண்டில் தயார்: காரக்பூர் ஐ.ஐ.டி.,

Posted:

கோல்கட்டா:புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக, காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் மையம், இந்தாண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி:இந்திய ரயில்வே வாரியத்தின் சார்பில் அமைக்கப்படும் இந்த ஆராய்ச்சி மையம், காரக்பூர் ஐ.ஐ.டி., வளாகத்தில், 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இம்மையத்தின் பொறுப்பாளர், பேராசிரியர் சுப்க்ரான்சு ராய் கூறியதாவது:இந்திய ரயில்வே துறையை பொருத்தமட்டில், நான்கு பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது மிக ...

டில்லி வாக்காளர்களை உசுப்பேற்றும் கெஜ்ரிவால்

Posted:

புதுடில்லி:'டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும்; 30 சதவீத மின் கட்டண குறைப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என, பிரதமர் மோடியிடம் கேளுங்கள்' என, டில்லி மக்களை, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உசுப்பேற்றிஉள்ளார்.டில்லி சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், கட்சிகள் பலவும், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு, டில்லியில் இன்று, பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவரிடம் பொதுமக்கள் பல கேள்விகளை கேட்க வேண்டும் என, அரவிந்த் கெஜ்ரிவால் ...

அடுத்த பாய்ச்சலுக்கு நக்சலைட்டுகள் தயார்: ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் பயிற்சி

Posted:

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர்ந்த வனப் பகுதியில், நக்சலைட்டுகள், ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி பயிற்சி பெறும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், குறிப்பிட்ட சில பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது. பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுவது, வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிப்பது, ஆள் கடத்தலில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோத செயல்களில்நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினருக்கு ...

இது 'சீரியஸ்' பிரச்னை: பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு சகாயம் எச்சரிக்கை

Posted:

மதுரை:"மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேட்டால் விவசாயம் அடியோடு பாதித்துள்ளது. சமுதாயத்தில் இது ஓர் 'சீரியஸ்' பிரச்னை. அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து சரியான தகவல் தெரிவிக்கவில்லை என்றால் உங்களுக்கு சிக்கல் தான்" என அதிகாரிகளை ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் எச்சரித்தார்.ஐகோர்ட் உத்தரவுப்படி மதுரை கிரானைட் முறைகேடு குறித்து நேற்று நான்காம் கட்ட விசாரணையை மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியில் அவர் துவக்கினார்.காணாமல் போன குளங்கள்: மலம்பட்டி மணியன்பொட்டக்குளத்தை அவர் ஆய்வு செய்தார். குளத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ...

பா.ஜ.,விடம் ஏமாந்து விடாதீர்கள்: பொதுக்குழுவில் கருணாநிதி எச்சரிக்கை

Posted:

''தி.மு.க.,வினரை சாதாரணமாக கருதி, பா.ஜ., வெற்றி பெற துடிக்கிறது. அவர்களிடம் நாம் ஏமாந்து விடக்கூடாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.பக்குவம்:சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த, தி.மு.க., பொதுக்குழுவில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெற இயலாதவர்கள் அனைவரும் இணைந்து, கட்சியின் ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறோம். தி.மு.க.,வை வழிநடத்திச் செல்லக் கூடிய பக்குவத்தை ஸ்டாலின் பெற்றுள்ளார். கடந்த, ஆறேழு மாதங்களுக்கு முன், ஸ்டாலினை பற்றி கேள்வி கேட்கும்போது, 'அவரிடம் எனக்கு பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்றேன். அந்த ...

தமிழர் வாழ்வில் விடியல் பிறக்குமா?

Posted:

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகமாக வசிக்கின்றனர். இந்த மாகாணங்களில், தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு இணையான உரிமையும், அந்தஸ்தும் அளிக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால், போலீஸ் அதிகாரம், நிலத்தின் மீதான அதிகாரம் ஆகியவற்றை தங்களுக்கு வழங்கும்படி, இங்கு வசிக்கும் தமிழர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த அதிகாரப்பகிர்வுக்காக, 1987ல், இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 13வது சட்ட திருத்தம் கொண்டு ...

ராஜபக் ஷே வீழ்ச்சி கண்டது ஏன்?

Posted:

கொழும்பு:சிங்கள மக்களிடையே, ஒரு காலத்தில் ஹீரோவாக விளங்கிய ராஜபக் ஷே, தன் சர்வாதிகார போக்கு, குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற காரணங்களால், அதே சிங்கள மக்களால் தற்போது ஜீரோவாக்கப்பட்டுள்ளார். *ராஜபக் ஷே அதிபரானதும், முக்கிய அதிகாரங்களை எல்லாம், தன் வசம் வைத்து கொண்டார். இதற்காக, சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து, பார்லிமென்டில் நிறைவேற்றினார். *அரசியலிலும், ஆட்சியிலும் தனக்கு எதிரிகளே இல்லை என்பது போல், சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். *அவரை எதிர்த்த பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முந்தைய அதிபர் தேர்தலில், ராஜபக் ஷேயை எதிர்த்து ...

