Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டில்லி சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பா.ஜ., தீவிரம்: 120 எம்.பி.,க்களை களமிறக்கி அமித் ஷா உத்தரவு

Posted:

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கூட்டங்களுக்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதாகவும், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளரான, கிரண் பேடியின் கூட்டங்கள் காத்தாடுவதாகவும் செய்திகள் வெளியானதால், பா.ஜ., - எம்.பி.,க்கள், 120 பேரை பிரசார களத்தில் இறக்கி விட்டுள்ளார், அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா. டில்லியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.டில்லி சட்டசபைக்கு, வரும் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், காங்., - பா.ஜ., மற்றும் ஆத் ஆத்மி கட்சிகள் களமிறங்கி ...

மதசார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க விவாதம் தேவை: அரசியல் சட்ட முகவுரை சர்ச்சையில் அமைச்சர் பதில்

Posted:

புதுடில்லி: ''மதசார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற இரு வார்த்தைகளையும், அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என, சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கூறியதில் தவறு எதுவும் இல்லை. இந்த வார்த்தைகளை நீக்குவது தொடர்பாக, தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்,'' என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இதற்கு, அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அரசியல் சட்டத்தின் முகவுரை படம் இடம் பெற்றிருந்தது. இந்த ...

தமிழகத்தில் 3 இடங்களில் உருவாகிறது 'ஸ்மார்ட் சிட்டி': வெங்கையா நாயுடு தகவல்

Posted:

சென்னை: ''தமிழகத்தில், மூன்று இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைய வாய்ப்பு உள்ளது; எந்தெந்த இடங்கள் என்பது, ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும்,'' என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், வெங்கையா நாயுடு தெரிவித்தார்.சென்னையில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் நடந்த, 'தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி' என்ற தலைப்பிலான கருத்தரங்கை, நேற்று துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: நகரங்களை மேலும், நெரிசலாக்காமல் சிறப்பாக நிர்வகிக்க, புதிய நவீன நகரங்களை உருவாக்க வேண்டியது அவசியம். இதன் அடிப்படையிலேயே, ஸ்மார்ட் சிட்டி திட்டம் ...

அ.தி.மு.க., ஆட்சி மனம் போன போக்கில் நடக்கிறது: கருணாநிதி காட்டம்

Posted:

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சி, மனம் போன போக்கில் தாறுமாறாக நடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கடந்த ஆண்டு நடந்த, குடியரசு தின விழாவிற்கு, முதல்வர் ஜெயலலிதா வந்த போது, அவருடைய கார், மக்கள் காத்திருக்கும் தூரம் வரை சென்றது. அவர் மக்களை பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டு, அதன்பின் தான் குறிப்பிட்ட இடத்தில் வந்து அமர்ந்தார். இந்த ஆண்டு முதல்வர், மக்களை பார்த்து வாழ்த்து சொல்லும் நிகழ்ச்சியையே ரத்து செய்ததுடன், நிகழ்ச்சி நிரலில் இருந்தே, அதை எடுத்து விட்டனர். அதுபோல, நிகழ்ச்சி முடிந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா ...

'என்னாலேயே ஸ்ரீரங்கத்தில் வெற்றி': பறைசாற்ற ஜெ., வீடியோ பிரசாரம்

Posted:

ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டிஜிட்டல் திரை மூலம் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் வளர்மதி நிறுத்தப்பட்டு உள்ளார். இதுதவிர, தி.மு.க., - பா.ஜ., - மா.கம்யூ., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், தேர்தல் பணிகளை அ.தி.மு.க., வினர் துவக்கி உள்ளனர். தி.மு.க.,வினர், 2011 தேர்தலில் பெற்ற ...

