Tamil News | Online Tamil News |
- அப்பா சொத்தில் அண்ணனுக்கு 'நோ': உத்தவ் பிடிவாதத்தால் கோர்ட்டில் இழுபறி
- இலங்கை தேர்தலில் கடும் போட்டியை சந்திக்கும் ராஜபக்சே; தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பா?
- பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி
- ஒரு நதியைத் தேடி...! நதி காக்க...நிதி தேவை!
- 'மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல்
- நாட்டின் முன்னேற்றமே முக்கியம்: அரசியலுக்கு முக்கியத்துவம் இல்லை: அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்
- சுனந்தா கொலை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு; தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாக சசிதரூர் கதறல்
- சீக்கிய தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் பஞ்சாப் முதல்வர்
- வரி செலுத்துவோர் குறை தீர்க்க வருமான வரித்துறை புது திட்டம்
- தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஐகோர்ட் நீதிபதி கண்டிப்பு: குடும்ப அரசியல், வெறுப்பு அரசியலை தவிர்க்க அறிவுரை
- 'நியூட்ரினோ'வுக்கு அழிக்க தெரியாது; வளர்ச்சிக்கே வழி வகுக்கும்
| அப்பா சொத்தில் அண்ணனுக்கு 'நோ': உத்தவ் பிடிவாதத்தால் கோர்ட்டில் இழுபறி Posted: மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு, பிந்து மாதவ், ஜெய்தேவ், உத்தவ் என, மூன்று மகன்கள். இவர்களில், பிந்து மாதவ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டாவது மகன் ஜெய்தேவுக்கும், பால் தாக்கரேவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஜெய்தேவ், பால் தாக்கரே வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கிறார்.இந்நிலையில், பால் தாக்கரே எழுதியுள்ள உயிலில், தன் சொத்தில், எதையுமே, ஜெய்தேவுக்கு கொடுக்கவில்லை. பெரும்பாலான சொத்துகளை உத்தவுக்கு தான் எழுதி வைத்துள்ளார். ஆனால், ஜெய்தேவ், 'இந்த உயில் போலியானது. என் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக எழுதப்பட்டுள்ளது' என, மும்பை ... |
| இலங்கை தேர்தலில் கடும் போட்டியை சந்திக்கும் ராஜபக்சே; தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பா? Posted: கொழும்பு: இலங்கையில், பலத்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், மூன்றாவது முறையாக, சுலபமாக வெற்றி பெறலாம் என, நினைத்த அதிபர் ராஜபசேவுக்கு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனா, கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளார். அதனால், இத்தேர்தல் முடிவை, உலக நாடுகள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளன.இலங்கை அதிபராக கடந்த, 2005ம் ஆண்டு பதவியேற்ற ராஜபக்ஷசே 69, கடந்த, 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு, இரண்டாவது முறையாக அதிபர் ஆனார். இந்நிலையில், அரசியல் சூழல் தனக்கு சாதகமாக ... |
| பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி Posted: பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில், பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாரீசில், சார்லி ஹெப்டோ என்ற வார இதழ் வெளியாகிறது. சர்ச்சைக்கு புகழ் பெற்ற இந்த இதழ், டென்மார்க் பத்திரிகையில் வெளிவந்த, ஒரு கேலிச்சித்திரத்தை, 2006ம் ஆண்டு, மறுபிரசுரம் செய்தது. இதனால், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் கண்டனத்திற்கு ஆளானது.இந்த நிலையில், 2011ம் ஆண்டு, மீண்டும் அது ... |
| ஒரு நதியைத் தேடி...! நதி காக்க...நிதி தேவை! Posted: அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கவுசிகா நதியை இணைப்பது என்பது புதிய கோரிக்கை. பெருமழைக்காலத்தில், பவானி ஆற்றில், உபரியாகச் செல்லும் 2 டி.எம்.சி., தண்ணீரை கால்வாய் வழியாகத் திருப்பும் இந்த திட்டத்தில், அக்ரஹார சாமக்குளம், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 2 குளங்களைச் சேர்த்துள்ளதாகச் சொல்கிறது பொதுப்பணித்துறை.குளங்கள் நிரம்பிய பின், வழிந்தோடும் உபரி நீர், கவுசிகா நதி வழியாகப் பாயும்போது, பிற பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் பயன் பெற வாய்ப்புள்ளது என்பது இத்துறை பொறியாளர்களின் கருத்து. ஆனால், அவிநாசி-அத்திக்கடவு திட்ட ... |