இலங்கையின் புதிய அதிபரானார் மைத்ரிபால சிறிசேன வெற்றி

Posted:

இலங்கையின் அதிபராக, அசைக்க முடியாத செல்வாக்குடன், கடந்த, 10 ஆண்டுகளாக கோலோச்சியவர் மஹிந்தா ராஜபக்சே, 69. இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த இவரின் ஆட்சி காலத்தில் தான், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்குடன் இருந்த விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆலோசனை:மூன்றாவது முறையும் அதிபராகும் திட்டத்துடன், தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் கூறிய ஆலோசனையின்படி, முன் கூட்டியே தேர்தலை சந்திக்க, ராஜபக்சே முடிவு செய்தார். இதையடுத்து, அதிபர் ...

சுனந்தா - சசி தரூர் அடிக்கடி சண்டை போடுவர் வேலைக்காரர் வாக்குமூலம்

Posted:

புதுடில்லி:'சுனந்தா கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், அவரை, சுனில் என்ற நபர் சந்தித்தார். இருவரும், நீண்ட நேரம் தனியாக இருந்தனர். அதற்கு முந்தைய நாட்களில், சசி தரூரும், சுனந்தாவும் பல மணி நேரம் சண்டையிட்டனர்' என, சசி தரூரின் வேலைக்காரர் நாராயண், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.திருவனந்தபுரம் தொகுதி, காங்., எம்.பி., சசி தரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா, கடந்த ஆண்டு ஜன., 17ல் மர்மமான முறையில் இறந்தார் என, தெரிவிக்கப்பட்ட நிலையில், 'அவர் கொலை செய்யப்பட்டார்' என்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் சமீபத்தில் உறுதியானது.இந்த விவகாரத்தை விசாரித்து ...

குடியரசு தின பேரணியில் வீராங்கனைகள் அணிவகுப்பு; மோடியின் விருப்பம் நிறைவேறுகிறது

Posted:

புதுடில்லி:டில்லி குடியரசு தின விழா, ராணுவ வீரர்கள் அணிவகுப்பில், வீராங்கனைகளின் அணிவகுப்பை, பெரிய அளவில் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.திணறல்:ஆனால், சில வளர்ந்த நாடுகளை போல இல்லாமல், இந்திய பாதுகாப்புப் படைகளில், குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் இருப்பதால், மோடியின் விருப்பத்தை நிறைவேற்ற, பாதுகாப்புப் படை அதிகாரி கள் திணறி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்க உள்ளார்; அவரிடம், இந்தியாவில் பெண்களுக்கு அளிக்கப்படும் கவுரவத்தை காட்ட, பிரதமர் மோடி விரும்புகிறார். ஆனால், ...

நான் என்ன வில்லனா? பவானி சிங் வேதனை:ஜெ., அப்பீல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted:

பெங்களூரூ:'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தமிழில் இருந்த சில ஆவணங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, தமிழ் தெரிந்த, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை எனக்கூறி,கர்நாடகா மொழி பெயர்ப்புத் துறையினர், திருப்பி அனுப்பி விட்டனர்' என்ற, ஜெ., வழக்கறிஞர் குமாரின் வாதத்தால் கோபமடைந்த, நீதிபதி குமாரசுவாமி, மொழிபெயர்ப்பு துறை இயக்குனர் மீது அதிருப்தி தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் பவானி சிங் நிருபர்களிடம், தன்னை தமிழகத்தில் வில்லன் என கூறுகின்றனர் என்றார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கின், ...

யாரும் அரசு அமைக்க முன்வராததால் ஜம்மு - காஷ்மீரில் கவர்னர் ஆட்சி

Posted:

ஸ்ரீநகர்: அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, 15 நாட்கள் ஆன பிறகும், ஆட்சி அமைக்க எந்த கட்சிகளும் முன்வராததாலும், காபந்து முதல்வர் பதவியிலிருந்து ஒமர் விலகியதாலும், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பி.டி.பி., தேசிய மாநாட்டு கட்சிகள், பரஸ்பரம், 'குடுமிப்பிடிசண்டை'யில் இறங்கியுள்ளன. 'இம்மாதம் 19ம் தேதிக்குள் அங்கு ஆட்சி அமைக்கப்பட வேண்டும்; கூட்டணி ஆட்சி தான்' என்ற நிலையிலும், ஆட்சி அமைக்க கட்சிகளுக்கு இடையே விறுவிறுப்பு இல்லை.'பா.ஜ.,வுடன் கூட்டணி சேரக் கூடாது' என, முக்கிய கட்சியான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™