அன்று வால்வோ பஸ் இன்று வழக்கமான பஸ்: தீப்பிடிக்கும் ஆம்னி பஸ்களால் பயணிகள் அதிர்ச்சி

Posted:

சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற ஆம்னி பஸ், தீப்பிடித்து எரிந்த சம்பவம், பயணிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கி உள்ளது.கடந்த, 2013, அக்., 30ம் தேதி, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து, ஆந்திர மாநிலம், ஐதராபாத் சென்ற வால்வோ ஆம்னி பஸ், ஆந்திராவில் மெகபூப் நகர் அருகே விபத்திற்கு உள்ளானது; இதில், 45 பேர் தீயில் கருகி இறந்தனர். தொடர்ந்து, நவ., 13ம் தேதி இரவு, பெங்களூருவிலிருந்து மும்பைக்கு சென்ற வால்வோ பஸ், கர்நாடக மாநிலம், ஹாவேரியில் விபத்திற்குள்ளானதில், எட்டு பேர் தீயில் கருகி இறந்தனர். இந்த சம்பவங்களை அடுத்து, வால்வோ பஸ் வடிவமைப்பில் தேவையான ...

3 ஆண்டுகளில் ரூ.220 கோடி: நவாஸ் ஷெரீப் சொத்து 'ஜிவ்'

Posted:

இஸ்லாமாபாத்: கடந்த, 2014ம் ஆண்டு நிலவரப்படி, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து மதிப்பு, 236 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவர், கடந்த 2011ம் ஆண்டு வெளியிட்ட சொத்து மதிப்பு, வெறும், 16 கோடி ரூபாய் மட்டுமே. ஆக, மூன்று ஆண்டுகளில், இவரது சொத்து மதிப்பு, 219.40 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.பரம்பரை சொத்துக்கள், குடும்ப தொழில்கள், முதலீடு, பங்குகள் போன்றவற்றால் இது சாத்தியமாகியுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் வசிக்கும் தன் மகன் ஹூசேன் நவாஸ், பெரும் பணம் அனுப்புவதாக நவாஸ் தெரிவிக்கிறார். அதே சமயம், இவருக்கு வெளிநாட்டில் எந்த சொத்தும் கிடையாதாம்! இதை விட வேடிக்கை, பாக்.,ல் ...

'இங்கு அரசியல் பேச வேண்டாம்': வக்கீல்களுக்கு நீதிபதி அறிவுரை

Posted:

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீடு தொடர்பாக, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உண்டியல் வைத்து பணம் வசூலித்தது பற்றியும், சர்க்காரியா கமிஷன் பற்றியும் நேற்று விவாதம் நடந்தது.16வது நாளாக...: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீது, 16வது நாளாக நேற்று விசாரணை நடந்தது. சசிகலாவின் வக்கீல் பஸந்த் வாதிட்டார்.சசிகலா வக்கீல்: வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதாவின் பணம், 32 கம்பெனிகளுக்கு ...

இப்படியும் நடக்குது மோசடி: மொபைல்போன் அழைப்புகளால் ஏமாறும் மக்கள்

Posted:

உங்களது மொபைல் எண், குலுக்கல் முறையில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி, பண மோசடி செய்வது, அதிகரித்துள்ளது. இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்படுவோர், தபால் நிலையங்களுக்கு அலையும் பரிதாபமும் தொடர்ந்து வருகிறது.மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, முன் பின் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து, அழைப்புகள் அல்லது, எஸ்.எம்.எஸ்., மூலம், 'உங்களது மொபைல் எண், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்ற தகவல் வருகிறது. மொபைல் போனில் பேசும் ஆண் அல்லது பெண், 'நாங்கள் பிரபல நிறுவனத்தின் டில்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். லட்சம் எண்களில் ...

அதிக தொகுதி; அதிக வித்தியாசம்: இதுவே எங்கள் தாரக மந்திரம்: அமித் ஷா

Posted:

புதுடில்லி: பா.ஜ., எந்த ஒரு தேர்தலையும் குறைத்து மதிப்பிடாது. அதிக தொகுதிகளில் வெற்றி, அதிக வித்தியாசத்தில் வெற்றி என்பதே கட்சியின் தாரக மந்திரம். டில்லி சட்டசபையில் 3ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் பா.ஜ., வெற்றி பெறும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்து, அக்கட்சியின் சாணக்கியர் என பெயரெடுத்துள்ள அமித் ஷாவுக்கு, இந்த தேர்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™