| 'மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல் Posted: பெங்களூரு:ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதி குமாரசுவாமி கோபமடைந்து, அன்பழகன் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவரது வழக்கறிஞர் மறுத்து விட்டார்.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று, மூன்றாவது நாளாக நடந்தது.நீதிபதி குமாரசுவாமி இருக்கையில் அமர்ந்ததும், நீதிமன்ற பணிகள் துவங்கியது.தி.மு.க., பொதுச் செயலர் ... |
| நாட்டின் முன்னேற்றமே முக்கியம்: அரசியலுக்கு முக்கியத்துவம் இல்லை: அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் Posted: கோல்கட்டா:''பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதால், இணைந்து செயல்படுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மாநாடு நடைபெறுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும், எதிரெதிர் கட்சி களாக, பா.ஜ.,வும், திரிண முல் காங்கிரசும் செயல்படும் நிலையில், ... |
| சுனந்தா கொலை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு; தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாக சசிதரூர் கதறல் Posted: புதுடில்லி:திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சசி தரூரின் மனைவி, சுனந்தா கொலையானது எப்படி என்பது குறித்து, விசாரணை நடத்த, சிறப்பு குழுவை, டில்லி போலீஸ் அமைத்துள்ளது. இதற்கிடையே, சுனந்தா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அவரின் மருத்துவக் குறிப்புகளை பெற்று விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சுனந்தா கொலையில், தன் பணியாளரை மிரட்டி தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாக சசிதரூர் கூறியுள்ளார்.சசி தரூரின், 58, மனைவி சுனந்தா, 51, கடந்த ஆண்டு ஜனவரி 17ல், ... |
| சீக்கிய தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் பஞ்சாப் முதல்வர் Posted: புதுடில்லி:மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்முக்கிய கட்சிகளில் ஒன்றான, பஞ்சாபின் ஆளும், சிரோன்மணி அகாலி தளத்திற்கும், பா.ஜ.,வுக்கும் இடையே, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரிப்பு விவகாரத்தில் உறவுபாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், '13 தீவிரவாதிகளை விடுதலை செய்யுங்கள்' என, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கோரிக்கை விடுத்து, பா.ஜ.,வுக்கு அடுத்த குடைச்சலை கொடுத்துள்ளார்.மேலும் அவர், உ.பி., மேற்கு வங்கம், கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநில முதல்வர்களுக்கும், டில்லி மற்றும் சண்டிகார் யூனியன் ... |
| வரி செலுத்துவோர் குறை தீர்க்க வருமான வரித்துறை புது திட்டம் Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நல்லாட்சி திட்டத்தையொட்டி, வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு கூட்டத்தைக் கூட்டும்படி, வருமான வரித் துறைக்கு, வரித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து, 'தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் சிறப்பாகவும், விரைவாகவும் பணிகள் நடப்பதற்காக, நல்லாட்சி திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், வருமான வரித்துறையின் தலைமைப் ... |
| Posted: சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரணை செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார். குடும்ப அரசியல், வெறுப்பு அரசியலை தவிர்க்க அறிவுரை வழங்கினார். மேலும், ''அரசியல் கட்சிகளை, அதன் தலைவர்களை விமர்சிக்கும் போது, நாகரிகம், கண்ணியம், கட்டுப்பாடுடன், அரசியல் கட்சி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்; தலைவர்களின் பேச்சு, செயல், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்,'' எனவும் கூறியுள்ளார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர், 2014, மார்ச், ... |
| 'நியூட்ரினோ'வுக்கு அழிக்க தெரியாது; வளர்ச்சிக்கே வழி வகுக்கும் Posted: ''பூமி பந்து தோன்றியதில் இருந்து, 'நியூட்ரினோ' உள்ளது. இதனால், எந்த ஆபத்தும், இதுவரை ஏற்படவில்லை; இனிமேலும் ஏற்படாது,'' என, 'அறிவியல்புரம்' இணையதள ஆசிரியர் என்.ராமதுரை கூறினார். எதிர்ப்பு: தேனி மாவட்டம், தேவாரம் அருகே, பொட்டி புரத்தில், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு, தமிழக அரசியல் கட்சிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 'நியூட்ரினோ ஆய்வால், பூகம்பம் ஏற்படும்; சுனாமி உருவாகும்' என்றெல்லாம் பிரசாரம் செய்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 08,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |